பீன்ஸ் ஜூக்கினி பொரியல்

தேதி: March 16, 2012

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீன்ஸ் - 100 g
ஜூக்கினி - 100 g
சின்ன வெங்காயம் - 10
மிளகாய் தூள் - 1/4 tsp
தனியா தூள் - 1/4 tsp
மஞ்சள் தூள் - 1/8 tsp
தேங்காய் துருவல் - 2 tbsp
கடுகு, கருவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு


 

தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய பீன்ஸ் மற்றும் ஜூக்கினியை சேர்த்து வதக்கவும்.
காய் சிறிது வதங்கியதும் உப்பு மற்றும் எல்லா தூள் வகைகளை சேர்த்து வதக்கவும்.
தேவையானால் சிறிது நீர் தெளித்து மூடி வைக்கவும்.
வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
சுவையான பொரியல் ரெடி. சாம்பார் சாதம், புளிகுழம்புடன் அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஜூக்கினியுடன் பீன்ஸ் சேர்த்து நல்ல குறிப்பு குடுத்து இருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. ஜூக்கினி ரொம்ப டேஸ்டா இருக்கும். நிச்சயம் இது போல் செய்கிறேன்..

"எல்லாம் நன்மைக்கே"

ஜூக்கினி என்றால் என்ன?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஜூக்கினி என்றால் என்ன?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.