ப்ராக்கலி பொரியல்

தேதி: March 16, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (7 votes)

 

ப்ராக்கலி பூக்கள் - 2 கப்
காய்ந்த‌‌ மிள‌காய் - 3
வெங்காய‌ம் - கால் க‌ப் (பொடியாக‌ ந‌றுக்கிய‌து)
பூண்டு - 2 ப‌ல்
பயத்தம் ப‌ருப்பு - ஒரு கைப்பிடி அள‌வு
தேங்காய்பூ துருவ‌ல் - 2 மேசைக்க‌ர‌ண்டி
க‌றிவேப்பிலை - சிறிது
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 3/4 தேக்கரண்டி
சீரகம் - 3/4 தேக்கரண்டி
எண்ணெய்‍ - தாளிக்க
உப்பு - ‍சுவைக்கேற்ப‌


 

முத‌லில் பயத்த‌ம் ப‌ருப்பை த‌ண்ணீரில் க‌ழுவி விட்டு, சிறிது த‌ண்ணீர் சேர்த்து 15 - 20 நிமிடம் ஊற‌ வைக்கவும். ப்ராக்கலி பூக்களை சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். காய்ந்த மிளகாயை கிள்ளி வைக்கவும். பூண்டை தோலுரித்து, பொடிதாக தட்டி/ந‌சுக்கி வைக்கவும். ஊற வைத்த பயத்தம் பருப்பை மைக்ரோவேவ் அவனில் வைத்து 2 நிமிடங்கள் வேகவிடவும். (அல்லது) அடுப்பில், சிறிது தண்ணீரில் வேகவிட்டு கிள்ளு பதத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் சிறித‌ள‌வு எண்ணெய் விட்டு, சூடான‌தும், க‌டுகு போட்டு பொரிந்ததும், உளுந்து போட்டு ச‌ற்றே சிவ‌க்க‌ விட‌வும். இதனுடன் காய்ந்த‌‌ மிள‌காயை சேர்க்கவும். பிற‌கு பொடியாக‌ ந‌றுக்கி வைத்த‌ வெங்காய‌ம், பூண்டு, க‌றிவேப்பிலை சேர்த்து சில‌ நிமிட‌ங்க‌ள் வ‌த‌க்க‌வும்.
வெங்காய‌ம் சிறித‌ள‌வு வ‌த‌ங்கிய‌தும், ப்ராக்க‌லி பூக்க‌ளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
தேவையான அளவு உப்பு போட்டு, சிறிது நீர் தெளித்து, மூடிபோட்டு வேக விடவும்.
காய் ஒரு பாதியளவு வெந்ததும், மூடியைத் திறந்து அத‌னுடன் வேகவிட்டு வைத்திருக்கும் பயத்தம்பருப்பை சேர்த்து ஒரு முறை கிளறி மேலும் ஒரு சில நிமிடங்கள் வேக விடவும். (பயத்த‌ம் ப‌ருப்பை ஏற்க‌ன‌வே வேக‌ வைத்து சேர்ப்ப‌த‌னால், இப்போது ரொம்ப‌ நேர‌ம் வேக‌ வைக்க‌ வேண்டிய தேவை இருக்காது.)
எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்தது தெரிந்ததும், க‌டைசியாக‌ தேங்காய்ப்பூ துருவ‌லை சேர்த்து, ஒரு முறை கிள‌றிவிட்டு இற‌க்க‌வும்.
காரம் குறைவான, சுவையான‌ கிட்ஸ் ப்ராக்க‌லி பொரிய‌ல் த‌யார்!


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Broccoli specialist thaan neenga .... Miga nalla kurippu...

ப்ராக்கலின்னாலே சுஸ்ரீ தான்னு முடிவாயிடுச்சு ;) படம் இனிமை... குறிப்பு எளிமை... மொத்தத்தில் அருமை!!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஜா, உங்களுக்கு ப்ராக்கலி சுஜான்னு பட்டப்பெயரே தரலாம்னு முடிவெடுத்திருக்கேன். உங்க முகத்தை பார்க்கலனாலும் எங்கே பிராக்கலி பார்த்தாலும் உங்க முகம் தெரியும் :) வித்யாசமான முயற்சி. பொருட்களின் கூட்டணியே பார்த்தாலே டேஸ்டும் நல்லாவே இருக்கும் போல. கிடைச்சா நிச்சயம் ப்ரெக்கோலியை போட்டு தள்ளி பண்ணிட்டு உங்களுக்கு சொல்வேன் பா. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுஸ்ரீ ப்ராக்கலி பொரியல் ரொம்ப அருமையா இருக்குப்பா வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஸ்ரீ,
ப்ராக்கலியில் வித்தியாசமான பொரியல்.பார்க்கவே அழகா இருக்கு.தேங்காய்,பருப்பு எல்லாம் சேர்த்து அருமையா செய்து இருக்கீங்க.இன்னும் உங்க ப்ராக்கலி பராத்தா செய்யல.ஒவ்வொன்னா செய்து பின்னூட்டம் தரணும். நல்ல குறிப்புக்கு வாழ்த்துக்கள் சுஸ்ரீ.

Delicious and healthy recipe.I like it.

karunai niraintha idhayam kadayulin aalayam

ரொம்ப சுப்பரா செய்து காமிச்சிருக்கீங்க. நல்ல சத்தான குறிப்பு இது. வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

அன்பு சுஸ்ரீ,

பாக்கறதுக்கே அழகாக இருக்கு. பருப்பு தேங்காய் சேர்த்து, சவுத் இந்தியன் டச் கொடுத்திருக்கீங்க. சூப்பர்.

அன்புடன்

சீதாலஷ்மி

மிக்க நன்றி!
குறிப்பை வெளியிட்ட‌ அறுசுவை ந‌ண்ப‌ர்க‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி!

சோனாஞ்சலி,
முத‌ல் ஆளா வந்து தந்த பாராட்டிற்கு மிக்க‌ ந‌ன்றி! :)

வனி,
எப்போதும் போலவே தவறாம வந்து, பாராட்டுகளை தந்து, எதுகை மோனையாக ஊக்கப்படுத்திட்டு போயிருக்கிங்க! :) மிக்க நன்றி வனி!

கல்பனா,
பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! ஆஹா..., இனி என் பேரே ப்ராக்கலி சுஜாவா?!! :) பாதி ப்ராக்கலியில் நம்ம லாவண்யா முகமும் தெரியனுமே?! :) சரி, எப்ப ப்ராக்கலி கிடைத்து, போட்டுத்தள்ளினாலும் (ஐ மீன் சமைத்துப்பார்த்தாலும் :)) எப்படி இருந்ததுன்னு வந்து சொல்லுங்க. உங்க‌ வீட்டு குட்டிஸ் என்ன சொல்றாங்கன்னும் சொல்லுங்க‌. ந‌ன்றி!

சுவர்ணா,
உங்க‌ பாராட்டுக‌ளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க‌ ந‌ன்றி சுவர்ணா!

அன்புடன்
சுஸ்ரீ

ஹர்ஷா,

பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி! சிம்பிளான மெத்தட்தான், ஆனால் ப்ராக்கலியை இப்படி செய்வது, எனக்கு ரொம்ப பிடிக்கும். எவ்வளவு சாப்பிட்டாலும் அலுக்காது. முடியும்போது ஒவ்வொன்னா செய்து பார்த்து சொல்லுங்க. மீண்டும் நன்றி!

கவிதா,
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

சுபாராம்,
உங்க பாராட்டுக‌ளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க‌ ந‌ன்றி!

அன்பு சீதாலஷ்மிமா,
உங்க பராட்டுகளுக்கு மிக்க‌ ந‌ன்றிமா!. ஆமாம், எனக்கு பொதுவாக‌வே பொரியலில் தேங்காய் சேர்த்து செய்வது ரொம்ப பிடிக்கும். :)

ப்ராக்கலியை இந்த‌‌ மெத்த‌ட்ல‌ செய்வ‌து, எங்க‌ ந‌ண்ப‌ர்க‌ள் வ‌ட்ட‌த்தில், முக்கிய‌மாக‌ குழந்தைகளுக்கு ரொம்ப‌ பிடித்த‌மான‌தா இருக்கும்! அதனால் இதுக்கு கிட்ஸ் ப்ராக்க‌லி பொரிய‌ல்னு பேர் இருக்கு! :) மீண்டும் ந‌ன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ,
வெற்றிகரமா உங்க ப்ராக்கலி பொரியல் செய்தாச்சு... ரொம்ப நல்லா இருந்தது :)
மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

சுஶ்ரீ இப்போதான் உங்க ப்ராக்கலி பொரியல் செய்துட்டு அதே சூட்டோடு பின்னூட்டம் கொடுக்க வந்துட்டேன். ரொம்ப டேஸ்டியா இருக்கு. பொதுவாக நான் ப்ராக்கலி நம் இந்திய முறையில் செய்வதில்லை. இது எனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு. நன்றி சுஶ்ரீ

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!