பட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!**

அன்பார்ந்த அறுசுவை ரசிகர்களே! ரசிகைகளே!

அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, நீங்கள் ஆவலோடு ஒருவாரகாலமாக எதிர்பார்த்த நமது பட்டி இனிதே துவங்கி விட்டது. என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டு... சென்ற வாரம் போலவே இந்த வாரமும் நாம் பேச விருக்கும் தலைப்பும் பயனுள்ளதுதான்...அது அடுத்து வரும் கோடைவிடுமுறையை முன்னிறுத்தி...

அறுசுவை தோழி உதிராவின்

***விடுமுறைக் கால பயணங்களால் வருவது
அலுப்பும் , அலைச்சலும், பணவிரயமும்! (வருத்தமே)
அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும்!(ஆனந்தமே)***

என்ற தலைப்பின் கீழ் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!!!

உங்களது பொன்னான நேரத்தை அறுசுவைக்காக கொஞ்சம் ஒதுக்கி..அறுசுவையின் பட்டியை இம்முறையும் வெற்றிப் பட்டியாக்க .... அனைவரும் வருக ஆதரவு தருக என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்;-) நன்றி வணக்கம்_()_

பின்குறிப்பு: முதற்கட்ட அறிவிப்பு ஒவ்வொரு பதிவுக்கு பிறகும் சோடா வழங்கப்படும்.

முக்கியக்குறிப்பு: பட்டியின் விதிமுறைகளை மனதில் கொண்டு...பதிவுகளை பதிய வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உதிரா தாமதமாக நீங்க வந்தாலும் பட்டியை முழுக்க படித்ததே எனக்கு சந்தோஷத்தை தருகிறது;) மிக்க நன்றி உதிரா;) உங்களை பட்டியில் இழந்ததினால் எங்களுக்குதான் வருத்தம் ஆனாலும் கடைசி நேரத்தில் வந்து இன்ப அதிர்ச்சியை கொடுத்துட்டீங்க ரொம்ப தேங்க்ஸ் உதிரா;) உங்களுக்கும் வாழ்த்துக்கள்;)

Don't Worry Be Happy.

//பட்டியை சிறப்பாக நடத்தி அருமையான தீர்ப்பு கொடுத்த நடுவருக்கு பாராட்டுகள்!//***மிக்க நன்றி லாவண்;-) உண்மையில் உங்க பதிவுக்கு என்னால ஃப்ரியா நகைச்சுவைக் கலந்த பதிலை சரளமா எழுத முடிஞ்சது ஒரு குறும்பு ஒரு மஸ்த்தி உங்க பதிவின் மூலமா எனக்கும் தொத்தி நல்ல உற்சாகம் கொடுத்தது;) ட்ரெய்ன்ல போறது, டூர் போறோம்கிற சந்தோஷத்தை தவிர மத்ததெல்லாமே கஷ்டமதான்கிறத ரொம்ப அருமையா சொல்லியிருந்தீங்க! முடிஞ்சா.. அடுத்த பட்டியில் உங்ககூட டிஷ்யூம் டிஷ்யூம் பண்ணனும்னு ஆசையே வந்துருச்சு;-)தொடர்ந்து பட்டிக்கு வாங்க வாழ்த்துக்கள்;)

அடுத்த நடுவர் நீங்கதானே??;-)

Don't Worry Be Happy.

லாவண்யா, ஸ்வர்ணா, ஜெயலஷ்மி மிக்க நன்றி பா.
//.புது வரவு மாதிரியே இல்லை பட்டயக் கிளப்பிட்டீங்க;-// ஜெயலஷ்மி நான் நிறைய தமிழ் தளங்களை பார்வையிடுவேன். ஆனால் எதிலுமே உறுப்பினரானதில்லை. அந்த வகையில் அறுசுவையை எனக்கு நான்கு, ஐந்து வருடங்களாக தெரியும். தளத்தை புதுப்பிப்பதற்காக சிறிது நாட்கள் அறுசுவையை ப்ளாக் பண்ணியிருந்தாங்க. அப்போ ரொம்ப கஷ்டமாயிருந்தது. தினசரி அறுசுவையை பார்வையிடாமல் என் நாள் முழுமை அடைந்ததில்லை. இப்போதுதான் என்னால் உறுப்பினராக முடிந்தது.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

அன்பு பூர்ணிமா,

பட்டிமன்றத்தில் உங்க வாதங்கள் ரொம்ப நல்லா இருந்தது. கவிதையும் அழகோ அழகு!

பட்டிமன்றத்தில் புது வரவுகள் அசத்தினால் எனக்கு ஒரே குஷியாகிடும். அடுத்து வரும் பட்டிமன்றங்களிலும் தொடர்ந்து உங்க பங்களிப்பைக் கொடுங்க.

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சாந்தினி,

என் கூட வாதாடறது ரொம்பப் பிடிக்கும்னு நீங்க சொல்லியிருந்ததைப் படிச்சதும் சிரிச்சுட்டேன்:)

என் பாட்டுக்கு எதிர் பாட்டு - அழகான இசைப் பாட்டாகப் பாடினீங்க.

வாங்க, வாங்க, இன்னும் எல்லா பட்டிமன்றங்களிலும் எல்லோரையும் அசத்தலாம், சரியா!

ஒரு வாசகம்னாலும் திருவாசகமாக, ஒரு பதிவுன்னாலும் அசத்தல் பதிவு உங்களோடது! பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

மிக்க நன்றி சீதாலஷ்மி மேடம். தொடர்ந்து வரும் பட்டிமன்றங்களிலும் நான் பங்கேற்பேன்.
தோழிகளே!! உங்கள் அன்பிற்கு என் நன்றிகள்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

மேலும் சில பதிவுகள்