பட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!**

அன்பார்ந்த அறுசுவை ரசிகர்களே! ரசிகைகளே!

அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, நீங்கள் ஆவலோடு ஒருவாரகாலமாக எதிர்பார்த்த நமது பட்டி இனிதே துவங்கி விட்டது. என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டு... சென்ற வாரம் போலவே இந்த வாரமும் நாம் பேச விருக்கும் தலைப்பும் பயனுள்ளதுதான்...அது அடுத்து வரும் கோடைவிடுமுறையை முன்னிறுத்தி...

அறுசுவை தோழி உதிராவின்

***விடுமுறைக் கால பயணங்களால் வருவது
அலுப்பும் , அலைச்சலும், பணவிரயமும்! (வருத்தமே)
அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும்!(ஆனந்தமே)***

என்ற தலைப்பின் கீழ் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!!!

உங்களது பொன்னான நேரத்தை அறுசுவைக்காக கொஞ்சம் ஒதுக்கி..அறுசுவையின் பட்டியை இம்முறையும் வெற்றிப் பட்டியாக்க .... அனைவரும் வருக ஆதரவு தருக என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்;-) நன்றி வணக்கம்_()_

பின்குறிப்பு: முதற்கட்ட அறிவிப்பு ஒவ்வொரு பதிவுக்கு பிறகும் சோடா வழங்கப்படும்.

முக்கியக்குறிப்பு: பட்டியின் விதிமுறைகளை மனதில் கொண்டு...பதிவுகளை பதிய வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

//நாணய விகடன் படிப்பீர்களா? அதில் நேற்று...இன்று..நாளை படியுங்க.. அப்ப தெரியும். எதிரணிக்கும் அப்படியே என்ன படிச்சீங்கன்னு மறக்காம சொல்லிடுங்க//** அடடா! நாம எப்பவுமே சினிமா செய்திகள்தானே படிக்கறது;( ரஜினியோட அடுத்த படம் என்ன? அஜித்தோட பில்லா2 எப்ப ரிலீஸ்னு கேட்டா சொல்ல முடியும்.. நாணய விகடன் எல்லாம் படிக்க சொல்றீங்களே...! நீங்க என்ன படிச்சீங்கன்னு என்கிட்ட சொல்லுங்க நான் அதையே உங்க எதிரணிக்கு காப்பி பேஸ்ட் பண்ணிடறேன்;-) ஹி ஹி ஹி.....

//வருஷக்கணக்கா மருந்து சாப்ட்டு குணமாகாத நோய் கூட, இதுபோன்ற பயணங்களால் மனதிற்கு மருந்தளித்தது போல இருக்கும்// *** ஆமாம்! பின்னே மனநிலை பாதிக்கப்பட்டா உடனே வெளியூருக்கு எங்கையாவது சுற்றுலா அழைச்சிட்டு போங்கன்னு ஏங்க சொல்றாங்க??

கஷ்டம் கஷ்டம்னு சொல்லி சுற்றுலா போகாமா மேலும் கஷ்டப்படாதிங்கன்னு கொஞ்சம் மிரட்டலாவே

//1 மாசம் கழிச்சு ஓபன் பண்ணாலும் பிரியாணி கெடாம இருக்குங்க நடுவரே.. //**அனுபவம் பேசச்சொன்னா எப்படிபட்ட அனுபவத்தையெல்லாம் கொட்டறாங்க பாருங்க.........

//நம்ம குட்டி பசங்களோட சந்தோஷத்தையும், ஆட்டத்தையும் பார்க்கும் போது நாமும் குழந்தைகளாகி நம்ம பணக்கஷ்டத்தையும் மறந்து ஆட்டம் போடுவோம் நடுவரே//** குட்டி பசங்களோட சந்தோஷத்தப் பார்த்து பெரிவங்களும் சந்தோஷப்படுவாங்களே அந்த சந்தோஷத்துக்கு எத்தனை பணம் விரயமானா என்னங்க??

//கடன் வாங்கி எஞ்சாய் பண்ன வேண்டியது தான். கடன்காரன் வந்து கேட்டா ஹார்ட் அட்டாக்னு படுத்துக்க வேண்டியது தான். கடனை வசூல் பண்ணவாச்சும் உங்களை காப்பாத்தி எழுப்பி உக்கார வைப்பார் கடன்காரர். எப்படி ஐடியா? ;))// *** ஐய்யையோ அம்ம்மம்மா அப்பப்பபா எனக்கு இப்பவே நெஞ்சு வலி வந்துருச்சு......;-)

அடடா ஒகேனக்கல் பரிசல் அனுபவமா... நாங்களும் அங்க போனப்ப கொட்டம் அடிச்சது நியாபகம் வருது..;-) ஆத்துக்குள்ள ஏலேலோ அத்தி மரம் ஏ அத்தி மரம் அயிலயிலா ஏ அத்தி மரம் ..
சேத்துக்குள்ள ஏலேலோ செண்பகப்பூ அயிலயிலா ஏ செண்பகப்பூ ந்னு பாடி எங்க பர்சல் காரரையும் கர்வப் படுத்தினோம்;-) இப்போ நினைக்கும்போது எங்க பரிசல் காரர் பெருமையா சிரிச்சதுதான் மனசுக்குள்ள வருது அது எவ்வளவு நிறைவைத் தருது;-)

ஹா ஹா சுத்த சைவமா மாறினது இப்பதானே கல்ப்ஸ் ;-) கொடிவேரி பால்ஸ் போயி திரும்பி பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணும்போது நானும் எங்க அண்ணாவும் இந்தா வரோம்னு சொல்லி யாருக்கும் தெரியாம பொரிச்ச மீன சாப்பிட்ட குஷி இன்னிக்கும் மறக்க முடியாதே இத்தனைக்கும் குடும்பமா ஏற்கனவே வெட்டிட்டுதான் திரும்பியிருந்தோம்...மறுபடியும் போய் மீன் சாப்பிடதனாலயா குஷி வந்துச்சு இல்லைங்க உற்சாகமான் சூழ்நிலைதந்த குஷி அது;-)

நன்றி கல்ப்ஸ்..உங்க ஒகேனக்கல் வர்ணனையில் மீண்டும் அங்க சென்று வந்த திருப்தி எங்கள் நெஞ்சில்.... ஊட்டி பயணத்தைக் கேட்க ஆவலோடு வெயிட்டிங்;-)

கஷ்டம் கஷ்டம்னு சொல்லி சுற்றுலா போகாமா மேலும் கஷ்டப்படாதிங்கன்னு கொஞ்சம் மிரட்டலாவே (பயமுறுத்தி) சொல்லிட்டாங்க நம்ம கல்ப்ஸ் இவங்க எதிரணி எங்கன இருந்தாலும் ஓடியாங்க..........அப்படியெல்லாம் கிடையவே கிடையாது இவங்க தலையில அடிச்சு சொல்ல ஓடியாங்க..........

Don't Worry Be Happy.

வாங்க வாங்க லாவண் ...உங்களுக்கும் எனது வாழ்த்துக்களும் வணக்கங்களும்;-)

//இரண்டு மூன்று நாள் பயணம் என்றால் பிள்ளைங்களை எப்படி சமாளிக்க போறோம் அப்படி இப்படி என்று குடும்பத்தலைவிக்கு அப்போவே பீபி ஏறிவிடும்.//** நமக்கு மட்டுமா பீபி அப்பத்தைய (விமான ) டிக்கட் ரேட்டப்பாத்து இங்க நம்மாளுக்கும் சேர்த்துல்ல பீபி ஏறுது அப்புறம் எங்குட்டு மகிழ்ச்சியத் தேடறது;-(

//ஏனென்றால் அவர்கள் முன் சென்ற விடுமுறைக்கு போட்டாதே திருப்பப் போட்டால் எல்லா போட்டவும் அதே ட்ரஸில் இருக்குமாம். குடும்பத்தலைவர் அப்பவே தலையில் கையை வைத்து உட்கார்ந்திடுவார்//** அடடா! இந்த ஐடியா எனக்கு தோணாம போயிருச்சே! நான் எப்பவும் கல்யாணம் பர்த்டே பார்ட்டிக்குதான் புதுத்துணி வாங்குவேன் அதான் கொஞ்சமா ட்ரஸ் சேருது. இனி வார வாரம் வாங்கிடுவோம்;-)

// எப்படியோ மூட்டை முடிச்சி எல்லாத்தையும் முன்னரே கட்டினாலும் என்னத்தான் லிஸ்ட் போட்டு போட்டு எடுத்து வைத்தாலும் கண்டிப்பா முக்கியமானது விட்டு தான் போகும்.//**ஐயோ! கரக்ட்டா சொன்னீங்க.. இப்படிதான் போன தடவை பீச் பக்கமா சுற்றுலா போனபோது பசங்களோட அண்டர்வேர், டவல், சேஃப்ட்டி சூட் எல்லாத்தையும் விட்டுட்டு போயாச்சு..ப்ச் அப்புறம் தூர உக்காந்து குளிக்கறவங்களை வேடிக்கை பாத்துட்டு திரும்பி வந்தோம்... கண்டிப்பா மனவருத்தம்தாங்க..;-(

அப்பபபா ப்ளானை மட்டும் கேட்டே தலைசுத்துதே இனி மீதி பயண அனுபவத்தைக் கேட்டா என்னாகும் என் நிலமை... நிஜமாவே ஹார்ட் அட்டாக் வந்துரும்போல இருக்கே!!!

//விட்டு போன போருல்லுக்காக போன இடத்தில் சண்டை தான் நடக்கும். அட அப்படி என்னடா பொருள் எங்கும் கிடைக்காதா என்றெல்லாம் நீங்கள் யோசிக்கவேண்டாம் நடுவரே....நம் மக்களுக்கு சண்டை போட காரணத்தை சொல்லியா கொடுக்க வேண்டும்.//**இட்லிக்கு சட்னியா சாம்பாராங்கறதுக்கே சண்டை போடற ஆளுங்க நாம..நம்மகிட்ட போய் சண்டை போட காரணம் கேக்கறீங்களே ஹி ஹி ஹி..;-)

அருமையான கலக்கல் வாதம் தந்த லாவணுக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு தந்தமைக்கு நன்றிகள்;-) உங்க எதிரணி வயிரு ஏகத்துக்கு கலக்கமாயிருச்சுன்னு உங்க பதிவு படிச்சதுமே தெரியுது.....

ப்ளான் பண்ணி.., ப்ளான் பண்ணின்னு சொன்னவங்க எங்கப்பா ஆளே காணோம் இப்படி ப்ளான் பண்றதுலேயே இத்தனை கஷ்டம் இருக்கே அப்புறம் எப்படி பயண அனுபவம் இனிமைன்னு சொல்றீங்க...? வாங்க வாங்க ...;-)

Don't Worry Be Happy.

அன்புள்ள நடுவர் அவர்களுக்கு
ரொம்ப எளிமையான தலைப்பு இது .விடுமுறைக்கால பயணங்களினால் கிடைப்பது ஆனந்தமோ ஆனந்தம் பேரானந்தம் .
பயணம் என்றாலே அலைச்சல் உண்டு ,ஆனால் மனம் விரும்பி ஈடுபடும் போது அலைச்சலாவது அலுப்பாவது ஒரே கொண்டாட்டம் தான்.
டூர் திட்டம் போடுவதில் இருந்தே மகிழ்ச்சி ஆரம்பித்து விடுகிறது. என்னவெல்லாம் எடுத்து செல்லவேண்டும் என்பதில் ஆரம்பித்து எல்லாமே ஆனந்தமே.
தமிழ்நாடா கேரளாவா சிங்கபூரா மலேசியாவா எங்கே என்பது முக்கியமல்ல. இதில இல்லைங்க சந்தோசம்.. டூர் போறோம் டூர் போறோம்னாலே சந்தோசம் தான்.
டூர் போனா நாங்களும் குழந்தைங்க தாங்க.. குழந்தைங்க விளையாடற அத்தனை விளையாட்டும் நாங்களும் சேர்ந்து விளையாடுவோம். பால் போடுறது சைக்கிள் விடுறது ,படகு சவாரி எதையும் விட்டு வைக்கிறதில்ல ஜாலியோ ஜாலி செம ஜாலி தான்.
அந்த சமயம் எல்லா பிரச்சனைகளையும் மறந்து நாம் குழந்தைகள் உலகிற்கு சென்று விடுகிறோம் ரெண்டு மூணு பேமிலி சேர்ந்து போனா ரொம்ப ரொம்ப நல்லா என்ஜாய் பண்ணலாம்.கு ழ ந்தைகளுக்கும் நல்ல ப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க
டூர் போகும்போது எடுத்த போட்டோ,வீடியோ இருக்குதே. அப்பப்பா! பார்க்கும் பொது எல்லாம் ஆனந்தம் .எத்தனை வருஷம் கழித்துப் பார்த்தாலும் அந்த சந்தோசம்... அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
ஊட்டில ஒரு அனுபவம்னா கன்னியாகுமரியில வேறு ஒரு அனுபவம்
சிங்கப்புர்ல ஒரு அனுபவம் மலேஷியவுலே ஒரு அனுபவம்
ஒன்னொன்னும் ஒரு தினுசு .ஆனா எல்லாமே நாம் எடுத்துக்கற விதம்
பணம் சம்பாதிக்கறதே தேவைக்கு செலவு பண்ணத்தான் .நம்ம வரவுக்கு தகுந்த மாதிரி அதை அமைசிகிடனும் . அப்போ கஷ்டமா தெரியாது.
காலை முதல இரவு வரை நல்ல்லா சுத்திட்டு வந்து படுக்கும் பொது அலுப்பு இருந்தாலும் ,மறு நாள் காலை மீண்டும் ஊர்சுற்ற ரெடி ஆகி விடுவோம் .அலுப்பே தெரியாது ஏன்னு யோசிச்சீங்கலா
மனசு ...மனசு ..தாங்க காரணம் அந்த சந்தோசம் அலுப்பை உணர விடாதுங்க.
டூர் ப்ளான் போட்டதுமே எங்க வீட்ல ஆ னந்த அலை அடிக்க ஆரம்பிசுரும்ங்க
எனவே நடுவர் அவர்களே நீங்களும் டூர் போயிருப்பிங்க .உங்களுக்கு தெரியும்.

அன்பு தோழிக்கும் வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்;-)

//(பாவம் இல்லையா அவுங்க. வரும் புல்லா படிச்சு படிச்சு களச்சு போய் ஓடா தேய்ந்து போய் இருப்பாங்க) பெற்றோர்க்கு மனக்கஷ்டம், வீட்டு டென்ஷன் என எல்லாத்தையும் கொஞ்சம் தூக்கி போட்டு விட்ட ஆனந்தம்.//**ஆமா நீங்க சொல்றதும் சரிதான்..எப்பவுமே ஒரே மாதிரி வேலை செஞ்சு அழுத்தவங்களுக்கு இந்த மாதிரி பயணங்கள் ஆனந்தத்தையும் மனநிறைவையும் கொடுக்கிறதுங்கறது மறுக்கமுடியாத உண்மை;-)

நன்றி ஜென்னி இன்னும் உங்கள் அனுபவங்களை வார்த்தைகளால் வடிச்சு கொட்டுங்க...சாப்பிட ச்செ ச்செ கேக்க படிக்க ஆவலா இருக்கோம்;-)

Don't Worry Be Happy.

ஹாய் ஜென்னி;-)

//விடுமுறைக்காக பணம் சேர்த்து வைக்க சொல்லுவதன் மூலம் சிறு பிராயம் முதலே நம் குழந்தைகளுக்கு சேர்த்து வைக்கும் பழக்கத்தை நம்மால் உண்டாக்க முடியும்.//** ஆஹா! சூப்பரான பாயிண்டை பிடிச்சீங்க அப்பூ;-) இதுக்கு உங்க எதிரணை இதுக்கு என்ன சொல்றாங்கன்னு பாப்போம்..இப்பவே அவங்கலூக்கு தலைசுத்தியிருச்சுங்கோய்;-)

பங்குனி வெயில்லுனு பசங்களை பூட்டி வைக்க முடியூமா??

பாராட்டு பெரிசா மகிழ்ச்சி பெரிசான்னு பயங்கரமா கேள்வி கணைகள் தொடுத்திருக்காங்க ஜென்னி... ஜென்னி உங்க எதிரணி யோசிச்சுட்டு இருக்காங்க போல குழப்பம் தீர்ந்து எந்திரிச்சு உக்கார விட்டுரறாதீங்க மேல மேல கொடுத்துட்டே இருங்க உங்க வாதங்களை ஆமா சொல்லிபுட்டேன்;-)

தேங்க்ஸ் ஜென்னி இன்னும் இதவிட வேகமா வாங்க ...காத்துட்டு இருக்கேன்;-)

Don't Worry Be Happy.

அன்புத் தாமரை வணக்கம்;-)

//அலுப்பும் , அலைச்சலும், பணவிரயமும் தான் நடுவரே, வாதத்தை பிறகு வந்து கொடுக்கிறேன். எங்க கட்சிய பலமாக்குவோம்ல.//** அதாவது மனவருத்தமேன்னு உங்க அணியை பலமாக்கிட்டீங்க.. அடுத்த தடவை வரும்போது ஒரு இரண்டு லாரி வாதம்கிற சிமெண்ட்டோட வாங்க ஸ்ட்ராங் ஆக்கிறலாம்;-)

Don't Worry Be Happy.

அன்பு இளவரசிக்கு வணக்கத்துடன் வாழ்த்துக்களுங்கோ;-)

//விடுமுறைக்கு சுவாரஸ்யம் கூட்டுவது இதுபோன்ற

பயணங்கள்தானே..!//**இரண்டு மாசம் எப்படி போச்சுன்னு அலுத்து

சொல்லனுமாங்க இல்லை இரண்டு மாசம் எப்படியெல்லாம் போச்சுன்னு மலைச்சு

சொல்லனுமாங்க?? முன்னது வேணும்னா எங்கேயும் போகாதீங்க., பின்னது

வேணும்னா சுற்றுலா போங்க ஹி ஹி உங்க எதுகை மோனை பாத்து நானும்

கொஞ்சம் ட்ரை பண்ணினேனுங்க;-)

//அந்த அனுபவத்தின் சந்தோசம் அப்போது எடுக்கின்ற

போட்டோக்களும்,வீடியோக்களும் எத்தனை முறை பலவருஷம் கழித்து

போட்டு பார்த்தாலும் மனக்கேமராவில் மறுபடியும் மறுபடியும் கிளிக் ஆகி

சிரித்து ,அட அடுத்த விடுமுறை எப்ப வரும் என எதிர்பார்த்து

நம்மையும்,குழந்தைகளையும் காலத்துக்கும்,ஏன் காலம் தாண்டியும் நினைத்து

ஏங்க வைக்கும்..இல்லையா?//**ஆட்டோகிராஃப் நினைவுகள் ஆச்சே இதை

மறுக்க முடியுமா எதிரணி??

கன்னியாக்குமாரிக்குதானுங்க கண்டிப்பா கூட்டிட்டு போறேனுங்க..கட்டாயம் சிரியா மாதிரி கடைவீதியிலேயே உங்களையெல்லாம் தொலைச்சிடாம திருப்பி கொண்டு வந்து பத்திரமா சேர்க்கற வரைக்கும் பயணக்கட்டுரை எழுதிடுவேன் ஹி ஹி ஹி;-)

Don't Worry Be Happy.

அன்பு தோழி தனா உங்களுக்கும் எனது வணக்கங்களும் வாழ்த்துக்களும்;-)

//இப்போது இருக்கும் வாழ்க்கை முறையில் வீட்டில் எல்லாரும் சேர்ந்து இருப்பது என்பது மிகவும் அரிது இந்த மாதிரி பயணங்கள் செல்லும் போது எல்லாரும் சேர்ந்து இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் கண்டிப்பாக சொல்கிறேன் //** ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான் கண்டிப்பா இதை எதிரணியிலும் மறுக்க முடியாது!

//இந்த மாதிரி பயணங்களால் வருவது மனநிறைவு, சந்தோசம் தான் சந்தோசமே தான் அடிச்சு சொல்லுறேன் நடுவரே//** ரொம்ப நல்ல பொண்ணு;-) நடுவர் தலையில அடிக்க கூடாதுன்னு முன்னேற்பாடா அடிக்கறதுக்குன்னே போட்டிருந்த மேஜையில அடிச்சு சொன்னீங்க ஐ லைக் இட்;-)வாங்க இன்னும் உங்கள் அனுபவங்களோடு எடுத்து சொல்லி உங்கள் அணியை திறம்பட செய்யுங்கள்.. நன்றி தனா;-)

Don't Worry Be Happy.

அன்புத்தோழி ஸ்வர் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்;-)

//வருசம் முழுவதும் வீடு,வேலை,பள்ளி இப்படியான மிஷின் வாழ்க்கைக்கு வடிகால் தான் பயணங்கள் நடுவரே அது கண்டிப்பா ஆனந்தம் தான்.....//

//எப்போ பசங்களுக்கு பள்ளி முடியும் விடுமுறை வரும்னு ஆவலோடு எதிப்பார்ப்பதே விடுமுறை பயணத்தை அனுபவிக்கத்தானே//**சரியாச் சொன்னீங்க அப்பூ;-)

ஆஹா உங்கல் பதிவில் வரிக்கு வரி ஆனந்தம்தானே இருக்கு ஸ்கூலுக்கு போறதா ஆனந்தம் ஸ்கூல் லீவுல விடுமுறை பயணம்போறதுதானே ஆனந்தம் என்னங்க “வருத்தமே” அணி இப்படிபட்ட ஆனந்தத்தை வேண்டாம்னு சொல்றீங்களேன்னு நான்கேக்கலைங்க நம்ம ஸ்வர் கேக்கறாங்க பதில் சொல்ல வர்ரீங்கதானே....;-)

நன்றி ஸ்வர் இன்னும் உங்கள் வாதமழையில் நனைய விரிச்ச குடையை மடக்கி காத்திருக்கேன் ஓடியாங்கோ;-)

Don't Worry Be Happy.

அன்புத்தோழி சுந்தரிக்கும் எனது வாழ்த்துக்கள்;-) உதிராக்கும் உங்கள் எல்லாரோட வாழ்த்தையும் போஸ்ட் பண்ணியாச்சு;-)

//அதுவும் என் போல வருடத்திற்க்கு ஒரு முறை ஊருக்கு போவோரை பற்றி கேட்கவே வேண்டாம்.அம்மா,அப்பா உற்றார் உறவினர்களை எப்போது பார்ப்போம் என மனம் சந்தோஷத்தில் இருக்கும்.அவர்களுக்கு என்ன பரிசுகள் வாங்கிப்போகலாம் என ஆலோசனை செய்யதொடங்கிவிடும்.ஆசை ஆசையாய் நாம் செய்யும் இந்த செலவை பணவிரயம்ன்னு சொன்னா எப்படிங்க.வருடத்திற்க்கு ஒரு தடவை கூட நம் ஆனந்ததிற்கென்று செலவு செய்யவில்லை என்றால் நாம் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டு என்னங்க பிரயோசனம் ஊருக்கு போய் அம்மா கைய்யால் செய்யும் சாப்பாடு சாப்பிட்டு,அம்மா மடியில் தலைவைத்து படுத்தால் வருடம் முழுவதுமுள்ள அலுப்பு போயே போச்..இதில் கிடைக்கும் மன நிறைவை வார்த்தைகளால் சொல்ல முடியாது.மேலும் வாதத்துடன் வருகிறேன்.//** நம்மைப்போல் வெளிநாட்டு வாழ்வாசிக்கு இதைவிட வேறென்ன வேணும்ங்க நானும் ஒத்துக்கறேன் சுந்தரி ப்ச் கண்ணு எல்லாம் கலங்கிடுச்சுங்க....

நன்றி சுந்தரி உங்கள் வாதங்களை நனைந்த கண்ணீரோடு எதிர்பார்க்கிறேன் வரும்போது டிஷ்யூ கொண்டாந்துருங்கோ.....

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்