பட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!**

அன்பார்ந்த அறுசுவை ரசிகர்களே! ரசிகைகளே!

அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, நீங்கள் ஆவலோடு ஒருவாரகாலமாக எதிர்பார்த்த நமது பட்டி இனிதே துவங்கி விட்டது. என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டு... சென்ற வாரம் போலவே இந்த வாரமும் நாம் பேச விருக்கும் தலைப்பும் பயனுள்ளதுதான்...அது அடுத்து வரும் கோடைவிடுமுறையை முன்னிறுத்தி...

அறுசுவை தோழி உதிராவின்

***விடுமுறைக் கால பயணங்களால் வருவது
அலுப்பும் , அலைச்சலும், பணவிரயமும்! (வருத்தமே)
அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும்!(ஆனந்தமே)***

என்ற தலைப்பின் கீழ் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!!!

உங்களது பொன்னான நேரத்தை அறுசுவைக்காக கொஞ்சம் ஒதுக்கி..அறுசுவையின் பட்டியை இம்முறையும் வெற்றிப் பட்டியாக்க .... அனைவரும் வருக ஆதரவு தருக என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்;-) நன்றி வணக்கம்_()_

பின்குறிப்பு: முதற்கட்ட அறிவிப்பு ஒவ்வொரு பதிவுக்கு பிறகும் சோடா வழங்கப்படும்.

முக்கியக்குறிப்பு: பட்டியின் விதிமுறைகளை மனதில் கொண்டு...பதிவுகளை பதிய வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒருவழியாக ஊருக்கு போறதுன்னு ஒரு மனதாய் .....எங்க ஒரு மனதாய் குழந்தைகள் ஒரு இடம் போகலாம்னு சொல்லுவாங்க, வீட்டில் உள்ள பெரியவங்களுக்கு வேற ஒரு இடம் போகணும், குடும்ப தலைவிக்கு அடுத்த வீடு அம்புஜம் போறத்துக்கு முன்னாடி அந்த இடத்துக்கு தான் போயிட்டு வந்துடனும் ஒரு ப்ளான் பண்ணியிருப்பாங்க....எல்லாத்தையும் இந்த பட்ஜெட் சொதப்பி குடும்பத்தலைவர் அதற்க்கு தகுந்தாற்போல் எல்லோரையும் பேசி அட்ஜஸ்ட் பண்ணி ஒருவழியாக டிக்கெட் போட்டிருப்பார்.

இப்போ நம்ப பயணத்துக்கு ஆயத்தம் ஆவோம் வாங்க.....நடுவரே!

ப்ளைட்டில் சென்றால் கூட கைக்குழந்தையை கூட்டி சென்றால் இட்லி போன்றவைகளை அல்லது பேபி பூட் இப்படி எதாவது ரெடி பண்ணிட்டு தான் போகணும். பெட்டியை தூக்கும் வரையிலும் கூட அடுப்படியில் கரண்டியை கீழே வைக்க முடியாது நடுவரே! இதே பஸ் அல்லது ட்ரெயின் என்றால் யார் யார் எல்லாம் போறாங்கன்னு கணக்கெடுத்து...ஒருவேளை நண்பர்கள் குடும்பத்துடன் சென்றால் எல்லா பெண்களும் ஒன்று கூடி .....ஏய்! நீ நாளைக்கு இந்த ட்ரெஸ் போட்டுட்டு வா, நான் நேத்திக்கு போய் இந்த காப்ரி வாங்கி வந்தேன், ஆமாம் நானும் நேத்திக்கு போய் தான் புது ஹான்ட் பேக் ஷூ வாங்கினேன், இப்படி சொன்னால் ஒண்ணுமே வாங்கதவரும் சும்மா வாய்க்கு வந்ததை எடுத்து விடுவார்கள். பிறகு அதை உண்மையாக்க கண்டிப்பாக வாங்கி தானே ஆக வேண்டும். எடுத்து வர மறந்துட்டேன்னு சொன்னா ப்ரெஸ்டீஜ் இஷ்யூ ஆயிடாது :( அங்கேயிருந்தே ஒரு சின்ன உறுத்தல் ஆரம்பமாகும். சரி ஒன்றாக போகவில்லை வேறு வேறு இடத்துக்கு போனாலும் இந்த பிரச்சனை இருக்காதா என்றால் இல்லை நடுவரே அங்கேயும் இருக்கும் இலா....நாங்க தான் போயிட்டு வந்தவுடனே "பேஸ்புக்கில்" போட்டோஸ் அப்லோட் பண்ணிடுவோம்ல!

இவ்வளவு ஏன் நடுவரே எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு பெண்மணி எங்காவது கிளம்பவேண்டும் என்றால் முதலில் லிஸ்ட் போடுவாங்க. அந்த லிஸ்ட்டில் முதலில் ஷாப்பிங் என்று தான் இருக்கும். தனக்கு மட்டுமில்லாமால் (நல்லெண்ணம்) குழந்தைகளுக்கும் வாங்குவாங்க. பாவம் ஆவர் மட்டும் வாங்கிக்கவே மாட்டார்....செலவை கட்டுபடுத்தவாம்! என்ன நடந்தாலும் அவர் சிரிச்சிக்கிட்டே இருப்பார்.....ரொம்ப நல்லவர் :) பிறகு நாங்க இங்கே போறோம் இங்கே போறோம் போறதுக்காக இதை வாங்கினேன் என்று போன் போட்டு சும்மா இருக்கும் சகுந்தலாவையும் சீனுக்கு இழுப்பாங்க. அப்புறம் என்ன சகுந்தலா வீட்டுக்காரரும் நல்லவர் தானே...... இதுல சில கெட்டவங்களும் இருக்காங்க என் வீட்டுக்காரர் மாதிரி :( நல்லவங்க எல்லாம் மனசுக்குள்ளே அலுத்துப்பாங்க (இதுக்கு பெரும் அலுப்பு தானே நடுவரே!) கெட்டவங்க எல்லாம் இதை பணவிரையம் என்று சொல்லியே போடுவாங்க!

சரி நம்ப இப்போ ரயில் பிரயாணத்துக்கு தயார் ஆவோம் வாங்க! மூட்டை முடிச்சி கட்டி நண்டு சிண்டுலேர்ந்து எல்லாரையும் சேர்த்தி கிளப்பி ஆட்டோவிலோ கால் டாக்சியிலோ உட்கார வைக்கறதுக்குள்ள குடும்ப தலைவருக்கு எத்தனை முறை தான் நெஞ்சு வலி வந்திருக்குமோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். அரைமணி நேரம் தான் இருக்கும் அதற்குள் போய் சேர வேண்டும். அவசரப்படுத்தினால் டாக்சி டிரைவர் முறைப்பார். பின்ன என்னங்க அவரும் வந்து ஒரு மணி நேரமாச்சி ஒருத்தரும் வண்டியில் ஏறலைனா....தலைவரின் மனதை அப்பொழுதைக்கு புரிந்துக் கொண்ட ஒரே மனிதர்! நாமென்ன முகேஷ் அம்பானி போல் தனி விமானத்திலா பறக்கிறோம், நம்மை போல தானே எல்லோரும் அவசரத்தில் தாறு மாறாய் வண்டியை ஒட்டி ட்ராபிக் வேற கண்ணை கட்டும். அதற்குள்ளாகவே அலுப்பு தட்டிடும். இன்னமும் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள்ளே அலுப்பு! நேரத்துக்கு கிளம்பலைனா அலுப்பு பணவிரையமும் தான் ஆகும் (பின்ன வேயட்டிங் சார்ஜும் சேர்த்தால் ...... )

இன்னமும் ஐந்து நிமிடத்தில் கிளம்பிவிடும் என்று எச்சரிக்க வந்த பிறகே பிளாட்பாரம் தேடி கோச் தேடி கரெக்டா தப்பான கோச்சில் ஒரு வழியாக ஏறியாகி விட்டது. அங்கே போனதுக்கப்புறம் பார்த்த நம் சீட்டில் வேறு யாரோ என்னடா இது என்று கேட்காமலே பெட்டியெல்லாம் சீட்டின் அடியில் அடுக்கி அவரை நகர சொன்னால் அவர் கேட்ப்பார் எந்த கோச் , இவர் எல்லாம் இந்த கோச் தான் இதே சீட் நம்பர் தான். சரி அப்படியா டி டி ஆர் வரட்டும் என்று முரட்டு பிடிவாதத்தோடு அங்கேயே உட்கார்ந்தால் (கோவத்தை எங்கையாவது காட்டனும் இல்லையா!) சின்னவருக்கு ஜன்னல் சீட் வேணும், அம்மாவுக்கு காப்பி வேணும் இப்படி எல்லோரும் தேவைகளை அடுக்கிடுவாங்க. முதலில் டி டி ஆர் வரட்டும் என்று எல்லோரையும் சமாதனப்படுத்தினால் ஆடி அசைந்துக் கொண்டு வருவார் கருப்பு கோட் போட்ட துரை. டிக்கெட்டை அவரிடம் காட்டி செக் பண்ணினா உங்களுக்கு தான் சீட் கன்பர்ம் ஆயிட்டதே பின்ன எதுக்கு இந்த கோச்சில் ஏறினீங்க என்பார்....உடனே குடும்பம் மொத்தத்தையும் கோவப்பார்வையால் சுட்டுத்தள்ளிட்டு எல்லோரையும் தள்ளிகிட்டே வேற கோச்சுக்கு போய்...அப்பா மூச்சு வாங்கு நடுவரே.....ஏதோ சோடா தரேன்னு சொன்னீங்களே.....கொஞ்சம் ஜில்லுனு தாங்க ப்ளீஸ்.....

சீட்டுக்கு போய் உட்காருவதற்குள் எப்போ டா இந்த ட்ரெயின் பயணம் முடியும் என்றாயிடும். அதோடு நிற்குமா நான் எதெல்லாம் வாங்கி சாப்பிடக் கூடாது என்று சொல்லுகிறோமோ அதெல்லாம் ஒவ்வோனா வித்துகிட்டே போகும், அவங்கிட்டேயிருந்து குழந்தைகளை என் சில பெரியவர்களையும் தான் காப்பாத்தி ஒரு வழியாய் பயணத்தை ஆரம்பிச்சாச்சு என்று நினைத்து ஆறுதல் படவே முடியாது. இன்னமும் இந்த தொல்லைகள் தொடரும் . நடுவரே நீங்க ரயிலில் கூடவே போயிட்டே இருங்க.....இறங்கியதும் வந்து ரிசீவ் பண்றேன் :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பார்ந்த நடுவர் அவர்களே. தலைப்பைக்கண்டு நேரத்தை இழுத்துப்பிடித்து பதிவிட்டுப்போகலாம்னு ஓடோடி வந்திருக்கேன்,***விடுமுறைக் கால பயணங்களால் வருவது அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும்!(ஆனந்தமே)*** இதில் துளியளவும் கருத்து மாற்றமில்லை இதில் கூட எதிரணி இருக்கேன்னு ஆச்சர்யமா இருக்கு. நடுவரே நாம் எத்தனை பயணக்கட்டுரைகள் வாசித்திருப்போம், வாசிக்கும் போதே அத்தனை இன்பம் அதை அனுபவித்தவர்களீண் இன்பத்தை சொல்லவும் வேண்டுமா?
உதாரணம் ஒன்று சொல்கிறேன் சில மாதங்களுக்கு முன் நாம் ஒரு சுற்றுலா சென்றோம், எனக்கு அதில் கொஞ்சமும் இஷ்டமில்லை கணவர் ஆசைக்காக சென்றேன். எனக்கு மிக்ரெய்ன் ப்ரொப்லம் இருக்கு டூரை என் ஜாய் பண்ணமுடியாது போகும்னு நெனச்சேன், ஆனா எந்தவித பிரச்சினையும் இல்லாம அழகா இருந்தது எங்க சுற்றுலா.
ஒரு சுற்றுலாப்பயணம் என்றால் நிச்சயமா ரிலாக்ஸா இருக்க தான் போவோம். டென்சன் இல்லை, தலைக்கு மேல் ஆயிரம் வேலை இல்லை , ஜாலி மட்டுமே தான் இருக்கும்.
இன்னொரு விடயம் சுற்றுலா என்று போகும் போது புதுப்ப்து இடங்களுக்கு ப்போவோம். அந்த இடங்கலுக்கென்றூ சில விஷேசங்கள் இருக்கும் இதையெல்லாம் அங்கே போய் பார்க்கும் போது மனதில் நன்றாகப் பதிந்து விடுகின்றது, திட்டமிட்டு நாம் போகும் சுற்றுலா நிச்சயமாக அலுப்பைத்தராது ஆனந்தத்தை மட்டுமே அள்ளித்தரும் என்பது வெள்ளிடை மலை போல் தெட்டத்தெளிவு நடுவர் அவர்களே,
பாடசலைகள்ல் கல்லூரிகளில் எல்லாம் ஏன் சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள் வீணாய் அலுப்பையும் அலைச்சலையும் பெற்றுக்கொள்ளவா இல்லை இல்லவே இல்லை அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும் வேண்டும் என்பதற்காகத்தான், நட்வரே நேரம் போதவில்லை மீண்டும் வருவேன் நன்றி,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

நடுவரே இப்போ எதிரணிக்கு கொஞ்சம் பதில் சொல்லிட்டு கல்லூரி சுற்றுலாவைப் பற்றி சொல்கிறேன்.
//“அடுப்படியே திருப்பதி, அகமுடையானே குல தெய்வம்”. நாங்க அம்மையப்பனை சுத்தி வந்தாலே உலகத்தை சுத்தி வந்த மாதிரி திருப்திப் பட்டுக்கற ஆளுங்க.//

இதெல்லாம் வெளியில சொல்லிக்கறது மட்டும்தான். உண்மையிலேயே அவங்களுக்கு மனசுல ஆசை இருக்கறதுனாலத்தான் அடுப்படியை திருப்பதியா நினைச்சுக்கறாங்க. இப்படிப் பட்டவங்க நிஜம்மாவே திருப்பதிக்கு போனா எவ்வளவு சந்தோஷப் படுவாங்க! எப்படி அலுப்புன்னு சொல்றாங்க புரியலியே!

//ஆனா, அவங்க இங்கே வருவது விடுமுறைக்காக அல்லவே. நாள் பூராவும் இரை தேடும் பறவைகள், மாலையானால், கூடு தேடி ஓடி வருமே, அதைப் போன்றதல்லவா, இது.//

விடுமுறைக்காக நாங்கள் எங்கள் கூடு தேடி பறந்து வந்தாலும் கூட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதில்லை நடுவரே! கூட்டுப் பறவைகளையும் சேர்த்து சந்தோஷமாக சுற்றித் திரிகிறோம். இதில் இரைதேடி வீடு திரும்பிய பறவையோடு சேர்த்து கூட்டுக்குள்ளேயே கிடக்கும் பறவைக்கும் புத்துணர்ச்சியும் சந்தோஷமும் கிடைக்குது.

// அதற்காக வீட்டுக்குள்ளேயே அடைந்து விடவில்லை. வற்புறுத்தலால் சென்று, திரும்ப திரும்ப இதையே அனுபவிக்கிறோம் என்று சொல்ல வருகிறோம்.//

வேண்டாத மனைவி கை பட்டா குற்றம் கால் பட்டா குற்றம் னு சொல்லுவாங்களே அந்த கதைதான் இது. ஒரு முறை விரும்பி சென்று பாருங்கள்! அடுத்த விடுமுறைப் பயணம் எப்படா வரும்னு காத்துக்கிட்டு இருப்பீங்க.

//ஆனால் எல்லோரும் அப்படியா இருக்கிறார்கள். சிலர் பாக்கெட்டில் இருந்து காசை எடுப்பேனா என்பார்கள், சிலர் காசே இல்லாத மாதிரி நடிப்பார்கள். ஏமாந்தவர்கள் யார் என்று பார்த்து எல்லா செலவையும் நம் தலையிலேயே கட்ட பார்ப்பார்கள். இதனால் மிஞ்சுவது மனக்கசப்புதான்//

இதைத்தாங்க எங்க அணியினர் சொல்றோம் சரியான திட்டமிடல் இருந்தால் சுற்றுலாக்கள் இனிக்கும்னு. எப்படியும் வீட்டுக்கு ஒருத்தர் இப்படி இருப்பாங்க. அவர்களை சுற்றுலா செல்லாமல் வீட்டில் வைத்திருந்தாலும் கஷ்டம்தான். சில குடும்பங்கள் இணைந்து செல்லும் சுற்றுலாக்களைத் திட்டமிடும் போது ஒவ்வொரு குடும்பத்தினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட தொகையை கலெக்ட் செய்து பொதுப்பணமாக வைத்துக் கொண்டு சாப்பாடு, தங்கும் செலவு, வாகன செலவு போன்ற பொதுச்செலவுக்கு வைத்துக் கொண்டு அவரவருக்கு வேண்டிய ஷாப்பிங்குக்கு அவரவர் செலவு செய்து கொண்டால் எல்லா செலவும் நானேதான் செய்தேன்னு ஏன் அலுப்பு வருது. திட்டமிடல் வேணும் நடுவரே திட்டமிடல் வேணும்.

//ஹோட்டல் அறைகளில் தங்குவதெல்லாம் பாதுகாப்பற்றது என்பதை மறுக்க முடியுமா. அடுத்து இந்த நண்டு, சிண்டுகளின் நச்சரிப்பு. அவர்கள் எங்கே பார்வையை விட்டு விலகிடுவார்களோ என்று கண்காணிக்கவே சரியாய் இருக்கும்//

நடுவரே சாலையில் போனால் கூடத்தான் ஆபத்து அதுக்காக சாலையில் போகாமலா இருக்கிறோம். பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொண்டால் ஏன் பிரச்சினை வருது! அங்கே ஆபத்து இங்கே ஆபத்துனு எங்கேயும் போகாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க முடியுமா? குழந்தைகள்னா அப்படித்தான் இருப்பாங்க. இப்படி வெளியிடங்களுக்கு கூட்டிப் போனால்தான் அவர்களுக்கும் அனுபவம் கிடைக்கும். கூட்டத்தில் தொலைந்தால் என்ன செய்யணும்னு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கணும். அப்பா அம்மாவுடனேயே வரணும்னு அறிவுறுத்தனும். வீட்டில் எப்படி குழந்தைகளை கண்காணிப்போமோ அப்படித்தான் கொஞ்சம் கூடுதலா கவனிக்கணும் இதில் என்னங்க அலுப்பு!

//ஒரு பத்து பேர், இருபது பேர் கிளம்பி போனா ஹோட்டல் சாப்பாடெல்லாம் கட்டுபடியாகாதும்மா, பெண்கள் நீங்களே சமைச்சிடுங்களேன் என்பார்கள்.//

இது ஒரு விஷயமாங்க! இந்த கட்டுசாதம் பிரித்து சாப்பிடும் போது கிடைக்கும் சந்தோஷம்... அதெல்லாம் அனுபவிக்கற மனசு வேணுங்க. என்னிக்குமே துரும்பைக் கூடை அசைக்காத பிள்ளைகள் கூட டூர் போற ஆசையில நாம் கட்டுசாதம் செய்யும் போது என்னாமா உதவி செய்வாங்க தெரியுமா? டேய் பார்சல் பண்ண இலை வேணும்னு சொன்னா போதும் அடுத்த நிமிஷம் இலையோட வந்து நிப்பாங்க. அம்மாடி இந்த புளியை ஊறவச்சு சாறு எடுன்னு சொன்னா ஜாலியா செய்வாங்க பொண்ணுங்க. செல்லாம் கொஞ்சம் அந்த தேங்காயை துருவி கொடுடான்னா கொஞ்சம் தேங்காயை தின்னுக்கிட்டே அம்சமா துருவி கொடுப்பாங்க. இதை எல்லாம் அனுபவிக்கணுங்க! எதிரணி சொல்றது எல்லாம் சந்தோஷ அலுப்புகள் பாவம் அவங்களுக்கு புரியல அதான்!

//நம் கண்முன்னே பொலபொலவென உதிரும் தூரலும், ஆலங்கட்டி மழையும், ஊட்டி கொடைகானலை நம் ஏரியாவுக்கே கொண்டு வரும் குளிர்காலமும் இயற்கையில்லையா? இதையெல்லாம் இலவசமாகவே அனுபவிக்கலாமே!! காசு எதற்கு?//

நடுவரே ஆலங்கட்டி மழையா எங்கிட்டு பெய்யுதுன்னு விசாரிச்சு சொல்லுங்க! அடுத்த சுற்றுலா அங்கிட்டுதான் போகணும். தினம் தினம் கண்முன்னே பார்க்கும் காட்சிகளில் நம் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைக்காது நடுவரே! எதிரணி மக்கள் வாழ்க்கையை பணத்தின் அளவிலேயேதான் பார்க்கறாங்கன்னு தெரியுது. ஒரு குழந்தையிடம் போய் சுற்றுலா செல்ல அந்த குழந்தைக்கு ஆகும் செலவுக்கான பணத்தைக் கொடுங்கள். இன்னொரு குழந்தையிடம் அதே பணத்தை செலவழித்து சுற்றுலாவுக்கு அழைத்து செல்லுங்கள். எந்த குழந்தை சந்தோஷமா இருக்கும்னு நினைக்கறீங்க? நிச்சயம் சுற்றுலா சென்ற குழந்தைதான் சந்தோஷமா இருக்கும். பணம் கொடுத்த குழந்தையின் கையில் இருக்கும் நோட்டில் காந்தி தாத்தா மட்டும்தான் சந்தோஷமா சிரிச்சுக்கிட்டு இருப்பார்.

//நீர் பிரதேசங்களிலும், மலை பிரதேசங்களிலும் எத்தனை,எத்தனை மரணங்கள். சொல்லும்போதே உயிர் உறைகிறது. இன்பச்சுற்றுலா என்று சொல்லி, மிஞ்சுவதென்னமோ துன்பம்தான்.//

அட என்னங்க இது! கேஸ் ஸ்டவ்வில் சமைக்கும் போது கூடத்தான் விபத்து நிகழ்கிறது. சமைக்காமலா இருக்கிறோம். இல்லை சுற்றுலா போற எல்லாருமே விபத்தில் சிக்கிக்கறாங்களா? இப்படீல்லாம் யோசிக்க ஆரம்பிச்சோம்னா இந்த உலகில் வாழவே முடியாது நடுவரே!

//இன்று உலகமே கம்ப்யூட்டருக்குள் வந்துவிட்டது. ஒரு பட்டனை தட்டினால் விவரங்கள் கிடைத்துவிட்டு போகிறது. இதற்காக காடு, மலையெல்லாம் அலைந்து திரிய வேண்டுமா என்ன.
அதுமட்டுமில்லாமல் டிஸ்கவரி, அனிமல் ப்ளானட் என்று இயற்கையின் பொக்கிஷங்களும், பல்வேறு மக்களின் வாழ்க்கை முறைகளும், உணவு பழக்கங்களும் நம் வீட்டுக்கே வந்து விருந்தளிக்கும் போது உலகமே வீட்டுக்குள் இருப்பது போலல்லவா தோன்றுகிறது.//

ஆமா பட்டனைத் தட்டினா எல்லா தகவல்களும் கிடைக்குது. ஆனால் நாம் சென்று அனுபவித்து உணரும் போது பட்டனைத் தட்டினா கிடைக்காத சந்தோஷமும் மன நிறைவும் கிடைக்குது. டிவியிலேயே உலகை சுற்றிப் பார்க்கலாம் எதுக்கு சுற்றுலான்னு கேட்கறாங்க. டிவியில காண்பிக்கற சாப்பாட்டை சாப்பிட முடியுமா? இல்லை அங்குள்ள காலநிலையை அனுபவிக்க முடியுமா? அந்த இடத்திற்கே உரிய மண்வாசனையை நுகர முடியுமா? டிவி முன்னாடி பார்ப்பது அத்தனையும் மாயை! கானல் நீர்! எதையும் அனுபவிக்க, உணர முடியாது. டிவியில் பார்ப்பதால் சந்தோஷமும் கிடைக்காது.

//பரிச்ல்காரர் என்னமோ எல்லாவற்றையும் விளக்கி விலாவாரியாக சொல்லி கொண்டுதான் வந்தார். ஆனால் நான் தான் அதை கேட்கும் மனநிலையில் இல்லை. ஏதோ மரண குகையில் அகப்பட்டது //

பிரச்சினை எங்கன்னு புரிஞ்சுதா நடுவரே! நம்ப மனசில்! அந்த த்ரில்லை முழு மனதோடு அன்பவித்தால் கிடைக்கும் சந்தோஷம் அளவிட முடியாதது.

//அந்த நீரில் ஆட்டம் போட்ட பிறகுதான் தெரியும் உடம்பெல்லாம் பேயடித்த மாதிரி வலிக்கும். அப்புறம் சளி பிடித்து, ஜுரம் வந்து................///

இது ஏன் தெரியுமா எல்லாவற்றையும் டிவியில் பார்த்தே அனுபவித்துக் கொள்ளலாம்னு வீட்டுக்குள்ளேயே இருந்து எதிர்ப்பு சக்தி குறைந்து போனதால்தான். அடிக்கடி சுற்றுலா போறவங்களைக் கேளுங்க எந்த காலநிலையும் தண்ணீரும் சூழலும் ஒத்துக் கொள்ளும். மழையை முழுசா அனுபவிக்கணும்னா மழையில் இறங்கி நனையணும். நல்லா இழுத்து போர்த்திக்கிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்தால் கிடைக்கும் சந்தோஷம் குறைவுதான் நடுவரே!
//எல்லாத்தையும் இந்த பட்ஜெட் சொதப்பி குடும்பத்தலைவர் அதற்க்கு தகுந்தாற்போல் எல்லோரையும் பேசி அட்ஜஸ்ட் பண்ணி ஒருவழியாக டிக்கெட் போட்டிருப்பார். //

இதெல்லாம் சுற்றுலாவின் அங்கம் நடுவரே! இந்த வாட்டி ஒருவரின் சாய்ஸ்னா அடுத்தவாட்டி இன்னொருவருடையது. எல்லோருடைய ஆசைகளும் நிறைவேறும் நடுவரே!

பிள்ளைங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணுவதெல்லாம் ஒரு அலுப்பா நடுவரே! அவ அப்படி போட்டு வரா இவ இதை வாங்கிட்டு வரான்னு கம்பேர் பண்ணி புழுங்கற மனசு இருந்துச்சுன்னா சுற்றுலா போகாமலேயே கூட அலுப்பு வரும். நாம நம்ப மகிழ்ச்சிக்காக போறோமா இல்லை அடுத்தவங்களைப் பார்த்து புழுங்கிச் சாகப் போறோமாங்கறது நம்ம கையில்தான் இருக்கு.
//நாங்க தான் போயிட்டு வந்தவுடனே "பேஸ்புக்கில்" போட்டோஸ் அப்லோட் பண்ணிடுவோம்ல! //
நடுவரே எதிரணி சரியான குழப்ப அணியா இருக்கு. ஒருத்தவங்க சொல்றாங்க டிவியிலேயே எல்லா இடத்தையும் பார்த்து சந்தோஷப்படறோம்னு சொல்றாங்க. இன்னொருத்தவங்க இன்னொரு ஃபேமிலி சுற்றுலா போன ஃபோட்டோவைப் பார்த்தே பிரச்சினை ஆகும்னு சொல்றாங்க. இப்போ அலுப்பும் சலிப்பும் எதனாலன்னு புரியுதா நடுவரே! சரியா புரிஞ்சுக்கிட்டீங்களே அதேதான் மனசுலதான்!

//நேரத்துக்கு கிளம்பலைனா அலுப்பு பணவிரையமும் தான் ஆகும் (பின்ன வேயட்டிங் சார்ஜும் சேர்த்தால் ...... )//

திட்டமிடல் செயல்படுத்துதல் தெரியலேன்னா தினப்படி வாழ்க்கையே கூட போராட்டம்தான். அதனால் இதைத்தான் சரி செய்யணுமே தவிர சுற்றுலா செல்வதால்தான் அலுப்பும் சலிப்பும்னு சொல்றது எல்லாம் சும்மா நம்ப குறைகளை மறைக்க சப்பக்கட்டு கட்டறது :)

ஆரம்பத்துலயே இவங்க தாமதா கிளம்பி சொதப்பிக்கிட்டு செயின் ரியாக்‌ஷன் மாதிரி எல்லாத்துலையும் சொதப்பி சுற்றுலாவைக் குறை சொன்னால் என்னங்க சொல்றது? இப்படிப் பட்டவங்களால சுற்றுலா மட்டுமல்ல வீட்டுக்குளேயே இருந்தால் கூட நிம்மதியா சந்தோஷமா இருக்க முடியாது.

பதில் சொல்லியே டயர்ட் ஆயிட்டேன். சோடா எல்லாம் பத்தாது நடுவரே ஜில்லுன்னு ஜிகர்தண்டா கொடுங்க வந்து காலேஜ் டூர் பற்றி சொல்றேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைத்து தமிழருக்கும் வணக்கம்.
இது என் முதற் பட்டிமன்ற பங்களிப்பு.

இயல்பாக போய் கொன்டிருக்கும் வாழ்க்கையில்
ஒர் புத்துணர்வு தருவது சுற்றுலா தான்.
இது பல பேருக்கு அலைச்சலும், பணம் விரயம் , அலுப்புமாக இருபதற்க்கு காரணம் சரியான திட்டமிடுதல் இல்லததே...!!

சரியான முறையில் திட்டமிட்டு, சென்றால் நிச்சயம் அது ஆனந்த சுற்றுலா தான்....!! நன்றி வணக்கம்..

god with us

.// ஏமாந்தவர்கள் யார் என்று பார்த்து எல்லா செலவையும் நம் தலையிலேயே கட்ட பார்ப்பார்கள். இதனால் மிஞ்சுவது மனக்கசப்புதான்.//** அதுவும் நடுவரைப் பத்தி கேட்க வேணுமா?? ஐயய்யைய்ய்யோ முடியலைங்க ..எத்தனைதடவைதான் ஏமாளியாவே இருக்கிறது....;-(

//ஒரு பத்து பேர், இருபது பேர் கிளம்பி போனா ஹோட்டல் சாப்பாடெல்லாம் கட்டுபடியாகாதும்மா, பெண்கள் நீங்களே சமைச்சிடுங்களேன் என்பார்கள்.//*** அதுவும் இந்த பார்பிக்யூவ எவ கண்டுபிடிச்சானோ அவன இதே பார்பிக்யூல வைச்சு வாட்டி எடுக்கனும்னு தோணும்;-(

//நீர் பிரதேசங்களிலும், மலை பிரதேசங்களிலும் எத்தனை,எத்தனை மரணங்கள். சொல்லும்போதே உயிர் உறைகிறது. இன்பச்சுற்றுலா என்று சொல்லி, மிஞ்சுவதென்னமோ துன்பம்தான்//*** ”துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயோ” இதுக்கும் ஒரு தத்துவப் பாட்டை வைச்சிருப்பாங்களோ உங்க எதிரணி???

//இன்று உலகமே கம்ப்யூட்டருக்குள் வந்துவிட்டது. ஒரு பட்டனை தட்டினால் விவரங்கள் கிடைத்துவிட்டு போகிறது. இதற்காக காடு, மலையெல்லாம் அலைந்து திரிய வேண்டுமா என்ன//*** அதானே! எங்கே சூரியனைப் பத்தி தெரிஞ்சுக்க அங்க ஒரு ட்ரிப் போய்ட்டு வரச்சொல்லுங்க பாப்போம்..சும்மா..நம்மகிட்டயேவா..;-)

ஒகேனக்கல்தானே அன்னிக்கு போனேங்க... ஆனா இன்னிக்கு சஹானாவையும், ரோஹித்தையும் வைச்சுக்கிட்டு போக முடியுமா? அவங்கள பாத்துக்கறேன் பேர்வழின்னு நான் கரையில இருக்கனும் அவங்க அப்பா மட்டும் நல்லா எஞ்சாய் பண்ணிட்டு இருப்பாரு இதுல எனக்கெங்க மனமகிழ்ச்சி ஆனந்தம் வரும்;( அதப்பாத்து நமக்கு கடுப்புல்ல வரும்..;(

//வாழுங்கள் வாழவிடுங்கள் என்று அந்த இயற்கை நம்மிடம் கெஞ்சுவது போல் என் காதுகளில் கேட்கிறது நடுவரே.//*** நீங்க வேற என்கிட்ட கதறி கதறி அழுகுதுங்க.. என்னிக்காவது ஆழமரத்துக்கு மட்டும் நினைக்கறது செய்யமுடிஞ்சுதுனா, அது கையில இருக்கிற விழுதாலயே விளாசித் தள்ளிடும் பாத்துக்குங்க....!

மிக்க நன்றி பூர்ணிமா, சுற்றுளாவினுடைய மறுபக்கத்தையும் மிக அப்பட்டமாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள் ...பாராட்டுக்கள்..;-)

இதுக்குமேலயும் அப்படி சுற்றுலாவில் என்ன சுகம் இருக்கு?? என்ன ஆனந்தம் இருக்கு....நான் கேட்கலைங்க நம்ம பூர்ணிமா கேக்கறாங்க....சொல்ல யாராவது வரீங்களா....... இது நாந்தான் ;-)

Don't Worry Be Happy.

நடுவரே...

ஒரு குருவி போட்டோவை இண்டெர்னெட்டில் இருந்து டவுன்லோட் செய்து ப்ரிண்ட் பண்ணி வீட்டில் மாட்டுவதற்கும், அதையே நாம் இயற்கையான சூழலில் அதுக்காக பல மணி நேரம் செலவு செய்து ஆசை ஆசையாக நமக்கு பிடிச்ச மாதிரி 100 படம் எடுத்து அதில் 1 ஒன்றை நச்சுன்னு செலக்ட் செய்து ப்ரிண்ட் பண்ணி வீட்டில் மாட்டுறதுக்கும் வித்தியாசம் இருக்கா???

கோவிலுக்கே போகாம திருப்பத்தி பிராசதமும் ஆன்லைனில் தரிசனமும் கூட இன்று கிடைக்கிறதே... ஏன் எல்லாரும் அங்க போய் கியூ கட்டி நிக்கறாங்க???

என் பிள்ளைகளுக்கு மொட்டை அடிக்க எங்கள் இருவர் குடும்பமும் போனோம். வண்டி என்னவோ நெருங்க உட்கார்ந்து பயணிக்க சிரமமா இருந்தது. ஆனா குழந்தைகள் தூங்கி மேல விழுந்து அட்ஜஸ் பண்ணி உட்கார்ந்து உடல் வலியோட வீடு திரும்பினாலும் சில விஷயங்கள் அந்த பயணத்தை இனிமையாக்கின.... இரவு முழுக்க கண் விழிச்சு விடிய விடிய இரண்டு குடும்பத்து மக்களுக்கு சமையல் நடந்தது... சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சுது.. உப்பில்லா இட்லியை கூட அன்று ரசித்தோம். எல்லாம் பேக் பண்ணி அங்க கொண்டு போய் தட்டில் போட்டு நின்னுகிட்டே சாப்பிட்டது கூட... ஆகா... மகிழ்ச்சி இன்னும் கண் முன் நிக்குது நடுவரே.

பயணங்கள் தனி மகிழ்ச்சி நடுவரே. அதை சரியா ப்ளான் பண்ணனும்... அப்போ தான் ஆனந்தம். ஒரு முறை எங்க வீட்டில் திடீர்னு ப்ளான் பண்ணாம மைசூர் கிளம்பினோம். போய் தங்க இடம் இல்லாம அலஞ்சி கடைசியில் இரவு முழுக்க பெங்கலூர்க்கு ட்ராவல் பண்ணி வரும் சூழல். ஆனா அந்த பயணம் கூட ஒரு அனுபவம் தான்... எப்படி ப்ளான் செய்து போகனும்னு கற்று கொடுத்தது.

ஒரு பூவை டிவியில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கு... அப்படி ஒரு இனிமையான அனுபவம் வேணும்னா பயணங்கள் வேண்டும்.

சிரியாவில் நான் போன ஒவ்வொரு இடமும் எனக்கு வரலாறு கற்றுத்தந்தது. இதை இண்டர்னெட்டில் பார்த்து படிச்சா மறந்துருவோம்... ஆனா நேரில் அந்த இடங்களை சுற்றி வந்து, அந்த காலத்தில் யானையும் மனிதர்களுமாக மிஷின் இல்லாமலே எவ்வளவு பெரிய கல்லை எல்லாம் எவ்வளவு டெக்னிக்கலா அடுக்கி பெரிய பெரிய தூஙளை அமிச்சிருக்காங்க... நேரில் பார்க்கும்போது கிடைக்கும் பிரம்மிப்பும்... அதை தொட்டு பார்த்து கிடைக்கும் ஆனந்தமும்... நினைவை விட்டு என்றும் நீங்காதே நடுவரே. கிடைக்க என்ன தவம் செய்தேனோ!!!

பயணத்தின் போது சிறு தூரல், மழை வந்தா உடனே வண்டியை ஓரங்கட்டி ரோட்டோர டீ கடையில் சூடா ஒரு டீ!!! நினைச்சு பாருங்க நடுவரே... எப்படா போவோம் மீண்டும் அப்படி ஒரு பயணம்னு ஏங்க வைக்கும். அது மழை நேரத்தில் நீங்க வீட்டில் உட்கார்ந்து குடிக்கும் டீ, வடை பஜ்ஜியை விட இனிமையானது.

பயணத்தின் போது நாம போகும் இடத்தை பற்றி மட்டுமில்ல நடுவரே... வழி முழுக்க உள்ல எல்லா ஊரை பற்றியும் நாம நிறைய தெரிஞ்சுக்க முடியும். அந்த அந்த ஊரில் விஷேஷங்களை நாம் நேரில் காணும் போது அது ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி.

சிரியாவில் உள்ள காசியூன் மலை ஏசுகிருஸ்துவும், நபிகளும் ஏறினதுன்னு சொல்றாங்க... அதை நான் படத்தில் பார்ப்பதுக்கும், அந்த மலையில் உட்கார்ந்து நான் ஊரை பார்ப்பதுக்கு வித்தியாசம் எவ்வளவு இருக்கு... அப்படியே உடம்பெல்லாம் சிலிர்க்கும்.

இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு... கோர்வையா சொல்ல வரல இப்போ... ஏன்னா உட்கார்ந்து தட்ட ஏகப்பட்ட தடை... என் மகன் என்னை விடுவதாக இல்லை. வருகிறேன் மீண்டும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//குடும்ப தலைவிக்கு அடுத்த வீடு அம்புஜம் போறத்துக்கு முன்னாடி அந்த இடத்துக்கு தான் போயிட்டு வந்துடனும் ஒரு ப்ளான் பண்ணியிருப்பாங்க....//**எங்க வீட்டு பக்கத்திலதான் அம்புஜம் இருக்காங்கன்னு நினைச்சேன் எல்லார் வீட்டுப்பகக்த்திலேயும் அம்புஜம் இருக்காங்களா??

// ஆமாம் நானும் நேத்திக்கு போய் தான் புது ஹான்ட் பேக் ஷூ வாங்கினேன், இப்படி சொன்னால் ஒண்ணுமே வாங்கதவரும் சும்மா வாய்க்கு வந்ததை எடுத்து விடுவார்கள். பிறகு அதை உண்மையாக்க கண்டிப்பாக வாங்கி தானே ஆக வேண்டும்.//** அப்படியும் அது கடையில கிடைக்கலைன்னா அறுசுவையிலாவது எங்க கிடைக்கும்னு அரட்டையில கேட்டு வாங்கிட்டுதான் போவோமாக்கும்;-) நான் சுகிய சொல்லைப்பா;-)

//இதுல சில கெட்டவங்களும் இருக்காங்க என் வீட்டுக்காரர் மாதிரி :(//** எல்லா வீட்டிலேயும் ஒரு கெட்டவங்க இருப்பாங்களோ....;-(

//டிக்கெட்டை அவரிடம் காட்டி செக் பண்ணினா உங்களுக்கு தான் சீட் கன்பர்ம் ஆயிட்டதே பின்ன எதுக்கு இந்த கோச்சில் ஏறினீங்க என்பார்....உடனே குடும்பம் மொத்தத்தையும் கோவப்பார்வையால் சுட்டுத்தள்ளிட்டு எல்லோரையும் தள்ளிகிட்டே வேற கோச்சுக்கு போய்...அப்பா மூச்சு வாங்கு நடுவரே.....ஏதோ சோடா தரேன்னு சொன்னீங்களே.....கொஞ்சம் ஜில்லுனு தாங்க ப்ளீஸ்....//** அடடா! குடும்பத்தை மட்டும் தள்றதா நினைச்சு நான் உங்களுக்கு கொடுத்த சோடா பாட்டிலையும் தள்ளி உடைச்சிட்டீங்களே....... ச்சோ...ச்சோ.. உங்கள நினைச்சா எனக்கே பாவமா இருக்கு....இதிலெல்லாம் மனநிறைவுன்னு சொல்லி என் வெள்ளேந்தி குணத்த சாதகமாக்க பாக்கறாங்களே உங்க எதிரணி வரட்டும் அவங்ககிட்ட வைச்சுக்கறேன்....ம்..

//சீட்டுக்கு போய் உட்காருவதற்குள் எப்போ டா இந்த ட்ரெயின் பயணம் முடியும் என்றாயிடும். அதோடு நிற்குமா நான் எதெல்லாம் வாங்கி சாப்பிடக் கூடாது என்று சொல்லுகிறோமோ அதெல்லாம் ஒவ்வோனா வித்துகிட்டே போகும்,//*** இதில அந்த அந்நியன் பட ட்ரெய்ன் கேண்டின் வேற கண்முன்னாடி வந்து பயமுறுத்தும்..;-(

//நடுவரே நீங்க ரயிலில் கூடவே போயிட்டே இருங்க.....இறங்கியதும் வந்து ரிசீவ் பண்றேன் :)//*** சரியாப்போச்சு போங்க...வழி அனுப்ப வந்த நான் வண்டியில ஏறிட்டேனா ....அடக்கடவுளே....;-(

ஹா ஹா லாவண் கிரேட்பா ..இன்னும் அந்த ட்ரய்ணப் பிடிச்சும் பரபரப்பு விட்டுப்போகலை..நன்றி லாவண் அசத்தலான பதிவு பாராட்டுக்கள்;-)

ஃபுல் டென்சன்ல போற ஒரு விடுமுறைப் பயணம் எங்கே இனிதாக இருக்கு மனநிறைவைக்கொடுக்குதுன்னு சாட்சாத் லாவணேதான் கேக்கறாங்க ...பதில் சொல்ல முடியுமா ”ஆனந்தம், மனநிறைவு, அனுபவம்” அணி.......வாங்க வாங்க....

Don't Worry Be Happy.

//ஒரு சுற்றுலாப்பயணம் என்றால் நிச்சயமா ரிலாக்ஸா இருக்க தான் போவோம். டென்சன் இல்லை, தலைக்கு மேல் ஆயிரம் வேலை இல்லை , ஜாலி மட்டுமே தான் இருக்கும்.//*** கரக்ட்டுங்க ;) மலைஉச்சியில ஒரு கோவில் இருக்குன்னா ஒரு கம்ப ஊனியாச்சும் மேல ஏறுவோமே ஒரு ஜோஸ்ல...ஆனா என்னிக்காவது லிஃப்ட் வொர்க்காகைலைனாலும் படியேறி நாலாவது மாடிக்கு போறதுக்கே அலுத்துக்கறோமே..;( இதிலேயும் சந்தோஷத்தை அனுபவிங்கன்னு உங்க எதிரணி சொல்றது ஆச்சரியமாதான் இருக்கு..

//பாடசலைகள்ல் கல்லூரிகளில் எல்லாம் ஏன் சுற்றுலா ஏற்பாடு செய்கிறார்கள் வீணாய் அலுப்பையும் அலைச்சலையும் பெற்றுக்கொள்ளவா இல்லை இல்லவே இல்லை அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும் வேண்டும் என்பதற்காகத்தான்,//** சரியாதானே சொல்றீங்க.. யாரையாவது நீர்வீழ்ச்சில தள்ளித் தீர்த்துகட்டனும்னு போறதுதான் சுற்றுலாங்கிற மாதிரி இல்ல உங்க எதிரணி சொல்றாங்க....

நன்றி பூங்காற்று;) வெள்ளிடை மலைன்னு எல்லாம் சொல்லி ஆசையக் காட்டிட்டீங்க சீக்கிரம் நேரத்தை அதிகமாக்கி வாங்க ;) காத்திருக்கிறோம்;-)

அலுப்பு, அலைச்சல் இல்லவே இல்லை ஆனந்தம், மனநிறைவு, அனுபவம்தான் கிடைக்குதுன்னு அடிச்சு சொல்லிட்டாங்க பூங்காற்று ..இவ்வளவும் கேட்ட பின்னாடியும் இல்ல, கிடையவே கிடையாது அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைன்னு சொல்ல அ.அ.ப அணி ரெடியா...வாங்க வாங்க ......

Don't Worry Be Happy.

அன்புள்ள நகைச்சுவை அரசி தோழி ஜெயா....வெகு நாள் கழித்து பட்டியை அலங்கரிக்க வந்திருக்கும் நல்ல தீர்ப்பு தரப்போகும் நடுவருக்கு என் வணக்கங்கள்! வாழ்த்துக்கள்!!

விடுமுறைக்காலப் பயணங்களால் வருவது ஆனந்தம்...அனுபவம்....மனநிறைவு!
ஆனந்தம் ஆனந்தம் பாடும்!
மனம் ஆசை ஊஞ்சலில் ஆடும்!
ஆயிரம் ஆயிரம் காலம் அந்த டூர்
ஞாபகம் மனதினில் இருக்கும்!!

நாம் அன்றாட ருடீன் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு ஒரு வாரம் வெளியூர் செல்லப்போகிறோம் என்கிறபோதே மனது எப்படி குதிது கும்மாளம் போடுகிறது? இதை யாரும் மறுக்க முடியுமா? புதிய இடம், புதிய மனிதர்கள், புதிய க்ளைமேட், நாம் சமைக்கும் உணவிலிருந்து மாறுபாட்ட சாப்பாடு......இப்படி நிறய்ய விஷயங்கள் இருக்கே சந்தோஷப்பட!

பயணம் என்பது விடுமுறைக்கு மட்டுமல்ல நடுவரே! புதிதாகத் திருமணமான தம்பதியர் எதற்கு ஹனிமூன் செல்கிறார்கள்? இருவரும் புதிய ஓர் இடத்திற்குச் சென்று மன மகிழ்ச்சியோடு ஒரு கவலையுமின்றி பேசிப் பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத்தானே? உங்களுக்குத் தெரியாதா நடுவரே!

"இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு. பாவம்...ரெண்டு பேரும் அலுப்பா இருக்காங்க. வீட்டிலயே எஞ்சாய் பண்ணுங்க" அப்படீனு யாராவது சொல்லுவாங்களா? பயணத்தால அலுப்பும், வருத்தமும் வரும்னா ஹனிமூனே வந்திருக்காது! வீட்டில மூடின அறைக்குள்ள ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டு, வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட்டுகிட்டு "ஐ லவ் யூ'னு சொல்லிக்கிட்டிருப்பாங்களா?! சொல்லுங்க நடுவரே!! ஒரு நாலு நாள் பயணம் கூட அவங்களுக்குள்ள ஒரு ஒட்டுதலை உண்டாக்கத்தானே இந்த ஏற்பாடெல்லாம்? பிறகெப்படி பயணங்கள் அநாவசியம்னு சொல்லமுடியும்?

ஒரு தம்பதிக்கு குழந்தை இல்லேனா டாக்டர்கள் முதல் அட்வைஸா சொல்வது உங்க கவலைகள், டென்ஷன், ஆஃபீஸ் எல்லாம் மறந்துட்டு சந்தோஷமா ஒரு வாரம் எங்காவது ஜாலி ட்ரிப் போயிட்டு வாங்கனுதான்! இதிலயே புரியுதே வெளியூர் சென்று மனதை லேஸாக்கும்போது எல்லா வருத்தங்களும் நம்மை விட்டு ஓடி, புத்துணர்வும், உள்ள மலர்ச்சியும் ஏற்பட்டு அதுவே குழந்தைப் பேறுக்கு வழி வகுக்கும் என்பதை. (இது நான் சொன்னதல்ல, பல டாக்டர்கள் சொல்லக் கேட்டது.)

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போகிறவர்களாக இருந்து....அதுவும் இந்தக்கால I.T வேலைகளில் கேட்கவே வேண்டாம்.
ஒருவர் ஒருவராய் பிறந்தோம்!
இருவர் இருவராய் இணைந்தோம்!
ஓடி ஓடியே உழைத்தோம்!
பணத்தை மட்டுமே சேர்த்தோம்!

ஆளுக்கு ஒரு பக்கம் ஓடி, அங்கு கிடைத்ததை சாப்பிட்டு, இரவு ஒவ்வொரு நேரம் வந்து, பக்கத்தில் படுத்துறங்கும் கணவனையே (மனைவி) 'நைட் எப்போ வந்தாய்?' என்று கேட்டு வாழும் ஒரு இயந்திர உலகத்தில் இருவருமாக சில நாட்கள் சுற்றுலா சென்று வருவதால் அவர்கள் தாம்பத்தியம் வலுவுறுவதோடு, ஒருவருக்கொருவர் ஈர்ப்பும், காதலும் மேம்படும் என்பது மனவியல் அறிஞர்களின் கூற்று.

ஒரு இல்லத்தரசியை எடுத்துக் கொள்வோம். காலை எழுந்தது முதல் வேலை.....வேலை....வேலை...ஓய்வு எப்போது?
"சே....தினமும் சமைப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதுமாக லைஃபே போர்ப்பா....ஒரு நாலு நாள் எங்கயாவது போய் நிம்மதிய்யா இருந்துட்டு வரலாம்னு இருக்கு" என்று அலுத்துக் கொள்ளாத பெண் உண்டா? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் நடுவரே!

தினமும் பள்ளி, பாடம், ஹோம்வொர்க், இன்னும் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடிகள் வேறு....அவர்கள் குழந்தைகளா? இல்லை சுமை தாங்கிகளா?

ஆஃபீஸ், வேலை என்று சதா இருக்கும் குடும்பத் தலைவர்கள் மனைவி, குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்க சில ஆயிரங்களை செலவழிப்பதில் என்ன தவறு? திரும்ப அதே வீடு, அதே வேலை....ஆனால் அந்த உல்லாசப் பயணத்தின் உற்சாகம் பல நாட்களை புத்துணர்வாக்குமே?

'சதி லீலாவதி' திரைப் படத்தில் ஒரு காட்சி வருமே, நினைவிருக்கா நடுவரே! கமலும், கோவை சரளாவும் ஹோட்டல் ரூமில் பிள்ளை இருப்பதால் வெளி அறையில் வந்து எஞ்சாய் பண்ணுவாங்களே.....எத்தனை அழகான காட்சி!! இது பொய்யில்லை நடுவரே....சில கணவர்கள் தன் மனைவி முகத்தைப் பார்ப்பதே இது மாதிரி சுற்றுலா நேரங்களில்தான் தெரியுமா? ஒரு காதலான பார்வை,,,சின்ன இடிப்பு, ஒரு 'மீண்டும் கோகிலா' இடுப்புக் கிள்ளல், ஒரு அணைப்பு......இதுக்கெல்லாம் அன்றாட வாழ்வின் அவசரத்தில் எங்கே நேரம் இருக்கு நடுவரே?! நம் எண்ணங்களை, உணர்வுகளைப் புதுப்பிக்க சுற்றுலாக்கள் அவசியம்தானே?

நாம் குழந்தைகளை புதிய வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு விளக்கும்போது பல வித்யாசமான விஷயங்கள், தகவல்களை நாமும் அறிந்து, நம் குழந்தைகளுக்கும் சொல்லும்போது புத்தக அறிவுக்கு மேலான பொது அறிவு மேம்படும். இதற்காகத்தானே பள்ளிகளில் கல்விச் சுற்றுலாக்களை அழைத்துச் செல்கிறார்கள்?

//எல்லோருமே வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் தான். அப்போ தானே குழந்தை ஸ்கூலுக்கு போனதும் அழகாக கட்டுரை எழுத முடியும்//
குழந்தை வீட்டில் இருந்தாலும் கட்டுரை எழுத முடியுங்க நடுவரே! நாம் அனுபவித்ததை எல்லாரும் படித்து இன்பமடையத்தானே எழுதுகிறோம்? நமக்கு இந்த ஒரு நாடும், மக்களும்தான் தெரியும்..ஆனால் ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விசேஷம், புதுமை, பண்பாடு, கலாச்சாரம்....இவற்றை அறியும்போது நம் அறிவு, பார்வை விசாலமடையும்.

நான் கிட்டத்தட்ட பத்து நாடுகள் சுற்றியுள்ளேன்.
அந்த அனுபவங்களை இதில் வாதமாக எழுத முடியாது. படிப்பவர்களுக்கும் போர் அடிக்கும். விரைவில் கட்டுரைகளாக அறுசுவையில் எழுதுகிறேன். (என் பசங்களை ஆஃபீஸ் அனுப்பிவிட்டு!!!)

அடிக்கடி பயணம் செய்யும் நான் அடைந்த மகிழ்ச்சி, அனுபவம், ஆனந்தம், மனநிறைவு இவற்றை எல்லாரும் அடைய இன்பச் சுற்றுலாவுக்கு இன்றே கிளம்புங்கள் தோழிகளே!

வாய்ப்புக்கு நன்றி நடுவரே.....இனி வாதமிட வரமுடியுமா என்பது சந்தேகமே. அதனால் என் வாதங்களை மொத்தமாக சொல்லி முடித்து விட்டேன். நல்ல தீர்ப்பு கொடுக்கணும் நடுவர் அம்மா அவர்களே!!

//“அடுப்படியே திருப்பதி, அகமுடையானே குல தெய்வம்”. நாங்க அம்மையப்பனை சுத்தி வந்தாலே உலகத்தை சுத்தி வந்த மாதிரி திருப்திப் பட்டுக்கற ஆளுங்க.// அப்போ எதிர்அணிஇனரை சுற்றுலா செல்ல கூப்பிட்டால் எனக்கு அடுப்படி மட்டும் போதும் என்று சொல்லிடுவன்களா ?
என்னதிது சின்னபுள்ள தனமால்ல இருக்கு.

பலர் சேர்ந்து போகும் பொது சந்தோசமும் புதுப் புது அனுபவங்களும் தானே கிடைக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து கொண்டு ஜாலியா போகலாமே. இத ஏன் வேண்டாம்னு சொல்றாங்க இந்த எதி அணியினர் எனக்கு சுத்தமா புரியல.

நேரம் இல்ல அப்புறமா வாறன்

ஜென்னிவினோ

Dare To Paly With Life

மேலும் சில பதிவுகள்