பட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!**

அன்பார்ந்த அறுசுவை ரசிகர்களே! ரசிகைகளே!

அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, நீங்கள் ஆவலோடு ஒருவாரகாலமாக எதிர்பார்த்த நமது பட்டி இனிதே துவங்கி விட்டது. என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டு... சென்ற வாரம் போலவே இந்த வாரமும் நாம் பேச விருக்கும் தலைப்பும் பயனுள்ளதுதான்...அது அடுத்து வரும் கோடைவிடுமுறையை முன்னிறுத்தி...

அறுசுவை தோழி உதிராவின்

***விடுமுறைக் கால பயணங்களால் வருவது
அலுப்பும் , அலைச்சலும், பணவிரயமும்! (வருத்தமே)
அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும்!(ஆனந்தமே)***

என்ற தலைப்பின் கீழ் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!!!

உங்களது பொன்னான நேரத்தை அறுசுவைக்காக கொஞ்சம் ஒதுக்கி..அறுசுவையின் பட்டியை இம்முறையும் வெற்றிப் பட்டியாக்க .... அனைவரும் வருக ஆதரவு தருக என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்;-) நன்றி வணக்கம்_()_

பின்குறிப்பு: முதற்கட்ட அறிவிப்பு ஒவ்வொரு பதிவுக்கு பிறகும் சோடா வழங்கப்படும்.

முக்கியக்குறிப்பு: பட்டியின் விதிமுறைகளை மனதில் கொண்டு...பதிவுகளை பதிய வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

//எப்பவும் கார்லேயே போற நீங்க கொடைக்கானல் லேக்கை சுற்றி குடும்பசகிதம் சைக்கிள் விடுங்க .அதுவும் நீங்க உங்க கணவருடன் டபுள்சா.அந்த என்ஜய்மெண்டே தனி தான் .நம்ம ஊரு ரோட்ல இப்படி போக முடியுமா?//***அடடா! என் கூடவே வந்து தலைய உள்ளுக்க நீட்டி பாத்த மாதிரியே பேசறீங்களே அப்பூ;) கொடைக்கானல்னாலே அந்த லேக்க சைக்கிள்ல சுத்தறது மட்டும்தானே நியாபகம் வருது..உங்களுக்கும் அதுதான் பிடிக்குமா?? சேம் பின்ச்;-)

//எல்லாம் ஒரு அனுபவங்க .அதை பாசிடிவ்வா எடுத்து கொள்ளுங்கள் .
பணவிரயம் ,தொல்லை ,அலுப்பு ,இப்படி நினைச்சாஎப்படிங்க ?
ஒரு ஸ்வீட்டை சாப்பிடும் போது இன்பம்
ஒரு புது ட்ரெஸ உடுத்தும் போது இன்பம் .
ஆனால் டூர் போனதை எப்போ நினைச்சாலும் இன்பமுங்க .
அதனால தான் அது பேரு இன்பசுற்றுலா//*** வாரே வா! ஜமாய்ச்சிட்டீங்க நிக்கில்ஸ்! ஸ்வீட் எடு கொண்டாடு;-)

நன்றி நிக்கில்ஸ்;) உற்சாகமான பதிவு மனசுக்கும் இன்பத்தை தருது;-)

எல்லாத்தையும் பாஸிடிவ்வா எடுங்கன்னு நம்ம நிகில்ஸ் சொல்றது காதுல விழாத மாறியே நடிக்கறாங்களே எங்க கொடைக்கானலுக்கு டிக்கெட் புக் பண்ண ஒண்ணும் போகலையே ....எ எ எ நாங்க கண்டுபிடிச்சிட்டோம்னு பயம்தானே!!பயம் இல்லைன்னா வந்து பதில் சொல்லுங்க பாக்கலாம்....விடு ஜூட்;-)

Don't Worry Be Happy.

//உங்களை முன்னாடி விட்டுட்டு நான் பின்னாடி வந்திருக்கனும். தப்பு பண்ணிட்டேன். இனியாச்சும் கரெக்டா ஃபாலொ பண்ணுங்க..//** ஹா ஹா மிளகாய் பஜ்ஜி கிடைக்கலைங்கற காண்டுல ஏதேதோ பேசறீங்கன்னு நினைக்கிறேன்..ஹி ஹி ஹி உங்க பின்னாடி நான் வந்தாதான் ஃபாலோ. என் பின்னாடி நீங்க வந்தா நான் என்ன உங்க கைடா?? கதைய நீங்க சொல்றீங்களா நான் சொல்றேனே?? அடடட்டா ஏன் உளர்றேன்னு பாக்கறீங்களா தோழீஸ் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட காரத்துல பக்கத்தில இருந்த பேசன் ஃபுருட்ட தோலோட அவசரமா சாப்பிட்டதுல நாக்கு ருசி தெரியாம மறத்து போச்சு;-(( எல்லாம் கல்ப்ஸ் வைச்ச கண்ணுன்னு நினைக்கிறேன்.....

ம்ம் நீங்க சொல்லுங்க கல்ப்ஸ் அப்புறம் என்னாச்சு...

//எதிர் டேபிளில் எங்களோடு வந்த பாட்டியின் அக்குரமங்களை பார்த்து சிரிப்பு வந்தது. அவர் பாவம் தோசைக்கு சட்னி கிண்னத்தை எடுக்க நினைத்தவர் நடுங்கும் குளிரில் மாற்றி குழம்பு கிண்ணத்தை எடுக்க, அது தவறி சட்னியில் விழுந்து ஒரு ரகளையே பண்ணிக் கொண்டிருந்தார். //**அட நீங்க வேற கல்ப்ஸ் உங்க பக்கத்து வீட்டு பாட்டியாவது பரவாயில்ல எங்க எதித்த வீட்டு மாம்ஸ் கைகழுவ கொண்டு வந்த எழுமிச்சைத் தண்ணிய கப்புன்னு குடிச்சிட்டாரு...எல்லாரும் ”கொல்லுன்னு” சிரிச்சதுல வெட்கப்பட்டு கெக்கேக்க்க்கென்னு சிரிச்சாரு பாரு அன்னிக்குதான் நாங்க அவரோட மலர்ந்த முகத்த பாத்தோமாக்கும்;-)

நன்றி கல்ப்ஸ்! நல்லா சிரிக்க சிரிக்க ரசித்து படித்தோம். ஊட்டி அனுபவம் சூப்பரப்பூ;-)யாருமே பதில் வாதம் வைக்க முடியாதவாரு சூப்பரான அனுபவ வாதத்தை வைச்சிட்டீங்க ..ஆனாலும் உங்க எதிரணியோட வாதத்துக்கும் பதில் வாதம் வையுங்க அப்பத்தானே பட்டி சூடு பிடிக்கும் ( அப்பாடா சகுனி வேலைய மட்டும் கரக்ட்டா பாக்கறியே கீப் இட் அப் ஜெய்!;-) )

உங்ககிட்ட பேசும்போது இது யாருங்க கல்ப்ஸ் இருங்க ஒரு நிமிசம்..அவங்ககிட்ட பேசிட்டு வரேன்...;-)
//நடுவரே, வீட்டுக்கு போவனும். ஆத்தா வையும் காசை குடுங்க.. செலவே இல்லாம ஊட்டியை சுத்தி பார்த்தீங்கல்லோ.. காச குடுங்க..//***அய்ய யாரு நீயி??? அடச்ச கைய விடு ! பராக்கு பாக்கும்போது பக்குன்னு கையப்பிடிக்கிற..காசா ...அய்ய ..ஆளப்பாரு..வெளியூருனா ஏமாந்தயவங்கன்னு மூஞ்சியில எழுதி ஒட்டியிருக்கா..ஆக்காங் ..100 க்கு ஃபோன் பண்ணி போலீஸ்ல பிடிச்சாந்திடுவேன்..ஓடிப்போயிரு......

Don't Worry Be Happy.

எல்லாரும் கவிசிவாக்கு ஒரு ஓ ..................போடுங்க..............!

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ!!!!!!

ஹாய் கவி காலேஜ் டூரோட வந்திட்டீங்களே!!! ஐத்தலக்கடி ஜிம்மா கவின்னா கொக்கா..ஏ ஏ...

//எங்களுக்கு பாதுகாப்பாக நின்று எங்களை அவர்களின் சகோதரிகளாய் கவனித்துக் கொண்டதை நினைத்தால் மனம் நெகிழ்கிறது.//***நம்ம பசங்கனாலே அப்படிதானே கவி பாசக்கார பயபுள்ளைக.....

அருமையா அகஸ்தீயர் பால்ஸ், பாணதீர்த்தம் அருவி, போட்டிங்னு ஒரு இன்பச்சுற்றுலாவே கூட்டி போய்ட்டீங்க;-) அடுத்து உங்க பயணக்கட்டுரை எப்போ அறுசுவையில வரப்போகுது??;-)

நாங்க கொடைக்கானல் போனப்போ இப்படிதான் எங்க சீனியர் அக்கா அவங்க மேக்கப் திறமைய காட்ட என் முகத்த தேர்ந்தெடுக்க ஃபுல் மேக்கப் போட்டு கூலிங்க்ளாஸ்!! (அப்படியொரு குளிரு பக்கத்தில நிக்கற ஆளே கண்ணுல தெரியாது... பனி மூட்டம்..) தலையில ஷால் லால முக்காடு போட்டு வெளிய வர என்னைப்பார்த்த எங்க ஜூனியர் பையன் பேயோ என்னமோன்னு நினைச்சு பயந்து மயங்கி விழ ....ஜெய் சீக்கிரம் உள்ளே போய் முகத்த கழுவிட்டு வான்னு சீனியர் அக்காங்க உஷார் பண்ண நானும் ஓடிப்போய் கழுவி நல்ல பிள்ளையாட்டம் ஒன்னுமே தெரியாது மாதிரி வந்து நிக்க ஹா ஹா ஹா நல்ல சிரிச்சோம் அப்புறமா நினைச்சு நினைச்சு;-) நம்புங்கப்பா உண்மைதான் ஹி ஹி ;-)

அப்புறமா நடு ரோட்டில எல்லாருமா சேர்ந்து ஊஊஊஉ லல லா பாடி ஆடினது.., ஊத்தப்பம்தான் இருக்குன்னு சொன்ன ஓட்டல் காரர்கிட்ட எங்க சாரோட சேர்ந்து சண்டைபோட்டு ரோஸ்ட்தான் வேணூம்னு கலாய்ச்சது..அதுல ஒருத்தனுக்கு கதவோட தாழ்பாள் கிடைக்க “சாவி சாவி” ந்னு கத்த எங்க கேங்க்ல இருந்த சாவி(சாவித்ரி) அவளதான் கூப்பிடறாங்கன்னு ”என்ன என்னன்னு” கேட்க ஹ ஹா ஹா பயங்கரமான ஜாலிதான் அந்த டூர் பூரா இன்னும் நிறைய இருக்கு சொல்ல ;-)

ஹா ஹா கடைசியா எப்படியோ பவர்ப்ளாண்ட்டுக்கு போய்ட்டீங்கல்ல....;-)

நன்றி கவி ;) கல்லூரி வாழ்க்கையை மறுபடியும் கண்ணுல நிறுத்தியதற்கு;-)டேமில முதலை இல்லை .. அருவிக்கு பக்கத்தில பாத்ரூம் இல்லைன்னு நிறய பொறுப்பா இன்ஃபார்மேசனும் கொடுத்துட்டீங்க அடுத்த தடவை அங்க டூர் போகும்போது நியாபகம் இருக்கும்ல எங்களுக்கு தேங்க்யூ சோ...........மச் கவி........!
மற்றதையும் வெகுவிரைவில் சொல்லுங்க உங்க எதிரணி இதக்கேட்டு அவங்களும் ஒத்துக்குவாங்க பாருங்க ஆமா சுற்றுலா இனிமையானதுதான்னு;-))அப்படிதானே ஒத்துக்கிட்டீங்கதானே..........என்ன எதாவது சொல்ல இருக்கா....ஆஹா அப்படியா ..என்னாச்சு அங்க வாங்க வாங்க சொல்லுங்க..;-)

Don't Worry Be Happy.

நடுவரே,

//ஒரு குரூப்பாக கிளம்பி போகிறோம். இதில் எல்லோருடையை ஒத்துழைப்பும், அனுசரிப்பும் அவசியமாகிறது. ஆனால் எல்லோரும் அப்படியா இருக்கிறார்கள்.// இப்ப டூர் போறோம்னு ப்ளான் பண்ணி, நியூசையும் குடும்பத்தார்கிட்ட சொல்லிட்டோம்னு வைங்க. அதில் விருப்பப்பட்டவங்க காசு கட்டி வர போறாங்க. விருப்பம் இல்லாதவங்க விடப்போறாங்க. இதில் என்ன பெரிய சிரமம் இருக்க போகுது சொல்லுங்க. அடுத்தபடியா டூர் கிளம்பினால், எல்லோரும் வரும் பட்சத்தில் நிச்சயம் அனைவரின் ஒத்துழைப்பு இருக்கும் நடுவர் அவர்களே. சும்மாவெல்லாம் சொல்லக்கூடாது. நம்மவீட்டில் எலுமிச்சை சாதம் கொண்டு சென்றால், சித்தி கண்டிப்பாக, புளிச்சாதமாவது கொண்டு வருவார். அத்தை இட்லியும், தக்காளி தொக்கும் கொண்டு வருவார். அதே போல ஸ்னாக்சும் ஷேர் பண்ணி தான் செலவு பண்ணிப்பாங்க. நடுவரே, அந்த காலத்தில் வேண்டுமானாலும் சட்டை பையிலிருந்து காசு எடுக்க கஷ்டப்பட்டிருப்பார்கள். இந்த கால மக்கள் இங்கிதம் தெரிந்தவர்கள். யாரும் ஒருவர் தலையிலேயே சுமையை வைக்க மாட்டார்கள். அதனால் எதிரணி சொல்வதை நம்பாதீங்கோ..நம்பாதீங்க...நம்பாதீங்கோ ;)

//ஹோட்டல் அறைகளில் தங்குவதெல்லாம் பாதுகாப்பற்றது என்பதை மறுக்க முடியுமா. அடுத்து இந்த நண்டு, சிண்டுகளின் நச்சரிப்பு. அவர்கள் எங்கே பார்வையை விட்டு விலகிடுவார்களோ என்று கண்காணிக்கவே சரியாய் இருக்கும்.// வீட்டுக்குள்ளேயே பாதுகாப்புங்கறது கேள்விக்குறியா இருக்கப்ப, ஹோட்டல்ல இருக்கும்னு என்ன நிச்சயம். இதையெல்லாம் பெருசா எடுத்துட்டு இருந்தா வாழவே முடியாது. கிடைச்ச ஹோட்டலிலெல்லாம் தங்கிடுவோமா? அப்படியே தங்கினாலும் விழிப்புணர்வோட தானே இருப்போம். நாமென்ன வருஷக்கணக்கிலா தங்க போகிறோம். நம் உடைமைகளை வைக்கவும், ஊர் சுற்றி முடித்ததும் இரவு வந்து உறங்கவும் தானே ஹோட்டல் அறையை எடுக்கிறோம். இதற்கே ஏன் இத்தன கவலை? குட்டிப்பசங்க வீட்ல இருந்தா மட்டும் அமைதியாவா இருக்காங்க? அவங்க எங்குமே தான் நச்சரிப்பை பன்ணிட்டு இருக்காங்க. இல்லைனா அவங்க பசங்களே இல்லயே.. இதெல்லாம் ஒரு காரணம்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா நடுவரே? நீங்களே சொல்லுங்க நியாயத்தை. நடுவரே, பிடிச்ச புடவைக் கடைக்கு போக 1000ம் தடை இருந்தாலும் அவற்றை விலக்கி எப்படி உள்ளே சென்று புடவை எடுப்பது என்று யோசித்து அதில் வெற்றியும் காண்கிறோமே. அது ஏன்? ஏனென்றால் அது நமக்கு பிடித்த விஷயம். அங்கே தடைகள் வந்தாலும் அவற்றை எப்பாடுபட்டாவது அகற்ற நினைப்போம். அதுபோலவே விடுமுறை பயணத்தையும் பிடித்ததாக்கி கொண்டால் இதெல்லாம் தடைகளே இல்லை.

//ஒரு பத்து பேர், இருபது பேர் கிளம்பி போனா ஹோட்டல் சாப்பாடெல்லாம் கட்டுபடியாகாதும்மா, பெண்கள் நீங்களே சமைச்சிடுங்களேன் என்பார்கள்.// நடுவரே, வீட்டு தலைவர்களும் உசார் மக்கான்ங்க தான். மனைவி தனியா இருந்தா தண்ணி சாப்பாட்டை கூட யோசிச்சு கேக்குறவங்க. கும்பலா உறவுகள் இருக்கும் போது ஆளுக்கொரு கை போட்டு வேலையை சுலபமாக்குவாங்கன்னு நினைச்சு தான் அப்படி சொல்றாங்களே தவிர மனைவிக்கு சிரமம் தரவேண்டும் என்பது நோக்கமல்ல. விடுமுறை நாட்களில் எல்லா ஹோட்டல்களும் நிரம்பி வழியும். பசி நேரத்திற்கு வயதானவர்கள், பிள்ளைகளை அழைத்துச் செல்லும் போது கூட்டமான ஹோட்டல் சாத்தியப்படாது என்பதாலேயே கட்டுசோற்றை ரெகெமண்ட் செய்கிறார்கள்.

//அதுமட்டுமில்லாமல் பட்ஜெட்டில் துண்டு விழாமல் பார்ப்பதே இன்று பெரிய விஷயம். இதில் வருடம் முழுக்க சிறுக சிறுக சேர்த்ததை ஒரே நாளில் செலவழித்தால் குடும்பம் தாங்குமா? கொஞ்சமேனும் பொறுப்பு வேண்டாமா நடுவரே.//

நடுவரே, வருடம் முழுக்க சிறுக சிறுக சேமித்து கண்ணுக்கு முன்னாடி நாம் அனுபவிக்கும் சொர்க்கம் இவர்கள் கண்ணுக்கு தெரியாது. பொறுப்பாக சேமிக்கிறோம் பேர்வழின்னு ஓட்டமா ஓடுற சீட் பண்ட்ல கட்டி ஏமாறுவாங்க பாருங்க அதுதான் இவங்களுக்கு பொறுப்பான செலவு. அப்படி விட்டுட்டு அப்பவும் அடிச்சுப்பாங்க. என்னங்க நடுவரே, இதெல்லாம் கேக்க மாட்டீங்களா?

//நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படிபட்ட குடும்பங்களில் கிடைக்காத அனுபவம், சுற்றுலாக்களில் கிடைத்துவிடுமா என்ன? சுற்றுலா என்பது ஜஸ்ட் ஒரு மாறுதல் அவ்வளவே!!// நடுவரே, இதுபோன்ற சுற்றுலாக்கள் தான் குடும்பத்தில் உறவுகளுக்கிடையே பிணைப்பையும்,அன்பையும்,விட்டுக்கொடுத்தலையும்,ஒற்றுமையையும் சொல்லித் தருகின்றன. சுற்றுலாவென்று சென்றுவிட்டு அங்கே போன ஜென்மத்தில் நடந்த சண்டையையும் நினைவு வைத்துக் கொண்டு அதை அலசி ஆராய்ந்தால் எப்படிங்க சந்தோஷம் கிடைக்கும்? மருந்து கடைக்கு மருந்து வாங்க தான் போவோம். காய்கறி கடைக்கு காய்கரி வாங்க தான் போவோம். பூக்கடையில் பூவைத் தான் வாங்குவோம். அதுபோல சுற்றுலாவில் அமைதியையும், சந்தோஷத்தையும் தானே வாங்க போகிறீர்கள் அதை மட்டும் வாங்கிக் கொண்டு திரும்புங்களேன். தேவையில்லாததை வாங்குவானேன்.. அவதி படுவானேன்?

//நாம் போகும் பாதை எங்கும் கூடவே வரும் பௌர்ணமி வான்நிலவும், நாம் ஆசையாய் வளர்த்த தோட்டத்தில் பூத்த ரோஜாவும், கோடையிலும் அவ்வப்போது நம்மை வருடி போகும் மென்மையான காற்றும், நம் கண்முன்னே பொலபொலவென உதிரும் தூரலும், ஆலங்கட்டி மழையும், ஊட்டி கொடைகானலை நம் ஏரியாவுக்கே கொண்டு வரும் குளிர்காலமும் இயற்கையில்லையா? இதையெல்லாம் இலவசமாகவே அனுபவிக்கலாமே!! காசு எதற்கு?// நடுவரே, நமக்கு தேவை ஏற்படும்போது ஒரு பொருள் இருந்தால் அந்த பொருளுக்கும் மரியாதை. நமக்கும் அனுபவித்த ஆத்ம திருப்தி. அதை விட்டு எனக்கு இன்று கொலை பசி நாளைக்கு விருந்தே கிடைத்தாலும் அதை என் வயிறும், மனதும் ஏற்குமா சொல்லுங்க நடுவரே. விடுமுறை கிடைக்கும் போது எஞ்சாய் பண்ணா தானே நல்லார்க்கும்.

அமாவாசை அன்னைக்கு எனக்கு பெளர்ணமிய பார்க்க ஆசைப்படுவேன். வருமா? பெளர்ணமி அன்னைக்கு எனக்கு வெளிச்சமே பிடிக்காது அது வந்த வழியே ரிடர்ன் ஆகுமா? நடுவரே, பருவநிலையே இப்ப தப்பி போய்ட்டு இருக்கு. முறையா பெய்ய வேண்டிய சமயத்தில் பெய்வதில்லை. இதில் எங்கிருந்து அந்ததந்த க்ளைமேட்டுக்கும், தென்றல் காற்றையும், புயல் காற்றையும் எதிர்பார்ப்பது? எவ்ளோ நாளைக்கு தான் வீட்டு சாப்பாடே சாப்டுட்டு இருக்கறது நடுவரே. இப்ப ஹோட்டல்களிலும், பாஸ்ட் புட்களிலும் தான் உலகமே குவிஞ்சு கிடக்கு. இதுக்கு என்ன சொல்லபோறாங்க எதிரணி? போற போக்கை பார்த்தா எல்லாருமே ஊர் சுத்த கிளம்பிடுவோம். எதிரணில உள்ளவங்க மட்டும் தான் வீட்டுக்கு பின்னாடி கொய்யா மரத்துல எத்தனை பிஞ்சு விட்டிருக்கு, மாங்காய் மரத்துல எத்தனை குருவி உக்கார்ந்திருந்துச்சி, எத்தனை பறந்து போச்சுன்னு எண்ணிட்டு இருக்கனும்.

//நீர் பிரதேசங்களிலும், மலை பிரதேசங்களிலும் எத்தனை,எத்தனை மரணங்கள். சொல்லும்போதே உயிர் உறைகிறது. இன்பச்சுற்றுலா என்று சொல்லி, மிஞ்சுவதென்னமோ துன்பம்தான்// நடுவர் அவர்களே, சுற்றுலா செல்பவர்கள் என்ன எடுத்த உடனே, எங்கே ஆபத்து அதிகமோ அங்கே வழி காட்டுங்கப்பா, நான் போய் விழுந்து பார்க்கனும்னா சொல்வாங்க? இல்லையே. யாரும் சாவதற்காக விரும்பி போக மாட்டார்கள். விரும்பி போவபர்களும் இருக்கிறார்கள். அவர்கள் போவது சுற்றுலாவுக்கென இல்லை, நிரந்தர பயணத்திற்கு . அதையும் மீறி சாவபவர்கள் விதிவசத்தால் உயிரிழந்தவர்களே. ஆகவே நடுவர் அவர்களே, ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு. வீட்டுக்குள்ளேயே சேப்டியா இருக்கவனும் சாப்பிடும்போது விக்கிட்டு செத்ததுண்டு. துணிந்து 14 அடுக்கு மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து உயிர் பிழைத்தவனும் உண்டு. எதிரணியை அநாவசிய பயத்தை விட்டுட்டு எங்களோடு கைகோர்க்க சொல்லுங்க. அப்புறம் பாருங்க.. ஆனந்தம்...ஆனந்தம் பாடும்..மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்னு பாட்டு பாடுவாங்க..

//எங்கே பார்த்தாலும் ஆண்கள், அரை நிர்வாணமாய் குளிக்கிறார்கள். மசாஜ் செய்து கொள்கிறார்கள். ஃபுல் மப்பில் இருக்கிறார்கள். அடுத்து பரிசல் பயணம் அப்பப்பா, அதை முடிப்பதற்குள் என்க்கிருந்த மரணபயம் சொல்லி தீராது.// நடுவரே, பாருங்க நடுவரே, நீங்களும், நானும் ஒகேனக்கல் போனோம். இப்படி எதாச்சும் சொன்னோமா? மனசுக்கு விஷயங்களை மட்டும் பார்க்கனும் நடுவர் அவர்களே. இந்தபக்கம் திரும்பினா இப்படி இருக்குமோன்னு பயந்துட்டே திரும்பினா கண்டிப்பா அங்கே அப்படி இருக்கும்.குடிகாரர்கள் இல்லாத ஊரும் உண்டா நடுவர் அவர்களே. நாங்க போனப்ப கூட தான் இன்னொரு போட்ல ஒரு கேங் காலங்கார்த்தாலயே ஒருபாட்டில் கிளாஸ் ச்கிதம் வந்திருந்தாங்க. அந்த தண்ணியை அங்கிருந்தே எடுத்து கலக்கி அடிச்சாங்க. எதிர்பட்ட போட்ல தண்னிரை வாரி இறைச்சுட்டு, ஒரே அமர்க்களமா தான் வந்தாங்க. ஆனா வரம்புமீறாம நடுவர் அவர்களே. எனக்கு தண்ணீர் என்றால் செம்ம பயம். இருந்தாலும் எனக்கு அந்த தண்ணீர் பயணம் பிடித்திருந்தது. ஒரு த்ரில்லுக்காகவே சென்றேன். மறக்க முடியாத பயணம். வீட்ல பேய் படத்தை பார்க்க டீவி முன்னாடி உக்கார்ந்திருப்போம். கண்ணை மூடிட்டு, அதை பார்க்கவும் பயம், பார்க்காமல் இருக்கவும் மனம் இல்லை. ஆக அந்த த்ரில்லை விரும்பி ரசிக்கும்போது இதையும் ரசிக்கலாமே.

//இன்று உலகமே கம்ப்யூட்டருக்குள் வந்துவிட்டது. ஒரு பட்டனை தட்டினால் விவரங்கள் கிடைத்துவிட்டு போகிறது.// நடுவர் அவர்களே, விட்டா எதிரணி தோழி கம்ப்யூட்டர்லயே சமைச்சு வீட்ல இருக்கவங்களுக்கு காட்டிடுவாங்க போல. இதை பார்த்தே பசியாறிக்கோங்கன்னு.. பாவம் அவங்க வீட்டார் ;( (எதிரனி தோழி கோவிக்காதீங்க சொம்மா ஒரு தமாசுக்கு.. பட்டில இப்படி கலாய்க்கவே பயம்ம்மா இருக்கு. ஆ'வன்னா கோச்சுட்டு போய்டறாங்க. நீங்க வேற புது தோழியா தெரியறீங்க. அதான் அட்வான்சா சொல்லிட்டேன்..எல்லாமே சும்மா உல்லுல்லாங்காட்டியம். நோ..சீரியஸ்..ஓகே)

//எங்கோ கொஞ்சநஞ்சம் மிஞ்சியிருக்கும் இயற்கையையும் விட்டு வைக்க மனமில்லாமல், அனுபவிக்கிறோம் பேர்வழி என்று அழிக்க கிளம்பி விட்டோம். எங்கெல்லாம் மனித தடம் பதிகிறதோ, அங்கெல்லாம் இயற்கை செத்து, செயற்கை முளைத்து விடுகிறதே.// அழிக்கறது நாங்க இல்லைங்க. அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்க. பெரிய கையோட ஒத்தாசையோட அதெல்லாம் செய்றாங்க. அழிக்க போறவங்களாம் ரசனை உள்ளவங்க இல்லை. ரசனை உள்ளவங்க எல்லாம் அழிக்க போக மாட்டாங்க.

நடுவரே.. பட்டி தொடங்கினதுல இருந்து நீங்களும் ஜோடா தருவீங்க தருவீங்கன்னு நானும் பார்க்கறேன். கையை விட்டு வந்தபாடா இல்ல.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

please tell me how to write comments in tamil?

நடுவர் அவர்களே பிரதிவாதம் வைக்க எதிரணியைக் காணவில்லை அதனாலே எனது வாதங்களையே வைக்கிறேன். ஒவ்வோரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் இருக்கும் இதையெல்லாம் அங்கே போய்த்தான் பார்க்க முடியுமே ஒழிய நம்ம வீட்டுக்கு கொண்டு வந்து பார்க்க முடியாது.:நெடுந்தூரப்பயணம் ,முடிகலைக்கும் காற்று, மூக்கை கமரும் பூவாசம், சேர்ந்தேபயணிக்கும் தோப்புக்கள் எவ்வளவு அருமை நடுவர் அவர்களே,
மூட்டை முடிச்சு சுமப்பதும் , டாக்ஸி ட்ரைவர் முறைப்பதும், டீடீஆர் வருகையூம் பசங்களின் பிடிவாதமும் ....இதையேல்லாம் சொல்லி அலுப்புன்னு சொன்னா சின்னப்புள்ளத்தானமால்ல இருக்கு.
இயந்திரத்தனமான இன்றைய உலகில் கிடைக்கின்ற விடுமுறையைக்கூட வீட்டுக்குள்ளே கழிப்பது முட்டாள்தன்ம், அனுபவி கண்ணூ அனுபவி.......
வெளியே போய் பார்த்தால் தான் தெரியும் நமக்கு தெரியாத எத்தனை விசயங்கல் இந்த பூமியில் இருக்குன்னு.......சுற்றி வா இயற்கையின் அழகை ரசித்திடு, சோகங்கல் பறந்தோடும் பிள்ளைகளுடன் சேர்ந்து நீங்களும் ஒரு பிள்ளையாய் ஆடலாம் பாடலாம் விளையாடலாம் ,கணவன்,மனைவி, பிள்ளை என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒருவாரத்தையோ ஒரு சில நாட்களையோ ஒன்றாக கழிக்க கிடைக்கும் அரிய சந்தர்ப்பம் இந்த விடுமுறைக்கால பயணங்கள்.......உங்க திருமண நாட்களை கண் முன்னே கொண்டு வந்து உங்களை இளமையாக்கிப்பார்க்கும் இந்த விடுமுறைப்பயணங்கள். அன்பான எதிரணியே காலமும் கடலலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை எனவே அலை மோதும் போதே தலை முழுக வேண்டும். வீணா நேரத்த கடத்தமா நல்ல சுற்றுலா ஒன்ற்க்கு ஏற்பாடு பண்ணுங்க போய் வந்த பின் பயணக்கட்டுரை தாங்க நாங்களும் வாசித்து மகிழ்வோம்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

என்ன நடுவரே இப்படி சொல்லிட்டீங்க.....கூடவே போய் பார்த்தால் தானே அலுப்பும், அவஸ்தையும் பணவிரயமும் தெரியும்! இல்லேன்னா நீங்க எதிர் அணி கூட்டிட்டு போற ஸ்தலதுக்கேல்லாம் ஜாலியா போயிட்டு பயணக் கட்டுரை கணக்கா இல்ல தீர்ப்பை எழுதிடுவீங்க....மூச்...ஒன்னும் பேசப்படாது.....கூடவே வரணும் சரியா?

அது சரி நாமெல்லாம் எதுக்கு டயத்துக்கு போயிருக்கிறோம்......டூர் என்றவுடம் மட்டுமா டயத்துக்கு கிளம்பிடுவோமா என்ன? இல்லைனா சும்மாவா சொன்னாங்க "இன்டியன் பங்க்சுவாலிட்டி" என்று. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல தான் நடுவரே....இதுல லேட்டா ஸ்டார்ட் பண்ணி எல்லாமே இப்படி தான் சொதப்பும். இந்த சொதப்பல்கள் தான் அலுப்பை தரும். இல்லை தெரியாம தான் கேக்குறேன் டூர் என்றாலே அலைந்து திரிந்து பார்ப்பது தானே? அப்படி என்றால் அலைச்சல் கண்டிப்பாக இருக்குமா இல்லையா நடுவரே?

கூடவே போனதாலே பயணம் எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். பஸ்ஸில் போனால் குழந்தைகள் பெரியவர்களை வைத்துக் கொண்டு ரொம்ப சிரமம் என்று ட்ரெயினில் போனால் திருடன் பயம் தான். ஒன்றும் வேண்டாம் கதவு ஜன்னல் எல்லாமே மூடியிருந்தாலுமே பாத்ரூம் போகும்போது புடுங்கிட்டு போயிடுறாங்கலாமே? அப்படியா நடுவரே? திருடன் பீதி, நேரம் பார்த்து எல்லோரையும் எழுப்பி எல்லா சாமானையும் மறக்காமல் எடுக்கணும், கொசுத் தொல்லை இப்படியே (பீதியுடன்) உல்லாசமாக யோசித்துக் கொண்டே கண்ணை மூடினால் அந்த ட்ரெயின் சத்தத்திலும் குறட்டை நன்றாகவே கேட்கும்...அதையும் மீறி நாளை ஊர் சுத்தபோறோம் என்கிற சந்தோஷத்துடன் கண்டிப்பாக கும்பகர்ணன் போல தூங்கிருப்பாங்க தானே நடுவரே!

இறங்கி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு போவோணும். அதுக்குள்ள நண்டு சிண்டெல்லாம் பசிக்குதுன்னுன் சிலது தூக்கக் கலக்கத்தில் இருக்கும், சிலருக்கு அவசரம், எல்லோரையும் அமைதியாக்கி ஒரு வண்டியில் ஏற்றி ஒரு வழியாக ஹோட்டலுக்கு சேர்ந்தால் நாம் முன்னமே புக் பண்ணின ரூம் லேட்டாக வந்ததால் கான்சல் ஆகியிருக்கும். அப்படி இல்லை அதெப்படி எப்பவுமேவா லேட்டாவா வருவாங்க என்று எதிரணி கண்டிப்பா கேட்பாங்க. நம்ப 12 பி படத்தில் வருவது போல் சீக்கிரமா போயிருந்தால் என்னாகும் என்பதையும் சொல்றேன். புக் பண்ணியிருக்கும் ரூம் சாவி எடுத்துக் கொண்டு குஷியுடன் போய் திறந்துப் பார்த்தால் நாம் கேட்ட ரூம் மாதிரியே இருக்காது. மனேஜருக்கு போன் போட்டால் சார் இது சீசன் நேரம் நீங்கள் கேட்ட ரூம் இல்லை அதனால் நான் தான் உங்களுக்காக ஸ்பெஷலா இந்த ரூமாது இருக்கட்டுமே என்று புக் பண்ணி வைத்தேன். நீங்கள் இது வேண்டாம் என்றால் வேற ரூமே இல்லை. கூடவே ரூம் வேண்டும் என்று காத்திருப்போரும் நிறைய. இதை விட்டால் பக்கத்தில் உள்ள மற்ற ஹோட்டலில் இவ்வளவு வசதி கூட இருக்காது. இங்கிருந்து தான் நீங்கள் பார்க்க போகும் இடம் பக்கம் என்று பக்கம் பக்கமா பேசி வாயடைத்து விடுவார். எதிர்ப்பார்த்தது கிடைக்கவில்லைஎன்றால் அலுப்பு தானே மிஞ்சும் :(

இனி நாங்கள் மேற்கொண்ட இனிய (!?) பயணத்தை பற்றி சொல்கிறேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் கிருபா;) ஆண்ட்டின்னு சொன்னதால பாருங்க யாருமே உங்களுக்கு பதில் தரலை;-)) இங்க எல்லாருமே உங்கள மாதிரி குட்டிபொண்ணுங்கதான்....தோழின்னே கூப்பிடுங்க ...சரிதானே தோழீஸ்;-)

http://www.arusuvai.com/tamil_help.html

இப்போதைக்கு இதில போய் டைப் பண்ணி இங்க பேஸ்ட் பண்ணுங்க ..;-)

Don't Worry Be Happy.

ஆனந்தமே

தம்பதிக்குள் மனஸ்தாபமா குழந்தைகளை அம்மா வீட்லே விட்டுட்டு ஒரு செகண்ட் ஹனிமூன் போய் விட்டு வாங்க.அப்புறம் எதிரணி கூடாரமே எங்க பக்கம் தாங்க.
பிஸினஸ் டென்ஷன்ல இருந்து ரிலாக்ஸ் பண்ண டூர் சிறந்த ஒன்று.
கடல்ல குளிக்க வேனாங்க அந்த தண்ணியிலே உட்கார்ந்து விளையாடிப் பாருங்க அந்த சுகமே தனிங்க.
அப்புறம் நடுவரே, ஒவ்வொரு பதில்லயும் இருக்கே உங்க ஹாஸ்யம் அட அட அடா ஹாஸ்யமழை பொழியுது போங்க.

//இந்த கால மக்கள் இங்கிதம் தெரிந்தவர்கள். யாரும் ஒருவர் தலையிலேயே சுமையை வைக்க மாட்டார்கள். அதனால் எதிரணி சொல்வதை நம்பாதீங்கோ..நம்பாதீங்க...நம்பாதீங்கோ ;)//*** பாருங்க..;( இவ்வளவுநாளும் தக்காளி சாதம், புளிசாதம், எழுமிச்சை, ஸ்ப்ரிங்ரோல் ஊறுகாய் தயிர், சிப்ஸுன்னு எல்லாத்தையும் என் தலையிலேயே கட்டியிருக்காங்க..யாரும் கொண்டு வர மாட்டாங்க அப்புறம் உங்களுக்குதான் சிரமம்னு வேற எக்ஸ்ட்ராவா ஒரு பயத்தையும் இல்ல கொடுத்துட்டாங்க உங்க எதிரணி..இப்போ நம்பமாட்டேங்க நம்பமாட்டேங்க;-)

//பசி நேரத்திற்கு வயதானவர்கள், பிள்ளைகளை அழைத்துச் செல்லும் போது கூட்டமான ஹோட்டல் சாத்தியப்படாது என்பதாலேயே கட்டுசோற்றை ரெகெமண்ட் செய்கிறார்கள்.//*** சாப்பாட்டுக்காச கொஞ்சம் உஷார் பண்ணினா பர்ச்சேஷுக்கு ஆகும்னு அவங்களுக்கு தெரியலைங்க பாவம்..நாமெல்லாம் யாரு??;-)

// சுற்றுலாவில் அமைதியையும், சந்தோஷத்தையும் தானே வாங்க போகிறீர்கள் அதை மட்டும் வாங்கிக் கொண்டு திரும்புங்களேன். தேவையில்லாததை வாங்குவானேன்.. அவதி படுவானேன்?//***சபாஷ் கல்ப்ஸ்..கேட்டுக்கங்கப்பா...;-)

//நடுவர் அவர்களே, ஆறிலும் சாவு.. நூறிலும் சாவு. வீட்டுக்குள்ளேயே சேப்டியா இருக்கவனும் சாப்பிடும்போது விக்கிட்டு செத்ததுண்டு.//***ஆமாம்பா..இங்கே ஒருத்தர் பரோட்டா சாப்பிடும்போது வேகமா சாப்பிட்டு தொண்டையில் அடைச்சு இறந்து போனாரு;-((

// நடுவரே, பாருங்க நடுவரே, நீங்களும், நானும் ஒகேனக்கல் போனோம். இப்படி எதாச்சும் சொன்னோமா? மனசுக்கு விஷயங்களை மட்டும் பார்க்கனும் நடுவர் அவர்களே. இந்தபக்கம் திரும்பினா இப்படி இருக்குமோன்னு பயந்துட்டே திரும்பினா கண்டிப்பா அங்கே அப்படி இருக்கும்.//*** சரி சரி விடுங்க கல்ப்ஸ் பாவம்..அவங்க சின்னப்பெண்ணாச்சே! பயந்திருப்பாங்க ..சரிம்மா ..நாளைக்கே தமிழக அரசுகிட்ட சொல்லி இனி எல்லாரும் ஃபால்ஸ்ல கோட்சூட் போட்டுதான் குளிக்கனும்னு ஆர்டர் போடச் சொல்லிடறேன் சரியா;-) தங்கம்டா நீங்க;-)

//(எதிரனி தோழி கோவிக்காதீங்க சொம்மா ஒரு தமாசுக்கு.. பட்டில இப்படி கலாய்க்கவே பயம்ம்மா இருக்கு. ஆ'வன்னா கோச்சுட்டு போய்டறாங்க. நீங்க வேற புது தோழியா தெரியறீங்க. அதான் அட்வான்சா சொல்லிட்டேன்..எல்லாமே சும்மா உல்லுல்லாங்காட்டியம். நோ..சீரியஸ்..ஓகே)//**அதெல்லாம் தப்பா எடுத்துக்கமாட்டாங்க.. ;-)) உடம்பு ஸ்ட்ராங்ககாக ஜிம்முக்கு போங்க!! மனசு ஸ்ட்ராங்காகனும்னா அறுசுவைக்கு வாங்க!! இந்த புதுமொழி அவங்களுக்கு நல்லாவே தெரியும்;-)) எவ்வளவோ பட்டுட்டோம் இது எல்லாம் சும்மா ஒரு எறும்புக்கடின்னு அவங்களுக்கு தெரியாதா.....சரிதானுங்களே;-)

//அழிக்கறது நாங்க இல்லைங்க. அதுக்கு வேற ஆளுங்க இருக்காங்க. பெரிய கையோட ஒத்தாசையோட அதெல்லாம் செய்றாங்க. அழிக்க போறவங்களாம் ரசனை உள்ளவங்க இல்லை. ரசனை உள்ளவங்க எல்லாம் அழிக்க போக மாட்டாங்க.//**சரியாதானுங்க சொல்றீங்க ;-)

//நடுவரே.. பட்டி தொடங்கினதுல இருந்து நீங்களும் ஜோடா தருவீங்க தருவீங்கன்னு நானும் பார்க்கறேன். கையை விட்டு வந்தபாடா இல்ல.//***அடடா! நீங்க காங்கோ ஜூஸ் மட்டும்தான் குடிப்பீங்கன்னு நினைச்சுட்டேனே!இந்தாங்க கோலி சோடா நல்லா ஜம்முன்னு குடிச்சு அடுத்த பதிவ தெம்பா போடவாங்க;-))

நன்றி கல்ப்ஸ்;-) நல்லா சீறிப்பாய்ஞ்சிட்டீங்க ..கரக்ட்டுதான் விருப்பட்டு செய்யும் காரியம் இனிக்கதானே செய்யும் அதில எங்க மனவருத்தைப் பாத்தீங்க.?? சேர்க்கிற காசை சிட்பண்ட்ல போடாம இந்த மாதிரி விடுமுறை பயணங்களுக்கு செலவு செய்யுங்கன்னு பொறுப்பா அறிவுரையும் சொல்லிட்டு இரண்டு பாட்டில் சோடா கமுக்கமா பைக்குள்ள சொருகிட்டே உக்காரராங்க நம்ம கல்ப்ஸ் ...வாங்க வாங்க இவங்களுக்கு சலைச்சவங்க இல்லையே நீங்க அ.அ.பணவிரயமே அணி வந்து சொல்லுங்க உங்கப்பக்கம் இருக்கிற நியாயத்தை...;-)

Don't Worry Be Happy.

மேலும் சில பதிவுகள்