பட்டி மன்றம் 61 :**விடுமுறைக் கால பயணங்களால் வருவது ஆனந்தமே! வருத்தமே!**

அன்பார்ந்த அறுசுவை ரசிகர்களே! ரசிகைகளே!

அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு, நீங்கள் ஆவலோடு ஒருவாரகாலமாக எதிர்பார்த்த நமது பட்டி இனிதே துவங்கி விட்டது. என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டு... சென்ற வாரம் போலவே இந்த வாரமும் நாம் பேச விருக்கும் தலைப்பும் பயனுள்ளதுதான்...அது அடுத்து வரும் கோடைவிடுமுறையை முன்னிறுத்தி...

அறுசுவை தோழி உதிராவின்

***விடுமுறைக் கால பயணங்களால் வருவது
அலுப்பும் , அலைச்சலும், பணவிரயமும்! (வருத்தமே)
அனுபவமும் , ஆனந்தமும், மனநிறைவும்!(ஆனந்தமே)***

என்ற தலைப்பின் கீழ் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!!!

உங்களது பொன்னான நேரத்தை அறுசுவைக்காக கொஞ்சம் ஒதுக்கி..அறுசுவையின் பட்டியை இம்முறையும் வெற்றிப் பட்டியாக்க .... அனைவரும் வருக ஆதரவு தருக என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்;-) நன்றி வணக்கம்_()_

பின்குறிப்பு: முதற்கட்ட அறிவிப்பு ஒவ்வொரு பதிவுக்கு பிறகும் சோடா வழங்கப்படும்.

முக்கியக்குறிப்பு: பட்டியின் விதிமுறைகளை மனதில் கொண்டு...பதிவுகளை பதிய வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

://நெடுந்தூரப்பயணம் ,முடிகலைக்கும் காற்று, மூக்கை கமரும் பூவாசம், சேர்ந்தேபயணிக்கும் தோப்புக்கள் எவ்வளவு அருமை நடுவர் அவர்களே,//*** ஆஹா உங்கள் வரிகள் எல்லாம் கவிதை சொல்லுதே!!;-)

//இயந்திரத்தனமான இன்றைய உலகில் கிடைக்கின்ற விடுமுறையைக்கூட வீட்டுக்குள்ளே கழிப்பது முட்டாள்தன்ம், அனுபவி கண்ணூ அனுபவி......//**ஆஹாஹா எவ்வளவு பாசமா சொல்றாங்க கேட்டுக்கங்க அப்பூ;-)

//அன்பான எதிரணியே காலமும் கடலலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை எனவே அலை மோதும் போதே தலை முழுக வேண்டும். வீணா நேரத்த கடத்தமா நல்ல சுற்றுலா ஒன்ற்க்கு ஏற்பாடு பண்ணுங்க போய் வந்த பின் பயணக்கட்டுரை தாங்க நாங்களும் வாசித்து மகிழ்வோம்.//*** ஆஹா எல்லாமே கவிதையாவே எழுதிட்டீங்களே !! அருமை அருமை பூங்காற்று ...ஒரு ஒரு வரியிலும் பல விஷயங்களைத் தந்துட்டீங்க வாழ்த்துக்கள்;-)

நன்றி பூங்காற்று;) உங்க கூட சேர்ந்து நானும் ஒன்னு சொல்லிடவா! கேலண்டர்ல தேதியைக் கிழிக்காம வைச்சாலும் நைனா நாட்கள் நட்ந்துகிட்டேதா இருக்கும் ...டைம்பீஸ்ல பேட்டரிய கலட்டி வைச்சாலும் நைனா டைம் ஓடிக்கினேதான் இருக்கும்...ம்ம் அக்காங் இன்னாமா பூங்காற்று கண்ணு நல்லாயிருக்கா ;-))

அதனால இளமையோடு இருக்க விடுமுறைக்கு போங்க போய்யிட்டு வந்து பயணக்கட்டுரை எழுதுங்கன்னு அருமையா சொல்லிட்டாங்க நம்ம பூங்காற்று பேருக்கேத்தமாதிரியே தென்றலைப்போல் சொற்களால் வருடி விட்டு சென்றிருக்காங்க...இதெல்லாம் கேட்டு புயலாக மாறப்போறீங்களா இல்லை பயணக்கட்டுரை எழுதப்போறீங்களா எதா இருந்தாலும் இங்குட்டு வந்து சொல்லனும் நடுவர் வெயிட்டிங்;-)

Don't Worry Be Happy.

//இந்த சொதப்பல்கள் தான் அலுப்பை தரும். இல்லை தெரியாம தான் கேக்குறேன் டூர் என்றாலே அலைந்து திரிந்து பார்ப்பது தானே? அப்படி என்றால் அலைச்சல் கண்டிப்பாக இருக்குமா இல்லையா நடுவரே?//***அலைஞ்சு திரிஞ்சு பாக்கறதுதானய்யா அப்போ அலைச்சல் இல்லைனு சொன்னா எப்பூடி?? குழப்பறாங்கய்யா;-((

//ட்ரெயினில் போனால் திருடன் பயம் தான். ஒன்றும் வேண்டாம் கதவு ஜன்னல் எல்லாமே மூடியிருந்தாலுமே பாத்ரூம் போகும்போது புடுங்கிட்டு போயிடுறாங்கலாமே? அப்படியா நடுவரே? //*** ஐயய்யோ! நீங்க வேற.. மயக்கமருந்து பிஸ்கட் கொடுத்து எல்லாம் திருடறபாவிப்பயலுக ட்ரெய்ன்லதான் குடியிருக்கறானாமே அப்பிடியா!!

//அப்படி இல்லை அதெப்படி எப்பவுமேவா லேட்டாவா வருவாங்க என்று எதிரணி கண்டிப்பா கேட்பாங்க. நம்ப 12 பி படத்தில் வருவது போல் சீக்கிரமா போயிருந்தால் என்னாகும் என்பதையும் சொல்றேன்//**இங்கே நடுவர் கப்புன்னு சிரிச்சிட்டேன் ஹா ஹாஹா நான் சிரிச்சதை என் பொண்ணு விநோதமா பாக்கறா என்னடா நல்லாத்தானே இருந்தான்னு;-)) இப்படி பயமுறுத்தறீங்களே லாவண்;-) இருங்க சீக்கிரம் போக கடிகாரத்தில கால் மணிநேரம் அதிக படுத்தி வைச்சிருந்தேன் இப்போ கரக்ட் டைமே வைக்கிறேன் ...இந்தியன் பங்க்ஸுவாலிட்டியே ஃபாலோ பண்றேன் ஹி ஹி ஹி;-)

//எதிர்ப்பார்த்தது கிடைக்கவில்லைஎன்றால் அலுப்பு தானே மிஞ்சும் :(//*** ஏதேதோ நினைச்சு நம்ம கற்பனை குதிரையை தட்டி விட்டுருப்போம் அதெல்லாம் கிடைக்கலைன்னா அலுப்புதானே மிஞ்சும்னு லாலிபாப் கிடைக்காம ஏங்கிப்போன சிறுமிமாதிரியே சொல்றாங்க நம்ம லாவண் ...சரியாதானப்பா சொல்றாங்க ..மாறி மாறி நடுவரை குழப்பறீங்களேப்பா??

நன்றி லாவண்;) இனிமைய சொல்ல பத்தாலு இருந்தாலும் வருத்ததை சொல்ல நான் ஒருத்தியே போதும்ங்கிற உங்க தையரியத்தை நான் பாராட்டறேன்;-) உங்களை அம்போன்னு விட்டுருவாங்களா நம்ம தோழிஸ் என்ன நான் கேக்கறதும் சரிதானே தோழீஸ் வந்துடுவீங்கதானே?? அது;-)

பயணம்னாலே கஷ்டம்தான் அதில எங்கய்யா இனிமையக் கண்டீஞ்கன்னு நம்ம லாவண் அவங்க அனுபவிச்ச கஷ்டத்த நம்ம கிட்ட கொட்டிட்டாங்க...இவங்க சொல்றதுலேயும் ஒரு நியாயம் இருக்குன்னு நினைச்சா இவங்க அணிகூட கைகோர்த்து வாங்க அப்படி இல்லைன்னா இவங்க எதிர் அணிகூட கைகோர்த்து வாங்க ஆனா கண்டிப்பா வரனும் வரனும் அததான் நடுவர் எதிர்பாக்கறாரு........;-)

Don't Worry Be Happy.

//தம்பதிக்குள் மனஸ்தாபமா குழந்தைகளை அம்மா வீட்லே விட்டுட்டு ஒரு செகண்ட் ஹனிமூன் போய் விட்டு வாங்க.அப்புறம் எதிரணி கூடாரமே எங்க பக்கம் தாங்க.//**ஆமா குழந்தைகளை மட்டும் அம்மா வீட்டில விட்டுட்டு, மனஸ்தாபத்தை வெளியூர்ல தொலைச்சிட்டு வந்துருங்க..அப்புறம் எப்படி தேடினாலும் கிடைக்கவே கிடைக்காது...சரிதானே நிக்கில்ஸ்;-)

நன்றி நிக்கில்ஸ்;) உங்களுக்கும் என்னோட ஹாஸ்யம் பிடிச்சதா?? தேங்க்யூ தேங்க்யூ ஆஹா இப்ப நடுவரை கையிலேயே பிடிக்க முடியாது போங்க;-)

ரிலாக்ஸேசனுக்கு டூர்தான் பெஸ்ட்டுன்னு எவ்வளவு அழகா நம்ம நிக்கில்ஸ் சொல்லிட்டாங்க ....இப்பவாவது ஒத்துக்கறீங்களா?? இல்லை இல்லைன்னு ( எங்கப்பா ஒருத்தரையும் காணோம் எவ்வளவு நேரம்தான் பட்டி பரபரப்பா போற மாதிரி நானும் பில்டப் கொடுத்துட்டே இருக்கறது??) சொல்றது கேக்குது இங்க வாங்க அருமையான அறுசுவை மேடையில வந்து சொல்லுங்க சோடாவ ஜம்முன்னு குடிங்க...........

Don't Worry Be Happy.

நடுவரே! எதிரணி அப்படி என்னதான் சுகத்தை கண்டாங்களோ சுற்றுலாவில் தெரியவில்லை. எதிரணி தோழி நான் கோவிக்க மாட்டேன்பா.

பணம் சேமிக்க சிட்பண்ட்ஸ் மட்டும்தான் வழியா நடுவரே! எவ்ளோ நியூஸ் பாக்குறோம். நாங்கல்லாம் ரொம்ப உஷாருங்க நடுவரே. டூர் பணத்தை அப்படியே நகையா வாங்கி போட்டு அழகு பார்த்து, பத்திரமா லாக்கர்ல வெச்சிட்டு நிம்மதியா சந்தோஷமா இருப்போம். இது கூட எங்களுக்கு பிடிச்ச விஷயம்தான்.
ஆனால் எதிரணிதான் பாவம் நியூசே பார்ப்பதில்லை போலும், "சுற்றுலாவிலிருந்து வீடு திரும்பியவர் அதிர்ச்சி!! பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம் நகை கொள்ளை, போலீசில் புகார்" இதுதான் செய்தியின் முதல் தலைப்பு செய்தியா வரும்.

அப்புறம் நாங்க கட்டுசோறு பத்தி பேசவேயில்லை. எதிரணியே முடிவு பண்ணிட்டாங்க அது கட்டுசோறுன்னு. அதுவாது பரவால்ல.ஆனா நான் சொல்றது என்னன்னா கிச்சனையே கார் டிக்கில எடுத்துட்டு போய் அங்க வெச்சி சமைக்குறத பத்தி. எங்க போனாலும் குடும்ப தலைவிக்கெல்லாம் விடிவே இல்லைங்க நடுவரே! கரண்டியும் கையுமாதான் அலையனுமா இருக்கு.

நானெல்லாம் ரொம்ப, ரொம்ப மாநிறம்தான் நடுவரே!! எதை தின்னா பித்தம் தெளியும்னு. எல்லா க்ரீமையும் கலந்து கட்டி முகத்தை கொஞ்சம் ஷைனிங் பண்ணி வெச்சிருப்பேன். அதையும் இந்த சுற்றுலாங்குற பேர்ல வெயில்ல அலைய வெச்சி கன்னங்கரேல்னு பன்னிடுவாங்க. அப்புறம் அந்த ஃபோட்டோவை பார்த்தா இனிமை வராது. இது நாமதானானு நமக்கே சந்தேகம் வந்துடும். அந்த கலரை பேலன்ஸ் செய்ய சிவாஜி பட ரஜினி சார் மாதிரி ட்ரை பன்னனும்.

நடுவரே!! எதிரணிக்கு முடி கலைக்குற காற்று சுகமாம். அதை நீங்களும் கவிதைனு சொல்றீங்க. என்ன கொடுமை நடுவரே இது. அந்த முடி மூக்கு, வாய்னு முகத்துல ஒரு இடம் பாக்கி விடாம மூடி முகமூடி போட்டுடும். எதேச்சையா திரும்பி வீட்டுக்காரர பாத்தாகூட அவரே பயந்துடுவார் பேய பாத்த மாதிரி.

//மூக்கை கவரும் பூவாசம்// பூவாசம் மட்டுமில்லை, பெட்ரோல் டீசல் வாசம், பக்கத்து சீட்டு உறவினர் வாமிட் செய்த வாசம், வியர்வை வாசம் எல்லாம் சேர்ந்து வயித்தை பிரட்டிட்டுதான் வரும் நடுவரே!!

இந்த நைட் டைம் ட்ராவலிங்ல நாம தூங்கவே முடியாது. நாம தூங்கினா ட்ரைவரும் தூங்கிடுவாருன்னு பேச்சு கொடுத்துட்டே போகனும். இதை கூட அட்ஜஸ்ட் பன்னிக்கலாம். அப்பதான் அந்த ட்ரைவர் சொல்வாரு இந்த வழியாதான் யானை வரும், காட்டெருமை வரும், யாராவது லிஃப்ட் கேட்டா கூட வண்டிய நிருத்தாம போகனும் ஏன்னா அது பேயா கூட இருக்கும்னு. இதையெல்லாம் கேட்ட பிறகு அது இன்பசுற்றுலாவா இருக்காதுங்க நடுவரே.
பேய்னு சொன்ன உடனே எதிரணி சொல்வாங்க முட்டாள்தனமான மூடநம்பிக்கைனு. அது இருக்கோ இல்லையோ. கேட்டதுமே கிலி வருதா இல்லையா நடுவரே!

சுற்றுலாவில் நல்ல சாப்பாடு, தண்ணி இதெல்லாம் கிடைக்கவே கிடைக்காது. 5 ஸ்டார் ஹோட்டல் அளவுக்கு பணத்தை பிடுங்கிட்டு ரேஷன் அரிசி சாப்பாடுதான் போடுறாங்க. உயர்தர உணவகம்னு பேர் மட்டும்தான். கண்ட தண்ணிய குடிச்சி, கண்டதை சாப்பிட்டு வீட்டுக்கு வந்து நம்ம உயிரைதான் எடுப்பாங்க. டாக்டருக்கு வேற ஃபீஸ் அழனும் நடுவரே!!

//தம்பதிக்குள் மனஸ்தாபமா குழந்தைகளை அம்மா வீட்லே விட்டுட்டு ஒரு செகண்ட் ஹனிமூன் போய் விட்டு வாங்க// நினைச்ச உடனே போறதுக்கு அது என்ன கடையில கடலை மிட்டாய் வாங்குற மாதிரியா என்ன. சூழ்நிலை இடம் தர வேண்டாமா. ஒருத்தருக்கொருத்தர் முறைச்சிட்டு இருக்கும் போது. டூர் போலாம் வா னு ரெண்டு பேர்ல யார் கூப்பிட்டாலும் போக தோணாது.

பெரும்பாலானோர் டூர் போறதே ஷாப்பிங் செய்யதான். பார்த்ததையெல்லாம் வாங்கனும். கேட்டா ஞாபகார்த்தம் என்பார்கள். அதே மாதிரி உறவினர்களுக்கும் கட்டாயம் வாங்கிட்டு போயே ஆகனும். இது எழுதப்படாத சட்டம். பொருளாதார சூழ்நிலையால அவங்களுக்கு வாங்க முடியலனா மனஸ்தாபம் வந்துடும். எப்படி பார்த்தாலும் பிரச்சினைதான் வருது நடுவரே!!

என்னதான் பட்ஜெட் போட்டாலும் செலவு கைமீறி போகவே செய்யும். டூர் போய்ட்டு வந்து புலம்புற நிறைய பேரை பார்த்திருக்கேன். ஏன் எங்க வீட்லயும் புலம்பதான் செய்வாங்க. இந்த தீபாவளி சமயத்துல சந்தோஷத்துக்காக பட்டாசு வாங்கி வெடிச்சிட்டு, அப்புறம் நிதானமா காசெல்லாம் கரியா போச்சேனு புலம்புவோமே அப்படி.

நம்ம குழந்தைகளோட சோப்பு, சீப்பெல்லாம் நாம ரொம்ப ஸ்பெஷலா வெச்சிருப்போம். ஆனா அதை அவங்க குழந்தைகளுக்கு எடுத்து பயன்படுத்தும்போது நாசூக்காக சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டாங்க. இல்ல தப்பா எடுத்துட்டு எதையுமே தொட மாட்டாங்க. இல்லையா எல்லாமே குழந்தைங்கதானேனு சொல்வாங்க. புரிஞ்சிக்கவே மாட்டாங்க நடுவரே!!

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

//"சுற்றுலாவிலிருந்து வீடு திரும்பியவர் அதிர்ச்சி!! பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம் நகை கொள்ளை, போலீசில் புகார்" இதுதான் செய்தியின் முதல் தலைப்பு செய்தியா வரும்.//***வாரே வா!! பூர்ணிமா!! நிஜமாவே நீங்க என் மனசாட்சி ஒண்னும் இல்லையே அது எப்படிங்க இப்பதான் கஷ்டப்பட்டு இந்த விசயத்தை தீர்ப்புல சொல்லி பேர்வாங்கிப்போடனும்னு நினைச்சிருந்தேன்...மொத வரியிலேயே நடுவர போட்டுத்தாக்கிட்டீங்களே...;-) ஹெட்ஸ் ஆஃப் பூர்ணிமா;-)

//முடி மூக்கு, வாய்னு முகத்துல ஒரு இடம் பாக்கி விடாம மூடி முகமூடி போட்டுடும். எதேச்சையா திரும்பி வீட்டுக்காரர பாத்தாகூட அவரே பயந்துடுவார் பேய பாத்த மாதிரி.//***அப்படியாவது வீட்டுக்காரரை பயமுறுத்திப்போடலாம்னு நினைக்கறாய்ங்களோ என்னமோ??

//பெட்ரோல் டீசல் வாசம், பக்கத்து சீட்டு உறவினர் வாமிட் செய்த வாசம், வியர்வை வாசம் எல்லாம் சேர்ந்து வயித்தை பிரட்டிட்டுதான் வரும் நடுவரே!!//**எம்புட்டு பேருக்கு எய்மிச்சைபழம் வாங்கிக்கொடுத்திருப்பேன் எனக்கில்ல தெரியும் ரோதனையும் வேதனையும்..சிரிப்ப அடக்கறமாதிரி பாவ்லா காட்டி மூக்க கர்ச்சீப்பால மூடி நான் படற அவஸ்தை இருக்கே......விடுங்க பூர்ணிமா அவங்களும் எவ்வளவு நாள்தான் நல்லவைங்க மாதிரியே நடிப்பாங்க..?? நீங்க மேல சொல்லுங்க பூர்ணிமா;-)

// உயர்தர உணவகம்னு பேர் மட்டும்தான். கண்ட தண்ணிய குடிச்சி, கண்டதை சாப்பிட்டு வீட்டுக்கு வந்து நம்ம உயிரைதான் எடுப்பாங்க. டாக்டருக்கு வேற ஃபீஸ் அழனும் நடுவரே!!//*** இதில வேற .. சிக்கன் சாப்பிட ஆசைபட்டோம் நாய்கறிதான் கிடைக்கும்..இப்படிதான் ஊட்டில தெருல நாயே காணோம்னு போலிஸ் துப்பறிஞ்சதுல ஒரு சில ஹோட்டல்ல நாய கடத்தி சிக்கனாக்கிறாங்கன்னு கண்டு பிடிச்சிருக்காங்க...கவி நீங்க சரியான ஆளுதான் லெக் பீஸ் கேட்டு ஏமாறாம தப்பிச்சீங்க;-)

//ஒருத்தருக்கொருத்தர் முறைச்சிட்டு இருக்கும் போது. டூர் போலாம் வா னு ரெண்டு பேர்ல யார் கூப்பிட்டாலும் போக தோணாது.//**அதுவும் மலைபரதேசம்னா இன்னும் டவுட்டுதான் வரும், எங்கே அங்கன உச்சில கூட்டிப்போய் தள்ளிவிடதான் ப்ளான் பண்றாய்ங்களோ என்னாண்ட்டு;-) ஓ இதை தான் ப்ளான் பண்ணி போகனும்! ப்ளான் பண்ணிப்போகனும் நு உங்க எதிரணி சொல்றாய்ங்களோ.. அவிங்ககிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருந்துக்கனும் பூர்ணிமா;-))

//ஒருத்தருக்கொருத்தர் முறைச்சிட்டு இருக்கும் போது. டூர் போலாம் வா னு ரெண்டு பேர்ல யார் கூப்பிட்டாலும் போக தோணாது.//** அட! நீங்க வேற, வெளிநாட்டில இருந்து உள்நாட்டுக்கு விடுமுறைய கழிக்க வரவயிங்க பாதிபேர் இந்த லிஸ்ட்ட பாத்தே டிக்கட் கேன்சல் பண்ணி லீவு கிடைக்கலைன்னு புருடா விட்டு தப்பிச்சிக்கறாங்க .......

//நம்ம குழந்தைகளோட சோப்பு, சீப்பெல்லாம் நாம ரொம்ப ஸ்பெஷலா வெச்சிருப்போம். ஆனா அதை அவங்க குழந்தைகளுக்கு எடுத்து பயன்படுத்தும்போது நாசூக்காக சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டாங்க. இல்ல தப்பா எடுத்துட்டு எதையுமே தொட மாட்டாங்க. இல்லையா எல்லாமே குழந்தைங்கதானேனு சொல்வாங்க. புரிஞ்சிக்கவே மாட்டாங்க நடுவரே!!//**** விட்டா அதிலேயும் ஒரு த்ரில்னு ஜால்ஜாப்பு சொல்வாங்க போல இருக்கே;((

நன்றி பூர்ணிமா! பாராட்டுக்கள்;-)வெகு அருமையாக உங்க எதிரணி போட்ட பந்துக்களை சிக்சர் ஃபோர்னு விளாசித் தள்ளிட்டீங்க அவங்க போட்ட பந்துல நீங்க ஜோரா விளையாடிட்டீங்க நீங்க போட்ட பந்துல அவங்க எப்படி விளையாடறாங்கன்னு அறுசுவையே ரொம்ப ஆர்வமா பாத்துட்டு இருக்கு....ஜாமாய்ச்சிட்டிங்க பூர்ணிமா;-)

Don't Worry Be Happy.

நடுவருக்கும், மற்றும் அனைவருக்கும் வணக்கம்.

“ஆசை இருக்கு, தாசில்தார் ஆக, அந்தஸ்து இருக்கு டவாலியா கூவ” அப்படின்னு சொல்வாங்க.

அது போல - ஒவ்வொரு தடவை டூர் போறப்பவும் இந்தத் தடவையாவது ஆனந்தமாக இருக்கும், அற்புதமாக இருக்கும்னு நினைச்சுதான் கிளம்பறாங்க, ஆனா வீடு வந்து சேர்றப்ப போதுமப்பா இந்தக் கொடுமைன்னு ஆகிடுது நிறைய பேருக்கு.

ட்ரெயினில் டிக்கட் கன்ஃபர்ம் பண்ணனும்னா, நிறைய விஷயங்களை 2 - 3 மாசத்துக்கு முன்னாலயே டிஸைட் பண்ணனும். எந்த ஊருக்குப் போறோம், எப்ப திரும்ப வரப் போறோம், எத்தனை பேர் இப்படியெல்லாம். இதெல்லாம் முடிவு பண்ணிட்டாலும், அந்த நேரத்தில கையில பணம் இருக்கணும், அட்வான்ஸ் புக்கிங் பண்ணி வைக்கிறதுக்கு.

இதெல்லாம் முடியாத பட்சத்தில் பஸ் பயணம் போகலாம்னா - அப்பப்பா - இந்த ஆம்னி பஸ் சார்ஜ் இருக்குங்களே - விட்டா வீடு, சொத்து எல்லாத்தையும் எழுதிக் கொடுக்க வேண்டியிருக்கும் போல:(

சரி, ஆர்டினரி பஸ்ல போனா - கண்டிப்பாக முதுகு வலி காரண்டி.

கண்டக்டருக்கும் ட்ரைவருக்கும் எந்த மோட்டல்ல டை அப் இருக்கோ, அங்கேதான் நிறுத்துவாங்க. நமக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ - அங்கேதான் பசியாறணும். வேற வழி!

அப்புறம் இந்த டாய்லெட் பிரச்னை - இதை நினைச்சா, எங்கேயுமே கிளம்ப வேண்டாம்னு தோணுதுங்க.

நீண்ட தூர பயணத்தில் - இராத்திரி வேளையில் ரோடு ஓரமாக பஸ் நிறுத்தினாங்க, பெண்கள் எல்லோருமே ஒரு பாழடைந்த மண்டபத்தின் பின் புறத்தையே டாய்லெட்டாக உபயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் - அதுவும் முள், புதர் எல்லாம் தாண்டிப் போய். பயத்திலும் அருவருப்பிலும் உயிர் போய் உயிர் வந்தது.

இன்னும் சொல்றேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

நடுவர் அவர்களே,

ஒரு சின்ன வேலையா நேத்து போய்ட்டு இன்னைக்கு வந்து பார்க்குறதுக்குள்ளே ஒண்ணும் அறியாப்புள்ள உங்க மனசை என்னென்னமோ சொல்லி கலைக்க பார்க்குறாங்க எதிரணி. அவங்களாம் ஆய்பசங்க. அவங்க பேச்சை கேக்காதீங்க. இதோ நான் சொல்றேன் பாருங்க. அதை மட்டும் உசாரா கேட்டுட்டு வாங்க.. சரியா?

//நடுவரே! எதிரணி அப்படி என்னதான் சுகத்தை கண்டாங்களோ சுற்றுலாவில் தெரியவில்லை. எதிரணி தோழி நான் கோவிக்க மாட்டேன்பா. // எதிரணியினர் வீட்டு அடுங்கங்க்ரையில் காணாத சுகத்தை நாங்க இங்கே காண்கிறோம். நீங்க ரொம்ப நல்லவய்ங்களா இருக்கீங்க தோழியே. உங்களை ரெம்ப புடிச்சு போச்சு. அடிதடியெல்லாம் பட்டியோட சரி. அதுவும் காமெடியா தான் அடி தருவோம். நீங்க புரிஞ்சுட்டீங்க. டேங்க்ஸ் பா ;)

//டூர் பணத்தை அப்படியே நகையா வாங்கி போட்டு அழகு பார்த்து, பத்திரமா லாக்கர்ல வெச்சிட்டு நிம்மதியா சந்தோஷமா இருப்போம். இது கூட எங்களுக்கு பிடிச்ச விஷயம்தான்.// நடுவரே, டூர் பணத்தை தங்கமா அடிச்சு போட்டுக்கலாம். மனசில் ஏகப்பட்ட புழுக்கத்தோடு, நகை புழுக்கமும் ஒன்று சேர எப்படி இருக்கும் பாருங்க. சும்மா, நகை நகைன்னு புராணம் பாடாம வெளியே வாங்க, தூய காற்றை சுவாசியுங்க. மனசையும், உடலையும் தெம்பா வச்சுக்கோங்க.

//ஆனால் எதிரணிதான் பாவம் நியூசே பார்ப்பதில்லை போலும், "சுற்றுலாவிலிருந்து வீடு திரும்பியவர் அதிர்ச்சி!! பூட்டியிருந்த வீட்டை உடைத்து பணம் நகை கொள்ளை, போலீசில் புகார்" இதுதான் செய்தியின் முதல் தலைப்பு செய்தியா வரும்.// ஹிஹி...நடுவர் அவர்களே, கொள்ளை போனது எதிரணி மாதிரி ஆளுங்க வீட்லயா இருக்கும். ஏன்னா, அவங்க தான் முன்னபின்ன டூர் போன அனுபவம் இல்லாம, இப்படி போட்டது போட்டபடி போட்டுட்டு போய், வந்தவன் அதுக்கு வாழ்வு குடுத்து சுருட்டிட்டு போயிருப்பான். நாங்க அடிக்கடி டூர் போறவங்க. எங்களுக்கு அந்த விழிப்புணர்வு இருக்காதா? எல்லாம் முன்னேற்பாட்டோடு தான் செல்வோம். வீட்டில் கிராம் தங்கத்தை கூட விட்டு வைக்காமல், பேங்க் லாக்கரில் வைத்து விட்டு, அப்படியே நாங்க ஊருக்கு போறோம் எங்க வீட்டையும் கொஞ்சம் பார்த்துக்கோங்கன்னு பக்கத்துல இருக்க போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு லெட்டர் குடுத்துட்டு தாங்க போவோம். இது தெரியாம எதிரணி சின்ன பிள்ள தனமா பேசிட்டு இருக்காங்க, நீங்களும் வாய்ல கொசு பரம்பரையே போய் போய் வருது அது தெரியாம..ஆ'ன்னு வாயை பொளந்து கேட்டுட்டு இருக்கீங்க. சே..சே... ;)

//நான் சொல்றது என்னன்னா கிச்சனையே கார் டிக்கில எடுத்துட்டு போய் அங்க வெச்சி சமைக்குறத பத்தி. எங்க போனாலும் குடும்ப தலைவிக்கெல்லாம் விடிவே இல்லைங்க நடுவரே! கரண்டியும் கையுமாதான் அலையனுமா இருக்கு// நடுவர் அவர்களே, தினமும் சாப்பிடும் உப்பு சப்பில்லாத சாப்பாட்டையே வெளியே இது போன்ற இடங்களுக்கு சென்று சாப்பிட்டு பாருங்க. ஒண்ணுமே இல்லாத சாப்பாடும் அமிர்தமா தெரியும். அதுபோலத்தான் நடுவரே, வெளியே சமைத்து உண்பதும். நாலு சுவத்துக்குள்ளே அடைப்பட்டு, வியர்வை சிந்தி சமைப்பதற்கும், காற்றோடமாக, சூழலெ வித்யாசமாக இருக்கும் இடத்தில் சமைப்பதற்கும் வித்யாசமில்லையா நடுவர் அவர்களே. வீட்டில் இவங்க ஒரு கை தான் போடனும். வெளியே போனீங்கனா கூட வந்திருக்க அத்தனை பேரும் உற்சாகமா வேலை செய்து சமையலை ஒஹோ (???) டேஸ்டுக்கு கொண்டு வந்துடுவாங்க. இதெல்லாம் ருசிச்சு பார்த்தாதாங்க தெரியும்.

//அதையும் இந்த சுற்றுலாங்குற பேர்ல வெயில்ல அலைய வெச்சி கன்னங்கரேல்னு பன்னிடுவாங்க.// அய்யோ..நடுவரே, அவங்க தான் புரியாம பேசுறாங்கன்னா..நீங்களாச்சும் எடுத்து சொல்லப்படாதா? ஏங்க, நாங்க போற இடம் வெயிலா?குளிரா? அந்த சீதோஷ்ண நிலை நம்ம ஸ்கின்னுக்கு ஒத்துக்குமா இல்லையான்னு தெரியாம கூடவாங்க போய் கருப்பாயி மாதிரி திரும்பி வருவோம். உங்களுக்கு இருக்கும் ஸ்கின் பற்று எங்களுக்கும் உண்டுங்க. அதனால் கூடவே சன்ஸ்க்ரிம் லோஷன், ஆலுவேரா லோஷன், வெள்ளரிக்காய் லோஷன் எல்லாம் கொண்டு போவோம்ங்க. சொல்லப்போனா நீங்க தான் அடுப்பங்கரைலயே இருந்து இருந்து கலரே சேஞ் ஆயிருப்பீங்க. நாங்க வெளியே போயி வெயிலே படலனாலும், கருத்து தான் போய்ட்டோமோன்னு பிரம்மைலயே இன்னும் இன்னும் கீர்ம் யூஸ் பண்ணி வெள்ளாயில போட்டெடுத்த துணி மாதிரி வெளுத்து போயி வீட்டுக்கு, ப்ரெஸ்ஸா வருவோம் ;)

//அந்த முடி மூக்கு, வாய்னு முகத்துல ஒரு இடம் பாக்கி விடாம மூடி முகமூடி போட்டுடும். எதேச்சையா திரும்பி வீட்டுக்காரர பாத்தாகூட அவரே பயந்துடுவார் பேய பாத்த மாதிரி.// நடுவரே, வீட்டுக்குள்ளேயே கிடக்கும் சில பெண்களை பார்த்திருக்கிறீர்களா? வீட்ல இருக்காங்கன்னு தான் பேரு. அழுக்கு மூட்டை 501 மாதிரி சீரியலோ அல்லது வீட்டின் மற்ற வேலைகளிலோ மூழ்கிவிட்டு தன்னை திருத்தம் பண்ணிக் கொள்ள மறந்து விடுவார்கள். விளைவு அவர்களின் எண்ணெய் வடியும் முகம், காலையில் கணவன் செல்லும் போது அள்ளிசெருகிய முடி கொஞ்சமும் மாற்றமில்லாமல், பொட்டு வியர்வையில் நனைந்து வழிந்தது கூட தெரியாமல் வேலைக்கு சென்ற கணவன் வீடு திரும்பியது எதிரில் வந்து நின்று அவரை பீதிக்கு உள்ளாக்குவார்கள். இதெல்லாம் எங்களுக்கும் தெரியாதா என்ன?

// பூவாசம் மட்டுமில்லை, பெட்ரோல் டீசல் வாசம், பக்கத்து சீட்டு உறவினர் வாமிட் செய்த வாசம், வியர்வை வாசம் எல்லாம் சேர்ந்து வயித்தை பிரட்டிட்டுதான் வரும் நடுவரே!!// அய்யய்யே....நடுவரே, இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லிட்டு இருக்காங்க. நீங்களும் கேட்டுட்டு. மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவாங்களா? பெரியவங்க மட்டும் தான் வாந்தியெடுப்பாங்களா? குட்டிங்க வாந்தி எடுத்தா, ஜன்னல் வழியாவா தூக்கி போட்ருவாங்க? அதுக்கு தகுந்தாற் போல வாந்தி எடுப்பவர்களை முதலுதவி எடுக்க சொன்னால் போயிற்று. மீன்ல முள் இருக்கேன்னு வாங்காம இருக்க முடியுமா?ரோஜால முள் இருக்கேன்னு தலையில் வைக்காம இருந்துடறோமா? பலாவை சுற்றி முள் இருக்கேன்னு அதை கண்டுக்காம விட்டுடறோமா? பக்குவமா ப்ழுத்ததும் எண்ணெய்,வெண்ணெய் எல்லாம் தடவி அழகா சுளையா எடுத்து தேன்ல ஊறவச்சு அமுக்கறோம்ல. அதுபோலத்தான் நடுவர் அவர்களே இவர்கள் சொன்ன சின்ன சின்ன விஷயங்களும். வீட்ல சமைச்சு முடிச்சது, வேலை செய்து முடிச்சதும் எல்லார் மேலயும் சந்தன வாசனையும், பன்னீர் வாசனையுமா அடிக்குது நடுவர் அவர்களே. சேம் கப்பு தான். அப்புறம் ஏன் இப்படி வீடு கட்டுற பணிங்கறேன்? ;) என்னமோ டூர் போனா மட்டும் தான் கப்பு அடிக்குற மாதிரி பேசுறாங்க. வீட்ல வாந்தியே வராதா நடுவரே. ஒரு சிலர் சமையலை சாப்பிட கூட வேண்டாம், மனசுல நினைச்சாலே வாந்தி வந்துடும். அதையெல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது? தோழியை கேட்டு சொல்லுங்க ;)

//இந்த நைட் டைம் ட்ராவலிங்ல நாம தூங்கவே முடியாது. நாம தூங்கினா ட்ரைவரும் தூங்கிடுவாருன்னு பேச்சு கொடுத்துட்டே போகனும். இதை கூட அட்ஜஸ்ட் பன்னிக்கலாம்.// நடுவரே, இன்னைக்கு தேதிக்கு கல்யாணம் முடிச்ச குடும்ப தலைவர்கள் நிம்மதியா தொண தொணப்பு இல்லாம தூங்கி பார்க்க முடியுமா? அந்த எக்ஸ்பீரியன்ஸ் கை கொடுக்க போகுது. நான் ஊட்டி டூ்ர் போனப்ப வந்த டிரைவர் வயசானவர் தான். அவரோட டிரைவிங் எக்ஸ்பீரியன்சையும், அதில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளையும் சொல்ல சொல்லி கேட்டு அவரை ஒரு வழி பண்ணிட்டோமாக்கும். அவரும் மனம் கோணாம சந்தோஷமா (???) ஆர்வமா சொல்லிட்டே வந்தார்.இதிலென்ன கஷ்டம் இருக்க போகுது சொல்லுங்க. நமக்கு கதைக்கு கதையாச்சு. சேஃப்டிக்கு சேஃடியாச்ச்சு ;) இந்த டேலண்டெல்லாம் சொல்லியா வரனும்?

//அப்பதான் அந்த ட்ரைவர் சொல்வாரு இந்த வழியாதான் யானை வரும், காட்டெருமை வரும்,// நடுவர் அவர்களே, காட்டெருமை இருக்க இடத்துக்கு நாம போய்ட்டு காட்டெருமை வருதுன்னு சொன்னா எப்படிங்க அது? அததுங்க இருக்க வேண்டிய இடத்துல தானே இருக்கும்.

//யாராவது லிஃப்ட் கேட்டா கூட வண்டிய நிருத்தாம போகனும் ஏன்னா அது பேயா கூட இருக்கும்னு. இதையெல்லாம் கேட்ட பிறகு அது இன்பசுற்றுலாவா இருக்காதுங்க நடுவரே.
பேய்னு சொன்ன உடனே எதிரணி சொல்வாங்க முட்டாள்தனமான மூடநம்பிக்கைனு. அது இருக்கோ இல்லையோ. கேட்டதுமே கிலி வருதா இல்லையா நடுவரே!// அப்படியே பேய் லிப்ட் கேட்டாலும் கொடுத்துட்டு போவோம் நடுவரே. ஏன்னா, அதுவும் எங்களை மாதிரி சுற்றுலா விரும்பி. அதனால் கண்டிப்பா தருவோம். வீட்ல இருக்கவங்களை ஒரு ப்ளேட் பிரியாணி கேட்டு எந்த பேயும் வராதா என்ன? அப்ப என்ன பண்ணுவாங்க..

//கண்ட தண்ணிய குடிச்சி, கண்டதை சாப்பிட்டு வீட்டுக்கு வந்து நம்ம உயிரைதான் எடுப்பாங்க. டாக்டருக்கு வேற ஃபீஸ் அழனும் நடுவரே!!// இதெல்லலாம வரும்னு முன்கூட்டியே யோசிச்சுதான் வீட்ல இருந்தே கட்டிட்டு போகலாம்னு சொன்னோம். அதுக்கும் ஒத்துக்கலன்னா எப்படிங்க? நாங்க வெளியே போய் அப்படி எல்லாம் அவதிப்பட மாட்டொம். அடிக்கடி விசிட் பண்றதால அந்தந்த ஊர்கள்ல இருக்க ஹோட்டலுக்கு நாங்க ரெகுலர் கஷ்டமருங்க ஆய்டுவோம். அதனால கவனிப்பும் ஸ்பெசலா தான் இருக்கும்.

//ஒருத்தருக்கொருத்தர் முறைச்சிட்டு இருக்கும் போது. டூர் போலாம் வா னு ரெண்டு பேர்ல யார் கூப்பிட்டாலும் போக தோணாது.// நம்ம சூழ்நிலை நமக்கு தெரியாதாங்க நடுவரே. சரியான சூழ்நிலை வரும்போது தான் கிளம்ப சொல்றோம். எல்லாத்துக்கும் தப்பு தப்பா அர்த்தம் கண்டுபிடிச்சுக்குனா இப்படித்தான் புரிஞ்சுப்பீங்க.

//பொருளாதார சூழ்நிலையால அவங்களுக்கு வாங்க முடியலனா மனஸ்தாபம் வந்துடும். எப்படி பார்த்தாலும் பிரச்சினைதான் வருது நடுவரே!!// போற இடத்தில் தங்கமாவும், வெள்ளியாவும் வாங்கிட்டு வரலன்னா சொந்தக்காரங்க அலுத்துக்கப் போறாங்க. அங்கே கிடைக்குற பேமசான, அதேசமயம் நம்ம பட்ஜெட்டுக்குள்ள வர்ற பொருளை வாங்கிட்டு போகப்ப்போறோம். இதிலென்ன பெரிய நஷ்டமும், மனகஷ்டமும் வந்துட போகுது? தெரியலையே..

//நம்ம குழந்தைகளோட சோப்பு, சீப்பெல்லாம் நாம ரொம்ப ஸ்பெஷலா வெச்சிருப்போம். ஆனா அதை அவங்க குழந்தைகளுக்கு எடுத்து பயன்படுத்தும்போது நாசூக்காக சொன்னாலும் புரிஞ்சிக்க மாட்டாங்க// நடுவரே, நாசூக்கா சொன்னாலும் புரிஞ்சுக்காத இடத்துல நாம தான் நாசூக்கா போய்டனும். தர விருப்பம் இல்லாதப்ப, தந்தாலும் சரி வராதுன்னு நினைக்கறப்பப உசாரா நம்ம குழந்தைகளை முன்னாடியே மேக்கப் பண்ணி ரெடி பன்னி வைக்கலாமே. இது போன்ற அநாவசிய மனக்கசப்பையும் தவிர்க்கலாமே..

நடுவர் அவர்களே இந்த வாயில்லா பூச்சியை தனியே தவிக்க விட்டுட்டு எங்க அணி கோழிங்க எங்கே போனாங்கன்னு தெரியல. நீங்க தான் அவங்களை கண்டுபிடிச்சு தரனும்னு கேட்டுக்கறேன்... நானும் போய் தேடி பார்க்கறேன் நடுவரே!!

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நடுவரே

அடடே..அத்தனையும் மிச்சம் வைக்காம எங்க அணி வெளுத்து கட்டுதுங்கோ..:)

நான் என்னத்த சொல்ல...

ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிட்டு ஓடிப்போயிடறேனுங்கோ..:)

பாதுஷாவ சிரமமில்லாம தானே தன் கையால செஞ்சு அத குடும்பத்தாருக்கு

பகிர்ந்துக்கறது ஒருவகை ஆனந்தம்…ன்னா

அதே பாதுஷாவை காசு கொடுத்து நல்ல தரமான கடையில வாங்கி வர்றதுக்கு

சிரமம் பார்க்காம வாங்கி வந்து சாப்பிடறது இன்னொரு ஆனந்தம்..

ஆனா அதுக்காக சிரமமும் வேணாம்,காசுசெலவும் வேணாம் ஆனா பாதுஷா

மட்டும் வேணுமின்னு ஜொள் வடிய வீட்டிலே உக்கார்ந்து டிவியில பாதுஷா

செஞ்சு காட்டறதையோ,இல்ல அறுசுவையில வந்து பாதுஷா செஞ்சு காட்டின

படங்களையோ மட்டும் கண்ணால பார்த்துட்டு ஆஹா பார்த்தாலே ருசியாத்தான்

இருக்குன்னு சொன்னா எப்படியிருக்கும் ???

எதாவது புரியுதுங்களா நடுவரே..

இப்ப விளக்கமா விளங்கறமாதிரி சொல்றேனுங்கோ..

பாதுஷா சாப்பிடறத சுற்றுலா போற மாதிரி வச்சுக்கோங்க..

நாங்க என்ன சொல்றோம்னா நாமளே சிக்கல்,சிரமமின்னு பார்க்காம அழகா

ப்ளான் பண்ணி,டிக்கெட் போட்டு ஹோட்டல் எல்லாம் முன்னாடியே புக்

பண்ணி சூப்பரா ,வீட்டில பாதுஷா செஞ்சு சாப்பிடறமாதிரி சுற்றுலாவ நாமளே

திட்டமிட்டு எஞ்சாய் பண்றது ஆனந்தம்..:)

ஆனாஅப்படியும் …..முடியாது ப்ளான் பண்ணி.டிக்கெட் ,புக்கிங் எல்லாம்

கஷ்டமின்னு நினைச்சா டூரிங் ஏஜெண்டுக்கு, காசை கொடுத்துட்டு அக்கடான்னு

இருந்தாஅவங்களே சுற்றுலாவ சூப்பரா சுத்தி காட்டுவாங்க ,அதுல எதிரணி

சொல்ற டிக்கெட் ,புக்கிங்,சாப்பாடுன்னு எல்லா ப்ளானையும் அவங்க

பார்த்துக்கறதால அதுவும் ஆனந்தம்தானுங்கோன்னு சொல்றோம்..

அதாவது கடையில வாங்கி சாப்பிடற பாதுஷா மாதிரி அதுவும் நிறைவா

இருக்குமின்னு சொன்னா எதிரணிக்கு இரண்டும் வேணாமாம்

ஆனா பாதுஷா(சுற்றுலா) மட்டும் வேணுமாம்..எப்படி

டிவியிலயும்,கணினியிலயும் மத்தவங்க சாப்பிடறத

பார்த்தே இவங்க ருசிச்சு ஆனந்தப்பட்டுக்குவாங்களாம் :)

அவங்களுக்குத்தான் சுற்றுலாவே அலுப்பாச்சே..அப்ப பேசாம நொறுக்குத்தீனிய

கொறிச்சுட்டு இருக்காம எதுக்கு பட்டனை கஷ்டப்பட்டு கைவலிக்க தட்டி

சுற்றுலாத்தளங்களை டிவி பெட்டியிலயும் ,கணினியிலயும் பார்க்கறாங்கன்னு

கொஞ்சம் கேட்டு சொல்லுங்கோ நடுவரே :)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

//பெரியவங்க மட்டும் தான் வாந்தியெடுப்பாங்களா? குட்டிங்க வாந்தி எடுத்தா,//
அதுதான் நடுவரே நாங்களும் சொல்றோம், குழந்தைகளை இவ்வளவு கஷ்டப்படுத்தி டூர் போயே ஆகனுமா? இதுலயே அவங்க டயர்ட் ஆயிடுவாங்க. அப்புறம் எங்கே டூரை அனுபவிக்க. சில வாந்தியெல்லாம் எந்த முதலுதவிக்கும் அடங்காதுங்க நடுவரே.
//அததுங்க இருக்க வேண்டிய இடத்துல தானே இருக்கும்// இத, இததான் நடுவரே நான் முதல் பதிவிலேயே சொன்னேன். ஏற்கனவே அதுங்க வீட்டைதான் அழிச்சி நாம வாழ்ந்துட்டிருக்கோம். நிறைய காட்டு மிருகங்கள் அழிஞ்சிட்டு வருதுன்னு சொல்றாங்க. அப்புறம் அதுங்க நம்ம இடத்துக்கு டூர் வரதானே செய்யும்.
//நம்ம சூழ்நிலை நமக்கு தெரியாதாங்க நடுவரே//. நடுவரே ஒருத்தரோட சூழ்நிலையை நம்மை சுத்தி இருக்குறவங்கதான் தீர்மானிக்குறாங்க. அது நம்ம கையில இல்ல. பயணப்படும் வரை நல்லா இருந்த மாமியாருக்கு, புறப்பட்ட அடுத்த அரைமணி நேரத்தில் உடம்புக்கு முடியலைன்னு ஃபோன் வரும். இல்லையா தயாராகும் போதே கணவரின் ஆஃபீசிலிருந்து எமர்ஜன்சினு கூப்பிடுவாங்க.
//சரியான சூழ்நிலை வரும்போது தான் கிளம்ப சொல்றோம்.// அந்த சரியான சூழ்நிலை வரும்போது, சுற்றுலாவை காட்டிலும் சுகம் நாம பழம் விட்டது. இப்ப வீடே சுற்றுலா மாதிரிதான் இருக்கு. பிறகு எதுக்குப்பா சுற்றுலானு ஒருத்தருக்கொருத்தர் சொல்லிப்போம்.
//போற இடத்தில் தங்கமாவும், வெள்ளியாவும் வாங்கிட்டு வரலன்னா சொந்தக்காரங்க அலுத்துக்கப் போறாங்க. அங்கே கிடைக்குற பேமசான, அதேசமயம் நம்ம பட்ஜெட்டுக்குள்ள வர்ற பொருளை வாங்கிட்டு போகப்ப்போறோம்.// நிச்சயமா இப்படிதான் நடுவரே அலுத்துக்குறாங்க. நாம என்னமோ வேணும்னே செஞ்ச மாதிரி. இந்த பட்ஜட்குள்ள சுற்றுலாவை முடிச்சோம்னு எதிரணி சொன்னா, நாங்க நம்பிடுவோமாக்கும். க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு எல்லாம் தேய்ஞ்சி போய்தான் வீடு வந்து சேருவாங்க..
//வீட்ல இருக்கவங்களை ஒரு ப்ளேட் பிரியாணி கேட்டு எந்த பேயும் வராதா என்ன?// வீட்லதான் நம்ம மாமியார் பேய் இருக்குமே, அதுக்கு பயந்துட்டு எந்த பேயும் வராது நடுவரே!! (சும்மா காமெடிக்கு சொன்னேன். யாராவது வயசானவங்க இருந்தா தப்பா நினைக்காதீங்க.)
//நாங்க அடிக்கடி டூர் போறவங்க. எங்களுக்கு அந்த விழிப்புணர்வு இருக்காதா?//
நடுவரே எதிரணியோட விழிப்புணர்வை பத்தி, இன்னும் கொஞ்ச நாள்ல நியூஸ்ல தொடர்ச்சியா சொல்வாங்க.
//மீன்ல முள் இருக்கேன்னு வாங்காம இருக்க முடியுமா?// எதிரணியே சொல்லியிருக்காங்க ஆறிலும் சாவு, நூறிலும் சாவுன்னு, அப்படியிருக்கும் போது போயும் போயும் மீன் முள் தொண்டையில் சிக்கி சாகனுமானு நாங்க மீனே சாப்பிடமாட்டோம் நடுவரே.
உலகின் முந்தைய மனிதர்கள் நாடோடி வாழ்க்கைதானே வாழ்ந்தாங்க. சுற்றுலாவே இவ்வளவு சூப்பரா இருக்குன்னா, நாடோடி வாழ்க்கை இதை விட நல்லா இருக்குமில்லையா. அப்புறம் ஏன் நிலையான வாழ்விடத்தை ஏற்படுத்திட்டு வாழனும்.
//தூய காற்றை சுவாசியுங்க. மனசையும், உடலையும் தெம்பா வச்சுக்கோங்க.//
சுத்தமான காற்றை நம்மை சுற்றியும் ஏற்படுத்திக்க முடியும். அதுக்கு கொஞ்சம் நம்ம சோம்பேறி தனத்தை விட்டா போதும். "காற்று வாங்க போனேன்"னு சுற்றுலா போக வேண்டியதில்லை. அதுமட்டுமில்லாம இப்போதெல்லாம் சுற்றுலா தளங்களின் தரமும், தூய்மையும் கெட்டுவிட்டது.
//நகை புழுக்கமும் ஒன்று சேர எப்படி இருக்கும் பாருங்க.சும்மா, நகை நகைன்னு புராணம் பாடாம வெளியே வாங்க//, என்ன நடுவரே எதிரணி தங்க நகையை இவ்வளவு சாதாரணமா சொல்றாங்க. சிங்குச்சா, சிங்குச்சானு நகையை பத்தி பாட்டே பாடலாம்ல. இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் நகையை பத்தி இப்படி சொன்னா சாமி குத்தம் ஆயிடாதா.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

எனக்கு நேரமின்மையால் பார்வையாளராக மட்டும் பங்கேற்றுக்கொள்கிறேன்.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

மேலும் சில பதிவுகள்