ப்ராக்கலி மஃபின்

தேதி: March 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (6 votes)

 

ஆல் பர்பஸ் மாவு - அரை கப்
பூண்டு - 2 பல்
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
ப்ராக்கலி - அரை கப்
உருளை - ஒன்று
முட்டை - ஒன்று
தயிர் - 2 மேசைக்கரண்டி
ஆலிவ் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீஸ் - கால் கப்
உப்பு - தேவையான அளவு


 

முதலில் ஆல் பர்பஸ் மாவு, மிளகு தூள், உப்பு, சீஸ் ஆகியவற்றை நன்றாக கலந்து வைக்கவும்.
முட்டை, தயிர், எண்ணெயை ஒன்றாக கலந்து வைக்கவும்.
ப்ராக்கலி மற்றும் உருளையை வேக வைத்து பொடியாக நறுக்கி வைக்கவும். இப்பொழுது எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும். தேவையெனில் சிறிதளவு நீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இது பஜ்ஜி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். அவனை 425 F டிகிரி முற்சூடு செய்யவும். மஃபின் ட்ரே இருந்தால் அதில் பேக்கிங் ஸ்ப்ரே அடித்து அதில் முக்கால் பாகம் ஊற்றவும்.
20-25 நிமிடம் பேக் செய்யவும். பொன்னிறமானதும் எடுத்து பரிமாறவும். சீஸ் ப்ராக்கலியில் கால்ஷியம் அதிகமாக உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. சுவையான மாலை நேர ஸ்நாக் ரெடி.

உருளைக்கு பதிலாக இதில் சிக்கன் சேர்க்கலாம். ஆலிவ் எண்ணெய் இல்லையென்றால் வெஜிடபுள் ஆயில் அல்லது வெண்ணெய் கூட சேர்க்கலாம். ஆல் பர்பஸ் மாவு இல்லையென்றால் மைதா உபயோகிக்கலாம். மஃபின் ட்ரே இல்லையென்றால் எந்த பேக்கிங் பானிலும் செய்யலாம். அவனே இல்லையென்றால் என்ன செய்ய? இருக்கவே இருக்கு நம்ப ஆப்பச்சட்டி. அதில் செய்தா போச்சு :)


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரோ சூப்பர். ஆனா இம்முறை சுஸ்ரீ என நினைத்தேன்... ஏமாந்துட்டேன் ;)

லாவி கையில் எப்போ ப்ராக்கலி எடுத்தாங்கன்னு தெரியாம போச்சே :) இங்க இருக்க கடைசி படம் அழகு... ஆனா அதைவிட முகப்பில் இருப்பது அட்டகாசம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் கிட்டே அவன் இல்லை என்ன பண்ணுறதுன்னு நினைச்சு கிட்டு இருந்தேன் நீங்க ஆப்ப சட்டி ஐடியா குடுத்திங்க ரொம்ப நன்றி என் பசங்களுக்கு ஈவ்னிங் டைம் பண்ணுறதுக்கு நல்ல டிஷ்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ப்ராக்கலி ம்ஃபின் சூப்பர்ங்க வாழ்த்துக்கள்.(நானும் சுஸ்ரீன்னு தான் நினைச்சேன்);)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லாவண்யா,
நீங்க மஃபின் குறிப்புன்னு சொன்னதும் ஸ்வீட் மஃபின்னு நினச்சேன்.வித்தியாசமா இருக்கே இந்த மஃபின்.ப்ராக்கலி,சீஸ் எல்லாம் சேர்த்து ஹெல்தியான ஸ்னாக்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாவண்யா.அதுவும் அந்த ப்ளூ கலர் பவுல் ஃபோட்டோக்கு அட்டகாசமா இருக்கு. :-) வாழ்த்துக்கள்.

கலக்கிடீங்க.. பார்க்கவே அழகா இருக்கு.. புதுசா இருக்கு, இது வரை கேட்டதே இல்லை.. ப்ராக்கலி சேர்த்தது நல்லா டிஷ் குடுத்து இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

"எல்லாம் நன்மைக்கே"

லாவி, சூப்பர்பா. உங்க குறிப்புகள் ஒவ்வொண்ணும் உண்மையாவே சூப்பர் தான். ப்ரக்கோலி எந்தெந்த அவதாரம் எடுக்குது பாருங்க. வித்யாசமான முயற்சி லாவி. வாழ்த்துக்கள் :)

//உருளைக்கு பதிலாக இதில் சிக்கன் சேர்க்கலாம். ஆலிவ் எண்ணெய் இல்லையென்றால் வெஜிடபுள் ஆயில் அல்லது வெண்ணெய் கூட சேர்க்கலாம். ஆல் பர்பஸ் மாவு இல்லையென்றால் மைதா உபயோகிக்கலாம். மஃபின் ட்ரே இல்லையென்றால் எந்த பேக்கிங் பானிலும் செய்யலாம். அவனே இல்லையென்றால் என்ன செய்ய? இருக்கவே இருக்கு நம்ப ஆப்பச்சட்டி. அதில் செய்தா போச்சு :)// எல்லாம் சரி, இது இல்லைனா அது..அது இல்லைனா அதுன்னு அடுக்கிட்டே போனீங்க. நமக்கு செய்யவே கையால் ஆகாது. அப்ப என்ன பண்ண? அதனால் ஒரு பார்சல் அர்ஜெண்டா காங்கோவுக்கு பார்சல் பண்ணி வைச்சுடுங்க. காங்கோவை விட்டு வர்ற வரைக்கும் மறக்க மாட்டேன் ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//நமக்கு செய்யவே கையால் ஆகாது. அப்ப என்ன பண்ண? அதனால் ஒரு பார்சல் அர்ஜெண்டா காங்கோவுக்கு பார்சல் பண்ணி வைச்சுடுங்க. காங்கோவை விட்டு வர்ற வரைக்கும் மறக்க மாட்டேன் ;)
//

- ஹஹஹா... லாவி... விடாதீங்க... காங்கோ ஜூஸை இவங்களுக்கே அனுப்பி போடுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா... லாவண்யா!, மஃபின் சூப்பர்!!

ப்ராக்கலில அடுத்தது இதுதான் படம் எடுத்து அனுப்பனும்னு இருந்தேன்! நீங்க முந்திட்டிங்க... :)
என்னோடது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும். உங்க குறிப்பின் படியும் செய்துப்பார்க்கிறேன் லாவண்யா. வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

லாவண்யா, நல்ல சத்தான எளிமையான குறிப்பு. அழகாக ப்ரஸன்ட் பண்ணி இருக்கீங்க. ஸ்கூலுக்கு கொடுத்து விட நல்ல குறிப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
இப்போ என் சந்தேகங்கள்
1. படத்தில் 2 சீஸ் செர்த்திருக்கீங்க. என்னென்ன சீஸ்?
2. சீஸை சிறிய க்யூபாக வெட்டி பொட வெண்டும? அல்லது துருவி போடணுமா?
3. எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் ஆயில் பயன் படுத்தலமா? நான் எங்கேயொ படித்தேன், EVVO வை சூடு படுத்த கூடாது என்று, அதனால் கேட்டென்

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி!

அச்சோ! ஏமாத்திட்டேனா வனி? என் வீட்டில் எப்பவுமே இருக்கும் காய்களில் இந்த ப்ராக்கலியும் உண்டு. சில நேரங்களில் குழந்தைகளின் மாலை ஸ்நாக் இதுவாக தான் இருக்கும் (அரைவேக்காடாக வேகவைத்து சிறிது உப்பு மிளகு தூவி கொடுப்பேன்!). இதில் பொரியல் சாம்பார் கூட்டு என்று எல்லாமே செய்வேன். இதை புதிதாக ட்ரை பண்ணியதால் பகிர்ந்துக் கொண்டேன்! எனக்குமே இகிருக்கும் படம் அவ்வளவு திருப்தியாக இல்லை தான் :(

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தனா. செய்து பார்த்துட்டு எப்படி இருந்தது பசங்க என்ன சொன்னாங்கன்னு வந்து சொல்லுங்க சரியா?

வாழ்த்துக்கு நன்றி ஸ்வர்ணா. நானும் ப்ராக்கலி சமைப்பேன் பா நம்புங்க :)

அன்பரசி நான் உங்களுடன் சொன்னது வேற குறிப்பு. அதை இன்னமும் ட்ரை பண்ணவே இல்லை. இனி தான் செய்யனும். அதுவும் வரும் ;) இதில் நான் சேர்த்திருப்பது லோ பாட் சீஸ். நானும் சாப்பிடனும் இல்லையா? ட்ரை பண்ணி பாருங்க. ஹர்ஷா என்ன சொன்னாருன்னு சொல்லுங்க சரியா? வாழ்த்துக்கு மிக்க நன்றி!

ஆமாம் பாக்கியலக்ஷ்மி கலக்கி தான் செய்தேன் ;) நாம் எப்பவுமே ஸ்வீட் தான் ட்ரை பண்ணியிருப்போம் ஆனால் இந்த மாதிரி நிறைய ரெசிபீஸ் இருக்கு. எனக்கு எப்பவுமே ஸ்வீட் விடவே சேவரி தான் பிடிக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க! வாழ்த்துக்கு நன்றி!

வாழ்த்துக்களுக்கு நன்றி கல்பூ. வித்தியாசம் என்றெல்லாம் இல்லை காரம் என்றால் எப்படியிருந்தாலும் ட்ரை பண்ணிடுவோம்ல....கரெக்ட் கல்பூ.....அதை சொல்லவே மறந்துட்டேன்! செய்ய கை இல்லைனா என்ன சாப்பிட வாய் இருக்கும் தானே? அப்போ என்ன தயக்கம் செய்ய ஆசையாய் இருக்கிற (என்னை மாதிரி) ஆளாய் பார்த்து செய்து தர சொல்லி ஒரு வெட்டு வெட்டுங்க! ஒரு மாசத்துக்கெல்லாம் அனுப்பி வைக்க முடியாது. அதனால சென்னைக்கு போனவுடன் சொல்லுங்க அனுப்பறேன்! அஸ்கு புஸ்க்கு!

வனி என்ன இருந்தாலும் கல்பூ நம்மாளு இல்லையா? அதனால அவங்களுக்கு வேறு ஒரு டேரரான குறிப்பை தேடிப் பிடித்து செய்து அனுப்பறேன் ....ஹி ஹி ஹீ

சுஜா அப்போ நான் முந்திட்டேனா? சரி விடுங்க....உங்க குறிப்பை அனுப்புங்க அதையும் செய்து அமுக்கிடுவோம்!வாழ்த்துக்களுக்கு நன்றி!

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மலி. நான் மைல்ட் செட்டர் மற்றும் பார்மிஜான் உபயோகித்தேன். துருவியும் போடலாம். நான் போட்டிருப்பது போலும் போடலாம். நான் போட்டிருப்பது போல் போட்டால் சீஸ் அங்கங்கே இருக்கும். துருவி போட்டால் முழுதும் இருக்கும்! நான் சமையலுக்கே அதை தான் பயன் படுத்தறேன். வறுப்பது பொரிப்பதற்கு மட்டும் கனோலா! எந்த ஒரு எண்ணையும் ஸ்மோகிங் பாயின்ட் வரை தான் சூடு படுத்த கூடாது. அப்படி செய்யும் போது தான் அதன் பாட் வெளியாகும். நான் புரியுமாறு விளக்கினேனா என்று எனக்கே சந்தேகம் :( சந்தேகம் என்றால் திரும்பவும் கேட்கவும். மீண்டும் நன்றி!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
அழகான ப்ராக்கலி ம்ஃபின்
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

உங்கள் பதிலுக்கு நன்றி! உடனே செய்தும் பார்த்து விட்டென்! இந்த அளவின் படி 5 மஃபின்ஸ் வந்தது, சுவையும் ரொம்ப நல்லா இருந்தது! பூண்டு தான் சேர்க்க மறந்து விட்டேன். அடுத்த முறை சிக்கன் சேர்த்து பண்ணலாமென்று இருக்கேன். நன்றி உங்களுக்கு. -மாலி

நீங்க செஞ்சு காமிச்சத பார்க்கும் போதே எனக்கு கண்ணை கட்டுதே...அத சாப்பிட்டா அவ்ளோ தான் நல்ல சுகமா உறங்கிடுவேன். நீங்க செய்து காமிச்சதும் சரி, அதை விளக்கமாக சொன்னதும் சரி, ரொம்ப பிரமாதம். என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் டா.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

அன்பு லாவண்யா,

அவன் இல்லன்னு நான் புலம்புவேன்னு தெரிஞ்சு, ஆப்ப சட்டியில் செய்து பாருங்கன்னு சொல்லிட்டீங்க:) தாங்க்யூ வெரி மச்:)

முட்டை சேர்க்காமல், தயிரும் உருளைக்கிழங்கும் சேர்த்து,செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

கவிதா ஆமாம் கொஞ்சம் ட்ரிம்மாக அழகாக தான் இருக்கும் (இல்லையென்றால் மஃபின்னாலே உப்பி இருப்பது தானே ஞாபகத்துக்கு வரும்!)...நன்றி ;)

மாலி செய்தாச்சா? ரொம்ப சந்தோஷம். உங்களுக்கு பிடித்ததில் ரொம்பவே சந்தோஷம். குறிப்பை செய்து பின்னூட்டம் தரும்போது வரும் ஆனந்தமே தனி தான்.....அதை எனக்கு கொடுத்ததற்கு உங்களுக்கு நன்றிகள் பல. பரவாயில்லை அடுத்த முறை பூண்டு மற்றும் சிக்கன் சேர்த்து செய்துப் பாருங்கள்.

சுபா நீங்க இருந்தாலும் ரொம்ப தான் புகழுறீங்க. அந்த அளவுக்கு அங்கே ஒண்ணுமே இல்லை. இது ரொம்பவே ஈசியான ரெசிபி. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

சீதாலக்ஷ்மி கண்டிப்பா உங்களை(யும்) மனதில் வைத்து தான் ஆப்ப சட்டி ஆப்ஷன் தந்தேன் ;) முட்டைக்கு பதில் நீங்கள் டோபு அல்லது பிளாக்ஸ் சீட்ஸ் பவுடர் சேர்த்தும் செய்துப் பார்க்கலாம். செய்துட்டு சொல்லுங்க சரியா? வாழ்த்துக்களுக்கு நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!