ட்ரெண்டி ஹென்னா டிசைன் - 6

தேதி: March 19, 2012

5
Average: 4.3 (12 votes)

 

ஹென்னா கோன்

 

முதலில் கையின் மேல் பக்கம் விரல்களின் கீழே இது போல் பெரிய அளவு பூக்களை வரைந்து கொள்ளவும்.
நகங்களின் கீழே சின்ன அளவில் பூக்களை வரைந்து கொள்ளவும்.
இப்போது விரல் முழுவதும் சிறு சிறு பூக்கள் வரைந்து கொள்ளவும். பூக்கள் அருகே சிறு இலை மற்றும் புள்ளிகள் கொண்டு நிரப்பவும்.
மணிகட்டில் துவங்கி மீண்டும் இடைவெளி விட்டு முதலில் ஒரு பெரிய பூ, பின் அதை விட சிறிது, அதை விட சிறிது என மூன்று பூக்களை வரைந்து கொள்ளவும்.
பூக்களை ஒட்டி இலைகள் கொடிகள் என வரைந்து முடிக்கவும்.
இது அனைவருமே சுலபமாக போடக்கூடிய சிறிய ஹென்னா டிசைன். இதில் கிலிட்டர்ஸ் கொண்டும் அழகு சேர்க்கலாம். குழந்தைகள் கைகளுக்கும் ஏற்ற டிசைன்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அட அட அட டிசைனை பாக்குறதா அந்த கைய்யை பாக்குறதா இல்ல நகத்தை பாக்குறதா.ஆக மொத்தம் அழகு

ஏம்பா வனி உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி எல்லாம் ஐடியா தோணுது ????????? உங்களுக்கு நல்ல கலை ரசனைங்க .தளிகா சொன்ன மாதிரி எதை ரசிப்பதுன்னு தெரியில . எளிதா , அழகா இருக்கு.

நடப்பவை யாவும் நன்மைக்கே
சிவகாமி

Parthaudana ninichan.ithu vanithavoda velaithan .super,super.super

Be simple be sample

அட அட அட எவ்ளோ அழகா இருக்கு வனி நீங்க மட்டும் எப்படி வனி எப்படி எல்லாம் போடுறிங்க அசத்துறிங்க போங்க நானும் என் பொண்ணுக்கு எதை ட்ரை பண்றேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ரொம்ப அழகான டிசைன் கா சீக்கிரமே போட்டு பார்த்து உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் .கை யாரோடது? வனிக்கா வோடது தானா! எப்படி இப்படி கலர் ஏறிச்சு, இல்ல முன்ன வந்த கைகள விட இது ரொம்ப வைட்டா இருக்கே அதான் கேட்டேன் எப்புடியோ எனக்கு போட்டு பார்க்க அழகான டிசைன் கிடைத்ததே மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அக்கா by Elaya.G

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

தளிகா... முதல் ஆளாக கைவினையில் உங்க பதிவா???!!! மிக்க மகிழ்ச்சி. நன்றி தளிகா. ஆனாலும் இவ்வளவு புகழ்ந்த வனிக்கு வெட்கம் வரும் ;)

சிவகாமி... வேலை வெட்டியே இல்லாம வீட்டில் இருக்குறதால எதாவது தோனுதோ என்னவோ எனக்கு ;) மிக்க நன்றி சிவகாமி.

ரேவதி... பார்த்ததும் கண்டு பிடிச்சுட்டீங்க தானே... அதுக்காக ஸ்பெஷலா ஒரு தேன்க்ஸ். :)

தனா... உங்க பொண்ணு கையில் போட்டு பாருங்க... அப்பரம் வனிய விட நாம நல்லா போட்டிருக்கோமோன்னு தோணும் ;) ஹிஹிஹீ. மிக்க நன்றி தனா.

இளையா... ஒவ்வொரு படத்திலும் என் கை கலரை கூடவா கவனிக்கறீங்க??? இதெல்லாம் ரொம்ப ஓவர்... நான் ஒரே கலரா தான் இருக்கேன், படம் தான் இம்முறை என்னவோ அறுசுவையில் ப்ரைட்டா தெரியுது ;) மிக்க நன்றி. சீக்கிரம் போட்டு அனுப்புங்க... காத்திருப்போம்ல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹய்..சூப்பர்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

Hi Vanitha,

Design மட்டும் இல்ல உங்க Hands ம் பார்கவே ரொம்ப அழகாக இருக்கிறது. Good work...

மாலே போயிட்டு வந்தவுடன் (இல்லை அங்கேயிருக்கும்போதோ!) கையில் கூட மெருகு ஏறியிருக்கு! கலக்கல் வனி. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹாய் வனிதா ரொம்ப சூப்பரா போட்டுருக்கிங்க பா, இது யாரு கை ரொம்ப அழகா இருக்கே...அழகான கையிக்கு ஏத்த அழகான டிசைன் சூப்பரோ சூப்பர்.......ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் அடுத்த மெகந்தி டிசைன் வரும்வரைக்கும் காத்து இருக்கிறேன் பா...சீக்கிரம் போடுங்க வனிதா...

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

கோமதி... மிக்க நன்றி :)

maclin... மிக்க நன்றி :)

லாவி... அதான் சொன்னேன்ல... நம்ம அட்மின் மக்கள் தான் எடிட் பண்ணி ப்ரைட் ஆக்கிட்டாங்க ;) இல்லன்னா நம்மலாம் ஒரே கலராக்கும். எங்க கூட??? சுத்துற சுத்துக்கு குறைய வேணா செய்வோம். மிக்க நன்றி.

கவிதா... மிக்க நன்றி. கை எப்பவும் போல தான் இருக்கு :) அனுப்பறேன்... அனுப்பறேன்... சீக்கிரம் அனுப்பறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ்..விரல்களும் அழகு அதில் போட பட்டிருக்கும் மெஹந்தியும் அழகோ அழகு...அற்புதம் வனிதா..ரொம்ப சிம்பிளா அழகா போட்டு காமிச்சிருக்கீங்க. உங்கள் திறமையை பார்க்க பார்க்க வியப்பாக இருக்கிறது. சுத்தி போட மறக்காதீங்க சரியா..

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

வனிதா ரொம்ப அழகா போட்டு இருக்கீங்க. பாராட்ட வார்த்தைகள் இல்லை. கலக்கல் ராணி பட்டத்தை யாருக்கும் கொடுக்காதிங்க. மேலும் மேலும் உங்கள் திறமை வளர வாழ்த்துக்கள்.

வனி சூப்பரான எளிமையான டிசைன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் வனி..... டிசைன் வழக்கம் போலவே சூப்பர்.....
ஆனா உங்க கை இருக்கே உங்க கை...... இன்னைக்கு முழுக்க பார்க்கலாம் போல இருக்கு..... எங்கண்ணன் இந்த கை அழகை பார்த்தே மயங்கி உங்களை கல்யாணம் செய்து இருப்பார் போல....
கைகளை அழகாக வைத்திருப்பது எப்படி? ப்ளீஸ் ப்ளீஸ் எனக்கு டிப்ஸ் சொல்லுங்க....
விளையாட்டா இல்ல நிஜமாவே கேக்குறேன்.......

வனிதா,
டிசைனும் அழகு.ஆனால் அதை விட உங்க விரல்கள் தான் ரொம்ப அழகு.
//எங்கண்ணன் இந்த கை அழகை பார்த்தே மயங்கி உங்களை கல்யாணம் செய்து இருப்பார் போல....//
தீபா...உங்க அண்ணன்னு ’திரு.கார்த்தி’யை தானே சொல்றீங்க?!! :-)
கை மட்டுமல்ல...வனிதாவும் ரொம்ப அழகுதாங்க.

super

சுபா... மிக்க நன்றி. அவசியம் போட்டு ட்ரை பண்ணுங்க. :)

காயதிரி... மிக்க நன்றி. பட்டம் நான் யாருக்குமே இன்னும் குடுக்கலயே ;) ஹிஹிஹீ.

சுவர்ணா... மிக்க நன்றி. :)

தீபா... மிக்க நன்றி //எங்கண்ணன் இந்த கை அழகை பார்த்தே மயங்கி உங்களை கல்யாணம் செய்து இருப்பார் போல// - ம்ம்... அவர் என்னை எங்க நிமிர்ந்து பார்த்தார் !! பயந்த பிள்ளை பாவம். கைகள் அழகா தெரிய டிப்ஸ்... அட்மின்’ல ரேவதியை தான் கேட்கனும் ;) சாதாரண கையை படத்தை எடிட் பண்ணி எப்படி இம்புட்டு அழகாக்கினாங்கன்னு அவங்களுக்கு தான் தெரியும். நம்புங்க... உண்மை உண்மை.

ஹர்ஷா... மிக்க நன்றி. எல்லாரும் காலையிலயே என்னை ஓட ஓட விரட்டுறதுன்னு முடிவா தான் வந்திருக்காப்போல இருக்கு ;) //வனிதாவும் ரொம்ப அழகுதாங்க// - மற்றவர் நேரில் பார்க்க மாட்டாங்கன்னு தைரியமா? ;)

மீனாக்‌ஷி... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிம்பிள் டிசைன் உங்க கைக்கு பொருத்தமா அழகா இருக்கு.

மிக்க நன்றி. எங்கடா உங்களை இப்பலாம் காணோம்னு நினைச்சேன்... பார்த்துட்டேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கையழகா கைவிரல் அழகா
நகம் அழகா நகப் பூச்சு அழகா
மெஹந்தி அழகா இல்லை
அதை வைத்திருக்கும் நேர்த்தி அழகா
அதை அழகென்று சொல்வது..?
ஒரே வ்ரியில் சொல்வதானால
வனியின் மனம் அழகு.. :)

வாழ்த்துக்கள் வனி.. :)))

ஆஹா! எத்தனை அழகு! எத்தனை திறமை! இந்தக் கைக்குள். வாழ்த்துக்கள். இப்போதான் இந்தப் பகுதியைப் பார்வையிடுகிறேன்.ரொம்ப அருமை வனிதா.

அன்புடன்,
ஹலீமா

அன்புடன்,
ஹலீமா

ரொம்ப ஈசியாக இருந்தது....மிக்க நண்றி.....வனிதா....மெஹந்தி போடுவது இவ்வளவு ஈஸீயா,,, என்று நான் வியப்பில் உள்ளேன்....ரொம்ப அருமை.......தொடரட்டும் உங்கள் சேவை..........

தோழிகளே.......
உங்கள் வாழ்க்கை பாதையை மலர்களால் தூவ
முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் புன்னகையால்
தூவுங்கள்........so smile please...

மெஹந்தி கூட ரொம்ப அழகு,

அன்பு வனிதா,

சூப்பராக இருக்கு. 3டி எஃபெக்ட்ல இருக்கு டிசைன்ஸ்! பிரமாதம்!!

அன்புடன்

சீதாலஷ்மி

சாந்தினி... கவிதை கவிதை!!! உங்க பெயரும் கவிதை, உங்க பதிவும் கவிதை :) இப்படிலாம் பாரட்டும் உங்க மனசு தான் ரொம்ப அழகு. மிக்க நன்றி சாந்தினி.

ஹலீமா... மிக்க நன்றி. இங்க இதை விட அழகாக ஹென்னா போடுறவங்க நிறைய இருக்காங்க... :)

ஜெயா... மிக்க நன்றி. போட்டு பார்த்தீங்களா??? ஹென்னா நம்ம விருப்பம் தானே... எப்படி போட்டாலும் அழகு தான் :)

கிருபா... மிக்க நன்றி :)

சீதாலஷ்மி... மிக்க நன்றி. எப்போ இந்த பக்கம் எல்லாம் எட்டி பார்க்க ஆரம்பிச்சீங்க ;) கொஞ்ச நாளா காணோமே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

viralgalil ulla design mattum konjam clumsy-a iruku...otherwise it is super

மிக்க நன்றி. நான் சுலபமா கொடுக்கனும்னு கொடுத்தேன்... அந்த நிமிஷம் எனக்கு தோணியது இது தான் ;) நீங்க உங்க விருப்பம் போல மாற்றிக்கங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வழக்கம்போல... கொள்ளை அழகு. அந்த இரண்டாவது படத்துல இருக்கிறதை தனியாவே போடலாம் போல இருக்கு வனி.
(கமண்ட் போட வரப்ப எல்லாம் யாராச்சும் வந்து குழப்பிட்டே இருந்தாங்க. ;) அதான் லேட்டு, சாரி. ;( )

‍- இமா க்றிஸ்

ஆஹா... அழகு, அழகு, அத்தனை அழகு!! மணிக்கட்டு டிசைன் ரொம்ப பிடிச்சிருக்கு வனி! (கையோட அடுத்தவாரமே போட்டுட வேண்டியதுதான், இங்கே அடுத்த வாரம் ஸ்பிரிங் ப்ரேக்! :))
ஏற்கனவே போட்டப்ப எடுத்த படங்களை எல்லாம் எப்படி உங்களை பார்க்க வைப்பதுன்னு யோசிசிட்டே இருக்கேன்... :)

அன்புடன்
சுஸ்ரீ

இமா... மிக்க நன்றி. எவ்வளவு பிசியான நேரத்தில் எனக்காக நேரம் ஒதுக்கி பதிவு போடுறீங்க... அதுவே பெருசு இமா. :) சாரி எல்லாம் சொல்லி என்னை ஃபீல் பண்ண வைக்கபுடாது.

சுஸ்ரீ... மிக்க நன்றி. போடுங்க போடுங்க... குட்டீஸ் கையில் போட்டு பார்க்கும் மகிழ்ச்சியே தனி தானே. என் குட்டீஸ்க்கு இன்னும் அத்தனை பொறுமை இல்லை... :) போட்டதை அட்மின்கு அனுப்பி கேட்டு பாருங்க... எனக்கு அனுப்பிவிட முடியுமான்னு. இல்லன்னா உங்களுக்கு நல்லா பழக்கமான யாரிடமாவது என் ஐடி இருந்தா வாங்கி அனுப்புங்க. :) பார்க்க நானும் ஆவலோடு இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா