பாலக் டோக்ளா

தேதி: March 20, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

பாசி பருப்பு - ஒரு கப்
பொடியாக நறுக்கிய பாலக் - அரை கப்
தயிர் - கால் கப்
இஞ்சி - ஒரு சிறுத் துண்டு
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
ஈனோ ஃப்ரூட் சால்ட் - அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
எள் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2 கீறியது
பெருங்காயம் - சிறிது
எண்ணெய் - சிறிதளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பாசிபருப்பை களைந்து 1 - 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், தயிர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த மாவுடன் பொடியாக நறுக்கிய பாலக் கீரையை சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன் தேவையான உப்பு, சர்க்கரை, எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தில் தேவையான தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் எண்ணெய் தடவி இட்லி தட்டு/சிறு கிண்ணங்களை தயாராக வைக்கவும். இப்போது ஈனோவை சிறிது தண்ணீரில் கரைத்து, மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு தயாராக வைத்துள்ள கிண்ணங்களில் ஊற்றி வேக வைக்கவும்.
15 - 20 நிமிடங்களில் டோக்ளா வெந்துவிடும். வெந்ததை உறுதி செய்து கொண்டு அடுப்பை நிறுத்தி விடவும். வெந்த டோக்ளாவில் சிறிது தண்ணீர் தெளித்து வைத்தால் ட்ரை ஆகாமல் இருக்கும். ஆறியதும் வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி, துண்டுகள் போடலாம்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்.
இதில் டோக்ளா துண்டுகளை சேர்த்து கிளறி கொள்ளவும்.
சுவையான ஹெல்தியான தால் பாலக் டோக்ளா தயார். விரும்பினால் கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கலாம். இதனை கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறலாம்.

இதில் பாலக் கீரைக்கு பதில் வெந்தய கீரையும் பயன்படுத்தலாம். கேரட் துருவி சேர்த்தால் இன்னும் கலர்ஃபுல்லாக இருக்கும். டோக்ளா வெந்த பின்னர் அதன் மீது சிறிது தண்ணீர் தெளித்து வைத்தால் ட்ரை ஆகாமல் இருக்கும். பாசிபருப்பை ஊற வைத்து அரைப்பதற்கு பதிலாக பாசிபருப்பு மாவை பயன்படுத்தினால் இன்னும் விரைவில், சுலபமாக செய்து விடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா

அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள். நிச்சயம் செய்து பார்க்கிறேன்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹர்ஷா... சூப்பர் !!! அழகான படங்கள்... கவிதை பேசுது. ப்ரெசண்டேஷன் செய்திருக்கும் விதம் எல்லாமே அழகு. வாழ்த்துக்கள் ஹர்ஷா :) கலக்கிட்டீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ஹர்ஷா,

சூப்பர், சூப்பர்! அழகாக செய்திருக்கீங்க. கீரை, பருப்புடன் சேர்த்து செய்த டோக்ளா வித்தியாசமாக இருக்கு. விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

சத்தான குறிப்பு. அழகா செய்து காமிச்சிருக்கீங்க. படங்கள் எல்லாம் ரொம்ப தெளிவா இருக்கு. வாழ்த்துக்கள் தோழி.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

இதில் எப்போது ஃபுருட் சால்ட் சேர்க்க வேண்டும்???

தால் டோக்ளா ரொம்ப நல்லா இருக்கு ஹர்ஷா. அழகா ப்ரசண்ட் பண்ணி இருக்கீங்க. கடலை மாவுவில் செய்றது பார்த்து இருக்கேன். இது புதுமையா இருக்கு. குறிப்பும் பிடிச்சுருக்கு ட்ரை பண்ணி பார்க்குறேன். வாழ்த்துக்கள்.

vani selwyn 5 வது படத்தை பாருங்க ஈனோ - னு சொல்லி சேர்த்து இருக்காங்க.

அன்பு,

பாலக் டோக்ளா சத்தான சிற்றுண்டி. படங்களும்,செய்முறை குறிப்பும், அளித்தவிதமும் வெகு நேர்த்தி. வாழ்த்துக்கள் அன்பு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு பாலக் டோக்ளா மிக அருமை.... படமா,குறிப்பா,செய்முறை விளக்கமா ஒவ்வொன்னும் நீயா நானான்னு போட்டி போடுது போங்க.. வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

மஞ்சு,
முதலாவதா வந்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி.செய்து பார்த்து சொல்லுங்க.

வனிதா,
பதிவுக்கு மிக்க நன்றி. :-) ப்ரசண்ட்டேஷன் திடீரென்று உதித்த ஐடியாதான் . எப்போதும் எல்லாரையும் உற்சாக படுத்தும் உங்களுக்கு நன்றி வனிதா.

சீதாலக்‌ஷ்மி அம்மா,
நலமா? உங்க பதிவு பார்த்து ரொம்ப மகிழ்ச்சி.பாராட்டுக்கு மிக்க நன்றி.

சுபா ராம்,
உங்க பதிவுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

வாணி,
இட்லி பாத்திரத்தில் தண்ணிர் கொதிக்க ஆரம்பித்ததும்,மாவுடன் ஈனோ கலந்து,இட்லி தட்டில் ஊற்றுங்க.செய்து பார்த்து சொல்லுங்க.பதிவுக்கு நன்றி.

வினோஜா,
எனக்காக பதில் சொன்னதற்கு நன்றி. :-) ப்ரசண்டேஷன் பிடிச்சிருக்கா? நன்றி.
தால் பாலக் டோக்ளா செய்து பாருங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

கல்ப்ஸ்,
கீரையும் சேர்ப்பதால் ரொம்ப சத்தானதுதான்.உங்க அன்பான பதிவுக்கு மிக்க நன்றி கல்ப்ஸ். :-)

ஸ்வர்ணா,
உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி,ஸ்வர்ணா. நீங்க சொல்லும் அளவுக்கு இருக்கானு தெரியல.இருந்தாலும் நன்றி. :-)

டால் பாலக் டோக்ளா அருமை. செய்முறை விளக்கங்கள் படங்கள் எல்லாமே நல்லாயிருக்கு. அந்த கடைசி படத்தில் உள்ள ரோஸ் கலக்கல். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தக்காளி தோல் ரோஸ் எப்படி செய்யறதுனு சொல்லி கொடுத்ததே நீங்க தானே! நல்லா செய்து இருக்கேனா? தேங்க்ஸ். பதிவுக்கும் மிக்க நன்றி.

என்னத்தான் சொல்லிக் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்தது நீங்கள் தானே! சோ த புல் கிரெடிட் கோஸ் டு யூ ஒன்லி

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பரசி,

பாசிபருப்பு சேர்த்து செய்திருப்பது புதுமை..

வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

அருமையான டோக்ளா
எனக்கு பாலக்கில் செய்வது ரொம்ப பிடிக்கும்.

Jaleelakamal

ஹர்ஷா,

பாலக் டோக்ளா அருமை! சூப்பரான ப்ரோட்டின் ரிச் டிஃபன் ஐட்டம்! கண்டிப்பா ட்ரை பண்ணிபார்க்கிறேன். கடைசிப்படம் ப்ரசண்டேஷன், நடுவில் பூத்த அந்த ரோஸ் லவ்லி! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

கவிதா,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

ஜலீலா அக்கா,
உங்க பதிவு பார்த்து மிக்க மகிழ்ச்சி. உங்க பதிவுக்கு நன்றி.

சுஸ்ரீ,
சுவையும் ரொம்ப நல்லா இருக்கும்.செய்து பாருங்க சுஸ்ரீ.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.