தேங்காய் அடை

தேதி: March 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.6 (5 votes)

 

புழுங்கல் அரிசி - கால் கிலோ
தேங்காய் - ஒரு மூடி
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 6
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
எண்ணெய்


 

அரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும். தேங்காயை சில்லுகளாக்கவும்.
ஊற வைத்த அரிசியுடன் தேங்காய், பச்சை மிளகாய், வெங்காயம், சீரகம், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
தோசைக்கல்லை காய வைத்து மாவை அடையாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் விடவும்.
திருப்பி போட்டு வெந்த உடன் எடுக்கவும்.
சூடான தேங்காய் அடை ரெடி.

அடையை சிறிது நேரம் நன்றாக வேகவிட்டு எடுக்க வேண்டும். முருங்கை கீரையை வதக்கி மாவுடன் சேர்த்தால் மிகவும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

படங்களும், விளக்கமும் நன்றாக உள்ளது. நான் அடை செய்யும் போது சீரகம் சேர்க்க மாட்டேன். இனிமேல் சேர்த்து செய்து பார்க்கிறேன். நல்ல குறிப்பு கொடுத்ததர்க்கு வாழ்த்துக்கள் தோழி.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

ப்ரியா,

சுவையான அடை..புழுங்கல் அரிசியில் மட்டும் தான் செய்யணுமா?
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ப்ரியா தேங்காய் அடை அருமையா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அடை ரொம்ப சூப்பர்ங்க :) இந்த வாரம் செய்துடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

i vl try this wk priya

அன்பு ப்ரியா,

அடை குறிப்பு நல்லா இருக்கு. அவசியம் செய்து விடுகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு நன்றி...
சுபா ராம் மிக்க நன்றி... சீரகம் சேர்த்தால் தனி வாசனை கிடைக்கும்.. செய்து பாருங்கள்...
நன்றி கவிதா... பச்சரிசியிலும் கால் பாகம் புழுங்கல் அரிசி கலந்து செய்யலாம்.....இல்லயேல் மிகவும் வரவரப்பாகி(hard) விடும்...
நன்றி சுவர்ணா விஜயகுமார்...
நன்றி வனிக்கா.... செஞ்சுட்டு எப்படி இருந்தென்று சொல்லுங்கள்... சூடா சாப்பிட்டா தான் நல்லா இருக்கும்.....
நன்றி kavcitha tell me the feedback.....
மிக்க நன்றி சீதாலஷ்மி மேடம்... செஞ்சுட்டு எப்படி இருந்தென்று சொல்லுங்கள்...

அடை என்றால் எனக்கு ரொம்ப பிரியம்.. அதிலும் நிறைய தேங்காய் சேர்த்து ரொம்ப டேஸ்டா இருக்கும் போல.. புதுமையா இருக்கு.. வாழ்த்துக்கள் பிரியா..

"எல்லாம் நன்மைக்கே"