நெத்தலி மீன் பால் சொதி

தேதி: August 1, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நெத்தலி மீன் - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
தேங்காய் - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் - 1/4 தேக்கரண்டி
உள்ளி - 1 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தேசிக்காய் - பாதி
உப்பு - தேவைக்கு ஏற்ப


 

நெத்தலிமீனை சுத்தம் செய்து மஞ்சள், உப்பும் சேர்த்து கலந்து வைக்கவும்.
தேங்காயை அரைத்து 2 கப் தண்ணீர் விட்டு பாலை வடித்து எடுத்து வைக்கவும்.
அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கடுகு, கறிவேப்பிலை போட்டு வெடித்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியையும் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்பு அதனுள் மீனை கொட்டி, மிளகுத்தூள், உள்ளி என்பவற்றை சேர்த்து மெதுவாக மீன் உடையாமல் கிளறி விடவும்.
மெல்லிய தீயில் 10 நிமிடம் மூடி அவிய விடவும்.
மீன் அவிந்தவுடன் எடுத்து வைத்த 2 கப் பாலையும் விட்டு கொதித்து வந்தவுடன் இறக்கவும்.
இடியாப்பம், சாதம் என்பவற்றுடன் பிசைந்து சாப்பிடலாம்.


நெத்தலி மீன் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது. எலும்புகள் வளர்ச்சி அடைவதற்கும், வலுப்பெறுவதற்கும் சிறந்தது.
கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் பால் சேர்க்காமல் செய்யலாம். குழந்தைகளுக்கு கொடுப்பதாயின் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டாம், காரமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்