ரவா சாக்லேட் கோவா

தேதி: August 2, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவா - ஒரு கப்
சீனி - ஒரு டேபிள் ஸ்பூன்
வெள்ளை சாக்லேட் - 200 கிராம்
கரூர் நெய் - 5 டேபிள் ஸ்பூன்
வற்றிய பால் - 50 மில்லி
டின் பால் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - கால் சிட்டிகை


 

ரவாவை வாசம் வரும்வரை வறுத்துக்கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தில் வெள்ளை சாக்லேட்டை போட்டு அடுப்பில் மிதமான தீயில் வைத்து, உருகும் வரை கிளறவும்.
உருகியவுடன் நெய், ரவாவை அதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி, சீனி, உப்பு போட்டு, டின் பாலையும் வற்றிய பாலையும் ஊற்றி கிளறவும். பால் வற்றி திரண்டு வரும் போது இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்