ஒரு ஆண் மகன் எப்படி இருக்கணும்...எப்படி எல்லாம் இருக்க கூடாது

எல்லாரும் இன்னைக்கு செம டென்ஷன் ல இருக்கறதுனால..நம்ம கோவத்த எல்லாம் இந்த ஆண்கள் பக்கம் திருப்பிடுவோம்....ஒரு ஆண் மகன் எப்படி இருக்கணும்...எப்படி எல்லாம் இருக்க கூடாது...ன்னு உங்க கருத்துகளை எல்லாம் வந்து கொட்டு கொட்டுன்னு கொட்டுங்க...கொட்டி வையுங்க...

பின் குறிப்பு:எங்க வீட்டு காரர் என்னையும் நம்பி ரெண்டு பேரை நைட் வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு இருக்காரு...அவர் பேர காப்பாத்த வாவது எதாச்சும் செய்யணும்... நிறைய வேல இருக்கு...நான்னும் இந்த கேள்விக்கு அப்புறம் வந்து பதில் சொல்றேன்

என்ன அட்மின் சார் நீங்களும் ரொம்ப பாதிச்சுருப்பிங்க போல ,பழமொழி எல்லாம் பலார் பலார் நு வந்து கொட்டுரீங்க ...

வீட்டுக்கு வீடு வாசப்படி
தான்

நீங்களும் கோவத்துல இருக்கிங்கல்லா???? கூல் கூல் அட்மின் சார்.....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

மாத்தி ஆச்சு...oops..spelling mistake ...நீங்க ஏதும் விபரீதமா கற்பனை பண்ண வேண்டாம்...!!!!

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

1.மனைவி சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடக் கூடாது. மனைவி சொல்லை மதிக்காதவனாகவும் இருக்கக் கூடாது. கலந்து பேசி முடிவெடுக்கணும்.
2. வேலை முக்கியம் என்றாலும் குடும்பத்துக்கும் நேரம் செலவழிக்கணும். அது வெறும் "Quantity time" ஆக இல்லம "Quality time" ஆக இருக்கணும் கிடைப்பது இரண்டு நிமிடங்கள் என்றாலும் அந்த இரண்டு நிமடங்களும் குடும்பத்தினருடன் மனம் விட்டு பழகினால் போதும். சும்மா நானும் வீட்டில் டைம் ஸ்பென்ட் பண்றேன்னு டிவி பொட்டி முன்னாடியோ கம்ப்யூட்டர் பொட்டி முன்னாடியோ தவம் கிடக்கக் கூடாது.
3. நகைச்சுவை உணர்வு இருக்கணும்.
4. மனைவி தன் வீட்டினரிடம் பாசமாக நெருங்கிப் பழகணும்னு எதிர் பார்ப்பது போல் ஆண்களும் மனைவி வீட்டாருடன் நெருக்கமாக இருக்கணும்.
5. பெண்ணுக்கே உரிய உடல் பிரச்சினைகளை புரிந்து நடந்து கொள்பவனாக இருக்கணும்.
6. பெண்களின் டிக்‌ஷ்னரி குறிப்பாக மனைவியின் டிக்‌ஷ்னரியை தெரிஞ்சு வச்சுக்கணும். இல்லேன்னா பெண்களிடம் பாஸ் மார்க் வாங்குவது கஷ்டம்தான் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

HI FRIEND romba correct ah sonnenga.Seperbbb...nalla purinji sonnenga

நன்றி விஜயலெக்‌ஷ்மி! தமிழில் சொல்லியிருந்தா இன்னும் சந்தோஷப் பட்டிருப்பேன் :)

7) பெண்ணிடம் அவள் முகத்தைப் பார்த்து பேசணும்.(ஆணோ பொண்ணோ முகம் பார்த்துதான் பேச வேண்டும்)
8)பெண்களிடம் ஓவராக வழியும் எந்த ஆணையும் பெண்களுக்கு பிடிக்காது.
9)மற்றவர்கள் முன்னால் மனைவியை விட்டுக் கொடுக்கக் கூடாது. மட்டம் தட்டக் கூடாது.
10)பெண்களை கைநீட்டி அடிப்பவனை பெண்கள் ஆண்களாக என்ன மனிதனாகவே மதிப்பதில்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இதுல எதுவுமே இல்லாதவங்கள எப்படி மாத்த?

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

நாகராணி, பெண்ணின் மவுனத்தையும் பொறுமையையும் மிஞ்சிய ஆயுதம் உண்டா?
அன்பால் வழிக்கு கொண்டு வர முடியலேன்னா பொறுமை எனும் இரண்டாவது ஆயுதம். அதற்கும் மசியலேன்னா மவுனம்... மனசாட்சியுள்ள ஆண்களால் இந்த மவுன ஆயுதத்தை தாங்கிக் கொள்ள முடியாது.
மனசாட்சியே இல்லாதவர்கலை என்ன செய்வது :( எனக்கு தெரியல :(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Appadi Irukanum
aulavu kastam vanthalum athai thanki kolanum , athai mattavarkal mal thinikamal , appoluthum
manathai amaithiya vaithu kolla vendum aplothuthan nammal sumakalai thooka iyalum , mattavarkalidam anbu katta vendum , mal kuruya padi iruka mudiavillai andral mattavarkali thunpuruthamal irruka vendum .

Appadi irruka kudathu

suyanalathudam irruka kudathu

முக்கியமா (பர்ஸ்) முடியும் போதெல்லாம் நகை கடைக்கும்,புடவை கடைக்கும் டூர் கூட்டிட்டு போகனும். அப்படி அழைத்து செல்பவர் தான் சிறந்த ஆணுக்கு உதாரணமானவர் ;))))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

hi friend I LIKE U SO MUCH dear...neenga avllo nalla sonnenga 10 points-very very correct dear.tamil la ennaku correct ah type panna theriyathu so dont get angry plz forgive me dear.
Naama avanga male evllo paasama errukomo antha allavuku avangalum nama male pasama errupanga (Gents).naama avangalta enna ethir paarkiromo atha nama paninalae ellamae sariya vanthidum life super ah poogum ethu en life la na paathathu.Bye dear

மேலும் சில பதிவுகள்