மாசி சம்பல் செய்வது எப்படி?

மாசி சம்பல் செய்வது எப்படி?

இந்த லிங்க்ல பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/10541

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி இம்மா நீங்கள் இலங்கையா?நான் கேட்பது அங்கே கலியாண வீட்டில் விருந்துக்கெல்லாம் செய்வாங்களே அந்த மாசி சம்பல் அதன் செய்முரை தெரியுமா?கட்ட சம்பல் எப்படி செய்வது

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

http://www.arusuvai.com/tamil/node/4466 குறிப்பின் கீழே நர்மதா பதில் சொல்லி இருப்பார்கள். அங்கு கூடவே கட்டசம்பல் அளவும் கொடுத்து இருக்கிறார். பாருங்கள்.

நர்மதா சொன்னவற்றோடு மாசியும் சேர்த்துக் கொண்டால் சரி. ஆனால்.. தேசிப்புளிதான் மாசிச்சம்பலுக்குப் பொருத்தமாக இருக்கும். அம்மியில் அரைக்க முடியாது. உரல்தான் சரி.

வீட்டிற்குச் செய்கிறபோது அளவு பார்க்கவேண்டியது இல்லை. ;) (இங்கு காரம் அதிகம் சேர்க்க மாட்டோம், அதனால் என்னால் அளவுகள் சரியாகச் சொல்ல இயலவில்லை, மன்னிக்க வேண்டும்.) அவரவருக்குப் பிடித்த அளவு செத்தல்மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். மாசிதான் அதிகம் தேவைப்படும். வெங்காயம்... சின்ன வெங்காயம்தான் பொருத்தமாக இருக்கும்.

முதலில் செத்தலையும் கொஞ்சம் உப்பையும் சேர்த்து இடித்துக் கொண்டு சின்னதாக வெட்டிவைத்திருக்கும் மாசியைச் சேர்த்து இடியுங்கள். பிறகு வெங்காயத்தைச் சேர்த்து இடித்துக் கொண்டு தேசிப்புளி சேர்த்து உப்பையும் பார்த்துக் கொண்டால் சரி.

‍- இமா க்றிஸ்

ரிசானா. கல்யாண வீட்டில் புரியாணிக்கு வைக்கும் மாசி சம்பலா கேட்டிருக்கீங்க. அது செய்ய முதலில் வெங்காயம் பூண்டு கறிவேப்பிலை எல்லாம் சிறிதாக அரிந்து பொரித்தெடுக்க வேண்டும். பின் மாசித்தூளுடன் செத்தல் ,உப்புத்தூள் சேர்த்து நன்கு பிரட்டிக்க்கொள்ள வேண்டும் ,பொரித்து வைத்தவற்றை நன்கு பொடியாக்கி மாசிக்கலவையுடன் சேர்த்து ஒரு சட்டியில் இட்டு சிறிது வறுத்தெடுக்கவும். சரியான அளவு முறை நினைவில்லை நீங்கல் வீட்டில் செய்யும் போது முதலில் கொஞ்சமாக முயற்சி செய்து பாருங்கள்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்