கத்தரிக்காய் அவரைக்காய் குழம்பு

தேதி: August 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கத்தரிக்காய் - அரை கிலோ
அவரைக்காய் - கால் கிலோ
குடைமிளகாய் (காப்சிகம்) - ஒன்று (பெரியது)
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
கருவடாம் - 2 தேக்கரண்டி
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
தனியா பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
புளி கரைச்சல் - அரை கப்
கறிவேப்பிலை - 10 இலை
பூண்டு - 6 பல்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி


 

கத்தரிக்காய், அவரைக்காய், குடைமிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளியை அரிந்து வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் அல்லது பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கருவடாமை போடவும்.
பிறகு கறிவேப்பிலை, நசுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு கத்தரிக்காய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் அவரைக்காய் மற்றும் குண்டு மிளகாயை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளியை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
மஞ்சள் பொடி, தனியா பொடி, மிளகாய் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு வதக்கவும்.
4 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளிகரைச்சலை ஊற்றவும். காய்கள் வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.


Capsicum போடுவதால் vitamin C சத்து கிடைக்கும். taste-ம் different-ஆக நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்