அவரைக்காய் பொரியல்

தேதி: August 3, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

அவரைக்காய் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 4 பல்
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 6 இலை
மிளகாய் பொடி - அரை தேக்கரண்டி
தனியா பொடி - அரை தேக்கரண்டி
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

அவரைக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு அரிந்து வைத்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு போட்டு கடுகு வெடித்ததும் உளுத்தம் பருப்பு போடவும்.
பிறகு கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் போட்டு வெங்காயம் வதங்கியவுடன் தக்காளியை போடவும்.
தக்காளி வதங்கியவுடன் அவரைக்காயை போட்டு வதக்கவும். பூண்டை நசுக்கி அதில் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி மற்றும் உப்பை அதில் போட்டு மசாலா சேரும் வரை வதக்கவும்.
ஒரு கப் தண்ணீர் விட்டு ஒரு மூடி போட்டு சிம்மில் 5 நிமிடம் வேக விடவும்.
பிறகு மூடியை எடுத்து விட்டு தண்ணீர் சுண்டும் வரை கிளறி விட்டு, தண்ணீர் சுண்டியவுடன் இறக்கி வைத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்