பொட்டுக்கடலை குழம்பு

தேதி: March 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (24 votes)

 

பொட்டு கடலை - 5 மேசைக்கரண்டி
தக்காளி - ஒன்று (நடுத்தர அளவு)
வெங்காயம் - ஒன்று (நடுத்தர அளவு)
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க :
எண்ணெய்
கடுகு, உளுத்தம் பருப்பு
கடலைபருப்பு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். பொட்டுக்கடலையை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து நன்கு சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பை பொரிய விடவும்.
பிறகு பச்சை மிளகாயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
பின்பு, தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கி தேவையான அளவு தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வைக்கவும்.
தண்ணீர் ஓரளவு சுண்ட தொடங்கும் போது பாத்திரத்தை இறக்கி வைத்து பொடித்து வைத்த பொட்டுக்கடலையை மெதுவாக தூவி கட்டியில்லாமல் கலக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இட்லி,தோசைக்கு சூப்பர் காம்பினேஷன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர்.. செய்முறை ரொம்ப எளிதாக இருக்கு.. படங்களும் அருமை..தோசையை அவ்ளோ அழகா வச்சிருக்கீங்க.. இது போல் இன்றே செய்கிறேன் கல்பனா.. வாழ்த்துக்கள்.. இன்னும் நிறைய நிறைய குறிப்புகள் குடுங்க..

"எல்லாம் நன்மைக்கே"

தோழி கல்பனா!!
பொட்டுகடலை குழம்பு சுவை வித்தியாசமாய் இருக்கும்னு நினைக்கிறேன். இது டிஃபன் வகையறாக்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அப்படியானால் பொட்டுகடலை சாம்பார் என்றே சொல்லலாமா? இரவு செய்து பார்க்கிறேன்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

என் குறிப்புகளை தாமதமின்றி அனுப்பி உற்சாகமூட்டும் வகையில் உடனுக்குடன் வெளியிடும் அட்மின் அண்ணா & டீமிற்கு என் மனமார்ந்த நன்றிகள் !!!

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பாக்கியா, முதல் ஆளா வந்து பதிவு போட்டிருக்கீங்க. ரொம்ப சந்தோஷம். ரொம்ப ஈசியான, ஆனா டேஸ்டான குறிப்பு. செய்து பாருங்க. நன்றிகள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பூர்ணிமா, டிபன் எல்லா வகைக்களுக்கும் பொருந்தாது பா. இட்லி - தோசைக்கு மட்டும் தான். அதுவும் ஒரே டைம் வச்சு காலி பண்ணிடனும். இன்னொருமுறை சூடு பண்ணி சாப்டீங்கன்னா டேஸ்டே வித்யாசப்படும். மறுமுறை சூடு செய்யும் போது அதில் சேர்த்த பொட்டு கடலைமாவு கொழகொழப்பாகி டேஸ்டில்லாம பண்ணிடும். கடைசி ஸ்டெப்பை வேறு முறையிலும் செய்யலாம்.

தண்ணீர் கொதித்து சுண்ட தொடங்கியதும், இறக்கி தண்ணீரை மட்டும் தனியே வடிகட்டி வைத்துக் கொண்டு வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை பருப்பு கடையும் மத்தை வைத்து நன்றாக கடைந்து பிறகு அதில் பொட்டுக்கடலை பொடியை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து அதன்பிறகு வடிகட்டிய தண்ணீரை சேர்த்தால் உங்களுக்கு காரம் நன்றாக உறைப்பாக இருக்கும். என் குட்டீசுக்காக நான் அப்படி செய்யவில்லை. பெரியவர்கள் சாப்பிடுவதென்றால் இந்த முறையில் செய்யலாம். இதை மறுபடி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க கூடாது.

இது சாம்பார் இல்லை பூர்ணி :) குழம்பு தான். செய்து பார்த்துட்டு சொல்லுங்க. வரவிற்கும் பதிவிற்கும் நன்றி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு கல்பனா,

பொட்டுக் கடலை பொடிச்சுப் போட்டு, செய்ததில்லை. எங்க வீட்டில் மெயின் டிஃபன் எப்பவுமே இட்லி, தோசைதான். இந்தக் குழம்பு ட்ரை பண்றேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாம்மா, பருப்பில்லாத குழம்பா, இட்லி - தோசை இல்லாத வீடா? ;) அதான் தைரியமா இந்த குறிப்பை தந்துட்டேன். இந்த முறையில் செய்து பாருங்கம்மா. நல்லாருக்கும். பூர்ணிமாவுக்கு தந்த பதிவுல ஒரு மாற்று முறை சொல்லியிருக்கேன் பாருங்க. அந்த முறைல செய்து பாருங்க உப்பும்,உறைப்பும் தூக்கலா நல்லா வரும்.

அலுவலக பணிக்கு நடுவிலும், ஒவ்வொருத்தர் குறிப்பிலும் தவறாது பதிவிட்டு ஊக்கமூட்டிவரும் உங்களுக்கு மனப்பூர்வ நன்றிகள்ங்கம்மா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா, என் சந்தேகத்தை அருமையா, விளக்கமா தீர்த்து வெச்சிட்டீங்க.

எங்க வீட்லயும் இப்படி ஒரு சாம்பார் செய்வோம், தக்காளியை மிக்ஸியில் அரைச்சி ஊற்றி, அதில் பொட்டுகடலை மாவு, உப்பு, மிளகாய்தூள் எல்லாம் சேர்த்து கலக்கி, வாணலியில் கடுகு, வெங்காயம், பச்சைமிளகாய் வதைக்கி கலவையை ஊற்றி கொதித்து கொஞ்சம் கெட்டியானதும் இறக்கிடுவோம். அதை பொட்டுகடலை தக்காளி சாம்பார்னு சொல்லுவோம்.

நீங்க சொன்ன மாதிரி சூடு ஆறுமுன் சாப்பிட்டாதான் நல்லா இருக்கும், ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியாது. இட்லி, தோசைக்கு மட்டும்தான் சரி வரும்.

இன்று இரவு எங்க சாம்பாருக்கு மாற்றாக உங்க பொட்டுகடலை குழம்பைதான் செய்ய போறேன். அதுவும் நீங்க சொன்ன மாற்று முறையில் காரசாரமா செஞ்சி பாராட்டை வாங்கிடலாம்னு ப்ளான் பண்ணியிருக்கேன் பா.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

பொட்டு கடலை குழம்பு ரொம்ப வித்தியாசமா இருக்கு..... ஈஸியாகவும்
இருக்கு..... செய்து பார்த்துட வேண்டியது தான்.....
படங்கள் ரொம்ப ரொம்ப அருமை கல்ப்ஸ்...... அதுவும் அந்த லாஸ்ட் படம் சூப்பர்ரோ சூப்பர்...... தோசையை பார்க்கும் போதே தட்டை காலி செய்ய தோணுது...... :)
மேலும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்......

ஹாய் பாட்னர் நான் பொட்டுக்கடலை , தேங்காய் சேர்த்து அரைத்து சாம்பார் தோசைக்கு பண்ணுவேன் ஆனால் பொட்டுக்கடலை பொடி பண்ணி பண்ணது இல்லை அடுத்த முறை இந்த மாதிரி பண்ணுறேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

பூர்ணிமா, நீங்க சொன்ன குறிப்பு கூட நல்லார்க்கு. நான் இதையும் செய்து டேஸ்ட் பண்ணிடறேன். நன்றி

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தீப்ஸ், இது ரொம்பவே ஈசி. செய்து பார்பா. குட்டி பையனுக்கும் பிடிச்சிருக்கும். ஊருக்கு வந்தா ஒரு தட்டு என்ன பத்து தட்டு தோசை செய்து தர்றேன். வாழ்த்துக்கும்,பதிவிற்கும் நன்றி தீப்ஸ் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பொட்டு கடலை குழம்பு ரொம்ப வித்தியாசமா இருக்கு..... ஈஸியாகவும்
இருக்கு..... செய்து பார்த்துட வேண்டியது தான்.....
படங்கள் ரொம்ப ரொம்ப அருமை கல்ப்ஸ்...... அதுவும் அந்த லாஸ்ட் படம் சூப்பர்ரோ சூப்பர்...... தோசையை பார்க்கும் போதே தட்டை காலி செய்ய தோணுது...... :) dosaiki superb combination pa. i vl try this wk.
மேலும் பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்......

தனா, நீங்க தான் சமையல் குறிப்புகளை ஆர்வமா செய்து பார்ப்பீங்களே. இதையும் முயற்சி செய்து பாருங்க. வரவிற்கு,பதிவிற்கும் நன்றி தனா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நல்லா இருக்கு. என்ன மாதிரி ஆட்களுக்கு ஏத்த டிப்ஸ்....

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

kavcitha, நிச்சயமா ஈசியான குறிப்பு தான். 20 நிமிஷத்துல பண்ணிடலாம். இட்லியை விட இது தோசைக்கு சரியான காம்பினேஷன். யாராவது தோசையை சுட்டு போட்டா டசன் கணக்குல போறதே தெரியாம போகும் எனக்கு ;) நீங்களும் செய்து பார்த்துட்டு சொல்லுங்க. கடைசி தட்டு தானே, நீங்க எந்த ஊர்னு சொல்லுங்க ப்ரெஷ்ஷா அனுப்பி வச்சுடறேன். தோழிகளுக்கு ஏமாற்றமே கூடாது :) உங்க பேர் என்ன பா?

வரவிற்கும்,பதிவிற்கும் நன்றி தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வெண்ணிலா, ஆமா பா. வேலைக்கு போறவங்களுக்கு சுலபமா செய்து சாப்பிடுற மாதிரி எளிமையான,தயாரிக்க குறைவான நேரமே பிடிக்கும் டிஷ். செய்து பாருங்க. பதிவிற்கு நன்றி வெண்ணி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

Kalps parkumpotha nallaruku.pothumethoada iruku.tri panidu sollarom.nit intha kulambu than.athau eppadi kalps dosai avalavu azhga iruku.athai eppadi vipathunum saimurai poduga.

Be simple be sample

ரேவதி, எங்கே போயிருந்தீங்க? என் பக்கமே ஆளை காணோம். செய்து பாருங்கப்பா. 2 சிங்ககுட்டிகளுக்கு நிச்சயம் பிடிக்கும். தோசையை எப்படி வைப்பதுன்னு அடுத்த குறிப்பு அனுப்பிடுறேன் ;) வரவிற்கு,பதிவிற்கும் நன்றி ரேவ்ஸ் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மதுரை pa தோழி. கண்டிப்பா அனுப்புன்க கல்ப்பனா. i like dosa pa morrru morru nu tamil type slow va varuthu. athan

எளிமையான புதுமையான குறிப்பு. இன்று இரவே செய்து பார்க்கனும்.. வாழ்த்துக்கள்!!

கல்ப்ஸ் பொட்டுக்கடலை குழம்பு சாட்டுல சொல்லி சொல்லி ஆசை காட்டுவீங்களே இதுதானே இனிமே நானே செய்துடுவேன் :)
எளிமையான சுவையான குறிப்பு இதுவரை கேள்விபடாத குறிப்பு வாழ்த்துக்கள் கல்ப்ஸ்.
//கடைசி ஸ்டெப்பை வேறு முறையிலும் செய்யலாம்.//
இந்த முறையில் செய்துட்டு வந்து சொல்றேன் நமக்கு காரம் வேனுமே :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப ஈசியான செய்முறை இன்றிரவு தோசைக்கு இதான்
side dish

கல்பனா அக்கா,
பொட்டு கடலை குழம்பு ஈசியா இருக்கு. ரெண்டு நாள் ல செஞ்சுடரென். உங்களுக்கு ரொம்ப நன்றியும். நான் தேடிட்டு இருந்தேன். இட்லி தோசை க்கு சட்னி இல்லாம என்ன செய்யரது னு. அதனால ,இட்லி மாவு அரைக்காம வெறும் ப்ரட் வச்சு மானெஜ் பண்ணிட்ருந்தேன். இப்போ உங்க குழம்புனால இட்லி தோசை ஆசை ஆகிருச்சு. நன்றி அக்கா.
உங்கள் தக்காளி ஊருகாயும் ஆசையாக இருக்கு. சீக்கரம் அதுவும் செய்யனும். விருப்ப பட்டியல் ல சேர்த்துடேன்.
உங்க கதைகள் படிச்சுருகேன். ரொம்ப பிடிச்சது எனக்கு. ரொம்ப நாளுக்கு அப்புரம், தமிழ் கதைகள் படித்தது உங்களால் தான் அக்கா. அதற்கும் நன்றி. மன்னிக்கவும் எல்லாம் இந்த பதிவிலய சொல்லரென்னு.

என்றும் உங்கள் ரசிகை,
அன்புடன்
சந்திரா

ஆஹா கல்ப்ஸ் இண்ஸ்டண்ட் குழம்பு மாதிரி சூப்பரான ரெஸிப்பி கொடுத்திட்டீங்களே!!

காலையில பருப்பு வேக வைக்க டைம் இல்லைனா இத சட்டு புட்டுனு செஞ்சு பேர் வாங்கிப்போடலாம் அப்படிதானே என்ன நாஞ்சொல்றது;-)

குறிப்புக்கு இரண்டு ஸ்டார், ப்ரசண்டேசனுக்கு மூணு ஸ்டார் ஆகமொத்தம் ஐஞ்சு ஸ்டார் கொடுத்திருக்கேனாக்கும்..அந்த தோசத்தட்ட அப்படியே இந்தால நகுத்துங்க பாக்கலாம்;-) வாழ்த்துக்கள் கல்ப்ஸ்;-)

Don't Worry Be Happy.

kavcitha, மதுரை தானே, கண்டிப்பா அனுப்பி வைக்கறேன். ஆனா மொறு,மொறுப்பு தான் டவுட்டு ;) தமிழ் டைப் பண்ணி பழகிட்டா வேகமா டைப் பண்ண வரும். ட்ரை பண்ணி பாருங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுபா, கண்டிப்பா செய்து பாருங்க. பொட்டுக்கடலை,பச்சை மிளகாய், தக்காளி வாசனையோட நல்லாவே இருக்கும். வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுவா,

//பொட்டுக்கடலை குழம்பு சாட்டுல சொல்லி சொல்லி ஆசை காட்டுவீங்களே இதுதானே இனிமே நானே செய்துடுவேன் :)// சுவா, ஆசை மட்டும் இல்லை நேர்ல இருந்தா தோசையோட தருவேன் :) செய்து பார்த்துட்டு சொல்லுங்க பா. வருகைக்கு நன்றி சுவா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நிக்கிலா, செய்வது ஈசி, தோசையோடு ஊறவச்சா சாப்பிடுவதும் ஈசி. செய்துட்டு சொல்லுங்க. நன்றி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இவ்வளவு எளிமையான குறிப்பா நல்லா இருக்கு. பொட்டுக்கடலையை மட்டும் பொடி பண்ணி வைச்சுக்கிட்டா ரொம்ப சுலபமா செய்துடலாம் போல. சீக்கிரம் செய்துப்பார்த்துட்டு பதிவிடுகிறேன்.

அய்யோ கல்பனா! தட்டைப்பார்த்தவுடனே அப்படியே தூக்கிட்டுப்போய் சாப்பிட்டுரமாட்டமான்னு நினைக்கிறாப்லெ அருமையான குறிப்பா கொடுக்கிறீங்க! உங்க சமையல்வெறி நல்லாவே விளங்குது அடுத்தடுத்து உங்க குறிப்புகள் வெளிவருவதிலிருந்து. தொடரட்டும் உங்கள் அருமையான குறிப்புக்கள்.

அன்புடன்,
ஹலீமா

சந்திரா,

//இட்லி தோசை க்கு சட்னி இல்லாம என்ன செய்யரது னு. அதனால ,இட்லி மாவு அரைக்காம வெறும் ப்ரட் வச்சு மானெஜ் பண்ணிட்ருந்தேன்.// சமயத்துல அப்படித்தான் வெறுப்பாய்டும் ;( ஆனாலும் வெறுப்புல ப்ரெட் மட்டும் சாப்பிட மாட்டேன் ;D. இந்த குழம்பு இட்லியை விட தோசைக்கு ரொம்ப நல்லார்க்கும். நல்லா மொறு மொறுன்னு நெய் ஊத்தி சுட்டு சாப்பிட்டு பாருங்க.

//உங்க கதைகள் படிச்சுருகேன். ரொம்ப பிடிச்சது எனக்கு. ரொம்ப நாளுக்கு அப்புரம், தமிழ் கதைகள் படித்தது உங்களால் தான் அக்கா. அதற்கும் நன்றி. மன்னிக்கவும் எல்லாம் இந்த பதிவிலய சொல்லரென்னு.// கதை குறித்த பாராட்டுக்கும் நன்றி தங்கையே. என்னை பேர் சொல்லியே அழைக்கலாம். மன்னிப்பெல்லாம் கேக்க கூடாது. அப்புறம் காங்கோ ஜூஸ் அனுப்பிடுவேன் ;)

குறிப்புகள்,கதைகள் குறித்த பாராட்டு,வருகைக்கு நன்றி சந்திரா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஜெய், இதுவும் ஒரு இன்ஸ்டண்ட் குழம்பு மாதிரி தான் பா. பொருள் செலவும் இல்லை. கேஸ் செலவும் இல்லை. டக்குன்னு பண்ணிடலாம்.

//காலையில பருப்பு வேக வைக்க டைம் இல்லைனா இத சட்டு புட்டுனு செஞ்சு பேர் வாங்கிப்போடலாம் அப்படிதானே என்ன நாஞ்சொல்றது;-)// முன்னாள் நாட்டாமை பேச்சு தப்பா இருக்குமா என்ன? சரியாத்தான் சொல்றீங்க ;)

//அந்த தோசத்தட்ட அப்படியே இந்தால நகுத்துங்க பாக்கலாம்;-) // தட்டை நகுத்த பார்த்து ஊடால யாராச்சும் வந்தா உங்க வாய்க்கு கிடைக்காம போய்டும் ஜெய். நேர்ல பார்த்தோம்னா சுட சுட செய்து போட்டுடறேன்.

ஸ்டார்களை அள்ளி வழங்கி வாழ்த்திய வள்ளலுக்கு என் இதய பூர்வ நன்றிகள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹலீமா, //தட்டைப்பார்த்தவுடனே அப்படியே தூக்கிட்டுப்போய் சாப்பிட்டுரமாட்டமான்னு நினைக்கிறாப்லெ அருமையான குறிப்பா கொடுக்கிறீங்க!// தட்டெல்லாம் தரமாட்டோம். இது என்ன பெரிய தோசை. காய்ஞ்சு போயிருக்கும். நேர்ல வாங்க ப்ரெஷ்ஷா நெய் போட்டு மொறு மொறுன்னு சூடு குறையாம விருந்தே வைக்கறேன்.

வந்துட்டே இருக்கு வெறி. வருகைக்கும்,பதிவிற்கும் நன்றி தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரொம்ப ஈஸியான குறிப்பு. சீக்கரம் செய்து பாத்துட்டு சொல்றேன். ரெண்டு வாரமாக கதையரசி சமயல் பக்கம் விஜயம், கலக்குங்க.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

அனு, ஈசியான குறிப்பு தான் பா. செய்து பாருங்க. எத்தனை நாள் தான் பென்னை பிடிச்சுட்டு இருக்கறது, அதான் ஒரு மாறுதலுக்கு கரண்டியை கையில் எடுத்தாச்சு ;) பதிவிற்கும்,வருகைக்கும் நன்றி பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பூ பொட்டுக்கடலை குழம்பு செய்து சூடா ரெண்டு தோசையை உள்ளே தள்ளிட்டு சப்புக் கொட்டிட்டே பின்னூட்டம் தட்ட வந்துட்டேன் :). எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. நன்றி கல்பூ! காங்கோ ஜூஸ் குறிப்பு எப்போ வரும் :). நீங்க செய்த் ரசகுல்லாவை அந்த பாத்திரத்தோட பார்சல் அனுப்பிடுங்க. ரசகுல்லா எல்லாம் செய்யற அளவுக்கு பொறுமை லேது :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி, நீங்க யாரு? எப்பவும் எல்லாரையும் விட ஒரு படி மேலே தானே. பாருங்க முடிச்சுட்டு வந்து சொல்றீங்க. ரொம்ப சந்தோஷம் கவி. நன்றி :) காங்கோ ஜூஸ் குறிப்புக்காக ஆவலா காத்திருக்க மாதிரி தெரியுதே.. இங்கே காங்கோ ஜூசுக்கு ஏக கிராக்கி. அதனால் பொருட்கள் தட்டுப்பாடு. மலைப்பாம்புக்கு இப்பதான் ஆர்டர் தந்திருக்கேன் கவி. வந்ததும் குறிப்பு அனுப்பிடறேன் ;) ரசகுல்லா பார்சல் தானே கண்டிப்பா அனுப்பி வைக்கறேன் பா. இன்னைக்கு செய்வேன் ப்ரெஷ்ஷா அனுப்பறேன். //ரசகுல்லா எல்லாம் செய்யற அளவுக்கு பொறுமை லேது :)// கவி, சுடுதண்ணி பார்ட்டி நானே பண்ணும் போது நீங்க இன்னும் சூப்பரா பண்ணுவீங்க கவி. செய்து பாருங்க. ஷீராவை விட இதை ஈசியா செய்துடலாம். காபி போடும் நேரம் தான் ஆகும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரொம்ப ஈஸியான குறிப்பு, செய்து பாத்துட்டு சொல்றேன். இரண்டு வரமாக கதையரசி சமையல் பக்கம் விஜயம், கலக்குங்க.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

நொடியில் ரெடி குழம்பு உன் எழுத்தை போல மணக்குதே பொட்டுகடலை குழம்பு .பண்ணிய விதமும் படைத்த (presentation ) விதமும் சூப்பர்.. சிம்பிள் அண்ட் ஈஸி டிஷ்!!வேலைக்கு செல்பவர்களுக்கு கண்டிப்பாக பயன்படும். வாழ்த்துக்கள்.

(உன் பூங்கொத்து கிடைச்சுது !!ப்றேசெர்வ் பண்ணி வெச்சாச்சு !!காங்கோவின் அருமையான பூக்களிடம் என் அர்ப்பணம் சொல்லிடுப்பா )

கல்ப்ஸ்,
வாவ்.....தோசையும்,பொட்டுக்கடலை குழம்பும் செமயா இருக்கு.அழகான படங்கள்.செய்முறையும் நல்லா ஈஸியா இருக்கு.விரைவில் செய்துட்டு உங்களுக்கு சொல்றேன்.அருமையான குறிப்புக்கு வாழ்த்துக்கள் கல்ப்ஸ்.

கல்ப்ஸ் என்ன குறிப்பா கொடுத்து அசத்துறீங்க.ரொம்ப ஈஸியா இருக்கு.நாளைக்கே செய்து பார்த்துட்டு சொல்றேன்.அந்த தோசை ரொம்ப அழகு.நான் உங்க வீட்டிற்கு வரேன் அதே மாதிரி தோசை செய்து கொடுக்கணும்.ஓகே வா..அப்புறம் உங்க பேச்சு டூ கா..அந்த போட்டோ தட்டோட எடுத்துக்கோ என்று சொல்லுது.இன்னும் வித்தியாசமா கொடுக்க என் வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

அனு, ரெண்டு முறை பதிவு போட்டு நீங்க தான் கலக்கறீங்க;) டபுள் நன்றிகள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உத்தூ,//நொடியில் ரெடி குழம்பு உன் எழுத்தை போல மணக்குதே பொட்டுகடலை குழம்பு .பண்ணிய விதமும் படைத்த (presentation ) விதமும் சூப்பர்...// அதுக்குள்ள செய்து வாசனை பிடிச்சாச்சா? பலே..பலே.. உண்மைதான் உத்தூ. வேலைக்கு போறவங்களுக்கு சட்னு கை கொடுக்கும் குழம்பு. உன் சார்பா காங்கோ பூக்கள் கிட்ட அர்ப்பணத்தை அர்ப்பணிச்சுட்டேன்.

வருகைக்கும்,வாழ்த்திற்கும் தேங்க்ஸ் உத்தூ :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு, //வாவ்.....தோசையும்,பொட்டுக்கடலை குழம்பும் செமயா இருக்கு.// தோசை தான் கொஞ்சம் கலர் கம்மியாய்ருச்சேன்னு பீலிங்ல இருந்தேன். உங்களோட பதிவுகள் குறையை தீர்த்துருச்சி. விரைவில் செய்யக்கூடிய விரைவான குறிப்பை விரைவாக செய்துட்டு விரைவாக சொல்லுங்க. வாழ்த்துக்களுக்கு நன்றி அன்பு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மீனா, அப்ப அப்ப சீசன்ல இது மாதிரி ஆசைகள் வரும். அதான் தொடர்ச்சியான குறிப்புகள். இதுவும் ஒரு சின்ன ஆசை. //நான் உங்க வீட்டிற்கு வரேன் அதே மாதிரி தோசை செய்து கொடுக்கணும்.ஓகே வா..அப்புறம் உங்க பேச்சு டூ கா..அந்த போட்டோ தட்டோட எடுத்துக்கோ என்று சொல்லுது.// வீட்டுக்கு தானே வாங்க. வாங்க. இந்தியா வரும்போது வாங்க. இதை விட சூப்பர் தோசை சுட சுட செய்து தந்துடறேன். போட்டோல இருக்க தட்டையும் எடுத்துக்கோங்க. லக்‌ஷ் குட்டிக்காக தான் இத்தனை சலுகையும் ;) வாழ்த்திற்கும்,வரவிற்கும் நன்றி மீனா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வினோ, எங்கேடா நம்ம வினோவை காணோமேன்னு பார்த்தேன்.//பொட்டுக்கடலையை மட்டும் பொடி பண்ணி வைச்சுக்கிட்டா ரொம்ப சுலபமா செய்துடலாம் போல// மறுநாள் காலை செய்வதாக இருந்தால் முந்தின நாள் பொடி பண்ணி வச்சுக்கலாம். பொடி பண்ணி வச்சு அதிக நாள் ஆனது மக்கின வாசனை வரும் பா. ப்ரெஷ்ஷா பொடி பண்ணி செய்தா டேஸ்டே தனி தான். செய்து பார்த்துட்டு சொல்லு வினோ. பதிவிற்கும்,வருகைக்கும் நன்றி பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் காலையில இட்லிக்கு பொட்டுக்கடலை குழம்பு செய்து சாப்பிட்டாச்சு ரொம்ப ரொம்ப நல்லாருந்துது பா,நொடியில் ரெடின்னுதான் சொல்லனும் அத்தனை சுலபம் இன்னும் இதுபோன்ற குறிப்புகளை அள்ளி தெளியுங்கள் எங்களுக்கு :-)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்பு கலக்கலான குறிப்பு,கண்டிப்பா செய்வேன் இப்போல அறுசுவை புன்னியத்துல புதுசு புதுசா ஈசியானதா சமைக்கமுடிது.ரொம்ப நன்றி கல்ப்ஸ் கா.(எதுக்கு தெரியுமா இந்த கா(அக்கா) அந்த தோசையா எனக்கே எனக்கு தர தான் கண்டிப்பா தரனும்)

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

கல்பு கலக்கலான குறிப்பு,கண்டிப்பா செய்வேன் இப்போல அறுசுவை புன்னியத்துல புதுசு புதுசா ஈசியானதா சமைக்கமுடிது.ரொம்ப நன்றி கல்ப்ஸ் கா.(எதுக்கு தெரியுமா இந்த கா(அக்கா) அந்த தோசையா எனக்கே எனக்கு தர தான் கண்டிப்பா தரனும்)

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!