உப்புமா கொழுக்கட்டை

தேதி: March 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (9 votes)

 

புழுங்கல் அரிசி - அரை கிலோ
கடலை பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 100 கிராம்
உளுத்தம் பருப்பு - 50 கிராம் + ஒரு மேசைக்கரண்டி
பயத்தம் பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 20
பெரிய வெங்காயம் - 2
உப்பு - அரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - 3 குண்டு மணி அளவு
எண்ணெய் - கால் கப்


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அதைப் போலவே பருப்பு வகைகள் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
கிரைண்டரில் ஊற வைத்த அரிசி, பருப்பு வகைகள், உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத்துண்டுகள் போட்டு தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்துக் கொள்ளவும். அதில் நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
அதில் அரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி அதனுடன் தேங்காய் துருவலை போட்டு நன்கு கிளறி விடவும்.
தேவைப்பட்டால் அதில் எண்ணெய் சேர்த்து கிளறவும். 2 நிமிடம் கிளறிய பிறகு இறக்கி வைத்து விடவும்.
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். இட்லி தட்டில் துணியை போட்டு அதில் இந்த கலவையை எடுத்து, கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இட்லி தட்டை இட்லி பானையில் வைத்து அதன் மேல் வேர்வை தண்ணி விழாமல் இருக்க மேலே ஒரு துணியை போட்டு மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்கவும்.
வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும் இது ஒரு மாலை நேர சிற்றுண்டி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கோவையில இதுக்கு வேற பேர் சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்..இதுல தேங்காய் கீற்று போட்டு செய்வாங்க..எனக்கு ரொம்ப பிடிக்கும் . இப்போ உங்கமூலமா எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சிகிட்டேன் ரொம்ப நன்றி;-)

Don't Worry Be Happy.

முத்துலெஷ்மி,

ரொம்ப நல்லா இருக்கு.எங்க அம்மா கூட இந்த டிஷ் செஞ்சு கொடுத்திருக்காங்க.எனக்கும் ரொம்பே பிடிக்கும்.எல்லா குறிப்புகளையும் பார்த்து பார்த்து சாப்பிடனும் நு ஆசையா இருக்கு.ஒரு பார்சல் அனுப்புங்க.

உங்க குறிப்பு எளிமையா இருக்கு.வாழ்த்துக்கள்

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

முத்துலஷ்மி, புழுங்கலரிசி,பருப்புகளை கலந்து செய்த முறை சுவையாகவே இருக்கும் என்று நம்புகிறேன். நிச்சயம் செய்து பார்ப்பேன். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு முத்துலஷ்மி,

ஆவியில் வேக வைக்கும் உணவுகள் எனக்கு எப்பவுமே பிடிக்கும்.

உங்கள் குறிப்பு நன்றாக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

ரொம்ப அழகா இருக்குங்க படங்களுடன். எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி.

அன்புடன்,

வனிதா சதிஷ்குமார்

உப்புமா கொழுக்கட்டை பார்க்கவே சாப்பிட தூண்டுது வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.