பெசரட் ஓட்ஸ் அடை

தேதி: March 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (4 votes)

 

முழு பாசிப்பயறு - 2 கப்
ஓட்ஸ் - 1 கப்
மைதாமாவு - 1 கப்
பச்சரிசி மாவு - 1/2 கப்
சிவப்பு மிளகாய் - 12
சீரகம் - 2 டீஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
பெரிய வெங்காயம் - 2
தேங்காய் - 1 மூடி
உப்பு - 1.5 டீஸ்பூன்
நல்லெண்ணெய்/நெய் - தேவையான அளவு


 

பாசிப்பயறை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு, மாவாகத் திரித்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் சிவப்பு மிளகாய், சீரகம், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு, பவுடராக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயை பூவாகத் துருவிக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
ஊறிய பாசிப் பயறை, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். ரொம்பவும் நைசாக வேண்டாம். முழுப் பருப்பாக இல்லாமல் இருந்தால் போதும்.
அரைத்த பாசிப் பயறு, மிளகாய் விழுது, நறுக்கிய வெங்காயம், தேங்காய்ப்பூ, ஓட்ஸ் பவுடர், மைதாமாவு, பச்சரிசி மாவு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகப் போட்டு, கரைக்கவும்.
தோசைக் கல்லை காய வைத்து, அடைகளாக சுட்டு எடுக்கவும்.
அடை வேகும்போது, நல்லெண்ணெய் அல்லது நெய்யை மேலே ஒரு ஸ்பூன் ஊற்றி எடுக்கவும்.
இது அடை போல மொறு மொறுவென்று இருக்காது. ஸாஃப்ட் ஆக இருக்கும்.
தொட்டுக் கொள்ள எதுவும் தேவைப்படாது. விரும்பினால் தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு சீதாம்மா,

பச்சை பயிறில் பச்சரிசி சேர்த்து பெசரட் செய்துள்ளேன். அதோடு நீங்கள் மைதாவும்,ஓட்சும் சேர்த்து டேஸ்டை வித்யாசப்படுத்தி காட்டியுள்ளீர்கள். கிராம்பு சேர்த்திருப்பதும் புதுமையாக உள்ளது. பெரியோர் முதல் சிறியோர் வரை கட்டாயம் சாப்பிட வேண்டிய சத்தான சிற்றுண்டி. செய்து விட்டு சொல்கிறேன். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சீதா மேடம், மைதா இல்லாமல் செய்ய முடியுமா?

அன்பு கல்பனா,

வீட்டில் ஓட்ஸ், பாசிப்பயறு ரெண்டுமே இருந்தது. கிராம்பும் ஏலக்காயும் ஜீரணத்துக்காக சேர்த்தேன். டேஸ்ட் நல்லா இருந்தது. உடனே இங்கே பதிவு செய்து வைத்துக் கொண்டேன்.

பாராட்டுக்களுக்கு நன்றி.

அன்பு வாணி,

மைதா இல்லாமலும் செய்யலாம். உங்களுக்குப் பிடிச்ச மாதிரி, ரவை கூட சேத்துக்கலாம். டேஸ்டில் எதுவும் வித்தியாசப்படாது. செய்து பார்த்து, சொல்லுங்க.

வருகைக்கும், பதிவுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி