அரிசி கஞ்சி

எங்கள் பாப்பாவிற்கு 5 மாதம் முடிய போகிறது. கேரட் ஜூஸ் குடிக்கிறாள். ராகி கூழ் கொடுத்தோம். தீடிரென்று கொப்புளங்கள்
வந்ததால் ராகி சூடு என்று நிறுத்தி விட்டோம். இப்போழுது அரிசி கஞ்சி போல் செய்து கொடுக்கிறோம்.
அது குறுனை குறுனையாக இருப்பதால் சாப்பிட மறுக்கிறாள். வேறு எப்படி செய்து கொடுப்பது? ராகி சூடா?

இந்து, ராகி சூடு கிடையாது. குளிர்ச்சி தான். நீங்க ராகியை கஞ்சி காய்ச்சி கொடுப்பதாக இருந்தால் வெறும் வாணயில் லேசாக வறுத்து பின்பு தண்ணீரில் ஊற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து பால் பிழிந்து கஞ்சி காய்ச்சி கொடுங்கள். ஈரம் பண்ணாது. குழந்தைகளுக்கு மிகச்சரியான ஊட்டசத்து பானம். ருசியும் அபாரமாக இருக்கும். கொழகொழப்பு பிடிக்கவில்லையென்றால் ராகி ஊற வைக்கும் போதே புழுங்கலரிசி சிறிதளவு சேர்த்து ஊறவைத்து பால் பிழிந்து கொடுங்கள். குழந்தை குடிப்பாள். உடல் சூட்டின் காரணமாக கொப்புளங்கள் வந்திருக்கும். உச்சந்தலையில் அவ்வபோது எண்ணெய் வையுங்கள். குழந்தையின் கால் பாதத்திலும் எண்ணெய் தேய்த்து விடுங்கள். காய்கறிகள் கலந்து வேக வைத்து துளி மிளகு தூள் சேர்த்து சூப் போலவும் செய்து கொடுங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தோழி ,1 கப் அரிசியை வறுத்து மிக்ஸ்யில் பொடி செய்து, 1 ஸ்பூனுக்கு அரைகப் நீருக்கும் குறைவாக விட்டு காய்ச்சி இறுதியில் விரும்பினால் சிறிது பால் சேர்த்து உப்பு அல்லது சர்க்கரை கலந்து கொடுக்கவும்.இப்போ எல்லாமே பேஸ்டா தான் தரனும்.பாவம்,சின்ன பாப்பாக்கு அதெல்லாம் சாப்பிட முடியாதுங்க,போகப்போக குருணையாக தரலாம்.

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

மிக்க நன்றி கல்பனா & பாத்திமா. ராகியை அரைத்து அந்த மாவை 1 மணி நேரம் ஊற வைத்தால் மேலே பால் போல்
படியும். அதை எடுத்து நன்றாக காய்ச்சி கூழ் போல் செய்து கொடுக்கிறேன். நன்றாக சாப்பிடுகிறாள். ஒரு நாளைக்கு 2
தடவை இது போல் கொடுக்கலாமா? ஜீரணம் ஆகுமா? அளவு எதாவது இருக்கிறதா? கல்பனா நீங்கள் சொன்னது போல்
எண்ணைய் தடவுகிறேன்.

இந்து,//ராகியை அரைத்து அந்த மாவை 1 மணி நேரம் ஊற வைத்தால் மேலே பால் போல் படியும்.// ராகியை நீங்க ஊற வைக்காமல் அரைத்து மாவாக ஊற வைத்தீர்களா? இதை விட ராகியை அரைக்காமல் வறுத்துவிட்டு ஊற வைத்து பால் பிழிந்து கஞ்சியாக காய்ச்சி கொடுங்கள். எளிதில் ஜீரணமாகும். ஒருநாளைக்கு இருவேளை தரலாம். அனைத்தையும் வடிகட்டி பிழிந்து விடுவதால் ஜீரண பிரச்சனை இருக்காது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்