pls help me

நான் இப்பொழுது 11 வாரம் கர்ப்பமாக இருக்கிறேன். நேற்று இரவு நடக்கும் போது வலது புற மேல் வயிற்றில் இருந்து கீழ் நோக்கி ஒரு அசைவு போன்று தெரிந்தது. எதோ உள்ளேயுள்ள உறுப்பு அசைத்தார் போன்று இருந்தது. (மேலிருந்து ஒரு பந்து உருளுவது போன்று ஒரு வினாடி இருந்து) கொஞ்சம் பயமாக இருக்கிறது.

கவலைப்படாதீன்ங, எனக்கு இதைப்பத்தி எதுவும் தெரியாது. யாராவது தெரின்ஞவன்ங சொல்லுன்ஙப்பா. Plz

Krishna

அனு, தாயான உங்களுக்கு என் வாழ்த்துக்கள் :) முதல் முறை கர்ப்பம் தரிப்பவர்களுக்கு இந்த பயம் இருக்க தான் செய்யும். பயம் வேண்டாம். 2 மாதங்கள் 3 வாரங்களே ஆகியிருக்கும். இப்பொழுதே அசைவெல்லாம் தெரியாது. நீங்கள் வீணாக குழப்பமும்,கவலையும் அடைய வேண்டாம். ரெகுலர் செக்கப்பிற்கு செல்லும் போது உங்களுடைய மருத்துவருக்கு உங்களின் உடல்நிலை தெரிந்திருக்கும். எதுவாக இருந்தாலும் அவர் சொல்லுவார். இப்போதைக்கு மனதை சந்தோஷமாக வைத்துக் கொண்டு சத்தான ஆகாரங்களை உண்டு உங்கள் வீட்டின் புதுவரவை வரவேற்க ஆயத்தமாகுங்கள். மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்