த்ரெட்டிங்

தோழிகளே, எனக்கு மிக மிக அடர்த்தியான புருவம். த்ரெட்டிங் செய்தால் ஒரு வாரம் கூட தாங்க மாட்டேன் என்கிறது. வீட்டிலிருந்த படியே புருவங்களை ஷேப் செய்து கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா?

அதற்கான டூல்ஸ் இருக்குப்பா.. நீங்க கடைகளில் தேடி பாருங்க..முதலில் பார்லர் மாதிரி பெர்பெக்டா வராது.பழகியவுடன் நல்லா வரும்.. அதற்கென டெம்ப்ளேட் இருக்கு. அதையும் யூஸ் பண்ணுங்க. நீங்களே இனி உங்களுடைய புருவத்தை அழகாக்கி கொள்ளலாம்.. ட்ரை பண்ணுங்க.

"எல்லாம் நன்மைக்கே"

ஹாய் தோழி பூர்ணிமா... புருவத்தை நாமே வீட்டிலிருந்த படியே கச்சிதமாக வைத்துக்கொள்ள "ப்ளக்கர்" பயன்படுத்துங்கள். எனக்கும் கூட அதிகமான முடிவளர்ச்சி காரணமாக த்ரெட்டிங் செய்த மூன்றாம் நாளே முளைக்க ஆரம்பித்துவிடும். ஃபேன்ஸி ஸ்டோரில் 25 ரூபாய்க்கு பிளக்கர் விற்பார்கள். அதை பயன்படுத்தி த்ரெட்டிங் செய்த பிபு இரண்டு மாதங்கள் வரை நாமே திருத்திக்கொள்ளலாம் ப. நான் ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் பார்லரில் த்ரெட்டிங் செய்துகொள்வேன். முதலில் சிரமமாக இருக்கும். பின்பு பழக பழக சரியாகிவிடும். "ப்ளக்கர்" சிறிய இடுக்கி போல இருக்கும். அதிலேயே நிறைய வகைகள் இருக்கு. பயன்படுத்திப் பார்த்து கன்வீனியென்ட் மாடலாக செலெக்ட் செய்து வாங்குங்கள்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

பாக்யலஷ்மி, ஆனந்தபிரியா ரொம்ப தேங்ஸ் பா. எனக்கு மிக பயனுள்ள தகவல் தந்துள்ளீர்கள்.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

நானும் ப்ளக்கர் மூலம்மாக தான் ஃப்ளக் செய்வேன்பா. நான் இந்தியால இருக்கும் போது அடிக்கடி த்ரெட்டிங் செய்வேன், இப்பம் இங்க வந்து அதற்க்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. அதான்ல் நான் வீட்டிலையே செய்து கொள்வேன். முதலில் கொஞ்சம் கடினமாக இருந்து இப்போது பழகி விட்டதுபா. நீங்களும் ட்ரை பன்னி பாருங்க.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக நன்றி சோனியா.

"என்னை சந்திப்பவர்கள் வெற்றி பெறாமல் போவதில்லை" - தோல்வி.

hi soniya.. how u doing? its'been a long gap.. anyways which one is best for threading at home pa? is it convenient? and pls tell me the product name..

mahe

எனக்கும் ,உங்களை போல, புருவம் அடர்த்தியாக
இருக்கனும்னு ரொம்ப ஆசை,,,,,,,ஆனால் புருவம் மிகவும் அடர்தி கம்மியாக உள்ளது,,,தினமும் விளக்கென்னை போடுறேன்,,,
புருவம் வளரவே இல்ல,,,வேற எதும் வழி இருந்தா சொல்லுங்க,,,,,,,,

மேலும் சில பதிவுகள்