விரல் சூப்பும் பழக்கம் - நிறுத்துவது எப்படி?

என் மகளுக்கு 2 வயதாகிறது. இன்னும் தூங்கும் போது விரல் சூப்புகிறாள். சிறு வயதில் எனக்கு இந்த பழக்கம் இருந்தது (6 வயது வரை). இதனால் அவள் கட்டை விரலில் கட்டை போல் உள்ளது. 6 மாதம் வரை எல்லா நேரத்திலும் விரல் போட்டபடி தான். அவளுக்கு புரிய தொடங்கியபின் சொல்லி சொல்லி இப்போது தூங்காத நேரத்தில் விரல் போடுவதில்லை. போட்டாலும் distract செய்து mind மாற்றி விடுவேன். ஆனால் தூங்குவதற்கு விரல் போட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் கஷ்டம் தான். தூங்கியபின் விரலை எடுத்து விடுவேன். இடையில் பசியெடுத்தால் மீண்டும் சூப்ப தொடங்குவாள். இதனால் அதிகாலை 5 or 6 மணிக்கு தூங்கும் போது பால் கொடுப்பேன் (Bottle-il). விரல் சூப்பும் பழக்கத்தை மாற்றுவது எப்படி? தூங்கும் போது பால் கொடுப்பது சரியா? எனது சந்தேகங்களுக்கு விடை கூறுங்கள் Please....

மேலும் சில பதிவுகள்