ரவா டோக்ளா

தேதி: March 30, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

ரவை - 1 கப்
தயிர் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுப் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
ஈனோ(ரெகுலர்) - 1 சிறிய பாக்


 

ரவையில் தயிர் கலந்து, அரை மணி நேரம் ஊற விடவும்.
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி, உப்பும் சேர்த்து, இந்தக் கலவையில் கலக்கவும்.
அடுப்பில் குக்கர் வைத்து, தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும்.
ஒரு தட்டில் எண்ணெய் தடவி தயாராக எடுத்து வைக்கவும்.
ரவைக் கலவையில் ஈனோ கலக்கவும்.
தயிர் பதத்தில் இந்தக் கலவை இருக்க வேண்டும். தேவைப்பட்டால், தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை, எண்ணெய் தடவிய தட்டில் ஊற்றவும்.
மிளகுத் தூளையும், மிளகாய்த் தூளையும், பரவலாகத் தூவவும்.
குக்கருக்குள் இந்தப் பாத்திரத்தை வைக்கவும்.
கலவையில் தண்ணீர் பட்டு விடாமல், அடியில் இன்னொரு பாத்திரத்தை வைத்து, அதன் மேல் இந்தக் கலவை இருக்கும் தட்டை வைக்கவும்.
குக்கரில் வெயிட் போட வேண்டாம். ஒரு தம்ளரை வைத்து, குக்கரின் மேல் வெயிட் போடும் இடத்தில், மூடி வைக்கவும்.
15 - 20 நிமிடங்கள் ஆனதும் அடுப்பை அணைக்கவும்.
பாத்திரத்தை வெளியில் எடுத்து, ஓரங்களில் சிறிய ஸ்பூன் அல்லது கத்தியால் நெகிழ்த்தி விட்டு, இன்னொரு தட்டில் எடுத்து வைக்கவும்.
விருப்பப் பட்டால், இதன் மேல் தாளித்துக் கொட்டலாம்.
சிறிய துண்டுகளாக, விருப்பப் பட்ட வடிவத்தில் கட் செய்து, பரிமாறவும்.


அதிகமாக எண்ணெய் தேவைப்படாது. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, புதினா சட்னி போன்றவை நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

எனக்கு டோக்ளா செய்ய ஆசையாக இருக்கிறது ஈனோவுக்கு பதிலாக பேக்கிங் சோடா சேர்க்க ஏலுமா?சுவை மாருபடுமா?பேக்கிங் சோடா கலந்த உடன் அவிக்க வேண்டுமா?கொஞ நேரம் வைக்க வேண்டுமா??ரைஸ் குக்கரில் அவிக்க முடியுமா?

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

எனக்கு டோக்ளா செய்ய ஆசையாக இருக்கிறது ஈனோவுக்கு பதிலாக பேக்கிங் சோடா சேர்க்க ஏலுமா?சுவை மாருபடுமா?பேக்கிங் சோடா கலந்த உடன் அவிக்க வேண்டுமா?கொஞ நேரம் வைக்க வேண்டுமா??ரைஸ் குக்கரில் அவிக்க முடியுமா?

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

அன்பு ரிஸானா,

ஈனோ சேர்த்து செய்யும் முறை மட்டும்தான் எனக்குத் தெரியும். ஈனோ சேர்ப்பது, மாவு ஸாஃப்ட் ஆவதற்குதான். அதனால் பேக்கிங் சோடா கலந்து செய்ய முடியும்னு நினைக்கிறேன். பேக்கிங் சோடாவை நன்றாகக் கலந்து, பின் செய்து பாருங்க.

ரைஸ் குக்கரில் செய்யலாம், அல்லது சாதாரணமாக, இட்லி தட்டின் மேல் இன்னொரு பாத்திரத்தில் மாவை ஊற்றியும் வேக வைக்கலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாம்மா, எங்களை போன்றவர்களையும் கருத்தில் கொண்டு எளிதில் கிடைக்க கூடிய பொருட்களை வைத்து மிக எளிமையாக புரியும்படி ஒரு சத்தான குறிப்பை தந்தீர்கள். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு கல்பனா,

எளிதில் செய்யலாம் இந்தக் குறிப்பை. ரவா உப்புமா அளவுக்கு எண்ணெய் தேவைப்படாது.

வாழ்த்துக்களுக்கு நன்றி

அன்புடன்

சீதாலஷ்மி