உருளைக்கிழங்கு பலாக்கொட்டை கறி

தேதி: August 4, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு [மீடியம்]- 5
பலாக்கொட்டை- 1 கப்
தக்காளி- 2 கப் [மிகவும் பொடியாக அரிந்தது]
மிளகாய்த்தூள்- அரை டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-2
இஞ்சித்துருவல்- 1 டீஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
காயம்- 1 டீஸ்பூன்
பருப்பு- 3 டேபிள்ஸ்பூன்[வேகவைத்தது]
பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை- கப்
பொடியாக அரிந்த கீரை- 2 கப்
வெங்காயம்- 1 கப் [பொடியாக அரிந்தது]
எண்ணெய்- 3 டேபிள்ஸ்பூன்
போதுமான உப்பு
மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்


 

• இஞ்சியையும் பச்சை மிளகாயையும் விழுதாக அரைக்கவும்.
• பலாக்கொட்டையை தோல் நீக்கி வேகவைத்து பாதியாகத் துண்டுகள் போடவும்.
• உருளைக்கிழங்குகளை வேக வைத்து துண்டுகள் போடவும்.
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி எண்ணெயை ஊற்றவும்.
• சீரகத்தைப் போட்டு அது வெடித்ததும் வெங்காயம், மஞ்சள் தூள், காயம், அரைத்த மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
• அதன் பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
• கீரையை பருப்பு, உப்பு, மிளகாய்த்தூளுடன் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
• இப்போது வெந்த காய்களை போதுமான உப்புடன் சேர்த்து சில நிமிடங்கள் வேக வைக்கவும்.
• இறுதியில் கொத்தமல்லியைச் சேர்த்துக் கிளறி சில நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.


மேலும் சில குறிப்புகள்