தக்காளி கருணைக்கிழங்கு மசியல்

தேதி: April 2, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தக்காளி - 2
கருணைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 1
மிளகாய்ப் பொடி - 1 - 1.5 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி - 1 சிறிய துண்டு
கருவேப்பிலை, பச்சை கொத்துமல்லி - 1 கைப்பிடி அளவு
உப்பு - சுவைக்கேற்ப
நல்லெண்ணெய்/ரீஃபைண்ட் ஆயில் - 3 டேபிள் ஸ்பூன்
தாளிக்க - கடுகு, உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்


 

பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரிந்து கொள்ளவும்.
கருணைக்கிழங்கை, குக்கரில் குழைவாக வேக வைத்து, எடுத்து வைக்கவும்.
வெந்த கிழங்கை, தோல் உரித்து, மசித்து வைக்கவும்.
தக்காளியை சிறு துண்டுகளாக்கி, இஞ்சி, கருவேப்பிலை,கொத்துமல்லி சேர்த்து, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து,1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்.
இதிலேயே நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, வதக்கவும்.
வதங்கிய வெங்காயத்தில், மிளகாய்பொடி, மஞ்சள் பொடி, மல்லிப் பொடி, பெருங்காயப் பவுடர் சேர்த்து, 1 நிமிடத்துக்குக் கிளறவும்.
பின் அரைத்த தக்காளி விழுதை, இதில் ஊற்றி, மிதமான தீயில், 1 நிமிடம் கிளறவும்.
பிறகு மசித்த கருணைக்கிழங்கையும் உப்பையும் இதில் சேர்த்து, தீயைக் குறைவாக வைத்து, நன்றாகக் கிளறவும்.
மீதமிருக்கும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை, கொஞ்சம் கொஞ்சமாக, சேர்த்துக் கிளறவும்.
சுவையான தக்காளி கருணைக்கிழங்கு மசியல் தயார்.
ரசம் சாதம், மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்