சேப்பங்கிழங்கு ஃப்ரை

தேதி: April 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (8 votes)

 

சேப்பங்கிழங்கு - 4
பூண்டு - 6 அல்லது 7 பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பூண்டு பற்களை தட்டி வைத்துக் கொள்ளவும்.
சேப்பங்கிழங்கை அலசி விட்டு, மூழ்கும் அளவு தண்ணீரில் வேக வைக்கவும். சேப்பங்கிழங்கு வெந்ததை முட்கரண்டியால் குத்தி பார்த்து உறுதி செய்து கொள்ளவும்.
பிறகு கிழங்குகளை தோல் நீக்கிவிட்டு, சிறு வில்லைகளாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூளை சேர்க்கவும்.
அதனுடன் தட்டி வைத்த பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் கிழங்கு வில்லைகளை சேர்த்து, பூண்டு தூள் கலவையில் நன்கு பிரட்டி விடவும்.
இதனுடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு ஃப்ரை செய்யவும்.
இரு பக்கங்களும் நன்கு ஃப்ரையானதும், உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும்
சுவையான சேப்பங்கிழங்கு பூண்டு ஃப்ரை தயார். எளிதில் செய்துவிடக்கூடியது இந்த ரெசிப்பி. சாம்பார் சாதம், ரசம் சாதத்துக்கு நன்றாக பொருந்தும்.

விரும்பினால் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கலாம். பூண்டு தான் இதன் ஸ்பெஷல். பூண்டின் சுவை பிடித்தால் 10 பல் பூண்டு வரை கூட சேர்க்கலாம். பூண்டை தோலுடன் தட்டி, சேர்த்தால் இன்னும் மணமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்த்ததும் கண்டு பிடிச்சுட்டனே நீங்கன்னு :) ரொம்ப அழகா இருக்கு படங்கள். தெளிவான சுவையான குறிப்பு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ஹர்ஷா,

சேப்பங்கிழங்கை டீஃப் ஃப்ரைதான் செய்திருக்கேன். இது போல ஷாலோ ஃப்ரை செய்ததில்லை. நீங்க சொல்லியிருப்பது போல பூண்டு சேர்த்து செய்து பார்க்கிறேன்.

எப்பவும் போலவே படங்கள், விளக்கங்கள் அருமை.

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

எளிமையான சுவையான அழகான குறிப்பு.... வாழ்த்துக்கள் ஹர்ஷா

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

அன்பு, இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன் ஆமா.. பின்னே என்னப்பா... சேனைன்னாவே என்னனு தெரியாத ஊர்ல இருக்கற எங்களை கடுப்பேத்துற மாதிரி இருக்கு ;) சேனைகிழங்கு நல்ல பெருசா அழகா இருக்கு பா. நம்ம ஊர்ல கூட இந்த சைஸ் பார்க்க முடியாதே. எளிமையான,சுவையான குறிப்பு அன்பு. பூண்டு சேர்த்திருக்கறதால டேஸ்டும்,மணமும் நிச்சயம் தூக்கும். வாழ்த்துக்கள் பா. போட்டோலயாச்சும் சேனையை காட்டினீங்களே சந்தோஷம் அன்பு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சூப்பர் குறிப்பு. கல்பனா சொல்ற மாதிரி சேப்பங்கிழங்குநா என்னனே தெரியாத ஊர்ல இருக்கும்போது இப்படி ஒரு குறிப்பு அனுப்பி ஆசைய கிளப்புரிங்க. பரவால இந்த மாதம் ஊருக்கு போய்டுவேன், போயிட்டு செஞ்சு பாக்குறேன். வாழ்த்துக்கள்.....

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

hi harsha
சுவையான அழகான சூப்பர் குறிப்பு.வாழ்த்துக்கள்.nan kai arikkumnu vangi seiyave matten(amma senchu kudutha supera sapiduven) ana unga kuripa partha udane seiyanumnu thonuthu, kandippa try pannidaren harsha.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

அடடா எனக்கு பிடிச்ச சேப்பங்கிழங்கு :)
அழகா அருமையா பூண்டு சேர்த்து கொடுத்திருக்கீங்க சூப்பர் அன்பு. .
எப்பவும் போல படங்கள் மிக அருமை...வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் அன்பு,

போட்டோ பார்த்தவுடனே விருப்ப பட்டியல்ல சேர்த்திட்டேன்.பார்க்கவே

ஆசையாயிருக்கு,அருமையான குறிப்பு அன்பு.இனிமேல் அடிக்கடி எங்க வீட்டில்

சேப்பங்கிழங்கு ப்ரைதான் அன்பு.அற்புதமான குறிப்பிற்கு,பாராட்டுக்கள்+வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

ஹலோ, ஹர்ஷா

உங்கள் ரெசிபியை படத்தில் பார்க்க சூப்பரா இருக்கு செய்து பார்த்து விட்டு உங்களுக்கு கருத்து தெரிவிக்கிறேன்.

நல்ல மொருமொருன்னு இருக்கு! அவ்வளவு எண்ணையையும் குடித்துவிட்டு எப்படி வேறப்பா போஸ் வேற கொடுக்குது பாருங்க! பூண்டு சேர்த்தல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். நீங்கள் சொன்ன மாதிரி பத்து பல் பூண்டு சேர்த்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

படமே சூப்பர், சேப்பங்கிழங்கு இன்னும் வாங்கியது கூட இல்லை...இதுக்காகவே வாங்கி பண்ணிடறேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

சேப்பங்கிழங்கு ஃப்ரை சூப்பர்!

சேப்பங்கிழங்கு, வீட்டில எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். சும்மா சாம்பார்பொடி, கடலைமாவு பிசறி வைத்து ட்ரை ஃப்ரை பண்ணுவேன், நல்லா வரும்.

உங்க மெத்தட் பூண்டு, தனியாத்தூள், மிளகுத்தூள் எல்லாம் சேர்ந்து ரொம்ப அமர்க்களமா இருக்கு! :) போட்டோஸ் எல்லாமும் எப்பவும்போல‌ சூப்பர்! அடுத்தமுறை சேப்பங்கிழங்கு வாங்கியதும் கட்டாயம் செய்துப்பார்த்து சொல்றேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

வனிதா,
பார்த்ததும் கண்டுபிடிச்சுட்டீங்களா? :-) முதலாவதாக பதிவிட்டதற்கு மிக்க நன்றி வனிதா.

சீதாலக்‌ஷ்மி அம்மா,
இது ஷாலோ ஃப்ரை இல்லீங்க.எண்ணெய் கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு. ;-)
இதைவிட கொஞ்சம் குறைவா எண்ணெய் சேர்த்து செய்யலாம்.செய்து பாருங்க.உங்க டீப் ஃப்ரையும் நல்லா இருக்கும் போல இருக்கே! கண்டிப்பா செய்து பார்த்துட வேண்டியது தான்.உங்க பதிவுக்கும்,பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

வெண்ணிலா,
பதிவுக்கு ரொம்ப நன்றி வெண்ணிலா.

கல்ப்ஸ்,
ஓ... நீங்க இதை சேனை கிழங்குனு சொல்வீங்களோ? இது ரொம்ப பெரிசா இருக்காது.ஃபோட்டோவில் தான் பெரிய சைஸில் இருக்கு.கிடைக்கும்போது / ஊருக்கு வரும்போது செய்து பாருங்க.பதிவுக்கு ரொம்ப நன்றி கல்ப்ஸ்.

அனுஜெய்,
ஊருக்கு போனதும் செய்து தர சொல்லி சாப்பிடுங்க.ரொம்ப ஈஸிதான்.உங்க பதிவுக்கு மிக்க நன்றி அனு.

சுமி பாபு,
சேப்பங்கிழங்கு வாங்கி இரண்டு மூன்று நாட்கள் கழித்து செய்தால் கை அரிக்காதுனு சொல்வாங்க.கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க சுமி.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

ஸ்வர்ணா,
பூண்டு சேர்த்தால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.ட்ரை பண்ணி பாருங்க.பதிவுக்கு மிக்க நன்றி ஸ்வர்ணா.

நித்து,
நலமா?விருப்ப பட்டியலில் சேர்த்துட்டீங்களா?அப்போ கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க.உங்க அன்பான பதிவுக்கு மிக்க நன்றி நித்து.

ஹமீதா,
செய்து பார்த்து சொல்லுங்க.உங்க பதிவுக்கு நன்றி.

லாவண்யா,
டயட்னா ஆலிவ் ஆயில் சேர்த்துக்கோங்க.பூண்டு நிறைய சேர்த்தால் இன்னும் நல்லா இருக்கும்.செய்து பார்த்து சொல்லுங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

சுகி,
சேப்பங்கிழங்கு வாங்கி செய்து பாருங்க.கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்.பதிவுக்கு ரொம்ப நன்றி சுகி.

சுஸ்ரீ,
//சும்மா சாம்பார்பொடி, கடலைமாவு பிசறி வைத்து ட்ரை ஃப்ரை பண்ணுவேன், நல்லா வரும்.//
கடலை மாவு சேர்த்து செய்ததில்லை.இது என் அக்கா வீட்டில் செய்யும் முறை.அதான் நானும் செய்து பார்த்தேன்.உங்க முறையிலும் செய்து பார்க்கணும்.உங்க பதிவுக்கு மிக்க நன்றி சுஸ்ரீ.

அன்பரசி, உங்க சேப்பங்கிழங்கு வறுவல் இப்போ தான் செய்தேன். மிகவும் சுவையாய் இருந்தது. எனக்கு பூண்டு பிடிக்கும் அதனால சூப்பரோ சூப்பர். இதுவரை இப்படி செய்ததில்லை. மிகவும் நன்றி சுவையான குறிப்பு கொடுத்ததற்கு.

உமா,
குறிப்பை செய்து பார்த்து பதிவிட்டதற்கு மிக்க நன்றி. குறிப்பு உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.

உங்க சேப்பங்கிழங்கு ஃப்ரை சன்டே லன்ச்க்கு செய்தேன். நல்லா பூண்டு வாசனையுடன், டேஸ்ட் அமர்க்களமா இருந்தது. பசங்களும் விரும்பி சாப்பிட்டாங்க! :) வெறும் பூண்டை மட்டுமே தட்டிப்போட்டு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கில் எங்க மாமியார் ஒரு பொரியல் பண்ணுவாங்க. உங்க ஃப்ரை சாப்பிடும்போது, எனக்கு அந்த டேஸ்ட்டை நினைவுப்படுத்தியது. நன்றி!

//... கடலை மாவு சேர்த்து செய்ததில்லை.இது என் அக்கா வீட்டில் செய்யும் முறை.அதான் நானும் செய்து பார்த்தேன்.உங்க முறையிலும் செய்து பார்க்கணும்...//

நன்றி ஹர்ஷா! கடலைமாவு கலந்து செய்யும்முறை, இந்த லின்க்கில் கொடுத்து இருக்கேன்... உங்களுக்கு முடியும்போது செய்துபார்க்கலாம். :)

http://www.arusuvai.com/tamil/node/22092

அன்புடன்
சுஸ்ரீ

சேப்பங்கிழங்கு ஃப்ரை செய்துட்டீங்களா? மிக்க நன்றி சுஸ்ரீ உங்க பின்னூட்டத்துக்கு.
உங்க குறிப்பை பார்த்தேன். நான் மிளகு தூளும்,பூண்டும் சேர்த்திருக்கேன். நீங்க கடலை மாவு சேர்த்திருக்கீங்க. நான் இதுவரை கடலை மாவு சேர்த்து செய்ததில்லை.நீங்க போட்டிருக்கும் ஃபோட்டோ பார்க்கவே சூப்பரா இருக்கு.வீட்டில் சேப்பங்கிழங்கும் இருக்கு.செய்துட்டு பதிவு போடுறேன்.

அன்பு,இந்த ப்ரை செய்தேன் ...டேஸ்ட் சூப்பர்..எனக்கு பூண்டு பிடிக்கும் அதனால கொஞ்சம் அதிகமா சேர்த்தேன்..வாசனையா இருந்தது .வாழ்த்துக்கள்

Kalai

கலை,
எப்படி இருக்கீங்க?குழந்தை நலமா? சேப்பங்கிழங்கு ஃப்ரை செய்து பார்த்து பின்னூட்டம் தந்ததற்கு மிக்க நன்றி.

நேத்து உங்க சேப்பங்கிழங்கு ஃப்ரை தான் செய்தேன்.... ரொம்ப அருமையா இருந்தது..... சேப்பங்கிழங்கு இவ்வளவு நாளா இப்படி டேஸ்டா வந்ததில்லை..... பூண்டோட காம்பினேஷன் ரொம்ப நல்லா வந்தது..... நன்றி.... :)

தீபா,
சேப்பங்கிழங்கு ஃப்ரை நல்லா வந்ததா? நன்றி.உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோஷம் தீபா.