வெஜ்ஜி கேக்

தேதி: April 5, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (6 votes)

 

ப்ராக்கலி - 1 1/2 கப்
ஸ்வீட் கார்ன் - அரை கப்
வெங்காயம் - 2 மேசைக்கரண்டி
வால்நட் - அரை கப்
ஆல் பர்பஸ் மாவு - அரை கப்
பூண்டு - 2 பல்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - கால் கப்
பால் - அரை கப்
முட்டை - 2
செட்டர் சீஸ் - ஒரு கப்


 

வால்நட், பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். வெண்ணெயை உருக்கி வைக்கவும். ப்ராக்கலி மற்றும் சோளத்தை அவித்து வைக்கவும்.
வேக வைத்த ப்ராக்கலியை பொடியாக நறுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், வால்நட், கார்ன், பூண்டு, உப்பு சேர்த்து கலந்து விடவும்.
ஆல் பர்பஸ் மாவு, முட்டை, பால் மற்றும் வெண்ணெயை ஒன்றாக சேர்த்து கலக்கவும். கட்டியில்லாமல் தனித்தனியே தெரியாமல் ஒன்றாக கலந்தால் மட்டுமே போதும். நுரை வரும் வரையில் அடிக்க தேவையில்லை.
இந்த கலவையை ப்ராக்கலி கார்ன் கலவையில் ஊற்றவும். எல்லவற்றையும் ஒன்றாக கலந்து விடவும்.
அவனை 200 c முற்சூடு செய்யவும். பின்பு பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி இந்த கலவையை ஊற்றி உள்ளே வைக்கவும்.
இருபது முதல் இருபத்தி ஐந்து நிமிடம் பேக் செய்யவும். ஒரு சின்ன போர்க் அல்லது டூத் பிக் கொண்டு குத்திப்பார்த்தால் ஒட்டாமல் வரும் அது தான் சரியான பதம். நேரம் மாறுபடலாம். அப்படி ஒட்டாமல் வரும்போது வெளியில் எடுத்து துருவிய சீஸை மேலே பரவலாக தூவி விட்டு திரும்பவும் அவனில் வைக்கவும். இரண்டு முதல் ஐந்து நிமிடம் அல்லது சீஸ் முழுவதும் உருகும் வரையில் வைத்திருந்து எடுத்து விடவும்.
முப்பது நிமிடம் கழித்து துண்டுகளாக்கி பரிமாறவும். சுவையான சத்தான மாலை நேர ஸ்நாக் ரெடி. சீஸ், ப்ராக்கலியில் கால்சியம் அதிகம் இருப்பதால் பால் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல மாற்று உணவு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்களோடதும் பார்த்ததும் கண்டு பிடிச்சுட்டனே ;) ரொம்ப சூப்பரான குறிப்பு... கடைசி படம்... வாவ்!!! சூப்பரோ சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு லாவண்யா,

பிராக்கலி, கார்ன், சீஸ் எல்லாம் சேர்த்து, அட்டகாசமான கேக் தந்திருக்கீங்க.

பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

புது வகையான ரெசிபி கண்டிப்பா ட்ரை பன்னுரேன்..நன்றி.

அன்புடன்,
zaina.

லாவி, உங்க யோசனைக்கு அளவே இல்லாம போச்சு..;) கேக்குன்னாலே இனிப்பு தான். அதில் வெஜிடபுள்ஸ் கலந்து..சூப்பர் லாவி. கலக்குங்க.. கலர்புல் காய்கறிகளின் சங்கமம் காய்கறி சாப்பிடாதவங்களையும் கண்ணாமூச்சி காட்டி சாப்பிட வச்சுடும். புதுமையான யோசனை. வாழ்த்துக்கள் லாவி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

எப்படிங்க இவளோ அழகா, வித்யாசமா யோசிக்குரிங்க. அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள்!......

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

hi
super kuripunga. (thania room potu yosipingalo?) eppidi yosishu irunthalum kuripu supero super, en ponnu milk kudikka rompa adampannuva, ippidi unga muraila cake senchu kuduthu parkiren. congrats lavanya...

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

லாவண்யா இப்படியும் கேக் செய்யலாம்னு உங்ககிட்டதான் கத்துக்கனும் :)
சத்தான சுவையான கேக் அருமை வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சரிப்பா எல்லோரும் சந்தோஷமா இருங்க. வெஜ்ஜி கேக் என்று பெயர் வைத்துவிட்டு முட்டை சேர்த்து விட்டீர்களே? அனாலும் உங்கள் கற்பனை திறன் அபாரம்.
Kavitha

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி!

வாழ்த்துக்கு மிக்க நன்றி வனி :)

பாராட்டிற்கு மிக்க நன்றி சீதாலக்ஷ்மி :)

வாழ்த்துக்கு நன்றி ஜைனா! அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

கல்பூ நமக்கெல்லாம் நெனப்பு சாப்பிடற பண்டம் மேல மட்டும் தான் இருக்கும் ;) இனிப்புடன் கொஞ்சம் சண்டை அதான் இப்படி. இது பாலுக்கு மதில் மாற்றுப் பண்டம். அவ்வளவே. வாழ்த்துக்கு நன்றி!

வாழ்த்துக்கு நன்றி அனு. குழந்தைகளுக்காக எல்லாமே செய்து தானே ஆகணும் :)

வீட்டில் இருக்கும் வாலுங்க எங்க என்னை தனியா விடுதுங்க.....யோசிக்கஎல்லாம் நேரமில்லீங்க :( அதே அதே ஏன் வீட்டிலும் பாலை கண்டால் பின்னங்கால் பிடரியில் தெறிக்க ஒடுங்க. அதான் இப்படியெல்லாம். நீங்களும் செய்து பாருங்க. வாழ்த்துக்கு நன்றி சுமி!

வாழ்த்துக்கு ரொம்ப நன்றி ஸ்வர்ணா. என்னை ரொம்ப புகழாதீங்க எனக்கு அப்புறம் இல்லாததெல்லாம் வந்துட போகுது. அப்புறம் யாரோன்னு நினைச்சி என்னை வீட்டை விட்டு அனுப்பிடுவாங்க :(

கவிதா அப்படியெல்லாம் கொச்சிக்க கூடாது :( காய்கறிகள் செர்த்திருப்பாதால் வெஜ்ஜி கேக் என்று பெயர் வைத்தேன்! நீங்கள் முட்டைக்கு பதில் பாதி வாழைப்பழம் ஒரு அரை ஸ்பூன் பேகிங் பவுடர் சேர்த்து செய்து பாருங்கள். இல்லையென்றால் கால் கப் டோபு அடித்து சேர்த்து செய்யலாம். அப்படியும் இல்லையென்றால் ஒரு டேபிள் ஸ்பூன் பிளாக்ஸ் சீட்டை மூன்று டேபிள் ஸ்பூன் தண்ணீரில் ஊறவைத்து சேர்த்து செய்து பார்க்கலாம்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
வெஜ் கேக் படங்கள் எல்லாம் ரொம்ப அழகா வந்திருக்கு.ப்ரசண்டேஷனும் அசத்தல்.குட்டீஸ்க்கு பிடிச்ச,சத்தான குறிப்பு.வாழ்த்துக்கள்.

போங்க லாவி, இப்படி விதவிதமா பண்ணுனா, நாங்க எதை தான் பண்ணி பார்க்க?
ரொம்ப ரொம்ப அழகா பண்ணி இருக்கீங்க, முகப்பு படம்,கடைசி படம் அருமையிலும் அருமை...பொறாமையா இருக்கு :-)

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

லாவண்யா, இது வரைக்கும் என் வாழ்கையில் நான் கேக் செய்ததே கிடையாது. வாழைப்பழம் வைத்து செய்து பார்கிறேன். உங்கள் குறிப்பில் நீங்கள் பேகிங் சோடா சேர்க்காததால் குழந்தைகள் வயத்துக்கு ரொம்ப நல்லது. Kalpsukku ஒரு கேள்வி. எந்த லிங்க் யூஸ் பண்றீங்க ? இப்படி வேகமா நிறைய டைப் பண்றீங்களே?

//Kalpsukku ஒரு கேள்வி. எந்த லிங்க் யூஸ் பண்றீங்க ? இப்படி வேகமா நிறைய டைப் பண்றீங்களே?// ஆர்டினரி லிங்க் தாங்க யூஸ் பண்றேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வாவ் லாவண்யா... உங்களுக்கும் எனக்கும் இடையில் ஏதோ கண்டிப்பா டெலிபதி வொர்க‌வுட் ஆகுதுன்னு நினைக்கிறேன்! :) சொன்ன நம்பமாட்டிங்க, கிட்டத்தட்ட இதே மாதிரி, ஒரு 2 வாரம் முன்னாடி, வெறும் எக் மட்டும் வைத்து ட்ரை செய்து பார்த்தேன். போட்டோஸ் எடுக்கவில்லை. மீண்டும் ஒருமுறை செய்து எடுத்து போடனும்னு இருந்தேன்! :)

உங்க வெஜ்ஜி கேக் சூப்பரா வந்திருக்கு! ஒவ்வொரு படமும் சும்மா பளிச், பளிச்!, அருமை, அதிலும் அந்த கடைசிப்படம், அட்டகாசம்!! :) லவ்லி ப்ரசண்டேஷன்!

அன்புடன்
சுஸ்ரீ

வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி அன்பரசி. குட்டீசுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் ரொம்பவே பிடிக்கும் ;)

சுகி எதற்கு பொறாமை. எங்கள் வயதில் நீங்கள் இன்னமும் சூப்பரா கலக்குவீங்க பாருங்க. முடியும் போது செய்து பாருங்க....இல்லைனா கிளம்பி இங்கே வந்துடுங்க......வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

கவிதா அப்படி தான் இருக்கும் ஆரம்பிக்கிற வரைக்கும்.....ஒரு முறை செய்ய ஆரம்பிச்சிட்டா அப்புறம் அதுவும் சக்செஸ் ஆயிட்டா நிறுத்த முடியாது பாத்துக்கோங்க. லிங்க் எல்லாம் கல்பனாவுக்கு ஒரு மாட்டரே இல்லை கவிதா. அப்படி தானே கல்பூ ;)

//ஆர்டினரி லிங்க் தாங்க யூஸ் பண்றேன் :)// ஹஹஹா.....

சுஜா டெலிபதி எல்லாம் இருக்காது. நாக்கு மட்டுமே இதற்க்கு காரணமா இருக்க முடியும் ;) உங்களுடைய குறிப்பையும் அனுப்பி வைங்க......அதையும் செய்யலாம்! வாழ்த்துக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி !

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!