முள்ளங்கி குழம்பு

தேதி: April 9, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (19 votes)

 

முள்ளங்கி - ஒரு கொத்து
வெங்காயம் - பாதி
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - இரண்டு
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
முள்ளங்கியை அலசிவிட்டு, வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் முள்ளங்கியை சேர்த்து வதக்கவும்.
இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு, காய் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
இன்னொரு கடாயில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, தேங்காய், கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
முள்ளங்கி நன்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் உப்பு சரிப்பார்த்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
சுவையான முள்ளங்கி குழம்பு தயார். இது சாதத்துடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் பொருத்தமான சைட் டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்!!! சூப்பர்... படத்துக்காகவே உங்க குறிப்பை எல்லாம்ச் எய்துடனும் போலிருக்கு :) அழகு. ஹர்ஷா குறிப்புன்னா சுவையில் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு, முள்ளங்கி என் பேவரட் காய். ஆனால் சிகப்பு முள்ளங்கி வாங்கியதில்லை. இங்கே அது தான் அதிகம் கிடைக்கும். தேங்காய் சேர்த்து சுவையை வித்தியாசப்படுத்தி உள்ளீர்கள். நிச்சயம் செய்து பார்க்கிறேன். படங்கள் வழக்கம் போல் தெள்ளிய நீரோடையின் தெளிவு. வாழ்த்துக்கள் அன்பு :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

hi harsha
migavum nalla kurippu, nan mullangiyil sampar than vaipen, ippidi seithathu illai. nichayam ungal murayil seithu parkiren. congrats.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

முள்ளங்கியில் குழம்பு புது விதமா இருக்கே! இது வரை சாம்பார் பொரியல் மட்டுமே செய்ததற்கு இது ஒரு புதுமை. முள்ளங்கி சிவப்பா குட்டி குட்டியா பார்க்கவே அழகா இருக்கு.. வாழ்த்துக்கள் ஹர்ஷா..

"எல்லாம் நன்மைக்கே"

அன்பு முள்ளங்கி குழம்பு சூப்பரா இருக்குப்பா படங்கள் வழக்கம் போல் மிக அருமை வாழ்த்துக்கள்.
முள்ளங்கி குட்டி குட்டியா செம அழகா இருக்கு :)))))))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு ஹர்ஷா,

சிவப்பு முள்ளங்கி இதுவ்ரை சமைத்ததில்லை. இந்தக் குறிப்புபடி செய்து பார்க்கிறேன்.

வழக்கம் போலவே படங்கள் பளிச், பளிச்!

அன்புடன்

சீதாலஷ்மி

ஹர்ஷா
முள்ளங்கியில் குழம்பா? சப்பாத்திக்கு ஏற்றதா? வெரி குட். நாளைக்கே செய்திடரேன்.

முள்ளங்கி குழம்பு சூப்பர்!!! படங்கள் ஒவ்வொன்னும் வழக்கம் போல சும்மா அருமையா, அழகா இருக்கு! வாழ்த்துக்கள்!!

அன்புடன்
சுஸ்ரீ

முள்ளங்கி வைத்து சாம்பார் மட்டுமே செய்ய தெரியும், இனிமேல் உங்களுடைய குழம்பும் செய்வேன். வாழ்த்துக்கள்....

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

வனிதா,
வழக்கம் போல் முதலாவதாக பதிவிட்டதற்கு நன்றி. உங்க பதிவு பார்த்து ரொம்ப சந்தோஷம் ஆயிடுச்சு. :-)

கல்ப்ஸ்,
தேங்காய் சேர்த்து செய்தாலும் நல்லா இருக்கும்.செய்து பாருங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

சுமி,
கண்டிப்பா செய்து பாருங்க.பதிவுக்கு ரொம்ப நன்றி.

பாக்யலக்‌ஷ்மி,
இந்த சிவப்பு முள்ளங்கி நானும் இங்கு வந்து தான் பார்த்தேன். நம்ம ஊரில் பார்த்ததில்லை.வெள்ளை முள்ளங்கியிலும் செய்யலாம்.செய்து பாருங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

ஸ்வர்ணா,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி ஸ்வர்ணா.

சீதாலக்‌ஷ்மி அம்மா,
வெள்ளை முள்ளங்கியிலும் செய்யலாம்.சுவையில் வித்தியாசம் இருக்காது.செய்து பாருங்க.பதிவுக்கு ரொம்ப நன்றி.

நிகிலா,
சப்பாத்திக்கும் நல்லா இருக்கும்.செய்து பார்த்துட்டு சொல்லுங்க.பதிவுக்கு மிக்க நன்றி.

சுஸ்ரீ,
உங்க பதிவுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுஸ்ரீ.

அனு,
முடியும் போது செய்து பாருங்க.பதிவுக்கு ரொம்ப நன்றி.

முள்ளங்கியில் சாம்பார் மட்டுமே செய்த எனக்கு இது புது ரெசிபி. இது வரை இரண்டு முறை சிவப்பு முள்ளங்கியில் இந்த குழம்பு செய்து விட்டேன்.சுவை மிகவும் அருமை.என் கணவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. நன்றி harsaa அக்கா.

உமா,
நானும் அடிக்கடி இந்த குழம்பு செய்துடுவேன்.உங்கள் இருவருக்கும் இந்த குழம்பு பிடிச்சதில் மகிழ்ச்சி.செய்து பார்த்து,பின்னூட்டமும் தந்து சந்தோஷப்படுத்திட்டீங்க.ரொம்ப நன்றி உமா.

அருமை நண்பி நான் சமைத்தேன் சுவையாக இருந்தது

உங்களுடய குழம்பு செய்தேன் நன்றாக இருந்தது நன்றி