ஷஷுவன் ரைஸ்

தேதி: April 10, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4.8 (4 votes)

 

பாசுமதி அரிசி - 2 கப்
காரட் , பீன்ஸ், குடை மிளகாய், காலிஃப்ளவர், காளான், ஸ்வீட் கார்ன், செலரி - தலா 2 மேசைக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 3 பல்
ஸ்ப்ரிங் ஆனியன் - 2 மேசைக்கரண்டி
சில்லி சாஸ் - அரை மேசைக்கரண்டி
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
புளி பேஸ்ட் - கால் தேக்கரண்டி
சில்லி கார்லிக் சாஸ் - அரை மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு


 

அரிசியை கழுவி ஊற வைக்கவும். காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.
எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
பூண்டு பொன்னிறமானதும் நீளமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் செலரி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சிவந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் ஓரளவுக்கு வெந்ததும் ஊற வைத்த அரிசி சேர்த்து வதக்கவும்.
அரிசியில் உள்ள தண்ணீர் வற்றியதும் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
தண்ணீர் சுத்தமாக வற்றியவுடன் எல்லா சாஸும் சேர்த்து வதக்கவும்.
சாஸ் சேர்த்தவுடன் தீயை கூட்டி வைத்து வதக்கவும். ஐந்து நிமிடம் வதக்கி வெங்காய தாள் சேர்த்து இறக்கவும். சூடாக மஞ்சூரியனுடன் பரிமாறவும். சுவையான ஷஷுவன் ஃப்ரைட் ரைஸ் ரெடி!

தேவையான காய்கறிகளை கூட்டி மத்த காய்கறிகளை குறைத்தும் போட்டுக் கொள்ளலாம். செலரி சேர்த்தால் தான் கடைகளில் கிடைக்கும் அந்த சுவையும் மணமும் கிடைக்கும். இதே ரைசில் வேக வைத்த சிக்கன் மற்றும் ப்ரான் சேர்த்தும் செய்யலாம். அப்படி செய்யும் போது அரிசியை சிக்கன் ஸ்டாக்கில் வேக வைத்தால் நன்றாக இருக்கும். செலரி அதிக நார் சத்தும் நீர் சத்தும் நிறைந்தது. நெகடிவ் காலரி இருப்பதால் தினமுமே இதை நம் உணவில் பச்சையாகவே சேர்த்துக் கொள்வது நல்லது. சுவை பிடிக்கவில்லை என்றால் மயோனிஸ் அல்லது பீனட் பட்டர் அல்லது ரான்ச் தொட்டு ட்ரை பண்ணலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல குறிப்பு.வாழ்த்துக்கள் தோழி லாவண்யா

இறைவா எங்களை நேரான வழியில் நடத்துவாயாக.

லாவண்யா ஷஷுவன் ஃப்ரைட் ரைஸ் கலர்ஃபுல் + சூப்பர் வாழ்த்துக்கள்.
கண்டிப்பா செய்து பார்க்கிறேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

lavanya
migavum nalla kurippu, valthukkal.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஹோட்டலில் மட்டுமே ஷஷுவன் ரைஸ் சப்பிட்டுள்ளேன். இனிமேல் வீட்டிலும் செய்து சாப்பிடலாம். வாழ்த்துக்கள் லாவி!!!!!!!!

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

லாண்யா,
வழக்கம் போலவே சத்தான,கலர்ஃபுல் ரைஸ். ஃப்ரைட் ரைஸ்னா எனக்கு ரொம்பவே பிடிக்கும்.செலரி தனியே வாங்கியதில்லை.இனி வாங்கி செய்து பார்த்து சொல்றேன்.காய்களோடு ரைஸ் சேர்த்து வேக வைத்து செய்திருப்பது நல்லா இருக்கு.ஹெல்தியான ரைஸ் குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

லாவி, அனைத்து காய்கறிகளின் சங்கமம் !! கலர்புல் கூட்டணின்னு ஷஷூவன் ஃப்ரைட் ரைஸ் கலக்கலா இருக்கு. உங்கள் குறிப்புகள் பெரும்பாலும் சத்தான + ஆரோக்கியமான குறிப்புகளாகவே உள்ளன. அதற்கே உங்களை பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள் லாவ்ஸ் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

லாவண்யா,

ஷஷுவன் ரைஸ், கலர்ஃபுல் & ஹெல்தி, டேஸ்டான ஃப்ரைட் ரைஸா ரொம்ப‌ ந‌ல்லாருக்கு. நான் வெறும் சோயா & சில்லி சாஸ் மட்டுமே போட்டு பண்ணுவேன். அடுத்தமுறை நீங்க சொன்னமாதிரி, வினிகர், புளிபேஸ்ட் எல்லாம் போட்டு கலக்கிடவேண்டியதுதான்! :) த‌னியே சாத‌ம் வ‌டித்து க‌லப்பிங்கன்னு நினைச்சு படிச்சிட்டே வந்தேன். அரிசியும் கூட சேர்த்து வேகவிட்டு செய்வது டிஃப்ரண்ட்டா இருக்கு. க‌ட்டாய‌ம் செய்துபார்க்கிறேன். வாழ்த்துக்கள் லாவண்யா!!

அன்புடன்
சுஸ்ரீ

சான்சே இல்லங்க... சூப்பர். எங்க வீட்டில் என் தங்கை இதை அடிக்கடி வெளியே போகும் போது வாங்கி சாப்பிடுவா... நான் சாப்பிட்டதில்லை, அதனால் சுவை எப்படி இருக்கும்னு தெரியாது. அவளுக்கு ஒரு நாள் செய்து கொடுத்து எப்படி இருக்குன்னு அவசியம் சொல்றேன். நீங்க செய்ஹ்டிருக்குறதை பார்த்த பின் எனக்கும் இதை சுவைக்க ஆசை வந்துட்டுது. அழகோ அழகோ படங்களும், ரைஸும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு லாவண்யா,

சூப்பராக இருக்கு படங்களும் செய்முறை விளக்கங்களும்.

காய்கறி சேர்த்து, செய்யும் ரைஸ் வெரைட்டி, எங்க வீட்டு சாருக்கு ரொம்பப் பிடிக்கும்.

வினிகர், சாஸ் எல்லாம் இதுவரை ட்ரை பண்ணினதில்லை. இந்த ரைஸ் கண்டிப்பாக செய்யணும். நீங்க குறிப்பிட்டிருக்கும் எல்லாப் பொருட்களும் வாங்கிடறேன்.

விருப்பப் பட்டியலில் சேர்த்துட்டேன். செய்து பார்த்துட்டு, சொல்றேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அருமையான குறிப்பு லாவண் செய்து பார்க்கிரேன்

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி!

வாழ்த்துக்கு மிக்க நன்றி ஃபாத்திமா!

நன்றி ஸ்வர்ணா. செய்து பார்த்துட்டு சொல்லுங்க!

நன்றி சுமி!

நன்றி அனுஷ்யா. செய்து பார்த்துட்டு பிடித்ததா என்று சொல்லுங்க!

அன்பரசி உங்க பேச்சி டூ......என்ன கோவம்னாலும் பேசி தீர்த்திருக்கலாம் அதற்காக //லாண்யா// என்றெல்லாம் கூப்பிட்டா...போங்கப்பா :( வாழ்த்துக்கு நன்றி. செய்து பார்த்து ஹர்ஷாவுக்கு பிடித்ததா என்று சொல்லுங்க!

கல்பூ என்ன என்னுடைய பழைய ரெசிபியின் பின்னூட்டத்தை காபி பேஸ்ட் பண்ணிட்டீங்களா.....அதே மாதிரி இருக்கு ;) இப்போ கொஞ்ச காலமா ரொம்ப டயட் கான்ஷியஸ் ஆயாச்சு. அதனால் வந்த தாக்கமோ என்னவோ. வாழ்த்துக்கு மிக்க நன்றி!

சுஜா வாழ்த்துக்கு மிக்க நன்றி! நீங்க உபயோகிக்கும் அந்த ரெண்டு சாஸ் கூடவே வூச்செஸ்ட்டர் சாஸ் சேர்த்தாலே போதும். என்னிடம் இல்லை அதனால் தான் அந்த காம்போ ;) சாதம் வடித்து சேர்த்தால் அந்த சாஃப்ட்னெஸ் கிடைப்பதில்லை. அதனால் தான் இப்படி ட்ரை செய்தேன். அதுவும் இல்லாமல் பொதுவாகவே ஃப்ரைட் ரைஸ் செய்ய முன்னம் நாள் செய்த ஸ்டிக்கி ரைஸ் தான் யூஸ் பண்ணுவாங்களாம் ;)

வனி வசுவுக்கு செய்து கொடுத்து என்ன சொன்னாங்கன்னு வந்து சொல்லுங்க சரியா? நான் இதில் மைல்ட் சாஸ் தான் சேர்த்துள்ளேன். எல்லாம் கொஞ்சம் ஸ்ட்ராங்கா சேர்த்தா தான் இன்னமும் கலர் வரும். நான் குழந்தைகளுக்கு என்று மைல்டாக சேர்த்தேன். வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வாழ்த்துக்கு மிக்க நன்றி சீதாலக்ஷ்மி! தப்பிக்கவே முடியாது இந்த தடவை. செய்றேன் சொன்னா கண்டிப்பா செய்யனும். அதுவும் நீங்க உங்களவருக்கு வேற பிடிக்கும்னு சொல்லிட்டீங்க. நான் நீங்க செய்யற வரைக்கும் விடமாட்டேன். நானே வருவேன் ;)

வாழ்த்துக்கு மிக்க நன்றி நிகிலா. கண்டிப்பா செய்து பாருங்க!

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!