பாதாம் பராத்தா

தேதி: April 13, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

பாதாம் பருப்பு ‍ - ஒரு கப்
சர்க்கரை - 1/2 (அ) 3/4 கப்
தேங்காய்ப்பூ - ‍ 1/3 கப்
ஏலக்காய் - 2
நெய்/வெண்ணெய் - 1 (அ) 2 மேசைக்கரண்டி
கோதுமை மாவு - 2 க‌ப்
உப்பு, எண்ணெய் - ‍ தேவையான அளவு


 

பாதாமை சுடுத் தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து தோலுரித்து வைக்கவும். ஏல‌க்காயை த‌ட்டி, பொடித்து வைக்க‌வும். தோலுரித்து வடிக்கட்டிய பாதாமை, ஃபுட் ப்ராசஸசர்/ மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் பல்ஸ் மோடில் ஓட்டி, பொடித்து வைக்கவும்.
ஒரு வாண‌லியில் ஒரு மேசைக்கரண்டி நெய்/வெண்ணெய் விட்டு, உருகிய‌தும், பொடித்து வைத்த‌ பாதாம் பொடியை கொட்டி சில நிமிடங்கள் வ‌றுக்க‌வும்.
பிற‌கு இத‌னுட‌ன் ச‌ர்க்க‌ரையை கொட்டி கலந்து விட‌வும். சில நிமிடங்களுக்குப்பின் இதனுடன் தேங்காய்ப்பூவையும் சேர்த்து கலந்து விடவும்.
சிறிது நேர‌த்தில் ச‌ர்க்க‌ரை கரைந்து க‌ல‌வை சிறிது இளகியதும் பொடித்த ஏலக்காயைத் தூவி, சிறிது கலந்து அடுப்பை அணைத்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். கோதுமை மாவை சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்து, சப்பாத்தி மாவுப்பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர், சப்பாத்தி மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து, சிறிது மாவை தேய்த்து, ஸ்ட‌ஃப்டு பராத்தா செய்யும் முறையில் 2 தேக்கரண்டி அளவு பாதாம் கலவையை உள்ளே வைத்து மூடி, சப்பாத்திகளாக தேய்க்கவும்.
பின்னர் தவாவில் இரண்டு புறமும் வேகவிட்டு எடுக்கவும்.
பராத்தாக்களை சுட்டு எடுத்தவுடன், அந்த‌ சூட்டிலேயே பராத்தாவின் மேலே துளி நெய் தடவி பரிமாறவும்.
சுவையான‌ பாதாம் பராத்தா ரெடி.

குழந்தைகளுக்கு நல்ல ஹெல்தியான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்க ஏற்றது. சர்க்கரை சேர்த்ததும், சர்க்கரை முழுவதும் கரைந்து கலவை இளகி வருவது சரியான பதம், அதற்கு மேல் ரொம்ப நேரம் விட்டால் பாகு பதம் வந்து, பாதாம் கலவை கெட்டிப்பட்டுவிட வாய்ப்புள்ளது. ஆக, சரியான நேரத்தில் அடுப்பில் இருந்து எடுத்துவிடுவது முக்கிய‌ம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குழந்தைகளுக்கு நல்ல சத்தான சப்பாத்தி படங்கள் அருமை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அன்பு சுஸ்ரீ,

தித்திப்புடன் சத்தும் சேர்ந்த சப்பாத்தி. படங்களும் அருமையாக வந்திருக்கு. பாதாம்பருப்புகளை பூக்கள் போல டெகரேட் பண்ணியிருப்பது அழகாக இருக்கு.

பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

கோதுமை + பாதாம் சேர்த்து நல்ல ஹெல்தியான ஸ்நாக்ஸ் செய்து காட்டியிருக்கீங்க நல்லா இருக்கு. பாதாம் ப்ளவரும் சூப்பர்.

நல்ல ஹெல்தியான டிஷ்,லன்ச் பாக்ஸ்க்கும் பேக் பண்ணலாம்,நாளைக்கே ட்ரை பண்றேன்.அழகா டெக்கரேட் பண்ணியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.

சுஸ்ரீ சூப்பர் பாதாம் பரோட்டா செய்து காண்பிச்சு இருக்கீங்க, குழந்தைங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க ஹெல்தியும் கூட. பாதாம் ப்ளவர் அழகா இருக்கு.

நல்ல சத்தாண ஈவனிங் டிஷ். வாழ்த்துக்கள்.

சுஸ்ரீ சத்தான சுவையான பராத்தா வாழ்த்துக்கள் பா,படங்கள் வழக்கம் போல் அழகு
பாதாம் பூக்கள் செம அழகு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுஜாதா, பாதாம் போளி (அ) பாதாம் பராத்தா வித்யாசமான, ஆரோக்கியமான,சுவையான முயற்சி. செய்முறை விளக்கங்களும், படங்களும், அளித்த விதமும் மிகவும் அழகு. வாழ்த்துக்கள் சுஜா :) கடைசி ப்ளேட்ல வச்சிருக்க பாதாம் பூ மட்டும் எந்த செடில பூக்கும்னு சொல்லிடுங்கப்பா.. எனக்கும் அந்த செடி வேணும் ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என்னோட பொண்ணுக்கு சப்பாத்தினா ரொம்ப புடிக்கும், இந்த மாதிரி செய்தி குடுத்தா சத்துள்ளதாவும் இருக்கும். நல்ல குறிப்பு, வாழ்த்துக்கள்!

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

சம டேஸ்டி சப்பாத்தி... :) அவசியம் செய்துடுவேன்... அனுஷ்யா சொன்ன மாதிரி என் குட்டீஸ்கும் சப்பாத்தி விருப்பம். ரொம்ப அழகான ப்ரெசண்டேஷன்... பளிச் படங்கள்... நல்ல சுவையான ஹெல்தியான குறிப்பு... எல்லாமே +, +, +.... மொத்தத்தில் சூப்பர்!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் & குழுவினருக்கு நன்றி!

தனா,
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

அன்பு சீதாலஷ்மிமா,
உங்க வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிமா! :)

வினோஜா,
வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க‌ ந‌ன்றி! :)

ரீம்,
பாராட்டிற்கு மிக்க ந‌ன்றி! அப்புற‌ம் செய்து பார்த்திங்க‌ளா? பிடித்து இருந்ததா?!

யாழினி,
பாராட்டுக‌ளுக்கு மிக்க‌ ந‌ன்றி! ஆமாம், குழந்தைங்ககூட சேர்த்து எனக்குமே ரொம்ப‌ பிடித்து இருந்தது! :)

கௌத‌மி,
வ‌ருகைக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க ந‌ன்றி!

சுவ‌ர்ணா,
பாராட்டுக‌ளுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி! :)

க‌ல்ப‌னா,
க‌ர‌க்ட்டா பிடிச்சிட்டிங்க! :) என் ப‌ச‌ங்க‌ளுக்கு போளின்னா ரொம்ப‌ விருப்பம்! என் பையன் (பொதுவாவே ப‌ருப்பு வகைகள் என்றாலே), அதிலும் பாதாம் பருப்புன்னாலே, ஒரே ஓட்டம்தான்... :) அதனால அவனை சாப்பிட வைக்கவே இப்படி ஒரு முயற்சி!. ரிசல்ட், மெகா சைஸ்சில் இல்லைன்னாலும், சக்சஸ் என்றே சொல்வேன்! அவனைவிடவும் என் பொண்ணுக்கு, ரொம்பவும் பிடித்திருந்தது! எனக்கும்தான்! :)
அப்புற‌ம், பாதாம் பூவில‌ இருக்கிற‌ இலை செடி மட்டும் எங்க‌வீட்டுல‌ இருக்கு! பூபூ..., ஹிஹி... :) பாராட்டுக‌ளுக்கும், வாழ்த்துக்க‌ளுக்கும் ரொம்ப‌ ந‌ன்றி க‌ல்ப்ஸ்!

அனு,
வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் மிக்க‌ ந‌ன்றி! அவ‌சிய‌ம் செய்துகொடுத்து உங்க பொண்ணுக்கு பிடித்து இருந்தான்னு சொல்லுங்க‌. ந‌ன்றி!

வ‌னி,
வாங்க‌, உங்க‌ குட்டீஸ்க்கும் ச‌ப்பாத்தி பிடிக்குமா?! எங்க‌வீட்டில‌யும் அதே, அதே! :) அவ‌சிய‌ம் செய்து பார்த்து, யாழினி, கும‌ர‌ன் என்ன‌ சொன்னாங்க‌ன்னு சொல்லுங்க. பாராட்டுகளுக்கு ரொம்ப நன்றி வனி! குறிப்புக்கு, '+' க்கு மேல '+' சா கொடுத்து, என்னை திக்குமுக்காட‌ வைச்சிட்டிங்க‌!! :) :) மீண்டும் மிக்க‌ ந‌ன்றி வ‌னி!

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ,
சூப்பரான,சத்தான குறிப்பு. குறிப்பை அன்னைக்கே பார்த்தேன்....புத்தாண்டு,வீக்கெண்ட் பிஸியில் பதிவு போட முடியவில்லை.பாதாம்,தேங்காய் வைத்து ஸ்டஃப் செய்திருப்பது புதுமையா இருக்கு.கண்டிப்பா செய்து பார்க்கணும்.குறிப்பு,ப்ரசண்ட்டேஷன் எல்லாமே அருமை.படங்களும் வழக்கம் போல நல்லா வந்திருக்கு.வாழ்த்துக்கள் சுஸ்ரீ.

மேடம்

சர்க்கரை யில்லாம செய்ய
ஏதாவது டிப்ஸ் சொல்லுங்களேன்..

குறிப்பாக
எங்களைப் போல
பேச்சுலர்களுக்கு ஏற்றாற் போல்

நன்றி

விசு அய்யர்

அருசுவையில் "விசு" ஒரு தனி சுவை . .
visuiyer@yahoo.com