டூனா சமோசா

தேதி: April 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (7 votes)

 

மைதா - ஒரு கோப்பை
டூனா பிஷ் கேன்கள் - 2 (75கிராம்)
வெங்காயம் - 2
புதினா - 1/4 கட்டு
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 5 பற்கள்
எலுமிச்சை - அரை மூடி
தனியா தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க


 

வெங்காயம், இஞ்சி, பூண்டை மிக மிக சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். புதினாவை ஆய்ந்து மண் போக அலசி பொடியாக நறுக்கி வைக்கவும். டூனா பிஷ்ஷை கேன்களில் இருந்து தனியே எடுத்து அதில் இருக்கும் எண்ணெயை பிழிந்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். மைதாவை சப்பாத்திக்கு பிசைவது போல பிசைந்து தனியே வைக்கவும்.
அடுப்பில் நாண் ஸ்டிக் பானை வைத்து சூடாக்கி அதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை போட்டு பொரிய விடவும்.
கடுகு பொரிந்தவுடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
2 நிமிட இடைவெளியில் புதினாவை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் உதிர்த்து வைத்த டூனா பிஷ்ஷை சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
பின்பு இதனுடன் மசாலா தூள்களையும், உப்பையும் சேர்த்து நன்கு ஒருசேர கிளறி விட்டு 5 நிமிடங்கள் மசாலா வாடை போக மூடி வைக்கவும். பிறகு திறந்து எலுமிச்சம் பழத்தை பிழிந்து கிளறி இறக்கி ஆற விடவும்.
பிசைந்து வைத்த மைதாவை சிறு சிறு உருண்டைகளாக்கி அதை வட்ட வடிவில் தேய்த்து பாதியாக கட் செய்து, அதில் அரைவட்டத்தில் டூனா கலவையை வைத்து சமோசாவிற்கு மடிப்பதை போல மடித்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை சூடாக்கி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இந்த சமோசாக்களை மூன்று மூன்றாக போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
டூனா சமோசாவை கெட்சப் மற்றும் மையோனைசுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

டூனா பிஷ் எண்ணெயிலேயே பதப்படுத்தப்பட்டு வருவதால் இதற்கு அதிக எண்ணெய் சேர்க்க கூடாது. உப்பும் மிகவும் குறைவாக தான் சேர்க்க வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

யாருடா பஜியா குறிப்பு கொடுத்திருக்காங்கன்னு பார்த்தேன் ;) பஜியா டூனா மீன் கொண்டு செய்யப்படும் மாலத்தீவு சமோசா தான் :) நீங்க அதையே கொஞ்சம் பெருசா செஞ்சுட்டீங்க. ஹிஹிஹீ. நல்லா இருக்குங்க பார்க்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi
KANGO KALPS
UNGA SAMOSA ROMBA NICE.....
superrrrrrrrrrrrrrr samosa, valakkam pola seimurai, fotos ellame arumai. athuleum onion rompa kuttiya cut panni irukarathu alagu (ippidium kuttiya cut panna mudiuma hmm try panna solren???namma veetu muthalalikita than..)appidie ella samosavum enakku than, kandippa intha saturday evening snack enga veetula unga samosa than, oru tuna tin than irukku, innike marakkama innonu vangi vachuderen. valthukkal kalpana.

(neenga skype use pannuvingala, illa gtalk ka? sorry for asking this question here.nanum skypela unga name eppidi yellamo pottu try panren, niraya kalpana saravanan varuthu, athu than keten. eppidi unga id kandu pidikirathunnu sollunga, try panren)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

கல்ப்ஸ் கலக்கலான குறிப்பு, நல்ல குண்டு குண்டான சமோசாவை பார்த்ததுமே சாப்பிடனும் போல இருக்கு. சூப்பரா பர்ஃபக்ட்டா மடிச்சு இருக்கீங்க. நான் ஒருமுறை சமோசா ட்ரை செய்தேன் உள்ளே உள்ளதுலாம் எண்ணெயில் கொட்டி போச்சு. வாழ்த்துக்கள் கல்ப்ஸ்

கல்ப்ஸ் சுவையான குறிப்பு தந்ததுக்கு நன்றி ஆனால் டூனா மீனுனா என்னனே தெரியாத நான் எப்படி செய்ய வழி சொல்லவும் வேற மீன்ல செய்யலாம..வாழ்த்துக்கள் :)))))

என்றென்றும் அன்புடன் கீதா (விமலகீதா)

நாம் கோபத்தில் பேசும் வார்த்தைக்கு ஒரு அர்த்தம்,,,
பேசாத வார்த்தைக்கு பல அர்த்தம்!!!

எனது குறிப்பை உடனுக்குடன் வெளியிட்டு உற்சாகமூட்டி வரும் அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினர்க்கு என் மனம் நிறைந்த நன்றிகள் !!!

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனிதா, முதல் பதிவு போட்டு என்னை அமர்க்களப்படுத்திட்டீங்க. பாருங்க.. இனி மாலத்தீவு குறிப்பு எனக்கும் தெரியும்னு பெருமையா சொல்லிப்பேன் ;) சமோசா இன்னும் சின்னதா போட்டிருக்கலாம். என் பொண்ணு உள்ளே ஸ்டப்ஃபிங்ஸை காலி பண்ணிட்டு இருந்தா ;) அவகிட்ட இருந்து காப்பாத்தவே வேகமா பெருசு பெருசா போட்டு முடிச்சுட்டேன். வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் வனிதா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுமி,//ippidium kuttiya cut panna mudiuma hmm try panna solren???namma veetu muthalalikita than// முதலாளியை ஏங்க தொந்தரவு பண்ணிட்டு, நீங்க கட் பண்ணி பாருங்க வரலைன்னா, மிக்சில போட்டு ரொம்ப கேர்புல்லா பேஸ்ட் ஆகாதபடி ஒரு சுத்து சுத்தி இறக்கிடுங்க. வேலை மிச்சம். அதை நல்லா ஈரம் இல்லாதபடி நல்லா வாணலில போட்டு வதக்கிடுங்க. மேட்டர் ஓவர்.

//appidie ella samosavum enakku than,// இன்னும் யாரும் புக் பண்ணாததால நீங்களே எடுத்துக்கோங்க ;)

//neenga skype use pannuvingala, illa gtalk ka? sorry for asking this question here.nanum skypela unga name eppidi yellamo pottu try panren, niraya kalpana saravanan varuthu, athu than keten. eppidi unga id kandu pidikirathunnu sollunga, try panren// ஸ்கைபீல போட்டீங்கன்னா உலகத்தில் இருக்கும் அத்தனை கல்பனா வரலாம். நான் வரமாட்டேனே.. ஏன்னா எனக்கு அதில் அக்கவுண்ட் இல்லையே ;) பேஸ்புக்ல இருக்கேங்க. இதே பேர்ல. அங்கே இன்வைட் பண்ணுங்க.

சமோசா செய்துட்டு சொல்லுங்க. வருகைக்கும், விரிவான பதிவிற்கும் மிக்க மகிழ்ச்சியோடு கூடிய நன்றிகள் சுமி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

யாழி, நான் கூட உன்னை மாதிரி சமோசா செய்யறதுன்னாவே அரண்டு தான் போயிருந்தேன். மடிக்க வராதேன்னு. இதை செய்யும் போது அத்தனை மெனக்கெடல. அரைவட்டத்தை மடிக்கும் போது ஜாயிண்டுகளை தண்ணீர் தொட்டு நல்லா ஒட்ட வச்சுடு யாழி. நல்லாவே வரும். செய்துட்டு சொல்லு பா. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

விமலா, இனிமே உங்களுக்கு நவரச நாயகிங்கற பட்டத்தை ஏக மனதோட தந்துடலாம்னு இருக்கேன். உங்க கிட்ட பிடிச்சதுல அதிகம் பிடிச்சது இந்த சிரிப்பு தாங்க :) டூனா மீனுனா நம்ம ஊர்ல சூரை மீன்னு அர்த்தமாங்க. கிடைச்சா செய்து பாருங்க. அப்படி இல்லைனா நமக்கு பரிச்சயமான சுறா மீன்ல செய்து பாருங்க. பெரிய கம்ப சூஸ்திரம் இல்லைங்க. டேஸ்ட் டிட்டோ சுறா புட்டு மாதிரி தான் இருக்கும். சுறா புட்டை சமோசால வச்சு மடிச்சா டூனா சமோசா. பினீஷ்..செய்து பார்த்துட்டு சொல்லுங்க விமலா. வருகைக்கும், பதிவிற்கும் நன்றி பா :)))))) (உங்க பாணிலயே சொல்லிட்டேன் ;))

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

dear kalps
facebookla parthachu, angeum rendu kalpana saravanan pa, yarukku invite panrathu? innoru kalpana thittunalum parava illanu rendu perthukkume request panniten. neenga time kidaikum pothu parunga.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி, நான் தான் சொன்னேனே. இந்த ஐடிலயே அங்கேயும் இருப்பேன்னு.. நீங்க சரியா கவனிக்கல பார்த்தீங்களா? ;)) என் முழு பேரை படிங்க, கல்பனா சரவணன் போட்டா கண்டிப்பா யாருன்னு தான் கேப்பாங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

kalpana , konjam siramam parkama neengale enna invite pannirungalen, ennoda face book id babusmitha nu podunga.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி, அங்கேயும் நீங்க சொன்ன ஐடில ஒரு 5 பேர் இருக்காங்க. முழு பேர் சொல்லுங்க பா.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

kalpana, kandu pidichutennu ninaikiren, ungafacebook id la tiger foto potu irukkuma? nanga inniku virathamnu konjam fotos pottu irukkuma?

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி, அதே..அதே.. கரெக்டா பிடிச்சுட்டீங்க. நானும் உங்க அழைப்பை கன்பார்ம் பண்ணியிருக்கேன் பாருங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா,

டூனா ஃபிஷ் சமோசா நல்லா செய்திருக்கிங்க. நான் யூஷுவலா வெஜ்தான் செய்வேன். இதுவரை ஏனோ டின்டு டூனா வாங்கினதே இல்லை! சமோசா மடிப்பது ஈஸியா சொல்லித்தந்து இருக்கிங்க. வழக்கம்போலவே கடைசிப்படம் அழகா, டெம்ப்டிங்கா இருக்கு! (எனக்கு இங்க இப்ப லன்ச் டைம் வேற! :)) வாழ்த்துக்கள் கல்ப்ஸ்!!

அன்புடன்
சுஸ்ரீ

சமோசா பக்காவா வந்துருக்கு. நானும் வெஜ் சமோசா ட்ரை பண்ணி இருக்கேன் ஆனால் இவளோ நல்லா வந்தது இல்ல, டின் பிஷும் வாங்குனது கிடையாது. இனிமேல் ட்ரை பண்ணி பாத்துட்றேன் பட் ஊருக்கு போயிட்டு வந்துதான். வாழ்த்துக்கள் கல்பனா!

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

சுஜா, நானும் வெஜ் சமோசா தான் பண்ணியிருக்கேன் பா. அப்ப சமோசா சரியாவே மடிக்க வரல. இப்ப போட்டோ எடுக்கறதால கரெக்டா வந்துருச்சி. பாருங்க சமோசா கூட போஸ் தர ஒழுங்கா வருது ;) எனக்கும் இந்த மாதிரி டின் பிஷ் அலர்ஜி பா. ஆத்துக்கார் இதிலெல்லாம் ஆர்வம் அதிகம். வேலையாள் டூனா பிஷ்ஷில் ஆம்லெட் போட்டு தருவார். ரொம்ப சூப்பரா இருந்தது. அதிலிருந்து தான் இந்த சமோசா ஐடியாவும் வந்தது. செய்து பார்த்துட்டு சொல்லுங்க பா. வருகைக்கும், பதிவிற்கும் தேங்க்ஸ் பா சுஜா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அனு, நான் கூட டூனா பிஷ் பத்தி பெருசா அபிப்ராயம் இல்லாம தான் இருந்தேன். சாப்பிட பிறகு அடிமை ஆய்ட்டேன். சமோசா மடிக்கும் போது ட்ரை-ஆ இல்லாம லேசான ஈரப்பதத்தோட இருக்கும் போதே மடிச்சு ஸ்டஃபிங் பன்ணி எண்ணெய்ல பொரிச்சு எடுத்துடுங்க. சமோசா தயாரிச்சு வச்சு நேரம் ஆய்ட்டா ஈரப்பதம் போய் விரிஞ்சுடும். செய்துட்டு சொல்லுங்க அனு. வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஊருக்கு போகும் அவரசத்திலும் கூட மறக்காமல் எங்களுக்காக விருந்து வைக்கும் கல்பூவுக்கு "ஓ" போடுங்கப்பா! ராஜா செல்லம் எங்க எங்க இருந்தீங்க இத்தனை நாளா? ஒவ்வொரு குறிப்பும் வித்தியாசம். ஒவ்வொரு குறிப்பை பரெசன்ட் பண்ணியிருக்கும் விதமும் அருமை. அதை விட பின்னூட்டம் தறவங்களை நீங்க அரவணைக்கும் விதம் வீட்டுக்கு வந்து உங்க கையாள பரிமாறின விருந்து சாப்பிட்டு விட்டு போன ஒரு திருப்தி இருக்கு. "குண்டு சமோசா"வின் கதை பிடிச்சிருக்கு. உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

கல்ப்ஸ் டூனா சமோசா ரொம்ப அழகா செய்துருக்கீங்க வாழ்த்துக்கள் பா.
உங்களோட ஒவ்வொறு குறிப்பும் புதுமையா இருக்குப்பா,படங்கள் வழக்கம் போல அழகு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் கல்ப்ஸ்
சுறா மீனில் செய்து பார்க்கிரேன்,
அப்படியே மீன் ஆம்லெட் செய்முறையும் அனுப்பிடுங்கோ

புது புது சமையல் குறிப்புகளாக அசத்துறீங்க. கோல்டுடன் கலர்ல செம சூப்பரா இருக்கு சமோசா. வாழ்த்துக்கள் /மீன் ஆம்லெட்/ நிகிலா கேட்ட குறிப்பையும் செய்து காமிங்க கல்ப்ஸ்.

லாவி,

//ஊருக்கு போகும் அவரசத்திலும் கூட மறக்காமல் எங்களுக்காக விருந்து வைக்கும் கல்பூவுக்கு "ஓ" போடுங்கப்பா!// இதில் இன்னொரு காரணம் கூட இருக்கு. எனக்கு டூனா பிஷ் ரொம்பவே பிடிச்சு போச்சு. நம்ம ஊர்ல எந்த மார்க்கெட்ல போய் தேடுவேன் இந்த மீனை. அதான் இங்கேயே இந்த குறிப்பை தந்துட்டு போய்டுவோம்னு ;)

//ராஜா செல்லம் எங்க எங்க இருந்தீங்க இத்தனை நாளா? // இங்கேயே தான் இருந்தேன்பா. கொஞ்சம் மந்தமா. இப்பதான் கொஞ்சம் போல வேகம் எடுத்திருக்கேன் :)

//அதை விட பின்னூட்டம் தறவங்களை நீங்க அரவணைக்கும் விதம் வீட்டுக்கு வந்து உங்க கையாள பரிமாறின விருந்து சாப்பிட்டு விட்டு போன ஒரு திருப்தி இருக்கு// நான் உண்மையாவே அப்படி அரவணைக்கிறேன்னான்னு தெரியல. இருந்தாலும் நீங்க எவ்ளோ அழகா கவனிச்சு வெளிப்படையா பாராட்டினீங்க பாருங்க. ரொம்ப சந்தோஷம் லாவி.

//"குண்டு சமோசா"வின் கதை பிடிச்சிருக்கு. உங்ககிட்ட இன்னும் நிறைய எதிர்ப்பார்க்கிறோம்// ஒவ்வொரு அயிட்டத்துக்கும் ஒவ்வொரு கதை இருக்கு. இங்கே யாழி குண்டு சமோசான்னு பேர் வச்சதால கதை வெளியே வந்தது ;))

வருகைக்கும், மனம் திறந்த பாராட்டு, வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுவா, உங்களுக்கும் டூனா பேரை சொல்லி ரொம்ப நாள் அல்வா தந்துட்டு இப்ப குறிப்பை போட்டுட்டேன். நீங்க தான் மீன்னாலே 10 அடி ஓடிடுவீங்களே ;) உங்களை எப்படி செய்து பார்த்துட்டு சொல்லுங்கன்னு சொல்வேன். சோ.... நன்றி மட்டும் சொல்லிடறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நிகிலா, சூரை மீன் கிடைக்குமான்னு பாருங்க. அதான் டூனா. அப்படி கிடைக்கலன்னா சுறாவில் ட்ரை பண்ணுங்க. மீன் ஆம்லெட் தானேபா. சுட சுட வந்துட்டே இருக்கு. எஞ்சாய் பண்ணுங்க. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி பா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வினோ, நீ செய்தாலும் கோல்டன் கலர் சூப்பரா வருமே. செய்து பாரு. மீன் ஆம்லெட் வந்துட்டே இருக்கு பா. வருகைக்கும், பதிவிற்கு நன்றி வினோ :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.