OHP ஷீட் நிலைமாலை

தேதி: April 20, 2012

4
Average: 3.5 (8 votes)

 

OHP ஷீட் - 2
க்ளாஸ் கலர் - பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள்
சிறிய சாமி படம் - 8
கோல்டுநிற கிலிட்டர்ஸ்
சில்வர் பேப்பர்
பெவிக்கால்
லேஸ்
கருப்புநிற உல்லன் நூல்

 

ஊதுபத்தியில் வரும் ஸ்வாமிபடங்களை நறுக்கி எடுத்துக் கொண்டு தேவையான அளவு சேகரித்து வைத்துக் கொள்ளவும். இந்த நிலைமாலை செய்வதற்கு 8 படங்கள் தேவைப்படும். ஒரு சார்ட் அட்டையில் ஒரு வட்டம் வரைந்து, அதன் கீழ் இலையின் வடிவத்தை வரைந்து தனியே நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதனுள்ளே ஒரு சிறிய இலை வடிவத்தை வரைந்து விடவும்.
சார்ட் அட்டையின் மாதிரி வடிவத்தை, OHP ஷீட்டின் மீது வைத்து அவுட் லைன் வரைந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு OHP ஷீட்டில் 4 துண்டுகள் நறுக்கலாம். மொத்தம் 8 OHP ஷீட் துண்டுகள் தேவை.
வெட்டி வைத்துள்ள OHP ஷீட் அனைத்திலும் கோல்டுநிற கிலிட்டர்ஸால் அவுட் லைன் வரையவும். இலைவடிவில் வரைந்த இடத்தின் நடுவில் மஞ்சள்நிற க்ளாஸ் கலரும், வெளியே பச்சைநிற க்ளாஸ் கலர் கொடுத்து காய விடவும். இந்த வடிவத்தை போலவே சில்வர் பேப்பரிலும் வரைந்து நறுக்கி 8 துண்டுகள் எடுத்துக் கொள்ளவும்.
சில்வர் பேப்பரின் மேல் பெவிக்கால் தடவி டிசைன் செய்த OHP ஷீட்டை வைக்கவும்.
மேல் வட்டத்தின் நடுவில் பிள்ளையார் படத்தை வைத்து ஒட்டவும். அதன் ஓரத்தை சுற்றி கோல்டுநிற கிலிட்டர்ஸால் அவுட்லைன் வரைந்து விடவும். இடையில் சிவப்புநிற க்ளாஸ் கலரால் சின்ன சின்ன புள்ளிகள் இடைவெளி விட்டு வைக்கவும். இது காய்ந்ததும் ஸ்டோன் ஒட்டியது போல் இருக்கும்.
மற்ற OHP ஷீட் ஏழு துண்டுகளிலும் இதுப்போல் டிசைன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
கதவு நிலையின் அளவிற்கு லேஸை எடுத்துக் கொண்டு அதன் இரு முனையை சிறிது மடக்கி விட்டு அதில் கருப்புநிற உல்லன்நூலை தேவையான அளவு கோர்த்து முடிச்சுப்போட்டு வைக்கவும். பின்னர் செய்து வைத்துள்ள இலைகளை இடைவெளிவிட்டு வரிசையாக ஒட்டி முடிக்கவும்.
OHP ஷீட்டில் செய்யக்கூடிய நிலைமாலை தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சுப்பர்ப் டீம். ரெடிமேட் எஃபெக்ட்ல இருக்கு நிலைமாலை. பாராட்டுக்கள்.

‍- இமா க்றிஸ்

பத்மா... உங்க கையை காட்டி காட்டி என்னை டென்ஷன் பண்ணபுடாது... எனக்கு அதை பார்க்கும் போதெல்லாம் ஹென்னா போட்டுவிட ஆசை வருது ;( கண்ணுக்கு எட்டுனது கைக்கு எட்டலயே.

ரொம்ப அழகா சுலபமா இருக்கு. செய்துடுறேன். போட்டோவும் அனுப்பி வைக்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

beatiful work