உளுத்தங்களி - 2

தேதி: April 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

அரைத்த மாவு - ஒரு கப்
முட்டை - ஒன்று
சீனி - அரை கப்
தேங்காய் பால் - ஒரு கப்
மைதா மாவு - கால் கப்
உப்பு - கால் தேக்கரண்டி
கலர் பவுடர் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் - கால் கப்
நெய் - ஒரு மேசைக்கரண்டி

மாவு செய்ய:
அரிசி - 100 கிராம்
வெள்ளை உளுந்து - 50 கிராம்


 

அரிசியை கழுவி வெய்யிலில் உலர்த்தி காயவைக்கவும். காயவைத்த அரிசியுடன், வெள்ளை உளுந்தம் பருப்பு சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன் மைதா மாவு, முட்டை, உப்பு, தேங்காய் பால் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
கரைத்த மாவுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி கலர் பவுடர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் 3 மேசைக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்திருக்கும் மாவை ஊற்றி, அடுப்பின் தீயை குறைத்து வைத்து கிளறவும்.
மாவு கட்டிவிழாமல் நன்கு கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
4 நிமிடம் கிளறிய பிறகு மாவு கொஞ்சம் கெட்டியாக ஆனதும் சீனியை போட்டு கிளறவும்.
அதன் மேல் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி 15 நிமிடங்கள் கிளறி கொண்டே இருக்கவும்.
மாவை கிளறி விடும் போது கரண்டியால் மாவை கட்டி இல்லாமல் உடைத்து விட்டு கிளறவும். களி வெந்ததும் இறக்கும் பொழுது நெய் ஊற்றி பொலபொலவென்று ஆகும் வரை கிளறிவிட்டு இறக்கவும்.
உளுத்தங்களி தயார். விருப்பப்பட்டால் உளுத்தங்களியில் முந்திரியை வறுத்து சேர்த்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உளுந்தங்களி புதுசா ட்ரைப் பண்ணி இருக்கீங்க. முட்டை எல்லாம் சேர்த்து இருக்கீங்க. ரொம்ப புதுசா இருக்கு. கண்டிப்பா இது புது டேஸ்டா இருக்கும் நினைக்கிறேன். ட்ரை பண்ணி பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

Hai puthu muriya irukupa.innum healthy .kandipa try panaraen.photo pakkupotha colourful.kuttiesku nichayma pidikum.

Be simple be sample

ஏற்கனவே ஒரு களி செய்ய மாவு திரிக்காம இருக்கு... அதுக்குள்ள அடுத்தது வந்துட்டுது :) இதையும் ட்ரை பண்ணிடுவோம். முட்டை கட்டாயமா??? நல்லா இருக்கு கலரும் குறிப்பும்... வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அஸ்ஸலாம் அலைக்கும் கமர்நிஸா இந்த களி காரைக்கால்ல பன்னுரதுதானே உங்களுக்கு காரைக் காலா முட்டை பொறித்து கொட்டி ஒரு களி கின்டுவாங்களே அது உங்களுக்குத்தெரியுமா அனுப்புங்க ப்ளீஸ்