ஸ்ட்ராபெர்ரி ஓட்ஸ் ஸ்மூத்தி

தேதி: April 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (3 votes)

 

ஸ்ட்ராபெர்ரி - 7 (அ) 8 (பெரிய பழங்கள்)

வாழைப்பழம் - 1/2

ஓட்ஸ் - 1/4 கப்

குளிர்ந்த பால் - 1 கப்

சர்க்கரை - 2 தேக்கரண்டி (தேவைப்ப‌ட்டால்)

க்ரஷ்டு ஐஸ் -‍ 4 மேசைக்கரண்டி (விருப்பப்ப‌ட்டால்)


 

முத‌லில் ஓட்ஸை மிக்ஸியில் போட்டு ந‌ன்கு பொடித்துக் கொள்ள‌வும்.

பிற‌கு இதனுடன் ஸ்ட்ராபெர்ரி, வாழைப்ப‌ழ‌ம், ச‌ர்க்க‌ரை, பால், ஐஸ் எல்லாமுமாக சேர்த்து ந‌ன்கு அடித்து க‌ண்ணாடி டம்ள‌ரில் போட்டு பரிமாறவும்.


ஸ்ட்ராபெர்ரி ப‌ழ‌ம் ந‌ன்கு இனிப்பாக‌ இருக்குமானால், ச‌ர்க்க‌ரையை போடாம‌ல் த‌விர்த்துவிட‌லாம். வெயிலுக்கு ஏற்ற ஜில்லென்ற, ஆரோக்கியமான ட்ரிங்க் இது! காலை நேர‌த்து அவ‌ச‌ர‌த்துக்கு ப்ரேக்பாஸ்ட்டாக‌வும் தயாரித்துக் கொள்ள‌லாம்.

மேலும் சில குறிப்புகள்