கேழ்வரகு ரொட்டி (குரக்கன் ரொட்டி)

தேதி: August 7, 2006

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேழ்வரகு மாவு - 500 கிராம்
சீனி - 250 கிராம்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 1/2 லிட்டர்


 

முதலில் கேழ்வரகு மாவு, சீனி, உப்பு மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
பின்பு நீரை விட்டு சப்பாத்திக்கு மா பிசைந்து கொள்ளவது போல் பிசைந்து நன்கு அடித்து கொள்ளவும்.
பிசைந்த மாவினை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
பின்பு கையில் சிறிதளவு எண்ணெய் பூசிக் கொண்டு அவற்றை அப்பள வடிவில் தேய்த்துக் கொள்ளவும்.
மிகவும் தடிப்பாகவும் மெல்லியதாகவும் இல்லாமல் சற்று நடுத்தரமாக தேய்க்கவும்.
வாணலியில் எண்ணெயை கொதிக்க விட்டு ஓவ்வொன்றையும் இரு புறமும் திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.
மாலை நேரங்களில் சாப்பிட நன்றாக இருக்கவும்.


மிகவும் சத்து கூடிய உணவு இந்த ரொட்டியை சிறுவர் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். கேழ்வரகு உடம்பிற்கு உறுதியை அளிக்கும் ஒரு சத்துக்கூடிய தானிய உணவு. இதை எமது நாட்டில் குரக்கன் ரொட்டி என்று சொல்லுவோம்.
நீங்கள் விரும்பினால் இதற்குள் இரண்டு வாழைப்பழங்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளலாம். இன்னும் சுவை அதிகமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நிறைய வித்தியாசமான குறிப்புகள் தருகிறீர்கள்... நன்றி வஜிதா.... ஒரு விருந்தில் ட்யூனா (tinned tuna) கட்லெட் என்று ஒரு பதார்த்தம் பரிமாறினார்கள்.... என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள்.... விசாரித்தபோது அது இலங்கையில் செய்யப்படும் சிறப்பு வகை என்று அறிந்தேன்... முடிந்தால் குறிப்பு தாருங்கள்....
உங்களின் தமிழ் நடை வித்தியாசமாக அழகாக உள்ளது...

Vazhga Tamil!!!

ட்யூனா கட்லெட் என்று, நீங்கள் எதை கூறுகிறீர்கள், என்று எனக்கு விளங்கவில்லை.(sorry madam) அது எந்த பொருளில் இருந்து செய்து இருந்தார்கள். அது காரமாகவா அல்லது இனிப்பாகவா இருந்தது. என்று எனக்கு கூறுவீர்களா? நீங்கள் கூறும் ட்யூனா கட்லெட் சில வேளைகளில் நான் அறிந்து இருப்பேன், ஆனால் நாங்கள் அதை வேறு பெயர்களில் கூறாலாம் என நினைக்கிறேன். நிச்சயமாக நான் இந்த குறிப்பை தளத்தில் கொடுக்க முயற்சி செய்கிறேன்.
நன்றி மேடம்.

நான் கூறிய கட்லெட்டை டின்னில் அடைக்கப்பட்ட ட்யூனா (முள் நீக்கப்பட்ட ட்யூனா துண்டுகள் வெஜிடபிள் எண்ணையிலோ அல்லது தண்ணிரிலோ இரண்டு வகையாக கிடைக்கும்) கொண்டு செய்யப்பட்டு இருந்தது.

பார்ப்பதற்கு சாதாரன கட்லெட் போல்தான் (லேசான காரமாக) இருந்தது.
முடிந்தால் குறிப்பு தாருங்கள்... நன்றி.

Vazhga Tamil!!!

வகிதா இப்படி ப்ளெயினா நான் செய்ததே இல்லை... ரொம்ப நல்லா இருந்ததுங்க. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா