பட்டர் நாண்

தேதி: April 22, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (10 votes)

 

1. மைதா மாவு - 2 கப்
2. ட்ரை ஆக்டிவ் ஈஸ்ட் - 1 தேக்கரண்டி
3. வெண்ணெய் - 5 மேஜைக்கரண்டி
4. சர்க்கரை - 1 தேக்கரண்டி
5. உப்பு - தேவைக்கு
6. கொத்தமல்லி இலை - சிறிது
7. தயிர் - 2 மேஜைக்கரண்டி
8. நீர் - 2/3 கப்


 

நீரை வெது வதுப்பாக சூடாக்கி அதில் ஈஸ்ட் கலந்து வைக்கவும். பின் சர்க்கரை கலந்து 5- 10 நிமிடம் வைக்கவும்.
மாவுடன் உப்பு கலந்து பின் தயிர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பாதி வெண்ணெய் கலந்து இதில் ஈஸ்ட் சர்க்கரை கலவை சேர்த்து பிசையவும்.
மாவு சாஃப்ட்டாக இருக்க வேண்டும். இதை மூடி 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை வைத்துவிடவும்.
இப்போது மாவு நன்றாக உப்பி இருக்கும். மீண்டும் மாவை எடுத்து நன்றாக பிசையவும்.
இவற்றை உருண்டைகாளாக ஆக்கி பின் மெல்லிய சப்பாத்தியாக திரட்டவும்.
அலுமினிய தவா அல்லது தோசை கல்லில் இதை இட்டு மூடி விடவும்.
மேலே எழும்பி வந்ததும் உருக்கிய வெண்ணெயை தடவை விட்டு பின் திருப்பி போட்டு சிவந்ததும் எடுக்கவும்.


கொத்தமல்லி இலையை மாவுடன் கலந்தும் செய்யலாம் அல்லது மாவை திரட்டிய பின் அதன் மேலே தூவியும் செய்யலாம். இதை சாதாரண நாண் போல நேரடியாக அடுப்பில் காட்டியும் செய்யலாம். இதே முறையில் மீதம் உள்ள வெண்ணெயில் பொடியாக நறுக்கிய அல்லது ஒன்றிரண்டாக அரைத்த பூண்டும் கலந்து வைத்து நாண் மேல் பூசி சுட்டு எடுத்தால் “கார்லிக் பட்டர் நாண்” தயார். :)

மேலும் சில குறிப்புகள்


Comments

nice vani

அன்பு காட்டி தோற்றவரும் இல்லை கோவப்பட்டு ஜெயித்தவரும் இல்லை

என்றென்றும் அன்புடன்

:-)ரேணுகாதியாகராஜன்

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி பட்டர் இல்லாம நாண் செய்யலாமா

Be simple be sample

பட்டர் இல்லாத நாண் ரெசிபி யாரும் சமைக்கலாம் பகுதியில் கொடுத்திருக்கேன்... ட்ரை பண்ணி பாருங்க. மற்றவர்கள் குறிப்புகள் கூட இருக்கும், தேடினா கிடைக்கும். எந்த முறை பிடிக்குதோ ட்ரை பண்ணுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா