பாசிப்பருப்பு அல்வா

தேதி: April 23, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (12 votes)

 

பாசிப்பருப்பு - ஒரு கப்
பால் - தேவைக்கு
நெய் - 1/2 - 3/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய் தூள்
முந்திரி, திராட்சை


 

பாசிப்பருப்பை வெறும் கடாயில் லேசாக வாசம் வர வறுக்கவும். இதை நன்றாக ஆற விட்டு நீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறிய பருப்பை தேவையான அளவு பால் விட்டு நைசாக அரைக்கவும்.
கடாயில் சிறிது நெய் விட்டு சூடாகும் முன் கலவையை ஊற்றி பின் அடுப்பில் வைத்து கிளறவும். கலவை சிறிது கெட்டியாக துவங்கியதும் சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும்.
நெய் முழுவதுமாக உள்ளிழுத்து மீண்டும் வெளி வர ஆரம்பிக்கும் போது சர்க்கரை சேர்த்து கிளறவும்.
கடைசியாக ஏலக்காய் தூள் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறவும்.
சட்டியில் ஒட்டாத பதம் வந்ததும் அடுப்பில் இருந்து எடுக்கவும்.
நெய் தடவிய தட்டில் கொட்டி விரும்பிய வடிவத்தில் கட் செய்யலாம்.
பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா கூட தூவி பரிமாறலாம். சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.

பருப்பை வறுக்காமலும் ஊற வைத்து அரைக்கலாம். அப்படி செய்தால் முதலில் நெய் இல்லாமல் கலவையை சற்று வேக விட்டு பின் நெய் சேர்க்க வேண்டும். அரைக்க பால் கட்டாயமில்லை. சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும் என்பதால் சேர்த்திருக்கிறேன். சூடான கடாயில் கலவையை சேர்த்தால் உடனே சிறிது சிறிதாக கட்டி தட்டி விடும். அதனால் கலவையில் சிறிது நெய் விட்டு கலந்து பின் சிறுந்தீயில் வைத்து கை விடாமல் கிளற வேண்டும். எப்படியும் செய்து முடிக்க 45 நிமிடங்கள், ஒரு மணி நேரம் ஆகும். நெய் அதிகமாக பிடிக்கும். நெய் அளவை குறைத்தாலும் பார்க்க ட்ரையாக இருக்கும் அல்வா. ஆனால் சுவை நன்றாகவே இருக்கும். இந்த அல்வா பார்க்க கேசரி போலவே இருக்கும், ஆனால் மிகுந்த சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுவையாக இருக்கும் என்று பார்க்கவே தெரிகிறது. முடிகிறபோது நிச்சயம் முயற்சி செய்து பார்ப்பேன் வனி.

‍- இமா க்றிஸ்

பாசிப்பருப்பு அல்வா ஹார்ட் ஷேப் - ல அள்ளுது. நோட்ஸ் எல்லாம் கொடுத்து தெளிவா சொல்லி இருக்கீங்க. கண்டிப்பா செய்துப்பார்க்கிறேன் வனி.

ஹாய் வனி அல்வா பார்க்கவே சூப்பரா இருக்கு நெய் சேர்த்து ரொம்ப சூப்பரா இருக்கும்ன்னு நினைக்கிறேன் ஓகே வனி விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன் இந்த வாரம் இதை ட்ரை பன்னுறேன் அப்படியா அந்த ரெண்டு plate எனக்கு அனுப்பிருங்க வனி
இன்னைக்கு தான் கிரீன் சன்னாபிரியாணி பண்ணிட்டேன் நல்ல இருந்தது வனி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

பாசிப்பருப்பு அல்வா சூப்பரா இருக்கு.. படங்களே அல்வா சுவையை சொல்லுது.. டேஸ்டியான அல்வா.. வாழ்த்துக்கள் வனி :)

"எல்லாம் நன்மைக்கே"

வனிதா, இனிப்பான உங்க இதயத்தையே தந்துட்டீங்க. ஏத்துக்க கசக்குமா என்ன? இதோ ரெண்டு ப்ளேட் இதயத்தையும் எடுத்துட்டோம். சுவையான, சத்தான குட்டீசுக்கு நிச்சயம் தரவேண்டிய ஸ்வீட். நேரம் கிடைக்கும் போது செய்து தருவேன். வாழ்த்துக்கள் வனிதா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

dear vani,
ungaloda anbana hearta sweettoda kuduthu irukinga.supero superb.enakku munnadie kalps eduthanala enakku speciala innoru hearta sweetoda anupirunga, okva.parkum pothe sapida asai vanthuduchu, kandippa seithutu solren, unga panpogiba saturday senchu sapitachu , super, antha coconutmilk vasathukku sema tastea irunthuthu, valthukkal vani.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

வனி பார்ப்பதற்கு பாசிப் பருப்பு அல்வா சூப்பராக இருக்கின்றது.நிச்சயம் செய்து பார்க்க வேண்டும்.

பரணிகா:)

அன்பு வனிதா,

வழக்கம் போலவே படங்களும் விளக்கங்களும் அருமையாக இருக்கு.

வாழ்த்துக்கள்

அன்புடன்

சீதாலஷ்மி

அருமையான குறிப்பு..அழகான படங்கள்..உங்க டிப்ஸ் கூடுதல் ப்ளஸ்
வாழ்த்துக்கள் வனி
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

வனி பாசிப்பருப்பு அல்வா அப்படியே ரியல் கலரில் அட்டகாசமா ஜம்முன்னு இருக்கு...... சூப்பர் ஒரு இதயமாவது எனக்கே எனக்கு.

வாழ்த்துக்கள்.......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சூப்பர் அல்வா...... வாசனை ரொம்ப தூக்கலா கமகமன்னு இருக்கும் போல...... கடைசி படம் அருமையோ அருமை...... வாழ்த்துக்கள்.... :)

நல்ல ஹெல்தியான அல்வா.வழக்கம் போல ப்ரசண்டேஷனும் அருமை.வாழ்த்துக்கள்.

வனி பார்க்கவே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

பாசிப் பருப்பில் ஆல்வா வா சூப்பர். கண்டிப்பா ட்ரைப் பண்ணுவேன்

ஆஹா... வனி, இப்படில்லாம் என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ணக்கூடாது! ஆமாம், சொல்லிட்டேன்! :) ;))

பாசிப்பருப்பு அல்வா ஜோரா இருக்கு! இதுதானே அசோகான்னு சொல்லுவாங்க?! எங்கேயோ ஒருமுறை படிச்ச நியாபகம். ஆனால், பாசிப்பருப்பை வேகவைத்து செய்யறதுன்னு நினைக்கிறேன். ஐ எம் நாட் ஹுயுர்! அப்ப இருந்தே, பாசிபருப்பை வைத்து ஒருமுறை செய்துப் பார்க்க‌னும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டே இருக்கேன்... :)
இப்ப உங்க குறிப்பு ஈசியாவும், யம்மியாவும் தெரியுதே! ஆக, கூடிய விரைவில் செய்துபார்த்து சொல்கிறேன்.

வழக்கம்போல ப்ரசண்டேஷனில் வனி 'டச்' நல்லா தெரியுது!, இதயவடிவில் அல்வா அழகா இருக்கு! செர்விங் ட்ரேஸ் கலர் சூப்பர்! :) வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

வனிதா,

சுவையான ஹல்வா..இது போலே உளுத்தம் பருப்பில் செய்வாங்க..
வாழ்த்துக்கள்...

என்றும் அன்புடன்,
கவிதா

உங்க ஹல்வா நல்லா இருக்குங்க பார்க்க, செய்முறைய பார்த்தா நிச்சயம் ருசியும் நல்லா இருக்கும்னு தெரியுது. போட்டோ கூட நல்லா இருக்குங்க.

பாசிப்பருப்பு அல்வா ரொம்ப ஹெல்தி டிஷ்... கண்டிப்பா ட்ரை செய்வேன்.... விருப்பப்பட்டியலில் சேர்த்தாச்சு......

அக்கா... ஹல்வா செஞ்சாச்சு........ ஆனா பர்பி ஆயிடுச்சு.... பருப்பை நல்லா சிவக்க வறுத்துட்டேன்... ஆனா டேஸ்ட் சூப்பர்....... நல்லா வாசனையாவும்(ப்ளேவர்) இருந்தது.......

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

இமா... முதல் பதிவா??? :) மிக்க நன்றி இமா, அவசியம் செய்து பார்த்து எப்படி வந்ததுன்னு வனிக்கு சொல்லிடுங்க ;)

வினோ... மிக்க நன்றி. என்ன செய்ய... சில சமயம் இவ்வளவு நெய்யான்னு நாமே குறைக்கு முயற்சிப்போம், அது சொதப்பும்... இப்படி அனுபவத்தில் கத்துகிட்டதை குறிப்பில் கொடுத்தேன், பயன்படும்னு. :)

தனா... சன்னா பிரியாணி செய்தமைக்கு முதல்ல பெரிய நன்றி :) அல்வா செய்ய போறதுக்கு அடுத்த நன்றி ;) அவசியம் செய்து பார்த்து எப்படி வந்ததுன்னு சொல்லுங்க. மிக்க நன்றி.

பாக்கியா... நிச்சயம் ரொம்ப சுவையான அல்வா பாக்கியா. அவசியம் செய்து பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கல்பனா... மிக்க நன்றி. நிச்சயமா குட்டீஸ்க்கு ரொம்ப பிடிக்கும், அவசியம் செய்து பார்த்து எப்படி வந்ததுன்னு மறக்காம சொல்லுங்க. :)

சுமி... மிக்க நன்றி. பான் போகிபா பிடிச்சது ரொம்ப மகிழ்ச்சி. செய்துபார்த்து தெரிவித்தமைக்கு நன்றி சுமி. அல்வாவும் ட்ரை பண்ணி பாருங்க, நிச்சயம் பிடிக்கும். :)

பரணிகா... உங்க பெயர் அழகா இருக்கு :) மிக்க நன்றி... அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

சீதாலஷ்மி... நீங்க சொன்னா சரி தான் :) ஆனா அதோட விடமாட்டோம்ல... செய்து பார்த்து சொல்லனும், பிடிச்சுதா இல்லையான்னு ;) மிக்க நன்றி சீதாலஷ்மி.

இளவரசி... மிக்க நன்றி. என்ன செய்ய நாம அனுபவத்தில் சொதப்பும்னு தெரிஞ்சுகிட்டதை முதல்லயே சொன்னா மற்றவர்களுக்கு முதல் அடம்ப்ட்லயே சரியா வரும்னு ஒரு ஆசை தான் ;) அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க இளவரசி.

சுவர்ணா... ஒன்னு என்ன... இன்னும் நிறைய செய்து தந்துருவோம் :) சுவர்ணாக்கு இல்லாததா??? மிக்க நன்றி சுவர்ணா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தீபா... உண்மையில் வாசம் வீட்டை தூக்கும் :) நெய்... சும்மாவா??? மிக்க நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க.

ரீம்... கொஞ்சம் நாளா முன் போல் பார்க்க முடியலயே... நலமா? மிக்க நன்றி ரீம். அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. :)

குமாரி... வாவ்!!! என்ன நீண்ட.... இடைவெளி??? நலமா? அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க, சுவையும் அருமையா இருக்கும். மிக்க நன்றி குமாரி. :)

கௌதமி... மிக்க நன்றி. பாசிபருப்பில் தான் அல்வா ;) அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க.

சுஸ்ரீ... சந்தேகமே வேணாம்... பாசிப்பருப்பு வேக வைத்து செய்வது தான் அசோகா அல்வா. ஒரே வித்தியாசம் அதில் கோதுமை மாவு சேர்ப்பாங்க. நம்ம கொஞ்சம் சோம்பேரி ஆச்சா, அதான் இப்படிலாம் ட்ரை பண்றோம் ;) ப்ரெசண்டேஷன் இம்முறை அவசரத்தில் எடுத்தது, நிதானமா இன்னும் நல்லா செய்ய நினைச்சு முடியல. பிடிச்சதில் மகிழ்ச்சி சுஸ்ரீ. மிக்க நன்றி.

கவிதா... மிக்க நன்றி. உளுந்துலயா??? ட்ரை பண்ணிடுவோம்... முடிஞ்சா குறிப்பு கொடுங்க ப்ளீஸ். :)

உமா... மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சுவை பிடிச்சுதான்னு சொல்லுங்க. :)

பிரியா... நான் முதல் பதிவுக்கு பதில் போடும் முன் ஜெட்டா செய்துட்டீங்களா??? :) எனக்கு மகிழ்ச்சியா இருக்குங்க. ஆனா பர்ஃபி ஆயிடுச்சே ;) கண்டிப்பா அதிகம் வறுத்தது ஒரு காரணம். கூடவே நெய் எவ்வளவு சேர்த்தீங்கன்னும் பாருங்க. குறைவா இருந்தாலும் ட்ரையா பர்ஃபி ஆகும். நான் லேசா வாசம் வர வறுக்க சொன்னேன், ஆனா அதிகம் வறுத்தா என்னாகும்னு நீங்க சொன்னது பெர்ஃபக்ட் :) இருந்தாலும் பர்ஃபி பிடிச்சதில் எனக்கு மகிழ்ச்சியே. :) மிக்க நன்றி பிரியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
பாசிப்பருப்பு அல்வாவும்,ப்ரெசெண்ட்டேஷனும் ரொம்ப அருமையா இருக்கு.அல்வாவில் ஃபுட் கலர் சேர்க்காமல்,கலர்-கலர் டிஷ்களில் ப்ரெசண்ட் பண்ணியிருப்பது சூப்பர்.இந்த அல்வாவையும் செய்து பார்த்து சொல்றேன்.வழக்கம்போலவே படங்களும்,டிப்ஸ்களும் அருமை.அசத்தலான அல்வா குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

அல்வா செய்து சொல்ல முதல் ஆள் நீங்க தான் :) உங்க பின்னூட்டத்துக்காகவும், போட்டோவுக்காகவும் காத்திருக்கேன். செய்துட்டு சொல்லுங்க. மிக்க நன்றி ஹர்ஷா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட்டகாசம்.. அமர்க்களம்.. ஹார்ட்&ஹாட் பிரசன்டேசன்னா வனினு சொல்லிடலாம். கடைசி போட்டோவைப் பார்த்ததும், நாம 1 மாசம் ஊருக்கு போயிட்டு வர்றதுக்குள்ள பாபு போட்டோஸ் எல்லாம் 3D எஃபெக்ட்ல போட்டு அருசுவைய அப்கிரேட் பண்ணிட்டார்னு நினைச்சேன். அந்த ஹார்ட் 'என்னை பிடிச்சுக்கோனு' செர்விங் ட்ரேல இருந்து எம்பி குதிச்சுட்டு இருக்கு.. பிடிச்சி சிந்தாம சிதறாம சாப்டேனே...... போட்டோஸ் செம்ம... செம்ம... ஜவ்வரிசி அல்வா ஏற்கனவே செய்தாச்சு... இதை டெஃபனிட்டா டிரை பண்ணிட்டு சொல்றேன்...

99% Complete is 100% Incomplete.

அன்பு கலா... இதை விட புகழ்ந்து ஒரு குறிப்புக்கு பின்னூட்டம் தரவே முடியாது. :) எனக்கு என்ன சொல்லி பதில் பதிவு போடுறதுன்னே தெரியல. ஏனோ எனக்கு எப்பவுமே வார்த்தைகள் போதுவதில்லை... மனமார்ந்த நன்றிகள் பல. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. உங்க பின்னூட்டத்துக்காக நான் காத்திருக்கேன். உங்கள் அன்பான பின்னூட்டத்துக்கு மீண்டும் நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நிச்சயம் செய்து பார்க்க ஆசை. கண்டிப்ப செய்வென். நன்றி.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா