புடல‌ங்காய் பால்கூட்டு

தேதி: April 24, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (7 votes)

 

புடல‌ங்காய் - 1 1/2 கப் (பொடியாக நறுக்கிய துண்டுகள்)
வேக‌வைத்த‌ துவ‌ர‌ம் ப‌ருப்பு - ஒரு க‌ப்
ம‌ஞ்ச‌ள்தூள் - அரை தேக்க‌ர‌ண்டி
க‌டுகு - கால் தேக்க‌ர‌ண்டி
காய்ந்த மிளகாய் - ‍ 3
க‌றிவேப்பிலை - ‍ சிறிது
எண்ணெய் - தாளிக்க‌
உப்பு - தேவையான‌ அள‌வு
அரைக்க‌:
தேங்காய்துருவல் - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5 அல்லது 6
சீர‌க‌ம் - 3/4 தேக்க‌ர‌ண்டி
பால் - கால் கப் வ‌ரை


 

புடலங்காயை பொடியான துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை கிள்ளி வைக்கவும். தேங்காய், சீரகம் மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு சிறிதளவு பால் (த‌ண்ணீருக்குப் ப‌தில் பால்) சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திர‌த்தில் தாளிக்க‌ தேவையான‌ அள‌வு எண்ணெய் விட்டு, சூடான‌தும் க‌டுகு போட்டு பொரிந்த‌‌தும், காய்ந்த‌‌ மிள‌காய் போட்டு சில‌ நொடிக‌ள் வ‌றுக்க‌வும். பிற‌கு இத‌னுட‌ன் கறிவேப்பிலை சேர்த்து, கூட‌வே ந‌றுக்கி வைத்த புடலங்காய், மஞ்சள்தூளை போட்டு வ‌த‌க்க‌வும்.
காய் சில‌ நிமிட‌ங்க‌ள் வ‌த‌ங்கிய‌தும், ஒரு க‌ப் அள‌விற்கு த‌ண்ணீரை ஊற்ற‌வும். காய்க்கு தேவையான‌ அள‌வு உப்பை சேர்க்க‌வும். இத‌னை ஒரு மூடிப்போட்டு சில‌ நிமிட‌ங்க‌ள் காய் வேகும் வ‌ரை விட‌வும். பிறகு அத‌னுட‌ன் அரைத்து வைத்த‌ விழுதை சேர்க்கவும்.
அதன் பிறகு வெந்த பருப்பை மசித்து சேர்க்கவும். கூட்டு மிகவும் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
உப்பு சரிப்பார்த்து, தேவைப்பட்டால் சிறிது சேர்த்து, எல்லாமாக சேர்த்து கொதிக்க விடவும். ஏற்கனவே காய் வெந்து இருப்பதால், ரொம்ப கொதிக்க வேண்டிய தேவை இருக்காது. இப்போது சுவையான‌ புடல‌ங்காய் பால் கூட்டு த‌யார்! சூடான சாத‌த்தில் போட்டு, ஒரு துளி நெய் விட்டு பிசைந்து சாப்பிட சுவையானதாக‌ இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு சுஸ்ரீ

வீட்டில் புடலங்காய் ரெடியாக இருக்கு. நாளைக்கே நீங்க சொல்லியிருக்கும் முறையில் செய்து விடுகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

hai susri
ungal pudalangai kurippu appidie en amma samayala niyabhaga paduthuthu, amma ippidi than seivanga, nalla kuripu, valthukkal.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுஜா, எளிய முறையில்,தெளிவான விளக்கங்களோடும், விளக்கத்தோடும் மிக அருமையாக ஒரு குறிப்பை தந்தீர்கள். நான் புடலங்காயை வேறு விதத்தில் கூட்டு செய்துள்ளேன். பால் சேர்த்து செய்ததில்லை. இதுபோல செய்து பார்த்துவிட்டு இங்கே வரும்போது நிச்சயம் பதிவிடுகிறேன் ;) வாழ்த்துக்கள் சுஜா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சான்ஸே இல்ல.... நீங்களா??? ப்ரோக்கலி இல்லாம வந்தது நீங்களா ;) சும்மா தமாசு... கோவிக்காதீங்க. ரொம்ப சூப்பர். சுலபமான சுவையான புடலங்காய். ஐ லைக் புடலங்காய்... அடுத்தமுறை வாங்கினதும் இது தான் செய்ய போறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஜா முகப்பில் பார்த்ததும் உங்க குறிப்பு தான்னு கண்டுபிடிச்சிட்டேன்! இது வரையில் பால் கூட்டில் பருப்பு சேர்த்து செய்ததில்லை. செய்திடுவோம்! வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சுஸ்ரீ,
புடலங்காய் பால்கூட்டு புதுமையா இருக்கு.என்னவருக்கு புடலங்காய் ரொம்ப பிடிக்கும்.கண்டிப்பா செய்து பார்த்து சொல்றேன்.முதல் படத்தில் பொருட்களை அலங்கரித்திருப்பது நல்லாயிருக்கு.எல்லா படங்களும் வழக்கம் போலவே பளிச்சுனு வந்திருக்கு.அருமையான குறிப்புக்கு வாழ்த்துக்கள் சுஸ்ரீ.

புடலங்காயில் பால் சேர்த்து புதுவிதமா கூட்டு செய்திருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. பொரியல், பருப்பு கூட்டு மட்டும் செய்ற எனக்கு இது ஒரு நல்ல மாற்று.. மிக்க நன்றி சுஸ்ரீ.. பார்க்கவே ரொம்ப அழகாய் இருக்கு புடலங்காய் பால் கூட்டு

"எல்லாம் நன்மைக்கே"

சுஸ்ரீ புடலை கூட்டில் பால் சேர்த்து செய்திருப்பது புதுமையா இருக்குப்பா நான் பால் சேர்க்காமல்தா செய்துருக்கேன் அடுத்த முறை உங்க முறைப்படி செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்ரீ உங்க குறிப்பு ரொம்ப நல்லா இருக்குப்பா... வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

டிரை பண்ணியாச்சு... எனக்கு இங்க புடலங்காய் கிடைக்காததால் சுரைக்காய் வைத்து பண்ணினேன். ரொம்ப பிடிச்சது எங்க எல்லொருக்குமே... பால் விட்டு கூட்டு பண்ணுவது இதுதான் முதல் முறை ஆனால் டேஸ்ட் டிஃபரெண்ட்டா இருந்ததால வி லைக் இட். தேங்க்ஸ், போட்டோஸ் கிளாரிட்டி நல்லா இருக்கு.

99% Complete is 100% Incomplete.

குறிப்பை வெளியிட்ட அட்மின் & அறுசுவை குழுவினருக்கு நன்றி!

அன்பு சீதாலஷ்மிமா,
முதல் நபரா வந்தளித்த தங்கள் பதிவிற்கும், வருகைக்கும் மிக்க நன்றிமா!அப்புற‌ம் கூட்டு செய்து பார்த்திங்க‌ளா? பிடித்து இருந்ததா? :)

சுமி,
வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க ந‌ன்றி சுமி! அப்படியா, அம்மா சமையல் நினைவுக்கு வந்துவிட்டதா?! நன்றி! :)

கல்பனா,
பாராட்டுக‌ளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க‌ ந‌ன்றி! இப்ப ஊருக்கு போயிருப்பிங்கன்னு நினைக்கிறேன்.பொறுமையா உங்களுக்கு முடியும்போது செய்துபார்த்து சொல்லுங்க‌ க‌ல்ப்ஸ்! ந‌ன்றி!

வ‌னி,
//...சான்ஸே இல்ல.... நீங்களா??? ப்ரோக்கலி இல்லாம வந்தது நீங்களா ;) சும்மா தமாசு... கோவிக்காதீங்க. ....//
நிச்ச‌ய‌மா கோவிக்கலை வனி, உங்க‌ த‌மாஷை நிஜமாவே ர‌சிச்சேன்! :) :) அடடா..., நானே ம‌றந்தாலும், நீங்க‌ விட‌மாட்டிங்க‌ப்போல என் ப்ராக்க‌லியை?!! :) ;)
உங்க‌ளுக்கும் புட‌ல‌ங்காய் பிடிக்குமா?! சேம் பின்ச்! என‌க்கும், ரொம்ப! :) முடியும்போது செய்துபார்த்து சொல்லுங்க‌ வ‌னி! பாராட்டுக‌ளுக்கு ந‌ன்றி!

லாவ‌ண்யா,
ஓ.. ரியலி?! முகப்பில் பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டிங்களா?! :) ;) செய்துபார்த்ததும் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க லாவண்யா. நன்றி!

ஹர்ஷா,
உங்க வீட்டிலும் புடலங்காய் ஃபேன் இருக்காங்களா? சூப்பர்! ஒவ்வொன்றா கவனித்து, குறிப்பிட்டு பாராட்டும் உங்க பதிவுக்கண்டு ரொம்ப மகிழ்ச்சி! முடியும்போது செய்துபார்த்து சொல்லுங்க பிடித்து இருந்ததா என்று. உங்க பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஹர்ஷா.

‍‍‍‍‍‍‍‍‍பாக்கியா,
உங்க வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க‌ ந‌ன்றி! :) முடியும்போது செய்துபாருங்க‌. ந‌ன்றி!

சுவ‌ர்ணா,
பாராட்டுக‌ளுக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றி சுவர்ணா! :) என‌க்கு ரொம்ப‌வும் இஷ்ட‌மான‌ கூட்டு இது! உங்க‌ளுக்கு சந்த‌ர்ப்ப‌ம் கிடைக்கும்போது க‌ட்டாய‌ம் செய்து பார்த்து சொல்லுங்க‌. மீண்டும் ந‌ன்றி!

ரேவதி,
வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி!

க‌லாதேவி,
அட, நிஜமாவே நீங்க ரொம்ப‌ பாஸ்ட்டுங்க‌! :) அதுக்குள்ள‌ ட்ரை ப‌ண்ணியே பார்த்திட்டிங்க‌ளா?! :) மிக்க நன்றி! உங்க குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கூட்டு டேஸ்ட் பிடித்திருந்ததில் ரொம்ப ம‌கிழ்ச்சி! உங்க பதிவிற்கும், பாராட்டுகளுக்கும் மீண்டும் நன்றி! :)

அன்புடன்
சுஸ்ரீ