பிரெட் அல்வா

தேதி: August 7, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

பிரெட் ஸ்லைசஸ் - 10
சீனி - 1 1/2 கப்
முந்திரி - 15
உலர்ந்த திராட்சை - 20
நெய் - அரை கப்
டால்டா - அரை கப்


 

மில்க் பிரட் அல்லது சால்ட் பிரெட் எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். பத்து ஸ்லைசஸ் போதுமானது.
பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி அரைத்துக் கொள்ளவும். மிகவும் பொடியாகிவிடக் கூடாது.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும், இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் பொடித்து வைத்துள்ள பிரெட்டை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு வாணலியில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி சீனியை போட்டு 3 நிமிடம் கிளறி விட்டு வேக விடவும்.
சீனி பாகாக கரைந்து, கொதித்து பொங்கியது போன்று வரும் போது, வறுத்து வைத்துள்ள பிரெட் துகள்களைப் போட்டு நன்கு கிளறி விடவும்.
பிரட் துகள்கள் சற்று வெந்தவுடன் அதனுடன் நெய், டால்டா சேர்த்து நன்கு கிளறி விடவும்.
நெய்யுடன் பிரட் துகள்கள் சேர்ந்து நன்கு வெந்து, அல்வா பதம் வரும்போது, வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி விடவும்.
மேலே நறுக்கின முந்திரி தூவி அலங்கரித்துப் பரிமாறவும். எளிமையாய் தயாரிக்கக்கூடிய சுவையான இனிப்பு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

1 cup equal 2 how many grams?

its better 2 mention n grams rather saying it n cups,its so confusing

anybody pls mention 1cup=?grams pls....

அஸ்ஸலாமு அலைக்கும் நுவைஸ்

ஒரு கப் - இரு நூரு கிராம் ( ஒரு டம்ளர் ( ஒரு ஆழாக்கு)
சிறிய டீ குடிக்கும் கப்பாக இருந்தால் 100 கிராம் ( அரை ஆழாக்கு)
ஜலீலா

Jaleelakamal

madam i tried your bread halwa.it comeout well.thanks.keepon post your recipes

Its an excellent site to all house wives

சகோதரி நான் இதை நேற்று செய்தேன் என் கணவருக்கு மிகவும் பிடித்துஇருந்தது. அதே போல் எங்க ஹவுசிங்ல் உள்ள சகோதரர்களுக்கும் பிடித்துஇருந்தது. ரொம்ப நன்றி.