மட்டர் பனீர்

தேதி: April 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (13 votes)

 

பனீர் - ஒரு பாக்கெட்
பச்சை பட்டாணி - 150 கிராம்
தக்காளி - 3
வெங்காயம் - 2
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு


 

தக்காளி, வெங்காயம் இரண்டையும் தனித்தனியாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரியை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும் மற்றும் தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பனீரை 10 நிமிடம் ஊற வைக்கவும்.
முதலில் பேனில் வெண்ணெயை போட்டு சூடானதும் வெங்காய விழுதைப் போட்டு நன்கு வதக்கவும்.
பொன்னிறமாக வதங்கிய பின் தக்காளி விழுதை போட்டு நன்கு வதக்கவும்.
அது நன்கு வதங்கியவுடன் முந்திரி பேஸ்டை போட்டு கிளறவும்.
பின் வேக வைத்த பட்டாணியை போட்டு நன்கு கிளறி விடவும்.
5 நிமிடம் கழித்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, தனியா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
மசாலா கொதித்து வந்தவுடன் பனீரை போட்டு ஒரு கிளறு கிளறவும்.
பின் அந்த பேனை மூடி ஒரு பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
இப்பொழுது சூடான சுவையான பனீர் மசாலா ரெடி. இது நாண் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சுவையான மசாலா.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எங்க வீட்டின் பேவரைட் டிஷ்,நானும் இதே மாதிரிதான் பண்ணுவேன்,ரிச்னஸ்காக,கொஞ்சம் ப்ரஷ் க்ரீம் சேர்ப்பேன்.சூப்பரா செஞ்சிருக்கீங்க வாழ்த்துக்கள்.

ரே 10 நாள் ஆபிஸ்க்கு லீவ் போட்டுட்டு சமையலில் கலக்கிட்டு இருக்கியா??

மட்டர் பனீர் சூப்பரா இருக்கு ரே கண்டிப்ப செய்துட்டு சொல்றேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

hi
mutter panner receipe supernga, seimurai easy yavum irukku,kandipa orunal seithudaren, valthukkal.

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

ஆஹா எனக்குபுடிச்ச ரெஸிப்பி. வாரத்தில நாலு நாள் பனீர்தான், மட்டர் தான்.. ;) கண்டிப்பா உங்க ரெஸிப்பியும் ட்ரை பண்றேன் வாழ்த்துக்கள் ரே..! ;-)

Don't Worry Be Happy.

ரே, கலக்குறே ரே.. ஆக ஒரு நாளைக்கு 10 ரெசிப்பின்னு வச்சுட்டாலும், 10 நாள் 100 ரெசிப்பியா? எங்களுக்கு ஜாலி. ரொம்ப சூப்பரா பண்ணியிருக்கே ரே. பன்னீர் எங்க வீட்ல இருக்க பெரியவங்க முதல் வாண்டுகள் வரை விரும்பி உண்ணப்படும் பேவரட் டிஷ். ஒரு குட்டி சந்தேகம் ரே. பனீரை ஏன் தண்ணில போட்டு ஊற வைக்கனும்? கடையில் வாங்கியதாலா? மற்றபடி முந்திரி சேர்த்து நல்ல ரிச் டேஸ்ட் தரும் டிஷ். சப்பாத்தி,ஜீரா ரைசுக்கு சூப்பரா இருக்கும். எங்க வீட்டுக்கு நீ வரும்போது செய்து தர்றேன் பாரு. அப்படியே மெய்மறந்து (???) போய் நின்னுடுவே. படங்கள் மிகவும் தெளிவு. வாழ்த்துக்கள் ரே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கும் மற்றும் அறுசுவை குழுவிற்க்கும் மிக்க நன்றிகள்...

முதலில் வந்து வாழ்த்து பதிவிட்ட ரீம் உங்களுக்கு என் நன்றிகள்ப்பா... அடுத்த முறை நான் செய்யும் போது ப்ரஷ் க்ரீம் சேர்த்து செய்துப்பார்க்கிறேன். மிக்க மிக்க நன்றி...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சுவா கண்டிப்பா செய்து பாரு சூப்பரா இருக்கும்... லீவ்வில் வெட்டியா தூங்கிட்டு தான் இருக்கேன்... மத்தப்படி சமையலில் கலக்கிட்டு இல்லைடா... உன் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சுமி உங்கள் பதிவிற்கு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.. நிச்சயம் செய்து பாருங்க..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் ஜெய் எனக்கும் ரொம்ப பிடிச்ச ரெசிப்பி பனீர் தான்.. நிச்சயம் ட்ரை பண்ணுங்க... பதிவிட்டமைக்கு மிக்க நன்றி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

கல்ப்ஸ் இது கொஞ்சம் ஓவர்தான்... 10 நாளைக்கு ஒன்னுன்னு சொன்ன ஒகே... பத்து நாளைக்கு பத்தா அதுவும் நானா இது ரொம்ப ஓவர்... ஒன்று செய்வதே ரொம்ப கஷ்டம் அதெல்லாம் நம்ம ஜெய் மேடம் தான் செய்வாங்க... தண்ணீரில் ஒரு 5 நிமிடம் ஊற வைத்து செய்தால் கொஞ்சம் மெருதுவா வரும் டா அதான் அப்படி செய்தேன்.. நீயும் செய்து குட்டிஸ்க்கு கொடு... நன்றி நன்றி நன்றி

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மட்டர் பனீர் ஹோட்டல் சாப்பிட்டதுதான் இனி வீட்லையும் செய்யலாம் உங்க குறிப்பை பார்த்து. நான் போய் கடையில் கேட்கற நேரம் பனீர் கிடைக்க மாட்டுது:( ரே. பனீர் கிடைத்தால் செய்து பார்க்கிறேன். இன்னும் 3 குறிப்புதான் நீங்க கூட்டாஞ்சோறில் இடம் பிடிப்பதற்கு வாழ்த்துக்கள்.

மட்டர் பனீர் அழகா செய்து காண்பித்திருக்கிங்க. எங்க வீட்டில, குறிப்பா என் பொண்ணுக்கு பனீர் டிஷ்ச‌ஸ்னா எப்பவும் ரொம்ப இஷ்டம். ஆக, நான் அடிக்கடி பாலக் பனீர் செய்வதுண்டு. அடுத்தமுறை சப்பாத்திக்கு உங்க மட்டர் பனீர் செய்துபார்த்து சொல்கிறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் வினோ மிக்க நன்றிப்பா உங்கள் வாழ்த்துக்கு.. நான் எத்தனை அனுப்பியிருக்கேன்னு எனக்கே தெரியாது நீங்க எப்படி நோட் பண்ணீங்க... இன்னும்
மூன்று குறிப்பா ம்ம் முயற்சி செய்கிறேன்... உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஆமாங்க ஸ்ரீ குட்டிஸ் அனைவருக்கும் இந்த பனீரில் செய்த அனைத்து டிஸ்சும் பிடிக்கும்.. நிச்சயம் செய்துபாருங்க குட்டிஸ் சூப்பரா சாப்பிடுவாங்க... செம்ம டேஸ்டா இருக்கும்... உங்கள் பதிவிற்கும் வாழ்த்துக்ககு மிக்க நன்றிங்க...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரே

என்னோட பேவரிட் டிஷ்..
சூப்பரா செய்து இருக்கிங்க.. வாழ்த்துக்கள்
செய்து பார்த்து சொல்கிறேன் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் ரம்ஸ் எப்படி இருக்கீங்க.. உங்களோடு பேசி ரொம்ப நாள் ஆச்சி... ரொம்ப ரொம்ப நன்றிங்க... நிச்சயம் செய்து பாருங்க... நல்லா இருக்கும்... வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நேற்று டின்னருக்கு மட்டர் பனீர் செய்தேன் நானுடன் சாப்பிட நன்றாக இருந்தது. நன்றி.

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்