தக்காளி சாதம்

தேதி: April 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (23 votes)

 

அரிசி - 2 கப்
தக்காளி - 5
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
உப்பு, மஞ்சள் தூள்
கொத்தமல்லி
தாளிக்க:
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
வறுத்து பொடிக்க:
மிளகாய் வற்றல் (விதை நீக்கியது) - 2
தனியா - அரை மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை மேசைக்கரண்டி
உளுந்து - கால் மேசைக்கரண்டி
வெந்தயம் - ஒரு சிட்டிகை
விரும்பினால் சேர்க்க:
வறுத்து தோல் நீக்கிய வேர்கடலை
எண்ணெயில் வறுத்த முந்திரி


 

வறுத்து பொடிக்க வேண்டிய அனைத்தையும் வெறும் கடாயில் வறுத்து வைக்கவும்.
சூடு ஆறியதும் மிக்ஸியில் பொடியாக அரைத்து வைக்கவும்.
சாதத்தை வடித்து எண்ணெய் ஒரு தேக்கரண்டி விட்டு கலந்து வைக்கவும். தக்காளியை அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதில் அரைத்த தக்காளி விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
கலவை கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது எடுக்கவும்.
சூடான சாதத்தில் இந்த கலவையை சேர்த்து சாதம் குழையாமல் கலந்து விடவும்.
இதன் மேல் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு பொடி சேர்த்து மீண்டும் கலந்து விடவும்.
விரும்பினால் வறுத்த வேர்கடலை அல்லது முந்திரி தூவலாம். இதை நன்றாக அழுத்தி அரை மணி நேரம் வைத்து பின் சாப்பிட சுவையாக இருக்கும்.

பொடி அளவு உங்கள் விருப்பத்துக்கு சேர்க்கவும். அதிகம் சேர்க்க சேர்க்க ட்ரை ஆகும் சாதம். கலவையை மொத்தமும் சாதத்தில் முதலிலேயே சேர்த்து விடாமல், கொஞ்சம் கொஞ்சமாக உப்பு, காரம் தேவையை பார்த்து சாதம், தக்காளி கலவை அளவை சரி செய்யவும். சாதமோ, கலவையோ அதிகமாகிவிடாமல் இருக்க உதவும். தனியா, மிளகாய் வற்றல் எல்லாம் நன்றாக வறுப்பட வேண்டும். இல்லை என்றால் பொடி வாசம் நன்றாக இருக்காது, அரைக்கவும் சரியாக வராது. சாதம் எண்ணெய் கலந்து சூடு ஆறிய பின் கலவை மட்டும் சூடாக சேர்ப்பதால் குழையாமல் இருக்கும். அரிசி உங்கள் விருப்பம். நான் பயன்படுத்தி இருப்பது புழுங்கல் அரிசி. பாசுமதி, பச்சரிசியிலும் இதை செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எப்படி இருக்கிறீங்க? தக்காளி சாதம் ரொம்ப அருமை. பார்த்தவுடனே பசியைத்தூன்டும் ரெசிபி. ப்ரெசென்டேஷன் ரொம்ப அழகு.. ரோஸ் உங்க சமையல் திறமைக்கு ஒரு மகுடம் .வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ஹலீமா

தக்காளி சாதம் சூப்பர்,பொடி எல்லாம் சேர்த்து புதுசா இருக்கு.அழகா ப்ரசண்ட் பண்ணியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.

தக்காளி சாதம் வித்யாசமான முறையில் இருக்கு வாழ்த்துக்கள்.கண்டிப்பா செய்து பார்க்கிறேன்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

hi vani
thakkali satham kuripu vithiyasama irukku, rose rompa alagu, elavathu fotola white rice mela irukara red thakkali thokku parkave aga...nnu supera irukku,pona varam kalps oru kuripu tomotto ricekku koduthanga,ippo neenga innum differenta koduthu irukinga, kandipa seithutu solren, valthukkal.intha podi extrava senchu fridgela store panni vachukala vani?

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

Hai how are you? thakkali saadham super.nice presentation.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

அன்பு வனிதா,

பொடி சேர்த்து, தக்காளி அரைச்சு, செய்திருப்பது நன்றாக இருக்கு.

லன்ச் பாக்ஸுக்கு ஏற்ற சாதம். விருப்பப் பட்டியலில் சேர்த்திருக்கேன். செய்து பார்த்து விடுகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

வனிதா, பொடி சேர்த்த தக்காளி சாதம் வித்தியாசமான முயற்சி. பிரசண்டேஷன் பார்க்கும் போதே எடுக்காத பசியும் எடுக்குது. தக்காளி சாத லிஸ்ட்டில் சேர்த்துட்டேன். வாழ்த்துக்கள் வனிதா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வனி தக்காளிய அரைத்து போடுவதால் யாரும் தூக்கி வீச முடியாது. டேஸ்ட்டும் நல்லா வரும்னு நினைக்கரேன்

தொட்டியில் பூத்த ரோஜா வெகு அழகு!

தக்காளி சாதம் சாப்பிடுவோர் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :) இன்னைக்கு காலை அனுப்பி, இன்றே வந்துட்டுது ;) ஜெட் ஸ்பீடால்ல இருக்கு அறுசுவை :)

ஹலீமா... மிக்க நன்றி. பின்னூட்டமே அழகா கொடுக்கறீங்க :) படிக்க மகிழ்ச்சியா இருக்கு. அவசியம் ட்ரை பண்ணி பாருங்க.

ரீம்... மிக்க நன்றி. சுவையும் சூப்பரா இருக்கும், அவசியம் செய்து பாருங்க :)

சுவர்ணா... மிக்க நன்றி. கொஞ்சம் வித்தியாசமான சுவையோட நல்லா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
தக்காளி சாதம் குறிப்பும்,ப்ரெசெண்ட்டேஷனும் அசத்தலா இருக்கு.தக்காளி ரோஸை சாதம் பக்கத்தில் வைத்தது இன்னும் அழகு.முகப்பில் உங்க இரண்டு குறிப்புகளின் ஃபோட்டோஸும் சூப்பரா இருக்கு.புதுமையான தக்காளி சாத குறிப்பு.கண்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன்.வாழ்த்துக்கள் வனிதா.

தோழி வனி ,
எப்பவுமே இந்த பொடி தனியா வெச்சிருப்பேன்.
ஆணா இந்த மாதிரி தக்காளி சாதத்தில் செய்யலாம் என்று தெரியாது.
நேற்று செய்து பார்த்து , ருசித்தேன்தோம்) .விளக்ககங்கள் என்னை போன்றவருக்கும் புரியும் படி இருந்தந்து .
வெரைட்டி டிஷ் என்றால் இது தானோ என்பது போல் இருந்தது டேஸ்ட்.
நன்றி !!
ரொம்பவே வித்தியாசமான குறிப்பு .
வாழ்த்துக்கள்

பொடி சேர்த்து தம் போட்டு தக்காளி சாதம் பிரமாதமா இருக்கு. கூடவே அந்த தக்காளி ரோஜா அசத்தலா இருக்கு. கடைசி படத்தோட லைட்டிங் சூப்பர்ப். இதுக்கு மேல இந்த ரெசிபியில் யாருமே டவுட் கேட்கவே கூடாது என்பது போல் உள்ளது கடைசியில் உள்ள விளக்கம் :) அருமை. வாழ்த்துக்கள்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தக்காளி சாதம் பார்க்கவே அட்டகாசமா இருக்கு, இந்த வாரம் செய்துட்டு சொல்றேங்க வனிதா.

வனிதா வித்தியாசமான தக்காளி சாதம். கண்டிப்பா டேஸ்டியா இருக்கும்னு நினைக்கிறேன். எனக்கு இந்த மாதிரி பொடியை சாதத்துல பிசைந்து சாப்பிட்ரது ரொம்ப பிடிக்கும். கண்டிப்பா இன்னைகே செய்றேன்.
இந்த திங்கள்கிழமை தான் உங்க குறிப்பிலிருந்து கோவில் புளியோதரை செய்தேன் அருமை அருமை. ரொம்ப நல்லா இருந்தது. அதற்கு பதிவிடலாம்னு வந்தா மற்றுமொரு அசத்தலான குறிப்பு, சோ இதிலேயே பதிவிட்டுட்டேன்.

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

தக்காளி சாதம் என்ற ஒரு பேர்ல எத்தனை விதம். பொடி போட்டு செய்த தக்காளி சாதம் இப்பதான் கேள்விப்படுறேன் வனி. வித்தியாசமான சுவையில் இருக்கும் நினைக்கிறேன் கண்டிப்பா செய்துப்பார்க்கிறேன்.

வனி வித்தியாசமா செய்திருக்கீங்க... எல்லாம் படமும் சூப்பரா இருக்குங்க. கடைசி படம் கலக்குது... வாழ்த்துகள்.. நானும் செய்து பார்க்கிறேன்...

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தக்காளி சாதம், பொடி அரைத்து சேர்த்து செய்திருப்பது நல்லாயிருக்கு! தக்காளி சாதம் மட்டும் எத்தனை விதம்னாலும் எனக்கு அலுக்கவே அலுக்காது, ஏன்னா நம்ம ஆல்டைம் ஃபேவரட் ஆச்சே!! :) அடுத்தமுறை, உங்க மெத்தட்ல செய்துபார்த்திடறேன். படங்கள் எல்லாமே பளிச்னு வந்திருக்கு. தக்காளி ரோஸுடன் கூடிய அந்த கடைசி ப்ரசண்டேஷன் படம் வெகு அழகு! வாழ்த்துக்கள் வனி!

அன்புடன்
சுஸ்ரீ

படம் பார்த்து கதை சொல் மாதிரி.. படம் பார்த்து பெயர் சொல்லலாம் போல.. அத்தனை அழகான படம் சாப்பிட அழைக்குது.. வாழ்த்துக்கள் ) ..
ரோஜா அழகு :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுமி... மிக்க நன்றி. இதுக்கு முன்னாடி பல தக்காளி சாதம் குறிப்புகள் அறுசுவையில் இருக்கு சுமி ;) ஏன் கல்பனா குறிப்போட நிறுத்திட்டீங்க??? எல்லாத்தையும் ட்ரை பண்ணி பாருங்க... ஒவ்வொன்னும் ஒரு சுவையா சூப்பரா இருக்கும். தாராளமா செய்து ஃப்ரிட்ஜ்’ல வைகலாம். வெளியவே வெச்சா கூட 1 வாரம் பக்கம் கெடாம இருக்கும். வறுக்குறதால. ஒழுங்கா வறுக்காட்டா கெட வாய்ப்பிருக்கு. உள்ள வெச்சா பயமே இல்ல :)

சம்னாஸ்... நான் நலம். மிக்க நன்றி. நீங்க எப்படி இருக்கீங்க? வருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி. :)

சீதாலஷ்மி... எப்போ செய்தாலும் வனிக்கு மறக்காம சொல்லி போடனும். இல்லைன்னா நேரா வந்து கேள்வி கேட்பேனாக்கும் ;) மிக்க நன்றி சீதாலஷ்மி.

கல்பனா... மிக்க நன்றி. லிஸ்ட்டில் சேர்த்ததோடு விடாம செய்துட்டு சொல்லனும் :) அப்போ தான் நான் உங்களை விடுவேன்.

நிகிலா... மிக்க நன்றி. ஆமாம் இது வழக்கத்தை விட வாசமாவும் இருக்கும். அவசியம் செய்து பாருங்க :)

ஜெய்... அது தட்டில் பூத்த ரோஜா ;) சங்கத்தில் நீங்களும் மெம்பரா??? மிக்க நன்றி ஜெய்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹர்ஷா... சின்ன விஷயத்தை கூட கவனிச்சு பதிவிடுறீங்க :) மிக்க நன்றி. அவசியம் செய்து சொல்லுங்க. காத்திருக்கேன்.

உத்ரா... அதுக்குள்ள செய்தாச்சா??? ஆகா... இது மற்ற தக்காளி சாதத்தை விட ரொம்பவே சுவை மாறுபடும். பொடியின் வாசம் நல்லா இருக்கும். மிக்க நன்றி உத்ரா. :)

லாவி... லைட்டிங் இப்போ தான் உங்களோடது ஹர்ஷா குறிப்பெல்லாம் பார்த்து இம்ப்ரூவ் பண்ண ட்ரை பண்றேன். :) மிக்க நன்றி லாவி. அவசியம் செய்து பார்க்கனும்.

உமா... அவசியம் செய்து சொல்லுங்க... காத்திருக்கேன். மிக்க நன்றி. :)

ஷீபா... புளியோதரை செய்துட்டீங்களா??? உங்களுக்கு பிடிச்சதில் மிக்க மகிழ்ச்சி. அவசியம் இதையும் செய்து பாருங்க... பிடிக்கும்னு நம்பறேன் :) செய்துட்டு சொல்லுங்க எப்படி வந்தது என்று. மிக்க நன்றி ஷீபா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வினோ... நிச்சயம் நல்ல வாசமா இருக்கும், சுவையும் நல்லா இருக்கும். அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க :) மிக்க நன்றி.

ரேவதி... மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க :)

சுஸ்ரீ... எல்லாத்தையும் கவனிச்சு விளக்கமா பதிவிடும் உங்க பின்னூட்டங்கள் எப்பவும் ஸ்பெஷல் தான் :) மிக்க நன்றி. அவசியம் ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க. முக்கியமா மகளுக்கு. ;)

ரம்யா... அழைத்தால் தாமதிக்காம வனி வீட்டுக்கு வந்துரனும் :) கவிதை போன்ற பதிவுக்கு மிக்க நன்றி ரம்யா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புதிதாக சமைக்க ஆரம்பித்திருக்கும் எனக்கு வனிதா மேடம்தான் என்றாலே ஆச்சரியம்தான். உங்க குறிப்புகலின் தயவினால் பிழைத்துகொண்டிற்கிரேன்.. நன்றி

Sivani

உங்க பதிவை படிக்கவே மகிழ்ச்சியா இருக்கு :) சீக்கிரமே உங்க குறிப்புகளும் அறுசுவையில் வரனும், நாங்க சுவைத்து மகிழனும். மிக்க நன்றி சிவானி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Tomato rice and chattini is super.I will Make sure.

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா