ஸ்வீட் கார்ன் சூப்

தேதி: April 26, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

ஸ்வீட் கார்ன் - ஒரு கப்
வெங்காயம் - 2 மேசைக்கரண்டி (நீளமாக நறுக்கியது)
காரட் - 2 மேசைக்கரண்டி (நீளமாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - ஒரு மேசைக்கரண்டி
பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
காளான் - 3
கார்ன் மாவு - ஒரு மேசைக்கரண்டி
பால் - அரை கப்
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
சோயா சாஸ் - கால் தேக்கரண்டி
வினிகர் - சில துளிகள்
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் காய்கறிகளை பொடியாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும். 2 மேசைக்கரண்டி அளவு கார்ன் எடுத்து தண்ணீர் சேர்த்து சற்று கொர கொரப்பாக அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு சேர்த்து வதக்கவும். சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் அதிகம் வதங்க கூடாது. அப்படி வதங்கினால் குழைந்து விடும். உப்மாவிற்கு வதக்கும் பதம் தான் இதற்கும்.
பிறகு மற்ற காய்கறிகளை சேர்த்து வதக்கவும். காய்கறிகளையும் அதிகம் வதக்க கூடாது. ஐந்து நிமிடமே போதுமானது.
காய்கறிகள் சிறிது வதங்கியதும் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.
இரண்டு நிமிடம் வதக்கி அரைத்து வைத்துள்ள கார்ன் சேர்த்து வதக்கவும்.
மூன்று நிமிடம் வதக்கிய பிறகு மூன்று கப் தண்ணீர் சேர்க்கவும். இப்பொழுது சிறிதளவு வினிகர், உப்பு, மிளகு தூள் சேர்க்கவும். சோயா சாஸ் மற்றும் வினிகர் சேர்த்திருப்பதால் உப்பின் அளவை குறைத்தே சேர்க்கவும்.
பாலை காய்ச்சி ஆற வைக்கவும். வெது வெதுப்பாக இருக்கும் பொழுது அதனுடன் கார்ன் மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். இந்த கரைசலை சூப்பில் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து சிறிதளவு வெங்காய தாள் அல்லது சைவ்ஸ் அல்லது கொத்தமல்லி தூவி பரிமாறவும். சுவையான ஸ்வீட் கார்ன் சூப் தயார்.

இதனுடன் முட்டையும் சேர்த்து செய்யலாம். ஒரு முட்டையை நன்கு நுரை வரும் வரையிலும் அடித்து வைக்கவும். பிறகு கார்ன் மாவு கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் முட்டையை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும். இரண்டொரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து விடவும். அதிகம் சூடு படுத்தக் கூடாது. சூப்பின் சூட்டிலே அது வெந்து விடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல ரிச் சூப். பார்க்கவே சூப்பர். கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு பதிவு போடுறேன்.

ஸ்வீன் கார்ன் சூப் ரொம்ப நல்லா இருக்கு. சைவ்ஸ்- னா என்ன?

ஸ்வீட் காரன் சூப் பார்க்கவே அருமையா இருக்கு.. புது முறையில் சூப் செய்திருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

"எல்லாம் நன்மைக்கே"

பார்த்ததும் கண்டு பிடிச்சுட்டேன்... நம்ம லாவி தான்னு ;) சூப்பரான ஹெல்தியான சூப். படம் பளிச் பளிச் வழக்கம் போல :) சூப்பர் லாவி. செய்துடுவேன் சீக்கிரமே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் முகப்பில் பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேனே இது நீங்க‌தான்னு! :) ந‌ல்ல ஈஸி & ஹெல்தி சூப் கொடுத்திருக்கிங்க‌. ப்ரசண்டேஷன் சூப்பர்! தேவையான‌ பொருட்க‌ள் எல்லாமே கைவ‌ச‌ம் த‌யாராவும் இருக்கு. ஆக, கூடிய‌ சீக்கிரமே செய்துபார்த்து சொல்லிடறேன்! வாழ்த்துக்கள் லாவண்யா!

அன்புடன்
சுஸ்ரீ

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு மிக்க நன்றி.

இன்னமும் ரிச்னெஸ் கொண்டுவர வெஜிடபுள் ஸ்டாக் (தண்ணீருக்கு பதிலாக) அல்லது ஒரு க்யுப் பயன்படுத்தலாம். அசைவம் சாப்பிடுவராக இருந்தால் சிக்கன் ஸ்டாக் கூட பயன்படுத்தலாம். செய்து பார்த்து கண்டிப்பாக வந்து சொல்லணும். காத்திருக்கிறேன்! வாழ்த்துக்கு நன்றி கௌதமி.

வாழ்த்துக்கு மிக்க நன்றி வினோஜா. சைவ்ஸ் என்பது ஒரு வகையான ஹெர்ப். வெங்காய தாழ் போன்றே இருக்கும் ஆனால் இன்னமும் சன்னமாக இருக்கும். சூப் பரிமாறும் போது ப்ரெட் ஸ்டிக்ஸ் அல்லது வருத்த ரொட்டி துண்டுகளுடன் பரிமாறலாம்.

வாழ்த்துக்கு மிக்க பாக்கியலக்ஷ்மி. எனக்கு தெரிந்த ஒரே முறை இப்படி தான். என் வீடிற்கு வந்திருந்த ஒரு ஷெப் நண்பி செய்து காண்பித்தது. நான் கூடவே சில காய்கறிகள் சேர்த்துக் கொண்டேன். அவ்வளவே.

நீங்க கண்டுபிடிச்சிடுவீங்க எனக்கு நல்லாவே தெரியும் கள்ளி. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வனி. செய்துட்டு குட்டீஸ் என்ன சொன்னாங்கன்னு சொல்லுங்க.

போங்க சுஜா நான் அழுதுடுவேன். அப்படியெல்லாம் சும்மா சும்மா கண்டுபிடிக்க கூடாது. சரியா. வேற செர்விங் வேர் கேட்டா அடி தான் விழும் ;) செய்துட்டு சொன்ன மட்டும் போதாது படங்கள் அனுப்புங்க. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

லாவண்யா,
இரண்டு ப்ரசண்ட்டேஷனும் அழகா வந்திருக்கு.கார்ன் அரைத்து சேர்த்திருப்பது புதுசா இருக்கு.கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.ஹெல்தியான சூப் குறிப்புக்கு வாழ்த்துக்கள்.

அன்பு லாவண்யா,

வழக்கம் போலவே நிறையப் பொருட்கள் சேர்த்து ரிச் ஆக செய்து காண்பித்திருக்கீங்க, ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

லாவண்யா ஹெல்த்தியான ரிச்சான சூப் அருமையா இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

லாவி
சூப்பை பார்த்ததுமே அது நீங்க தாணு தெரிந்துவிட்டது.. ஒரே மழையா இருக்கு.. ஆசைய இப்படி அநியாயமா கிளப்பிவிட்டிங்களே :)
யம்மி சூப்.வாழ்த்துக்கள்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

லாவண்யா, உங்களுடைய ஸ்வீட் கார்ன் சூப் இன்று செய்தேன். ரொம்ப சூப்பராக இருந்தது... மிக்க நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)