வாழைப்பூ வடை

தேதி: April 26, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

வாழைப்பூ - சிறியது ஒன்று
கடலை பருப்பு - ஒரு ஆழாக்கு
இஞ்சி - ஒரு சிறுத் துண்டு
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரித்தெடுக்க


 

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை சுத்தம் செய்து அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு மேசைக்கரண்டி கடலை பருப்பை தனியே எடுத்து வைத்து விட்டு, மீதி பருப்பை இஞ்சி, பூண்டு மற்றும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரைத்த கடலைப்பருப்பு, முழு கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும். உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெயை வைத்து காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வடை மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, தட்டி காய்ந்துள்ள எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
இரு பக்கங்களும் சிவந்ததும் எடுத்து, டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.
மொறு மொறுப்பான வாழைப்பூ வடை தயார்.

வாழைப்பூவை மோரில் ஊற வைத்த பின் சமைத்தால் அதிலிருக்கும் சிறுங்கசப்பு நீங்கிவிடும். வாழைப்பூவின் வாசம் தான் இந்த வடையின் சிறப்பு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

very nice harsha...

vazhga valamudan

மசால் வடை ரேஞ்சுக்கு மொறு மொறுன்னு சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்

பார்க்கவே மோருமொருனு சூப்பரா இருக்கு.. ஹெல்தி ரெசிபி

"எல்லாம் நன்மைக்கே"

Mmmmmmm tasty tasty vasanayana vadai.antha plat enaku kuduga

Be simple be sample

ப்ளேட் பார்த்ததும் ஹர்ஷான்னு தெரிஞ்சுடுச்சே ;) என்னோட ஃபேவரட் வாழைப்பூ வடை. வாழைப்பூ இப்போ கிடைக்குது... வாங்கிடுவோம், செய்துருவோம் :) கலக்கல் படங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் இதே மாதிரி தான் வாழைப்பூ வடை செய்வேன்... மசால் வடையை விட இந்த வாழைப்பூ வடை நல்ல மொறுமொறுப்பாக இருக்கும்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

hai harsha.nice recipy.moru morunnu paarkuradhuku romba beautiful la irku..taste and healthy recipy.vaalthukkal.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

எனக்கு ரொம்ப பிடிச்ச வடைங்க... சூப்பரா செய்திருக்கீங்க... வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

வாவ்... வாழைப்பூ வடை ரொம்ப சூப்பராயிருக்கு ஹர்ஷா! எனக்கு ரொம்ப பிடிச்ச வடை இது! :) நானும் முகப்பில் பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டேனே... இது நீங்க‌தான்னு! :)

இப்ப‌ல்லாம் இங்கே அவ்வளவு ஈசியா வாழைப்பூ கிடைக்க மாட்டேங்குது. எப்பவாது கிடைக்கும்போது இதுதான் நானும் எப்பவும் செய்யற ஐய்ட்டம்! அப்படியே எங்கம்மா செய்ததுப்போலவே இருக்கு குறிப்பும், அந்த கடைசிப்பட வடைகளும்! :) வழக்கம்போலவே படங்கள் அத்தனையும் பளிச், பளிச் ரகம்! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை குழுவினருக்கு எனது நன்றிகள்.

சுதா,
முதலாவதாக பதிவிட்டதற்கு ரொம்ப நன்றிங்க.

வினோஜா,
வெங்காயத்துக்கு பதில் நறுக்கிய வாழைப்பூ சேர்ப்பதால் இது மசால் வடையை விட இன்னும் மொறு மொறுப்பா இருக்கும். ;-) இஞ்சி-பூண்டு ஆப்ஷனல் தான்.பதிவுக்கு ரொம்ப நன்றி வினோஜா.

பாக்ய லக்‌ஷ்மி,
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

ரேவதி.S,
ப்ளேட்டு தானே எடுத்துக்கோங்க.உங்களுக்கு தான்.
உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

வனிதா,
ப்ளேட்டு காட்டி கொடுத்துடுச்சா? ;-) கண்டிப்பா வாழைப்பூ வாங்கியதும் செய்து பாருங்க,வனிதா.பதிவுக்கு மிக்க நன்றி.

பிரேமா,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

சம்னாஸ்,
உங்க பதிவுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

ரேவதி.P,
உங்க பதிவுக்கு ரொம்ப நன்றிங்க.

சுஸ்ரீ,
நீங்களும் கண்டுபிடிச்சுட்டீங்களா? ;-) இங்கும் ஒரே ஒரு மெக்ஸிகன் ஸ்டோர்ல மட்டும் தான் வாழைப்பூ கிடைக்கும்.வடைகளும்,படங்களும் என் கை வண்ணமே. உங்க பதிவுக்கு மிக்க நன்றி சுஸ்ரீ.

அன்பு ஹர்ஷா,

குறிப்பு மிகவும் நன்றாக இருக்கு.

எனக்கு இந்த மாதிரி, பொன்னிறமாக வந்ததில்லை. இனி, உங்க குறிப்பின்படி செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வாழைப்பூ வடை அப்படியே நன் செய்வது போலவே இருக்கு வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹர்ஷு

எனக்கு ரொம்பவும் பிடித்தமான வடை.. எப்படிங்க.. ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி சிந்தனை.. நானும் வடை செய்து படம் எடுத்து வெச்சிருக்கேன். இந்தியா போன வேளையில் அனுப்பவில்லை.. ;) உங்க யம்மி வடையை பார்த்ததும் சாப்பிடனும்னு திரும்பவும் ஆசை வந்திடுச்சு.. வாழ்த்துக்கள் )

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Anbu thozhi Harsha vaazhaipoo vadai parkave arumai. Enaku migavum piditha itemgalil idhuvum ondru. Kandippaga seidhu parpen. Nan arusuvaiku pudhiya uruppinar. Aanaal neenda naal parvaiyalar. Idhu ennudaya mudhal pinnoottam. Melum niraya kuripugal vazhanga vaazhthukkal...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

சீதாலக்‌ஷ்மி அம்மா,
கண்டிப்பா செய்து பார்த்து சொல்லுங்க.உங்க பதிவுக்கு மிக்க நன்றி.

ஸ்வர்ணா,
பலகாரம் செய்வதில் எக்ஸ்பெர்ட் நீங்க. உங்களை மிஞ்ச முடியுமா? வாழ்த்துக்கு மிக்க நன்றி.

ரம்ஸ்,
இதுவும் ரொம்ப நாளா அனுப்ப நினைத்திருந்த குறிப்பு.இப்போதான் வாழைப்பூ கிடைத்தது.உங்க வடை குறிப்பையும் அனுப்புங்க.அதையும் செய்து பார்த்துடுவோம்.உங்க பதிவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரம்ஸ்.

நித்யா,
அறுசுவையில் சேர்ந்து முதல் பதிவு எனக்கா?....கேட்கவே மகிழ்ச்சியா இருக்கு.முத்தான முதல் பதிவுக்கு மிக்க நன்றி.கண்டிப்பா வடை செய்து பார்த்து சொல்லுங்க.விரைவில் அழகுத்தமிழில் பதிவிட வாழ்த்துக்கள்.