கத்தரிக்காய் முருங்கைக்காய் காரக்குழம்பு

தேதி: August 8, 2006

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பிஞ்சு கத்தரிக்காய் – கால் கிலோ
முருங்கைக்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் – இருபது
தக்காளி – இரண்டு
பெரிய வெங்காயம் – ஒன்று
தேங்காய் துருவல் – இரண்டு டேபிள் ஸ்பூன்
புளி – ஒரு சிறிய எலுமிச்சையளவு
மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
சாம்பார் பொடி – இரண்டரை டேபிள் ஸ்பூன்
உப்பு – ஒன்றரை டீஸ்பூன்
எண்ணெய் - மூன்று டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
வரமிளகாய் – இரண்டு
பொடித்த வெல்லம் – ஒரு டேபிள் ஸ்பூன்


 

தக்காளி, கத்தரிக்காய்களை நான்காகவும், முருங்கைக்காயை ஒன்றரை அங்குள நீளமான துண்டுகளாகவும் நறுக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைக்கவும். புளியை முன்னூறு மில்லி தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி வைக்கவும். பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்க்கவும்.
தக்காளி நன்கு கரைந்ததும் சாம்பார் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி ஆற வைத்து விழுதாக அரைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் முழுவதும் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, வரமிளகாய் தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இரண்டு நிமிடம் கழித்து கறிவேப்பிலை, காய்களைப் போட்டு மூன்று நிமிடம் வதக்கி உப்பு, மஞ்சள் பொடி, புளி சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
பின் அரைத்த விழுதைப் போட்டு மேலும் எட்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு (குழம்பு கெட்டியாகி மேலே எண்ணெய் மிதக்க வேண்டும்) வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கவும்.


சாம்பார் பொடிக்குப் பதிலாக ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி, ஒன்றரை டேபிள் ஸ்பூன் மல்லிப்பொடி, அரை டீஸ்பூன் பெருங்காயப்பொடியும் சேர்த்து பயன்படுத்தலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

First time I tried with the fried paste

(Onion,tomato & Cocont). It was really good.

Thanks Madam.

Dear Noodles,
உங்களின் தொடர்ந்த பின்னூட்டக் கருத்துக்களுக்கு நன்றி...

Vazhga Tamil!!!

really super thanks