பொரித்த சிக்கன் கிரேவி

தேதி: April 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (11 votes)

 

சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 4
தக்காளி - 4
மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி + கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - அரை மேசைக்கரண்டி + அரை மேசைக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3
கொத்தமல்லி - 2 கொத்து
உப்பு - 3/4 தேக்கரண்டி + அரை தேக்கரண்டி
பொடி செய்ய:
மிளகு - ஒரு மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
சோம்பு - அரை மேசைக்கரண்டி
தனியா - ஒன்றரை மேசைக்கரண்டி
பட்டை - 4
ஏலக்காய் - 3


 

சிக்கனை கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். கொத்தமல்லித் தழையை ஆய்ந்து அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
பொடிக்க கொடுத்துள்ள பொருள்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
சிக்கனுடன் அரை மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், 3/4 தேக்கரண்டி உப்பு போட்டு பிரட்டி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
வெறும் வாணலியில் அல்லது ஒரு பாத்திரத்தில் பொடிக்க கொடுத்திருக்கும் பொருட்களில் முதலில் தனியாவை போட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு சோம்பு, சீரகம், பட்டை, ஏலக்காய், மிளகு போட்டு நன்கு பொரிந்ததும் இறக்கி வைத்து ஆற வைக்கவும். மிக்ஸியில் வறுத்தவற்றை போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த சிக்கனை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
சிக்கன் பொரித்த எண்ணெயில் வெங்காயத்தை போட்டு வதக்கவும். அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தக்காளி போட்டு 3 நிமிடம் வதக்கவும்.
அதில் பொரித்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு மசாலா எல்லா சிக்கனிலும் படும்படி பிரட்டி விடவும்.
அதில் பொடியை போட்டு சிக்கனுடன் நன்கு பிரட்டி விடவும்.
பிறகு கொத்தமல்லி தழை, கால் கப் தண்ணீர் ஊற்றி கிளறி மூடி வேக விடவும்.
5 நிமிடம் கழித்து திறந்து பிரட்டி விட்டு மீண்டும் மூடி வைக்கவும். பின்னர் 7 நிமிடம் கழித்து கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.
சுவையான பொரித்த சிக்கன் கிரேவி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நிஷா பொரித்த சிக்கன் கிரேவி சூப்பரா வந்திருக்கு... வித்தியாசமான குறிப்பு... வாழ்த்துகள்... செம்ம டேஸ்டா இருக்கும் போல வாழ்த்துகள்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சூப்பர் ரெசிப்பி..... பார்க்கவே சாப்பிடணும் போல இருக்கு...... கண்டிப்பா செஞ்சு பாத்திட வேண்டியது தான்......

நிஷா

ஹ்ம்ம்.. சிக்கன் பார்க்கவே அசத்தலா இருக்கு.. அதிலேயும் இந்த பெயர் ரொம்ப அருமையா இருக்கு ;) வாழ்த்துக்கள்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

Assalamu alaikum nisha madam.how r u?supera irukku recipy.nice presentation.vaalthukkal.

"WORLD IS ROUND, ROUND IS ZERO, ZERO IS NOTHING & NOTHING IS LIFE"

சூப்பர் சூப்பர்... இதை போல சிக்கன் கொடுத்த நீங்க செய்திருக்க ப்ளேட் எனக்கு போதாது :) உள்ள போயிட்டே இருக்கும். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா