செட்டிநாட்டு உப்புக்கறி

தேதி: August 8, 2006

பரிமாறும் அளவு: 10 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

ஆட்டுக்கறி – ஒரு கிலோ
சின்ன வெங்காயம் – நூறு கிராம்
தக்காளி – நூறு கிராம்
பூண்டுப் பல் - இருபது
இஞ்சி, பூண்டு விழுது – இரண்டு டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் – பத்து
வரமிளகாய் – பத்து
மஞ்சள் பொடி – ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லிப்பொடி – மூன்று டேபிள் ஸ்பூன்
உப்பு – இரண்டு டீஸ்பூன்
எண்ணெய் – நான்கு டேபிள் ஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – மூன்று கொத்து


 

பூண்டு, சின்ன வெங்காயத்தை தோலுரித்து நீள நீளமாக மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியை நான்காக நறுக்கியும், பச்சை மிளகாயை தட்டியும் வைக்கவும்.
சோம்பை தட்டியும் வரமிளகாயை இரண்டிரண்டாக கிள்ளி விதை நீக்கியும் வைக்கவும்.
கறியை நன்கு கழுவி உப்பு, மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, இஞ்சி, பூண்டு விழுது, தட்டிய பச்சை மிளகாய், இருநூறு மில்லி தண்ணீர் சேர்த்து முக்கால் பாகம் வேக வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் முழுவதும் ஊற்றி சோம்பு, வரமிளகாய் தாளித்து சிவந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி கறிவேப்பிலை சேர்க்கவும்.
ஒரு நிமிடம் கழித்து தக்காளித் துண்டங்களை சேர்த்து வதக்கவும். தக்காளி கரைந்து எல்லாம் சேர்ந்து எண்ணெய் மேலே பிரியும் போது கறிக் கலவையை கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து அடிக்கடி கிளறி விடவும். கறி நன்றாக வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

Awesome recipe. Thanks for sharing.

உப்பு கரி னு சொல்லிட்டு பிரியாணிக்கு போடறது எல்லாத்தையும் போடசொல்லறீங்க,

என்னமோ தெரியவில்லை மசாலா ஒரு ரெண்டு நாளைக்கு வேண்டாமுன்னு தோணுது.

அனாலும் இன்னைக்கு உங்க ரெசிபிதான் என் உணவு, நன்றி

உலகில் எல்லா உயிரும் வாழ புலால் உணவு தவிர்பீர்,
பிறர் கொன்றதை மட்டும் தின்பீர்.

அதுசரி பால், தேன், சைவமா ?
பட்டு சீலை புனிதமா ?

dear chithra
இந்த ரெசிப்பி செய்து பார்தேன் .நன்றாக இருந்தது.
நன்றி.

sajuna