பட்டிமன்றம் 64:பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா?அன்பா?

அறுசுவை நட்சத்திரங்களுக்கு அன்பு வணக்கமுங்கோ:)

இந்த பட்டிமன்ற தலைப்பு நம்ம ரம்யாவோடதுதாங்க

( தலைப்புகள்ல லேட்டஸ்டா பதிவானதில இருந்து தலைப்பைத்தேடி

பின்னோட்டம் ஓடலாமின்னு நினைச்சு கடைசில இருந்து

பார்த்தா ,பார்த்தவுடனே கடைசியா இருந்த இந்த முதல் தலைப்பு நச்சுன்னு

ஒட்டிக்கிச்சு…எடுத்துட்டேன்..நன்றி ரம்யா..:)

“பள்ளியிலோ , வீட்டிலோ பிள்ளைகளை அடித்தும் , அதட்டியும் கண்டிப்பது நல்லதா? இல்லை பேசி திருத்த முயல்வது சிறந்ததா ?"

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
அது நல்லவனாவதும்,கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே”

"மாதா,பிதா ,குரு தெய்வம்"..
இப்படியெல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லப்படுகிறது..

அவ்வளவு முதலிடப்படுத்தப்படும் இவர்களில்

அன்னையோ/தந்தையோ/ஆசிரியரோ / அனைவருமோ சேர்ந்து

கடுமை ,கண்டிப்பு கலந்து பிள்ளைகளை வளர்ப்பது சரின்னு நினைக்கிறோமா?

அல்லது

அன்பாக பேசி புரிய வைத்தாலே கடுமை,கண்டிப்பு, போன்றவை

அவசியப்படாதுன்னு நினைக்கிறோமா?

ஒரு கருத்த யுத்தத்துக்கு தயாராகலாமே..

இன்றைய பிள்ளைகள்தானே நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்…..

அந்த நட்சத்திரங்கள் பிரகாசமா ஜொலிக்க
நாம என்ன செய்யலாம்…?

எது சரியான வளர்ப்பா இருக்கமுடியும்? என்ற கேள்விக்கெல்லாம்

நீங்க சரின்னு எதை /என்ன நினைக்கிறீங்களோ அத வந்து வாதங்களாகவும்,பிரதிவாதங்களாகவும் இங்க சொல்லுங்கோ….:)

குச்சிஐஸ்,இலந்தைவடை,பஞ்சுமிட்டாய்,தேன்மிட்டாய்,ஜிகர்தண்டா,ஐஸ்க்ரீம்,சாக்லேட் எல்லாம் இருக்கு..

அவங்கவங்களுக்கு பிடிச்சத எடுத்துக்கிட்டு நம்ம நண்டு,சிண்டு மற்றும் வளரும் இளம் பிள்ளைகளுக்காக ஆரோக்கியமான ,அவசியமான வாதங்கள வைங்க..
ஆவலுடன் காத்திருக்கேன்…

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொருந்தும் பெயரிட்டு அழைப்பது கூடாது.

நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

அன்புடன்
இளவரசி

பேருலயே பிரேமய வச்சிருக்கீங்களே....அன்பணியா ஆச்சர்யமில்லை..!!
வாங்க வந்து விளக்கமான கருத்துக்களை அள்ளி விடுங்க...

உங்கள் புதுவரவு என் மனசுக்கு நிறைவு...

நிறைய சொல்லுங்க கேட்கிறேன்..காத்திருப்பேன்..உங்கள் வாதங்களுக்காய்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

கண்மணிகளா,ஒரு சின்ன விளக்கம்

இங்க அளவான கண்டிப்பும்,அன்பும் குழந்தை வளர்ப்புக்கு அவசியம்/சரின்னு
ஒரு பொது கருத்து அனைவரும் அறிந்தது..

ஆனால் கண்டிப்பு அணியில

அடிப்பது,திட்டுவது,ஆவேசம்/ஆத்திரம்/கோபம் காட்டுவது ,வேற வழியில்ல இத நீ பண்ணிதான் ஆகணும்..நோ வே ந்னு சொல்லுவது எல்லாம் அடங்கும்....இதுமாதிரி பெற்றோர்கள்/ஆசிரியர்கள் இருக்கிறார்கள்தானே...

அன்பணியில...எப்பவும் அடி,திட்டு,கோபம் காட்டாம நிறைய பேசி அது அன்பாவும் இருக்கலாம்,கொஞ்சம் அழுத்தமாகவும் சொல்லலாம் புரியும்விதத்தில் நிறைய பேசி(திட்டாமல்) மட்டும் திருத்துவது

இப்ப ஒரு சூழல்..குழந்தைங்க ஒரு பெரிய தப்பு செய்யுது அத இனிமே செய்யவிடாம இருக்கணும்

அப்படின்றப்ப கண்டிப்பு அணி அடி,திட்டு,ஆத்திரமான,கோபமான பேச்சு இதுல ஏதோ ஒண்ண செய்யுது..

அன்பணி அதிக/அளவான அன்போட விளக்கமா பேசி பண்ணாதேன்னு சொல்றதா வச்சுப்போம்

அப்படி ஒரே தப்புக்கு/தவறுக்கு இரண்டு அணி பெற்றோரும்/ஆசிரியரும் இரண்டுவிதமாஹேண்டில் பண்றாங்க..ஆனாலும் அந்த தப்பு/தவறு பிள்ளைகளிடம் தொடருகிறது...

அப்படிங்கறப்ப கண்டிப்பு அணி

""தொடர்ந்து தன்னிலையிலேயே இருந்து தண்டிக்கவோ/கண்டிக்கவோ செய்யுமா?இல்ல இறங்கி வந்து இரண்டாவது அணிக்கு தாவி அன்பா பேசி புரிய வைக்க முயற்சி பண்ணுமா????""

அதுபோல அன்பணி அணி

"எவ்வளவு பேசி புரியவைத்தாலும் தப்பு தொடர்ந்தா பொறுமை இழந்து முதல் அணிக்கு தாவி கண்டிக்குமா/தண்டிக்குமா??"

கடைசியில் தப்பை/தவறை சரி செய்ய உதவுவது ..எது???

பின்வருவதில் எந்த அணுகுமுறை ?

**பேச்சில அதீத அன்பு/அளவான அன்பு/இரண்டும் கலந்து***

அல்லது

***தண்டிப்பா/கண்டிப்பா/இரண்டுமா***

இறுதியில் வெற்றி காண்பது எந்த அணுகுமுறையில்...?

இந்த கோணத்தில பேசுங்க....

நாங்க அன்பு வேணாமின்னு சொல்லலன்னு கண்டிப்பு அணியும்,

நாங்க அதிகப்படியா அன்பு காட்டறத சொல்லலன்னு அன்பணியும்

ரிபீட்டேசனை தவிர்க்க நினைக்கிலாமின்னு நினைக்கிறேன்..

ஒரு சூழலில் எது முடியாமல் போய் எதற்கு தாவுகிறோம்?கடைசியில்

கையில் எடுக்கும் ஆயுதம் எது?அது ஏன் சரின்னு? சொல்லுங்கோ

என் விளக்கம் குழப்பம் இல்லாமல் இருக்குமின்னும்,வாத பிரதிவாதங்கள..சரியான திசையில் கொண்டு செல்லுமின்னும் நம்பறேன் :)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவரே!!

கண்டிப்பு அணிக்கு ஆள் கிட்டியாச்ச்சா ?? ஹை ஜாலி ஜாலி :-)
(உள்ளே உதறல் இருக்கு , வெளியே சொல்லாதீங்கோ )

* பிள்ளை வளர்ப்பு தான் உலகத்தில் ரொம்ப சவாலான காரியமா போச்சு இப்போ .
ஆனானப்பட்ட மிருகாங்களுக்கு கூட மிருக வதை தடுப்பு சட்டம் வந்தாச்சு , ஒரு தட்டு கூட தட்ட முடியாது . ஆனா தெய்வத்தின் அம்சங்களான குழந்தைகள் மனதளவிலும் உடல் அளவிலும் அடி வாங்கறது என்னப்பா நியாயம் ?
பிரம்பு ஸ்கேல் குச்சி இதுக்கெல்லாம் தடை போட்டாலும் இந்த டஸ்டர் வெச்சு கூட சில ஸ்கூலில் அடிக்கறாங்க ன்னு கேள்விப்பட்டு , நம்ம மனசு தான் புண் பட்டு போகுது .

* குழந்தைங்களை எதுக்காக நாம் கண்டிக்கிறோம் ,
சாப்பிட அடம் (ஒரே ஜன்க் புட்ஸ் )
வீடியோ கேம்ஸ் விடிய விடிய
அடுத்தவங்க வீட்டுக்கு போய் கரெக்டா நம்ம மானத்தை கப்பலேத்தறது
நாம் நினைக்கிறா மாதிரி ஆன்சர் எழுதாது , இஷ்டத்துக்கு கிருக்கறது
எதை செய்ய வேணாம்னு சொல்றோமோ அதை பர்டிகுலரா செய்யறது
மிஸ் ,குழந்தையை பற்றி கம்ப்ளையின் பண்ணினா , நாம் மனசு வேதனைப்பட்டா , அதை கண்டுக்காம போகோவில் தோரா பார்ப்பது .
யார் எது புதுசா வச்சிருந்தாலும், அதை உடனடியா நம் பொருளாதார நிலைமை பற்றி யோசிக்காம கேட்பது .
நாம் இஞ்சினியர் ஆவனும்னு , கனவு கண்டா ,கொஞ்சம் கூட பொருப்பிலாம காமர்ஸ் க்ரூப்ப் செலெக்ட் செய்து நமக்கு ஆப்பு வைப்பது :-(
பிரண்ட்சொட ஊர் சுற்றுவது
ஊரார் என்ன சொல்வாங்க , நம் பெற்றோரை என்ற எண்ணமே இல்லாம ,
தனக்கு விருப்பபட்டா மாதிரி வாழ்வது .
குட்டீச்னா , டெய்லி சொல்லி அனுப்பினா கூட யூனிபார்மை அழுக்கு செய்வது
ரப்பரை/ பென்சிலை தொலைப்பது (அப்போ தானே புதுசு கிடைக்கும் )
ஹோம்வொர்க் நோட்டை மறந்து வீட்டில் வைத்து விடுவது (அதெல்லாம் சும்மா ,
ஹோம்வொர்க் யாரு செய்யறது ,வண்டி வண்டியா இம்போசிஷன் கொடுத்தா ;-(
அம்மா தான் எழுதணும் !!

இதெல்லாம் நம்ம குழந்தை மட்டுமா செய்யும் ? பிறக்கும் எல்லா குழந்தைங்க கிட்டயும் சேட்டை தனம் இருக்க தானே செய்யுது .

நாம் நாலு பேரோட சேந்து வளர்ந்தோம்.
எப்படியோ பொழுது போயிடும் (கல்லா மண்ணா, ஐஸ் பாய்ஸ் , நாலாங்கள் ,கிச்சி முச்சி தாம்பாளம் ,செவென் ஸ்டோன்ஸ் ) இப்படி மனது உடல் ரெண்டுக்கும் வேலை தினமும் ஒரு அரை மணி பொழுதாவது கிடைக்கும் .

இப்போ கிரிக்கெட் விட்டா வேற விளையாட்டுக்கு , கம்யூட்டர் மட்டுமே உற்ற தோழன் . அவங்களுக்கு எமோஷனல் அவுட் பர்ச்டே இல்ல. அதுல நம்ம அடி வேற சேந்து விட்டா அதோ கதி தான் .

//கண்டிச்சு வளர பிள்ளைகள் தவறு செய்து தண்டனைக்கு உள்ளாகும் நிலைமை வராமல், முதலிலேயே, நல்லது எது, கெட்டது எது என்பதை, கண்டிப்புடன் எடுத்துச் சொல்லி வளர்க்க வேண்டியது பெற்றவர்களின் கடமை.//

அதே அதே !! முதலிலேயே சொல்லி விட்டா இந்த தண்டனை ஸ்டேஜுக்கு வர வேண்டியே இருக்காது .
அன்போட சொல்லணும் , தோளுக்கு மிஞ்சினா தோழன் எல்லாம் அந்த காலம்.
இப்போ மம்மி மை பிரன்ட் தான் .
நல்லது எது கெட்டது எது ன்னு மட்டும் சொன்னா பத்தாது . ஏன் கெட்டது என்ன ஆகும் என்பதை சேர்த்தே தான் சொல்ல வேண்டும் . நாம் அவங்க வழிக்கு போய் தான் நம்ம வழிக்கு கொண்டு வரணும் !!

//கடுமை கண்டிப்பு கலந்து ந்னு தான் இருக்கே தவிர கண்டிப்பாதான் வளர்கனு8ம் என்று இல்லை, எனவே கடுமை கண்டிப்பு கலந்து வள்ர்க்கும் போது பிள்ளைகல் தவறு செய்யப்பயப்படுவார்கள். தான்// இந்த கடுமை கலந்தாளே கஷ்டம் தான் . காந்திஜி க்கு கூட அவங்க அம்மா கடுமை கலந்து சத்தியம் வாங்கலை .அவங்க சொன்ன விதமே , கடைசி வரை அவர் சத்தியத்தை மீறாம இருந்தார் .

உண்மையா சொல்லபோனா இவ்வளவு கட்டுப்பாடுகள் ,அந்த காலத்துல இல்லை.
இவ்வளவு வொர்க் ப்றேஷர்ஸ் இல்லவே இல்லை (ஸ்கூல் பசங்களுக்கு தான் :-(
எத்தனை நோட்ஸ் ,வித விதமான புக்ஸ் ,ஏகப்பட்ட ட்யுஷன் , டான்ஸ், கராத்தே, பாடு, டென்னிஸ் க்லாசாஸ் ,(இதுக்கு நடுவுல அவங்க பாவம் டி வி வேற பார்க்கணும் , ஒரு சேனல் கூட ஒழுங்கா பார்க்க முடியாம , சைல்ட் லாக் வேற பண்ணியிருவீங்க )

எங்கயும் தனியா போகவே முடியாது (ஏன்னா அம்மா அப்பாக்கு பயம் , ரோட்ல ஒரே ட்ராபிக் ,கீழே விழுந்தா யாரு டாக்டர் கிட்ட அலையறது ????)
மார்க் கூட கம்மியா எடுக்கவே முடியாது (ஏன்னா அம்மாக்கு பி பி எகிரிடும் )
சோ அதுலயும் லீவ் போடவே முடியாது . இவ்வளவையும் மனசுல வெச்சி , பதட்டத்துல ஏதோ ஒரு தப்பு பண்ணினா ,கண்டிச்சா என்ன தான் செய்வாங்க .??
போனா போகுதேன்னு பொறுத்து பொறுத்து பார்த்து ஒரு நாள் ," போ நான் இப்படி தான் இருப்பேன் " அப்படின்னு சுய ரூபத்தை கான்பிப்பங்க

ஒரு சின்ன வார்த்தைக்கு கூட மனசளவில் நொறுங்கி போறாங்க , வகுப்பில் எல்லார் முன்னாடியும் ,தப்பு செய்வதை சுட்டி காட்டினா கூட ஓகே ,
(ஸ்டுபிட், பூல் , இடியட், யூஸ்லெஸ் ) போன்ற வார்த்தைகள் நாம் வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரி சொன்னாலே (இவ்ளோ பெரியவங்க )நமக்கே தாங்கரதில்லை . சின்ன பிஞ்சுகள் அங்கே அழுகையை அடக்கினாலும் , வேற ஒரு சூழலில் அதே வார்த்தைகளை உபயோகப்படுத்தி ,நம்மை டெண்ஷனுக்கு உள்ளாக்குவார்கள் . இதுல யார் மேலப்பா தப்பு??
கேக்கர வார்த்தை தானே வாயில வரும். ஆசிரியரை இப்படி பேசாதீங்கன்னு சொல்ல முடியுமா ? நாங்க சொல்லலைன்னு சொல்லிட்டு இண்டர்னல்ஸ் ல கை வைப்பாங்க !!;-(((( நம்ம பிள்ளை மேல தான் தப்பிருக்கும்னு நமக்கு ஒரு திடமான நம்பிக்கை :-(
பேசறதுக்கு , அவங்க தரப்பு நியாயத்தை சொல்ல டைம் கொடுக்கறதே இல்லை .
எடுத்தவுடன் கண்டிப்பு-- கண்டிப்பா செல்லுபடியாகாது .
எல்லா வேலையும் முடிச்சு கொஞ்ச நேரம் , அதுங்க வயித்துக்கு கொடுத்துட்டு ,பேசிப்பாருங்க. புரிஞ்சிப்பாங்க. யார் எது பேசினாலும் அந்த நிலைமையிலிருந்து வெளி வர தெரிஞ்சுக்குவாங்க !!

ஸ்கூல் படிக்கறப்போ ,நாங்க பெண் பிள்ளைகள் அவ்வளவு கடுமையான் தண்டனை வாங்கியதில்லை . ஆனா ,ஆண் பசங்க, முட்டி போட்டுக்கொண்டே நடப்பது (தலை குனிந்து கொண்டே ) ஒடித்த குச்சியால் கை முட்டியில் அடி வாங்குவதை பார்த்து இருக்கிறேன், அவங்க திருந்துவாங்க என்று எனக்கு தோன்றவில்ல .
மனம் இறுகி மூர்க்கத்தனம் வராதோ???
சில ட்ரில் மாஸ்டர்கள் பெருமையாக "விளாசி தல்லிட்டேன் இல்ல " என்று சொல்லும்போது மனதுக்குள் ரத்தக்கண்ணீர் வரும்.
அன்று அந்த பசங்களிடமும் ஒரு அரை மணி பேசியிருந்தால் , அவரகள் வன்முறையாளர்கள் ஆவதை தடுத்திருக்கலாமே !! எப்படி மாஸ்டரை பிளான் போட்டு கலாய்ப்பது என்று மாஸ்டர் பிளான் போடுவாங்க நம்ம பசங்க.
ஒரே நாளில் மாற்ற கூடிய விஷயமா___ மாணவர்/பிள்ளை இவர்களின் தன்மை
நிறைய முயற்சிகள் ,ஒவ்வொரு முறையும் புதுபுது எபார்த்ஸ் இதுல முக்கியம் நம்ம கஷ்டத்தி பேசி புரிய வைத்தல்.

ஓகே நடுவரே ! மேலும் பாயிண்ட்ஸ் கொண்டு வாறன்.
நோ குச்சி ,ஒன்லி அன்பான பார்வை !
தென் மிட்டாய் தேனைஎல்லாம் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ஸ் நு உறிஞ்சி ருசிச்சாச்சு .
எந்த தேனீ யும் நம்மை கொட்டாதே !

வாட்ச் மிட்டாய் இருக்கப்பா கடையில் !!
இருந்தா எடுத்து வைங்க .
நேரம் பார்த்து வரேன்,
நன்றி !!

இதோ வந்திட்டேன் நடுவரே,

குழந்தைகளை அன்பால் தான் வளர்க்க வேண்டும். அடித்தோம் என்றால் அது அவர்கள் மனதில் வெறுப்பைத்தான் உண்டாக்கும். மேலும் அது அவர்கள் வளர்ச்சியை பாதிக்கும். தவறு செய்பவனே மனிதன். பிள்ளைகள் தவறு செய்வது இயல்பு, அதை நாம் திருத்த வேண்டுமே தவிர, தண்டிக்க கூடாது.

குழந்தைகளை வளர்க்கும் போது அவங்க வயதிர்க்கேற்றாற்போல் எது நல்லது எது கெட்டதுன்னு சொல்லி வளர்க்கணும். அதுமட்டுமில்லாமல் நம் குடும்ப சூழ்நிலையை புரிய வச்சு வளர்க்கணும்.

அதுமட்டுமில்லாமல் பெற்றோர்கள் பெற்றோர்களாக மட்டும் இருந்தால் போதாது, அவங்க பிள்ளைகலுக்கு நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டும். அப்பதான் பிள்ளைகள் எந்த விசயமானாலும் பெற்றோரிடம் கலந்தாலோசித்து நல்லது கெட்டது அறிந்து செயல்படுவார்கள்.

குழந்கைகள் நாம் முகம் பார்க்கும் கண்ணாடி போன்று நாம் எதை செய்தாலும் அதையே தான் திரும்ப செய்யும். என் 2 வயசு பொண்ணை அடிச்சேன்னால், உடனே என்னை அனிமல்ஸ் பேர் சொல்லி திட்டிட்டு போகும், இது தான் நடைமுறை.

தொடரும்...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

கண்டிப்பே கண்டிப்பே கண்டிப்பே
உடனே சதா என்னேரமும் மிலிட்டரி மாதிரின்னி நினைச்சுக்கக் கூடாது.அன்புடன் கலந்த கண்டிப்பு ரொம்ப ரொம்ப அவசியம்.ரொம்ப யோசிச்சேன் ஆனால் முழுக்க அன்பு மட்டுமே கொடுத்து வளர்க்கபடும் பிள்ளைகள் கெட்டுப் போக வாய்ப்பு ரொம்ப அதிகம்..அதே சமயம் கண்டிப்போடு வளர்ந்த பிள்ளகளை பாருங்க நிச்சயம் தனியா தெரிவார்கள் அவர்களிடம் ஒரு ஒழுக்கம் இருக்கும்..
எனக்கு சாப்பிடுவது முதல் படிப்பது முதல் தூங்குவது விளையாடு என எல்லாமே ஒரு பேலன்ஸ்Dஆக இருக்க வேண்டுமென்று நினைப்பேன்.நிச்சயமாக அதன்படி வளர்க்க கண்டிப்பு ரொம்ப ரொம்ப அவசியம்..சிறு வயதில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஆனால் இந்த பருப்பு வேகாது என்னும்போது நம் வழிக்கு வருவார்கள்..
கண்டிப்பே இல்லாமல் வளர்த்தப்பட்ட குழந்தைகள் அவர்களுக்கு மட்டுமல்லாது சுத்தி உள்ளவங்களுக்கும் தொந்தரவு கொடுக்கும்

• //
• சாப்பிட அடம் (ஒரே ஜன்க் புட்ஸ் )
வீடியோ கேம்ஸ் விடிய விடிய
அடுத்தவங்க வீட்டுக்கு போய் கரெக்டா நம்ம மானத்தை கப்பலேத்தறது
நாம் நினைக்கிறா மாதிரி ஆன்சர் எழுதாது , இஷ்டத்துக்கு கிருக்கறது
எதை செய்ய வேணாம்னு சொல்றோமோ அதை பர்டிகுலரா செய்யறது
மிஸ் ,குழந்தையை பற்றி கம்ப்ளையின் பண்ணினா , நாம் மனசு வேதனைப்பட்டா , அதை கண்டுக்காம போகோவில் தோரா பார்ப்பது .
யார் எது புதுசா வச்சிருந்தாலும், அதை உடனடியா நம் பொருளாதார நிலைமை பற்றி யோசிக்காம கேட்பது .
நாம் இஞ்சினியர் ஆவனும்னு , கனவு கண்டா ,கொஞ்சம் கூட பொருப்பிலாம காமர்ஸ் க்ரூப்ப் செலெக்ட் செய்து நமக்கு ஆப்பு வைப்பது :-(
பிரண்ட்சொட ஊர் சுற்றுவது
ஊரார் என்ன சொல்வாங்க , நம் பெற்றோரை என்ற எண்ணமே இல்லாம ,
தனக்கு விருப்பபட்டா மாதிரி வாழ்வது .
குட்டீச்னா , டெய்லி சொல்லி அனுப்பினா கூட யூனிபார்மை அழுக்கு செய்வது
ரப்பரை/ பென்சிலை தொலைப்பது (அப்போ தானே புதுசு கிடைக்கும் )
ஹோம்வொர்க் நோட்டை மறந்து வீட்டில் வைத்து விடுவது (அதெல்லாம் சும்மா ,
ஹோம்வொர்க் யாரு செய்யறது ,வண்டி வண்டியா இம்போசிஷன் கொடுத்தா ;-(
அம்மா தான் எழுதணும் !!
• //

இப்படியெல்லாம் லிஸ்ட் போட்டு அனலைஸ் செய்ய உதிராவுக்கு சொல்லியா கொடுக்கோணும்…நல்லா சொல்றீங்க..

//ஒரு சின்ன வார்த்தைக்கு கூட மனசளவில் நொறுங்கி போறாங்க , வகுப்பில் எல்லார் முன்னாடியும் ,தப்பு செய்வதை சுட்டி காட்டினா கூட ஓகே ,
(ஸ்டுபிட், பூல் , இடியட், யூஸ்லெஸ் ) போன்ற வார்த்தைகள் நாம் வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரி சொன்னாலே (இவ்ளோ பெரியவங்க )நமக்கே தாங்கரதில்லை . சின்ன பிஞ்சுகள் அங்கே அழுகையை அடக்கினாலும் , வேற ஒரு சூழலில் அதே வார்த்தைகளை உபயோகப்படுத்தி ,நம்மை டெண்ஷனுக்கு உள்ளாக்குவார்கள் .//

தப்பான வார்த்தை பிரயோகம் மனச நொறூக்கிதான் போடுது…கண்டிப்பா தன்வினை தன்னைச்சுடும் ..போல நமக்கே ரீபீட் ஆகும் இது தேவையான்னு அழகா சொல்லிட்டாங்க

//ஆண் பசங்க, முட்டி போட்டுக்கொண்டே நடப்பது (தலை குனிந்து கொண்டே ) ஒடித்த குச்சியால் கை முட்டியில் அடி வாங்குவதை பார்த்து இருக்கிறேன், அவங்க திருந்துவாங்க என்று எனக்கு தோன்றவில்ல//
ஆமாங்க நான்கூட பார்த்து பயந்திருக்கேன்..ஒரு காலத்துல…
• //இப்போ கிரிக்கெட் விட்டா வேற விளையாட்டுக்கு , கம்யூட்டர் மட்டுமே உற்ற தோழன் . அவங்களுக்கு எமோஷனல் அவுட் பர்ச்டே இல்ல. அதுல நம்ம அடி வேற சேந்து விட்டா அதோ கதி தான் .//

இருக்கும் சூழல் எரிகிற தீப்போல அவங்களுக்கு எமோஷனல் அவுட்லெட் கொடுக்காம இருக்கும்போது அந்த தீயில் எண்ணைய் ஊத்தினாப்போல கண்டிக்கறது எதுக்குன்னு கேட்கிறாங்க
• எத மேற்கோள் காட்டறது..எல்லாமே காட்டினா அப்படியே நீங்க பேசினத திருப்பி பேசினாப்போல இருக்குமேன்னு நினைக்கும் அளவு அருமையான பதிவுகள்
• பாராட்டுக்கள் உதிரா

//இந்தாங்க வாட்ச் மிட்டாய் இருக்கப்பா கடையில் !!//

கலர் கலர் வாட்ச் மிட்டாய்..பிள்ளைகளுக்கும் சேர்த்து எடுத்துக்கோங்க

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பிள்ளைகள் தவறு செய்வது இயல்பு, அதை நாம் திருத்த வேண்டுமே தவிர, தண்டிக்க கூடாது.//
தவறுகள் தெரியாம செய்யறதுதானே அதுக்கு ஏன் தண்டனைன்னு கேட்கிறாங்க
//என் 2 வயசு பொண்ணை அடிச்சேன்னால், உடனே என்னை அனிமல்ஸ் பேர் சொல்லி திட்டிட்டு போகும், இது தான் நடைமுறை.//
எப்படியெல்லாம் அலட்சியமா பேசறாங்க..இது எப்படி ஏன்?
நாமகத்து கொடுத்தா,கொடுக்காமலேயா…இல்ல கத்து கொடுக்கணுமா அநாவசியமான்னு கேட்கிறாங்க
தொடர்ந்து வாங்க நல்ல கருத்துக்கள் பாராட்டுக்கள் ப்ரேமா
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நெடுநாள் கழித்து உங்க பதிவு ..உங்க வரவிற்கும் ,பதிவிற்கும் மிக்க மகிழ்ச்சி தளிகா
//முழுக்க அன்பு மட்டுமே கொடுத்து வளர்க்கபடும் பிள்ளைகள் கெட்டுப் போக வாய்ப்பு ரொம்ப அதிகம்..அதே சமயம் கண்டிப்போடு வளர்ந்த பிள்ளகளை பாருங்க நிச்சயம் தனியா தெரிவார்கள் அவர்களிடம் ஒரு ஒழுக்கம் இருக்கும்..
எனக்கு சாப்பிடுவது முதல் படிப்பது முதல் தூங்குவது விளையாடு என எல்லாமே ஒரு பேலன்ஸ்Dஆக இருக்க வேண்டுமென்று நினைப்பேன்//

உங்க குழந்தை வளர்ப்பு பகுதிய படிச்சாலே புரியுதே..:)

//.நிச்சயமாக அதன்படி வளர்க்க கண்டிப்பு ரொம்ப ரொம்ப அவசியம்..சிறு வயதில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் ஆனால் இந்த பருப்பு வேகாது என்னும்போது நம் வழிக்கு வருவார்கள்..//

கண்டிப்பு இல்லாட்டி அப்புறம் நாம் அவங்களுக்கு அடங்கி போகணும்….கண்டிப்பு இருந்தாத்தான் வழிக்கு வருவாங்கன்னு சொல்றாங்க

//கண்டிப்பே இல்லாமல் வளர்த்தப்பட்ட குழந்தைகள் அவர்களுக்கு மட்டுமல்லாது சுத்தி உள்ளவங்களுக்கும் தொந்தரவு கொடுக்கும்//

ஆமா எவ்வளவு பார்த்திருப்போம் இது மாதிரி அவஸ்களையும்,சங்கடங்களையும்…:(

நல்லா சொன்னீங்க ..உங்களின் பொன்னான பதிவுகள் தொடரட்டும்
ஆரம்பகாலம் தொட்டு பட்டியில் பட்டய கிளப்பும் ஜாம்பவான் நீங்க…வந்ததும் தந்ததும் மகிழ்ச்சி
தொடர்ந்து வந்து கருத்துக்கள் தந்து சிறப்பிக்க கேட்டு கொள்கிறேனுங்கோ
இந்தாங்க…நீர்மோர்…மீண்டும் வாங்க

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நல்லா தெளிவா விளக்கிட்டீங்க நடுவரே! இப்போ புரிஞ்சிடுச்சு :)

கண்டிப்புதான் குழந்தைகளை நேர்வழிப் படுத்தும்னா அறியா வயதில் புரியாமல் செய்த தவறுக்காக தண்டனை கொடுக்கப் பட்டு கண்டிப்பாக நடத்தப் படுது சிறுவர் சீர்திருத்த இல்லங்களில் சேர்க்கப் படும் சிறுவர்கள் திருந்தி அல்லவா மீண்டும் சமூகத்தில் இணைந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படியா இருக்கிறது? மேலும் பிடிவாதக் காரர்களாகவும் யாருக்கும் அடங்காதவர்களாக மாறி விடுகிறார்களே! இதே குழந்தைகளுக்கு நல்ல முறையில் கவுன்சிலிங் கொடுத்து அன்பாக பேசி அரவணைத்து இதமாக நடந்து கொண்டாலே செய்த தவறுக்காக வருந்தி திருந்தி விடுவார்கள். ஆனால் இங்கே யாருக்கும் பொறுமை இல்லை. அடி, உதை, ஏச்சு, பேச்சு தண்டனை என இறங்கி விடுவதால் அவனது செயலின் உண்மையான விளைவுகளை உணர்ந்து கொள்வதற்கு பதிலாக எதிர்மறை எண்ணங்களே மனதில் உண்டாகிறது.

இன்றைக்கு குழந்தை வளர்ப்பு என்பது நம் பெற்றோர் நம்மை வளர்த்தது போல அத்தனை எளிது இல்லை. பொறுமை என்பது பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் மிக அதிகம் தேவைப் படுகிறது. இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் யாருக்கும் பொறுமையும் இல்லை நெரமும் இல்லை. அதனால் குறும்பு செய்யும் குழந்தைகளை உடனடியாக அடக்க கண்டிப்பாக நடந்து கொள்கிறார்கள். இது உடனடியாக வேலை செய்யும் அலோபதி மருந்து போல. ஆனால் பக்கவிளைவுகளும் அதிகம். பலரும் அதை உணர்வதில்லை. ஆனால் அன்பாக பொறுமையாக எடுத்துச் சொன்னால் உடனேயே கேட்டுக் கொள்ளாவிட்டாலும் தொடர்ந்து எடுத்துச் சொல்லும் போது புரிந்து கொள்வார்கள். இந்த அணுகுமுறை ஆயுர்வேத மருந்து போன்றது. மெதுவாதான் வேலை செய்யும் உடனடி நிவாரணம் கிடைக்காதுதான். ஆனால் பக்கவிளைவுகளற்ற நல்ல பலன் தரக் கூடியது. இன்ஸ்டன்ட் எப்பவுமே நல்லது இல்லை நடுவரே!

பதின்ம வயதுக் குழந்தைகளைக் கையாள்வது என்பது கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாள்வது போல. கண்டிக்கிறோம் என கொஞ்சம் அழுத்தமாக நடந்து கொண்டாலே உடைந்து விடும் கூடவே நம் கையையும் கிழித்து விடும். தோழமையுடன் அணுகி நிதானமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்கள் மனது நாம் சொல்லும் விஷயத்தை ஒத்துக் கொள்ளும் படி நாம் பேச வேண்டும். நிறைய கேள்வி கேட்பார்கள். சில நமக்கு கோபத்தை தூண்டும். ஆனால் கட்டுப் படுத்திக் கொண்டு அவர்களிடம் விளக்க நமக்குப் பொறுமை மிக மிக அவசியம்.
கண்டிப்பாக நடந்து கொண்டால், சில குழந்தைகள் நம் முன்னே அடங்கி இருப்பார்கள். நம் கண் தப்பினால் கொட்டம் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இதே குழந்தைகளை அன்பெனும் சங்கிலியால் கட்டி வையுங்கள் எந்த நேரத்திலும் எல்லை மீற மாட்டார்கள். அதுதான் அன்பின் வலிமை.

நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன். தேன் மிட்டாய் எல்லாத்தையும் உதிரா சாப்பிட்டுட்டாங்க. சீக்கிரமா வாங்கி வையுங்க. அதுவரைக்கும் ஜவ்வு மிட்டாய் சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//குழந்தைகளுக்கு நல்ல முறையில் கவுன்சிலிங் கொடுத்து அன்பாக பேசி அரவணைத்து இதமாக நடந்து கொண்டாலே செய்த தவறுக்காக வருந்தி திருந்தி விடுவார்கள்.
//
கவுன்சிலிங்க் செய்யறத விட்டுட்டு கண்டிக்காதீங்கன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க

//ஆனால் இங்கே யாருக்கும் பொறுமை இல்லை. அடி, உதை, ஏச்சு, பேச்சு தண்டனை என இறங்கி விடுவதால் அவனது செயலின் உண்மையான விளைவுகளை உணர்ந்து கொள்வதற்கு பதிலாக எதிர்மறை எண்ணங்களே மனதில் உண்டாகிறது. //

வன்மையா எதிர்ப்பு சொல்லறப்போ அது எதிர்மறை எண்ணங்கள உண்டாக்குதே..இது தேவையான்னு கேட்கிறாங்க

//பதின்ம வயதுக் குழந்தைகளைக் கையாள்வது என்பது கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாள்வது போல. கண்டிக்கிறோம் என கொஞ்சம் அழுத்தமாக நடந்து கொண்டாலே உடைந்து விடும் கூடவே நம் கையையும் கிழித்து விடும்.//
ஒருத்தர் முகம் பார்க்கிற கண்ணாடிங்கறீங்க இன்னொருத்தர் சமையல் பாத்திரமுன்னு சொல்றீங்க....எது சரியா இருக்குமின்னு மூக்கு கண்ணாடி போட்டு பார்த்தாலும் மூளைக்கு எட்டவேயில்லை :(

//குழந்தைகளை அன்பெனும் சங்கிலியால் கட்டி வையுங்கள் எந்த நேரத்திலும் எல்லை மீற மாட்டார்கள். //

கழுத்தில போடற சங்கிலியத்தானே சொல்றீங்க...அப்பாடா இதுவாச்சும் ஒரு வழியா விளங்குச்சே..:)

எதிரணி வந்து ஹெல்ப் பண்ணுங்கோ

//ஜவ்வு மிட்டாய் சாப்பிட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன் :)//

சத்தம்போடாம சாப்பிடுங்க பெரியவங்க எல்லாம் ஜவ்வுமிட்டாய் சாப்பிட்டா குழந்தைங்க எதை சாப்பிடும்..கொடுங்க இப்படின்னு கண்டிக்க யாரும் வந்துடப்போறாங்க..கூடவே..நெய் பிஸ்கட்டும் இந்தாங்கோ :)

தொடர்ந்து வந்து துடிப்பான வாதங்கள் வைங்கோ :)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்