பட்டிமன்றம் 64:பிள்ளை வளர்ப்பில் சரியென நினைப்பது கண்டிப்பா?அன்பா?

அறுசுவை நட்சத்திரங்களுக்கு அன்பு வணக்கமுங்கோ:)

இந்த பட்டிமன்ற தலைப்பு நம்ம ரம்யாவோடதுதாங்க

( தலைப்புகள்ல லேட்டஸ்டா பதிவானதில இருந்து தலைப்பைத்தேடி

பின்னோட்டம் ஓடலாமின்னு நினைச்சு கடைசில இருந்து

பார்த்தா ,பார்த்தவுடனே கடைசியா இருந்த இந்த முதல் தலைப்பு நச்சுன்னு

ஒட்டிக்கிச்சு…எடுத்துட்டேன்..நன்றி ரம்யா..:)

“பள்ளியிலோ , வீட்டிலோ பிள்ளைகளை அடித்தும் , அதட்டியும் கண்டிப்பது நல்லதா? இல்லை பேசி திருத்த முயல்வது சிறந்ததா ?"

எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
அது நல்லவனாவதும்,கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே”

"மாதா,பிதா ,குரு தெய்வம்"..
இப்படியெல்லாம் பிள்ளைகளுக்கு சொல்லப்படுகிறது..

அவ்வளவு முதலிடப்படுத்தப்படும் இவர்களில்

அன்னையோ/தந்தையோ/ஆசிரியரோ / அனைவருமோ சேர்ந்து

கடுமை ,கண்டிப்பு கலந்து பிள்ளைகளை வளர்ப்பது சரின்னு நினைக்கிறோமா?

அல்லது

அன்பாக பேசி புரிய வைத்தாலே கடுமை,கண்டிப்பு, போன்றவை

அவசியப்படாதுன்னு நினைக்கிறோமா?

ஒரு கருத்த யுத்தத்துக்கு தயாராகலாமே..

இன்றைய பிள்ளைகள்தானே நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள்…..

அந்த நட்சத்திரங்கள் பிரகாசமா ஜொலிக்க
நாம என்ன செய்யலாம்…?

எது சரியான வளர்ப்பா இருக்கமுடியும்? என்ற கேள்விக்கெல்லாம்

நீங்க சரின்னு எதை /என்ன நினைக்கிறீங்களோ அத வந்து வாதங்களாகவும்,பிரதிவாதங்களாகவும் இங்க சொல்லுங்கோ….:)

குச்சிஐஸ்,இலந்தைவடை,பஞ்சுமிட்டாய்,தேன்மிட்டாய்,ஜிகர்தண்டா,ஐஸ்க்ரீம்,சாக்லேட் எல்லாம் இருக்கு..

அவங்கவங்களுக்கு பிடிச்சத எடுத்துக்கிட்டு நம்ம நண்டு,சிண்டு மற்றும் வளரும் இளம் பிள்ளைகளுக்காக ஆரோக்கியமான ,அவசியமான வாதங்கள வைங்க..
ஆவலுடன் காத்திருக்கேன்…

மற்ற பட்டிமன்ற விதிமுறைகள் இந்த பட்டிக்கும் பொருந்தும் பெயரிட்டு அழைப்பது கூடாது.

நாகரீக பேச்சு மிக அவசியம். வாங்க... வாங்க... ஆரம்பிங்க :)

அன்புடன்
இளவரசி

அன்பு நடுவரே!!
பாருங்க பாருங்க ,அதட்டாம கொள்ளாம அழகா ,பட்டியை பற்றி நீங்க விளக்கி சொன்னதுனால ,வம்பு பண்ற என்னை கூட அன்பால கட்டி போட்டு வர வெச்சிடுச்சே!!
அதனால் நாங்க சொல்வது என்னவென்றால் அன்பா சொல்லுங்க , ஆதரவு கொடுங்க !!
கண்டிப்பு +தண்டிப்பு = வெறுப்பு +கடுப்பு
இதை தவிர வேறொண்ணும் இல்லை . கண்டிக்கும் பிள்ளை பணிவு காட்டும் என்று சொல்லி டபாய்க்க முடியாது . நில்லுன்னு சொல்ற இடத்தில் நிக்க குழந்தைங்க என்ன குட்டி பொம்மையா ??
ரெண்டு நாள் முன்னே ,மகனோட ஸ்கூலுக்கு போக நேர்ந்தது . ரிசப்ஷன்ல ,ஒரு குட்டி பொண்ணு (மூணாம் வகுப்பு ) அம்மாவோட வெயிட்டிங் .சேர்ல உக்காரப்போ , வளைஞ்சு, நெளிஞ்சு ,எதையாவது பேசிகிட்டே இருந்தாள். அம்மாக்கோ ஒரே கோபம். எல்லாரும் பார்க்கறாங்க ,”கான்ட் யு பீகேவ் பராபெர்லி , சிட் ஸ்ட்ரெயிட் “ சொல்லிகிட்டே டென்ஷன்ல அவங்க பாவம் செர்லேந்து எழுந்து நடந்துகிட்டே இருந்தாங்க . குட்டி பொண்ணும் சும்மாவே இல்ல. ஏதோ பாட்டை ஹம பண்ணுது, தலையை சுத்தி சுத்தி எல்லாத்தையும் நோட்டம்(நியு அட்மிஷன் போல ) அம்மா விட்டா செர்லேந்து எழுந்து விடுவதை போல இருந்தாள். திரும்ப திரும்ப அம்மாவும் ஹஸ்கி வாய்ஸ்ல எல்லாருக்கும் கேட்காதுன்னு நினைச்சுகிட்டு , பெண்ணை திட்டிகிட்டே இருந்தாங்க. பொறுத்து பார்த்து “மம்மி, வாட் இஸ் திஸ்? எவ்ளோ நேரம் வெயிட் பண்றது , ஐ டோன்ட் லைக் திஸ் ஸ்கூல் “ அப்படின்னு ஒரு சவுண்ட். தூர இருக்கற அட்டெண்டர் கூட இப்போ இங்கே பார்வை. அம்மா செம டென்ஷன் .கீப் கொயட்ன்னு சொல்லிட்டு,பக்கத்துல இருக்கறவங்க கிட்டே , ஷி இஸ் டயர்ட் .அப்படின்னு பூசி மொழுகி கோலம தான் .
இதுவே , அந்த பெண்ணை ,போய் அந்த போர்ட் ல என்ன க்யோட் எழுதியிருக்குன்னு பாரு. ஒரு தடவை போய் சுத்தி என்ன இருக்குன்னு பார்த்து வா என்று சொல்லியிருந்தால் , குழந்தை , அம்மா ரெண்டு பேருக்கும் இவ்ளோ டென்ஷன் வருமா ?? இதுல அம்மா கண்டிப்பு காட்ட போய் என்ன ஆச்சு ? தன குழந்தை மிகவும் டிசிப்ளின் உடன் வளர்க்க பட்டவள் என்று மற்றவருக்கு காண்பிக்க போய் ,வேறு ஏதோ ஒன்றில் முடிந்தது. சிறிது நேரத்தில்,உதடு சுழித்து அந்த பெண் குழந்தை அம்மாவோடு ஆட்டோவில் ஏறி போனாள். விடாமல் பின்னே அம்மாவும் ஏதோ திட்டி கொண்டே(இன்னிக்கு உனக்கு வீடியோ கேம்ஸ் கட்) சென்றதை பார்த்து எனக்கு தான் பயம் ஆகி போச்சு. (வீட்டில் என்ன எல்லாம் உடைய போகுதோ ??)
இன்றைய சூழலில் குழந்தைகள் பெரும்பாலும் குழந்தைகளோடு நேரம் செலவழிப்பதே இல்லை .கால்வாசிநேரம் அம்மாவோட, கால்வாசி நேரம் டீச்சரோடு, கால்வாசி நேரம் கம்ப்யூட்டர் கேம்ஸ், கால்வாசி நேரம் ஏதோ ஒரு கிளாஸ் .
இதுல சொல்லி கொடுத்து மட்டுமே கற்றுகொள்ள வேண்டிய சூழல் , தானா பட்டு தெரிஞ்சுக்க நாம ஆபர்ச்னட்டி கொடுக்கரதேயில்லை. சோ அந்த சொல்லி தரும் விதமே கண்டிப்பு கலந்து இருந்தால் என்ன ஆகும் ?
கேக்கறதை எல்லாம் வாங்கி கொடுக்கறதுக்கு பேரு அன்பு இல்லை.அதையும் பெற்றோர் தான் ஏற்படுத்தறோம் .”அம்மா நீ என்ன கேட்டாலும் வாங்கி தரேன் இல்ல. சோ நீ சமத்தா சாப்பிடனும் , பர்ஸ்ட் ரேங்க் வாங்கணும் “ இது என மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் ஒரு முடிச்சு .(இது என்னடா சரியில்லையே ன்னு ஏழு கழுதை வயசு எனக்கே இப்ப தான் யோசிக்க தோணுது ) பாவம் பசங்க, பைவ் ஸ்டார் இல்லை ஆரஞ்சு மிட்டாய் ஏதோ ஒன்னு கிடைச்சா எல்லாத்துக்கும் மண்டையை ஓகே என்பது போல தலையை ஆட்டுவாங்க.நாமளும் உடனே நம்பிடறது.
எவ்ளோ வாங்கி கொடுத்தேன் ,இன்னிக்கு ஒரு அடி வெச்சதுக்கு ,இந்த ஆர்பாட்டமா ?
என்போம்.சத்துள்ள உணவை சாப்பிட்டா உடலுக்கு நல்லது, “இந்த வேண்டி போரியல் குட்டியோட மூளைக்கு, இந்த பருப்பு மம்மூ குட்டியோட விரலுக்கு , சரியா சாப்பிடனும் விரல் அம்மவோடது போல வளரும் என்ன ?
பர்ஸ்ட் ரேங்க் வாங்கினா எல்ல்ளரும் க்லேப்ஸ் பண்ணுவாங்க. கம்மி மார்க் வாங்கற பசங்களுக்கு நாம ஹெல்ப் பண்ணலாம். ஸ்மைலி போடுவாங்க மிஸ் , ஜாலியா இருக்குமே , ட்ரை பண்ணலாமே பாப்பா !!
என்று சொல்ல கண்டிப்பாக ச்சே ச்சே நிச்சயமாக , நம்ம குழந்தை வாங்குமே பர்ஸ்ட் ரேங்க்.
ரொம்ப அன்ரூலியா இருக்கும் பிள்ளைகள் கூட இப்போ படிப்பில் வெளுத்து தான் வாங்குது. ஏன்னா ப்ரியின் அவ்ளோ பிரஷா இருக்கு 
அன்ரூலியா இருக்குன்னு , பெற்றோர் சொல்றாங்க என்று ஆசிரியரும், ஆசிரியர் சொல்றார் என்று பெற்றோரும் சாத்து சாத்துன்னு சாத்திப்புட்டு ,இப்ப்போ அடங்கிட்டானு நினைக்க்ரப்போ பொய் பேசி நம்மை நடுங்க வைப்பான் பயல்.
நான் வேலை பார்த்த ஸ்கூலில் எல்லா இடமும் கேமரா உண்டு, ஆசிரியர் யாரையும் அடிக்க கூடாதுன்னு ,பார்த்தா பிள்ளைகள் அப்பவும் சண்டை போட்டுப்பாங்க (படக்கூடாத இடத்தில் எல்லாம் படும் ) எங்கே என்றால் பாத்ரூமில் எந்த வகுப்பு என்கிறீர்கள் ரெண்டு, மூணு , நாலு ,அடி எல்லாம் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ரேஞ்சுக்கு இருக்கும்.
என்ன பிரச்சினை ஏன் அடிக்கிறான், அவனோட பீகேவியர் ப்ராப்ளம் என்ன ? இதெல்லாம் கேட்கப்படாது மூச் . அதுக்குள்ளே பிரச்க்கு நியூஸ் போயிடும்னு ஸ்கூல் பயப்படுவாங்க, பேரன்ட்ஸ் (அடி பட்ட ) வெறி கொண்ட வேங்கை போல அடி கொடுத்த பையனை வதைக்க ரெடியா இருப்பாங்க. இந்த ரெண்டு பெற்றோர்ரையும் சமாதனப்படுத்தவே நேரம் போதாது.
அப்புறம் எல்லாரும் மீட்டிங் போட்டு ,பாத்ரூம் போறப்போ ஆயம்மாவை துணைக்கு அனுப்பி , பிரச்சினை சால்வ ஆகா விடவே மாட்டங்க.
ஏகப்பட்ட எனேர்ஜியோட இருக்கும் அந்த குழந்தைக்கு (பெற்றோருக்கும் ) தான் கவுன்சிலிங் தேவை . அங்கே என்ன நடக்குது பேசி புரிய வைத்தல்.
சோ கண்டிப்பு, தண்டிப்புல கை விட்டாலும் கடைசியில எதிரணி பேச்சு வார்த்தை (சுமுகமான )க்கு தான் வரணும்.
வாட்ச் மிட்டாய் ரோஸ கலர் எடுத்துகிட்டேன்.
கொடுக்காப்புளி வாங்கி வைங்க. நாளை வந்து வாங்கிக்கறேன் .

அனைவருக்கும் வணக்கம்.

சூர்யா வாய்ஸ், பிரகாஷ் ராஜ் வாய்ஸ், சிவாஜி வாய்ஸ் எல்லாம் கேட்டுகிட்டேன் நடுவர் அவர்களே! கேட்டேன், ரசித்தேன்!!

இப்ப டைரக்டா ரெண்டு சினிமா சீன்ஸ் ஓட்டிக் காண்பிச்சுடறேன்.

ஜே ஜே என்று ஒரு படம் வந்தது, அதுல வரும் வசனம்:

‘தடவிக் கொடுத்துட்டே இருந்தா, நாய்க்குட்டி கூட ஓடிப் போயிடும்’.

அளவுக்கு அதிகமா தாங்கிகிட்டே இருந்தா - அந்த அன்பு கூட ஒரு சுமைதாங்க.

அப்புறம் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு சீன்:

புன்னகை மன்னன் படம் - இந்தப் படத்துல ஒரு சீன் - ஒரு சின்னப் பையன் அழுதுகிட்டே இருப்பான், அவனை சமாதானப் படுத்தறதுக்காக கமல் என்னென்னவோ வித்தை செய்து காமிப்பார், உஹூம் , அழுகையை நிறுத்தவே மாட்டான் அந்தப் பையன். சரின்னு கமல் - மரத்துல தலைகீழாத் தொங்க ஆரம்பிப்பார், அவர் கீழே காலை வச்சாலே பையன் அழ ஆரம்பிச்சுடுவான்.

ஸ்ரீவித்யா வந்து, விசாரிச்சுட்டு, ‘சரி, நீங்க கீழே இறங்குங்க, நான் அவன் அழறதை நிறுத்தறேன்’னு சொல்வார். ‘அய்ய, நீங்க இப்படியெல்லாம் தொங்கப் போறீங்களா’ம்பார் கமல்.

‘நீங்க கீழே இறங்குங்க, சொல்றேன்’ம்பாங்க அவங்க. இவர் கீழே காலை வச்சதும் பையன் சைரன் ஊத ஆரம்பிப்பான் - ஸ்ரீவித்யா ச்சப்புன்னு ஒரு அறை விடுவாங்க பாருங்க அந்தப் பையன் கன்னத்துல - அந்தப் பையன் சைலண்ட் ஆகிடுவான்!!

குழந்தைகள் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதம். அவங்க அழகே அவங்க பிடிவாதம்தான். அவங்களுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் கண்டிப்பு கலந்திருந்தால்தான் அவங்க மனசில் பதியும்.

மீண்டும் வருகிறேன்.

நீங்க எடுத்து வைத்திருப்பதில் ஐஸ்கிரீம் மட்டும் எடுத்துக்கறேன் நடுவர் அவர்களே, நன்றி

அன்புடன்

சீதாலஷ்மி

ஒரு பிள்ளை அடுத்த வீட்டுக்கு போய் அங்குள்ள பொருள் ஒன்றை கேட்டு அடம் பிடிக்கும்னு வைய்யுங்க..கண்டிப்போடு வளர்த்தப்பட்ட குழந்தை கேக்கவே கேக்காது அப்படியே கேட்டாலும் "இது நம்முடையது இல்லை உனக்கு பிறகு வாங்கி தருகிறேன்"என்று கண்டிப்புடன் சொல்லி தான் புரிய வைக்க முடியும்.
அதுவே அன்பை கொட்டி கொட்டி வளர்ப்பார்கள் பாருங்க போற பக்கமெல்லாம் இது எனக்கு அது எனக்கு என்று எடுத்து வைத்துக் கொள்ளும்..பெற்றவர்களும் பட்டும் படாமலும் வேண்டாம் என்று சொல்லி விட்டு பொருளை கொண்டு போய்விடுவார்கள்.எனக்கு தெரிஞ்சு என் பிள்ளைகளுக்கு நான் அன்பை மட்டுமே கொடுத்து பார்த்து விட்டேன் அதை ஒரு வீக்னெஸா எடுத்துப்பாங்க..கண்டிப்பும் சேரும்போது எதற்கும் ஒருவரைமுறை உண்டு என்று புரிஞ்சுக்குவாங்க.
பிள்ளைகள் பல ரகம் பல குணம். என் அனுபவத்தில் ஒரு 4 வயது வரை கண்டிப்பின் அருமையை புரியவைப்பது கொஞ்சம் கஷ்டம்.விளையாட தொடங்கினால் நிறுத்த தெரியாது ஆனால் பழகிவிட்டதுன்னு வைங்க அதுக்குப் பின் ரொம்ப சுலபம் ..ஆனால் அன்பை மட்டுமே காட்டி வளர்ப்பவங்களோ காலா காலத்துக்கும் பிள்ளை சொன்ன பேச்சை கேட்பதே இல்லைன்னு புலம்பிட்டே இருப்பாங்க.
அளவுக்கு மிஞ்சினால் அன்பும் திகட்டி விடும்.சொத்தையெல்லாம் கூட வித்து அன்பை மட்டுமே அளவுக்கு அதிகமா ஊட்டி ஊட்டி வளர்த்த பிள்ளைகளின் பெற்றோர்கள் பலரும் கடைசியில் முகத்தை பார்த்து மகனோ/மகளோ பேசுவது கூட இல்லைம்பாங்க

//,அதட்டாம கொள்ளாம அழகா ,பட்டியை பற்றி நீங்க விளக்கி சொன்னதுனால ,வம்பு பண்ற என்னை கூட அன்பால கட்டி போட்டு வர வெச்சிடுச்சே!!//

நான் சொன்னவிதம் கண்டிப்பா தெரியாம உங்க கண்ணுக்கு அன்பா தெரிஞ்சதில மகிழ்ச்சிங்கோ..:)

//கண்டிப்பு +தண்டிப்பு = வெறுப்பு +கடுப்பு//

கணக்கு வாய்ப்பாடு எல்லாம் ஜோருங்கோ….பரவாயில்ல உங்க கணக்கு டீச்சர் ரெம்பாஆஅ அன்பா கணக்கு சொல்லி கொடுத்திருக்காங்கப்போல

//நில்லுன்னு சொல்ற இடத்தில் நிக்க குழந்தைங்க என்ன குட்டி பொம்மையா ??//

நீங்கவேற நில்லுன்னு சொல்ல கேட்கக்கூட பசங்க நிக்கறதில்ல :(

//,”கான்ட் யு பீகேவ் பராபெர்லி , சிட் ஸ்ட்ரெயிட் “ சொல்லிகிட்டே டென்ஷன்ல அவங்க பாவம் செர்லேந்து எழுந்து நடந்துகிட்டே இருந்தாங்க . குட்டி பொண்ணும் சும்மாவே இல்ல. ஏதோ பாட்டை ஹம பண்ணுது, தலையை சுத்தி சுத்தி எல்லாத்தையும் நோட்டம்(நியு அட்மிஷன் போல ) அம்மா விட்டா செர்லேந்து எழுந்து விடுவதை போல இருந்தாள். திரும்ப திரும்ப அம்மாவும் ஹஸ்கி வாய்ஸ்ல எல்லாருக்கும் கேட்காதுன்னு நினைச்சுகிட்டு , பெண்ணை திட்டிகிட்டே இருந்தாங்க. பொறுத்து பார்த்து “மம்மி, வாட் இஸ் திஸ்? எவ்ளோ நேரம் வெயிட் பண்றது , ஐ டோன்ட் லைக் திஸ் ஸ்கூல் “ அப்படின்னு ஒரு சவுண்ட். தூர இருக்கற அட்டெண்டர் கூட இப்போ இங்கே பார்வை. அம்மா செம டென்ஷன் .கீப் கொயட்ன்னு சொல்லிட்டு,பக்கத்துல இருக்கறவங்க கிட்டே , ஷி இஸ் டயர்ட் .அப்படின்னு பூசி மொழுகி கோலம தான் .//

சொல்றவிதத்துல காட்சியே கண் முன்னால நிறைய ரீல் ஓடிடுடுச்சு..நல்ல வர்ணிப்பாளரா இருக்கீங்கோ

இந்தமாதிரி இங்கிலீஷும்,தங்கிலீஷும் எவ்வளவு பார்த்திருப்போம்….;)

//இன்றைய சூழலில் குழந்தைகள் பெரும்பாலும் குழந்தைகளோடு நேரம் செலவழிப்பதே இல்லை .கால்வாசிநேரம் அம்மாவோட, கால்வாசி நேரம் டீச்சரோடு, கால்வாசி நேரம் கம்ப்யூட்டர் கேம்ஸ், கால்வாசி நேரம் ஏதோ ஒரு கிளாஸ் .
இதுல சொல்லி கொடுத்து மட்டுமே கற்றுகொள்ள வேண்டிய சூழல் , தானா பட்டு தெரிஞ்சுக்க நாம ஆபர்ச்னட்டி கொடுக்கரதேயில்லை. சோ அந்த சொல்லி தரும் விதமே கண்டிப்பு கலந்து இருந்தால் என்ன ஆகும் ?//

கிடைக்கும் சொற்ப நேரத்திலும் எதுக்கு கண்டிப்புன்னு கேட்கிறாய்ங்க
//.சத்துள்ள உணவை சாப்பிட்டா உடலுக்கு நல்லது, “இந்த வேண்டி போரியல் குட்டியோட மூளைக்கு, இந்த பருப்பு மம்மூ குட்டியோட விரலுக்கு , சரியா சாப்பிடனும் விரல் அம்மவோடது போல வளரும் என்ன ?
பர்ஸ்ட் ரேங்க் வாங்கினா எல்ல்ளரும் க்லேப்ஸ் பண்ணுவாங்க. கம்மி மார்க் வாங்கற பசங்களுக்கு நாம ஹெல்ப் பண்ணலாம். ஸ்மைலி போடுவாங்க மிஸ் , ஜாலியா இருக்குமே , ட்ரை பண்ணலாமே பாப்பா !!
என்று சொல்ல கண்டிப்பாக ச்சே ச்சே நிச்சயமாக , நம்ம குழந்தை வாங்குமே பர்ஸ்ட் ரேங்க்.//

இத படிச்சு காட்டினாலே படியாத பிள்ளையும் படியும்போல இருக்கே..:)

//ஏகப்பட்ட எனேர்ஜியோட இருக்கும் அந்த குழந்தைக்கு (பெற்றோருக்கும் ) தான் கவுன்சிலிங் தேவை . அங்கே என்ன நடக்குது பேசி புரிய வைத்தல்.
சோ கண்டிப்பு, தண்டிப்புல கை விட்டாலும் கடைசியில எதிரணி பேச்சு வார்த்தை (சுமுகமான )க்கு தான் வரணும்.//

பிள்ளை சம்பந்தமான எல்லா பிரச்சனையும் கூட பேசி புரியவைத்தல்மூலம்தான் சரியாகுதுன்னு சரியா சொல்றாங்க..

//கொடுக்காப்புளி வாங்கி வைங்க. நாளை வந்து வாங்கிக்கறேன் .//

ஹை...எங்க வீட்டுக்கு பக்கத்துல நிறைய கொடுக்காப்புளிமரங்கள் நிஜமாவே இருக்குங்க அதுகூட ..உங்க கேமராகன்ணுக்கு தெரிந்துருச்சா…..

இந்தாங்கோ ஒருமரத்துல இருக்க அத்தனை காயும் உங்களுக்குத்தான்…//

இலந்தைமரம்கூட நிறைய இருக்கு அடுத்ததடவ சீக்கிரம் வந்தா எல்லாசுட்டபழமும்,சுடாத பழமும் சேர்த்து நீங்களே
எடுத்துக்கலாம்..போட்டியின்றி...

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

//புன்னகை மன்னன் படம் - இந்தப் படத்துல ஒரு சீன் - ஒரு சின்னப் பையன் அழுதுகிட்டே இருப்பான், அவனை சமாதானப் படுத்தறதுக்காக கமல் என்னென்னவோ வித்தை செய்து காமிப்பார், உஹூம் , அழுகையை நிறுத்தவே மாட்டான் அந்தப் பையன். சரின்னு கமல் - மரத்துல தலைகீழாத் தொங்க ஆரம்பிப்பார், அவர் கீழே காலை வச்சாலே பையன் அழ ஆரம்பிச்சுடுவான்.

ஸ்ரீவித்யா வந்து, விசாரிச்சுட்டு, ‘சரி, நீங்க கீழே இறங்குங்க, நான் அவன் அழறதை நிறுத்தறேன்’னு சொல்வார். ‘அய்ய, நீங்க இப்படியெல்லாம் தொங்கப் போறீங்களா’ம்பார் கமல்.

‘நீங்க கீழே இறங்குங்க, சொல்றேன்’ம்பாங்க அவங்க. இவர் கீழே காலை வச்சதும் பையன் சைரன் ஊத ஆரம்பிப்பான் - ஸ்ரீவித்யா ச்சப்புன்னு ஒரு அறை விடுவாங்க பாருங்க அந்தப் பையன் கன்னத்துல - அந்தப் பையன் சைலண்ட் ஆகிடுவான்!!//

ஹை..அப்படிங்களா எனக்கும்கூட ரொம்ப பிடிச்ச சீன்..சேம் பிஞ்சுங்க..
இத ஸ்ரீவித்யாவோட வாய்ஸ்ல படிச்சுக்குங்க..

//குழந்தைகள் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதம். அவங்க அழகே அவங்க பிடிவாதம்தான். அவங்களுக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் கண்டிப்பு கலந்திருந்தால்தான் அவங்க மனசில் பதியும்//

பிடிவாதம் அழகுன்னா கண்டிப்பும் அழகுன்னு அருமையா சொல்லிட்டீங்க
இப்படியெல்லாம் அவரவருக்கு குழப்பினா நான் என்ன செய்ய இன்னும் மீன் மாட்டவேயில்ல எனக்கு

இந்தாங்க குல்பி..குளுகுளுன்னு கண்டிப்பா கீழே சிந்தாம,சிதறாம சாப்பிடணும்...சொல்லிட்டேன் :)
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

நடுவரே எங்கள் உறவினர் ஒருவர் வீட்டில் நடந்த கதையை கேளுங்க. அவங்களுக்கு ஒரே பையன். எப்பவும் விளையாட்டுதான். அதனால் படிப்பில் சற்று நாட்டம் குறைந்தது. அவனோட அப்பா அவனை கூப்பிட்டு குரலை உயர்த்தாமல் தெளிவாக அவனுக்குப் புரியும் வகையில் இப்படி சொன்னார்.

நான் நன்றாக படித்தேன் அதனால் இப்போ ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன். என் மனைவிக்கும் குழந்தைக்கும் தேவையானவற்றை என்னால் வாங்கிக் கொடுத்து நன்றாக கவனித்துக் கொள்ள முடிகிறது. நாளை இது போல் உன் குழந்தையையும் குடும்பத்தையும் நல்லா வச்சிருக்கணும்னு நினைச்சேன்னா படிக்கற நேரத்தில் நல்லா படி விளையாடற நேரத்துல விளையாடு அப்படீன்னார்.

மந்திரம் போட்ட மாதிரி பையன் அடியோடு மாறிட்டார். என் குழந்தையையும் குடும்பத்தையும் நல்லா கவனிச்சுக்கணும்னு சொல்லிட்டே படிப்பான். இது நடக்கும் போது அவனுக்கு வயது 8. இப்போ எஞ்சினியரிங் முடித்து நல்ல வேலையில் இருக்கிறார். கல்யாணம் ஆன பின்னாடி அவன் குடும்பத்தை நல்லா வச்சிருப்பாங்கறதுல எங்களுக்கு கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை.

கண்டிப்பாக நடந்து கொண்டால்தான் விளையாடாமல் ஒழுங்காக படிப்பான்னு அந்த தந்தை நினைத்து நடந்திருந்தால் இந்த மாற்றம் அந்த சிறுவனிடத்தில் வந்திருக்குமா என்பது சந்தேகமே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//அன்பை கொட்டி கொட்டி வளர்ப்பார்கள் பாருங்க போற பக்கமெல்லாம் இது எனக்கு அது எனக்கு என்று எடுத்து வைத்துக் கொள்ளும்..பெற்றவர்களும் பட்டும் படாமலும் வேண்டாம் என்று சொல்லி விட்டு பொருளை கொண்டு போய்விடுவார்கள்//

அடட..இதுல குழந்தை அட்ம்பிடிக்கும்போதுகூட கண்டிப்பா இத எடுத்துட்டு போங்க பொருளைன்னு வற்புறுத்தி சொல்லாம பட்டும்படாம பரவாயில்ல
ன்னு சொல்றாங்கன்னு வருத்தப்படற ,புலம்பறபெற்றோர்கள் கூட
பார்த்ததுண்டு

//அன்பை மட்டுமே காட்டி வளர்ப்பவங்களோ காலா காலத்துக்கும் பிள்ளை சொன்ன பேச்சை கேட்பதே இல்லைன்னு புலம்பிட்டே இருப்பாங்க.//
கண்டிப்பில்லாம அன்பை கொட்டிட்டு புலம்பல் தேவையா பின்னாடின்னு நல்லா சொல்றாங்க..யாரு பதில் சொல்லப்போறீக்னோ சீக்கிரம் வாங்க

தொடர்ந்து வந்து கருத்து முத்துக்களை கொட்டுங்க...

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

//மந்திரம் போட்ட மாதிரி பையன் அடியோடு மாறிட்டார். என் குழந்தையையும் குடும்பத்தையும் நல்லா கவனிச்சுக்கணும்னு சொல்லிட்டே படிப்பான். இது நடக்கும் போது அவனுக்கு வயது 8. இப்போ எஞ்சினியரிங் முடித்து நல்ல வேலையில் இருக்கிறார். கல்யாணம் ஆன பின்னாடி அவன் குடும்பத்தை நல்லா வச்சிருப்பாங்கறதுல எங்களுக்கு கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை.

கண்டிப்பாக நடந்து கொண்டால்தான் விளையாடாமல் ஒழுங்காக படிப்பான்னு அந்த தந்தை நினைத்து நடந்திருந்தால் இந்த மாற்றம் அந்த சிறுவனிடத்தில் வந்திருக்குமா என்பது சந்தேகமே
//

அன்போடு நல்ல ரோல்மாடலா நாம இருந்தா அது அவ்ங்களை நாளைக்கு நல்ல ரோல்மாடலாக்குமின்னு சொல்றாங்க கவி..
இந்தாங்க கொடுக்காப்புளி உதிரா வருமுன்ன உங்களுக்கும் உதிர்த்து விடுறேன் எடுங்க மடியில..:)
மீண்டும் வாங்கோ
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

பகல் முழுக்க ஒளி தந்து நமக்கு பல வழிகளில் உதவும் சூரியனை விட... இரவில் குளுமை தரும் நிலாவை தானே அனைவரும் விரும்பிகிறோம். அதேபோல் தான் நம் அன்பும்... சிலசமயங்களில் பிள்ளைகளை கட்டுபடுத்த கண்டிப்பு, கோவம், அடி, உதைனு புள்ளைங்க மேல அனலை தெரிக்கிறோம்... ஆனா செல்லம், அம்மு, புஜ்ஜு, குட்டி நு கொஞ்சி கொஞ்சி குளுமையை பொழிவதால் தான், ஐ லவ் யு மம்மி நு கேட்க முடியும்...

எங்க பக்கத்துக்கு வீடு பயன் 3 ஆம் வகுப்பு படிக்கிறான்... அவங்க அப்பா எப்பவும் அவன அடிச்சிட்டே தான் இருபாரு. ஒரு நாள் அவனோட ஆங்கில பாட புத்தகத்தை குடுத்து வாசிக்க சொன்னாரு... அவனால 2 வரி கூட முழுசா படிக்க முடியாமல் திணறினான்... என்ன பண்ணுவாரு அப்பா, அப்பயும் செம அடிதான் போங்க... ஆனா மறுநாள் அதே புத்தகத்தை அவங்க அப்பா இல்லாதபோது அவனை வாசிக்க சொன்னோம். சில சில இடங்களில் தடுமாரினானே தவிர அழகா வாசிச்சான். அந்த அன்பு தாங்க முக்கியம்.

ஆமாங்க குழந்தைங்க கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடரதில் ஒன்னும் தப்பு இல்லையே... இந்த கேம்ஸ் சாப்ட்வேர் உருவாக்கி தரது யாருங்க? நம்மள மாதிரி பெரியவங்க தானே... அவங்க கேம்ஸ் விளையடரதுனால அவங்க மூளை வளர்ச்சி அதிகரிக்கும் மற்றும் அவங்க க்ரீஎடிவ் நாலேட்ஜ் அதிகரிக்குது...

குழந்தைகளை மற்ற பிள்ளைகளோடு வெளியே விளையாட விடுங்க.. ஸ்கேடிங் அனுப்புங்க, ஸ்விம்மிங் சொல்லி தாங்க... அதையெல்லாம் விட்டுபுட்டு, சும்மா இருக்க புள்ளைய கேம்ஸ் விளையாடாதே நு கண்டிக்கறது சரியா... இன்னும் 10 வருஷத்தில் எலிமெண்டரி கிளாஸ்லையே கம்ப்யூட்டர் கொண்டுவந்தாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்லை... அப்ப என்ன பன்னுவீங்கோ...

எங்க பொண்ணு இந்த 2 வயசுலேயே லேப்டாப் உபயோகிக்கறதை நினைச்சு வறுத்த பட்டாலும், எங்களை விட வேகமா, அக்குவேறு ஆணிவீரா உபயோகிக்கறத பார்த்தா ரொம்ப பெருமையா இருக்கு... ஆனா அதுக்காக நாம பெத்தவங்க அப்படியே விட்டுட முடியுமோ... அவ வெளில விளையாண்டது போக கொஞ்ச நேரம் லேப்டாப் கொடுப்போம், மத்த நேரம் எல்லாம் எடுத்து பைக்குள்ள வச்சிருவோம்... இது தான் நாங்கள் குழந்தையை அணுகும் முறை... நீங்க அறுசுவை பார்பிங்க ஆனா புள்ளைங்க விளையாட கூடாது... நீங்க டிவி சீரியல் பார்பிங்க ஆனா அவங்க கார்டூன் சேனல் பார்க்க கூடாது... இது என்ன நியாயம்னு நீங்களே கேளுங்க நடுவரே...

என் சொந்தகார பொண்ணு அக்கா தங்கை. அக்கா படிப்புல கெட்டி, அனால் தங்கைக்கு படிப்பே சுத்தமா வராது.. ஆனா அவங்க வேலைக்கு போய்டிருந்த போது தங்கை தான் அக்காவை விட அதிக சம்பளம் வாங்கினா... படிப்பு மட்டுமே வாழ்க்கை ஆகாது... ஆனா நம்ம புள்ளைங்க கொஞ்ச மார்க் கம்மியா வாங்கினால் போச்சு.. வீடே ரணகளம் ஆகிடும், ஒரே வசவுதான், அடி, உதை தான் போங்க...

சில வசதியான வீட்டு புள்ளைங்க தான் அதிகமா தவறான காரியத்தில் ஈடுபடறாங்க... ஏன்னால் அவங்களுக்கு பெத்தவங்க எதையும் எடுத்து சொல்லித்தறது இல்லை, எது கேட்டாலும் உடனே வாங்கிதந்திடறது... ஆனால் பொதுவாகவே வசதி குறைந்த, குடும்ப கஷ்ட நஷ்டம் புரிஞ்சு வளர்ந்த புள்ளைங்க தப்பு பண்றது இல்லை...

இதன் மூலமா நான் என்ன சொள்ளவறேன்னால்... அன்பால் தான் அழகான வீட்டை உருவாக்க முடியும்...

நடுவரே... தம் கட்டி எழுதியிருக்கேன் அந்த பஞ்சுமிட்டாய மறந்துராதிங்க...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நடுவரே
முதலில் எதிரணியினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்
அன்பு என்றால் செல்லம் கொடுத்து குழந்தையை கெடுப்பதல்லஅன்பு வேறு செல்லம் வேறு
ஓவரா செல்லம் கொடுத்தால் குழந்தைக்கு சரி எது ,தப்பு எதுன்னு தெரியாமலே போயிடும் .
அன்போடு சொல்லிக் கொடுத்தால் குழந்தை புரிந்து கொள்ளும் .அன்பினால் அவர்களை விழ்த்தினால் என்றென்றும் நமக்கு கட்டுபடுவார்கள்.
அஞ்சு வயசு குழந்தையை நாம் கண்டிக்கமுடியும் ,அடிக்கமுடியும். .ஆனா எதிரணியினரே மறந்து விடாதிர்கள் .அதே குழந்தைக்கு வயசு பதினைந்தாகும் போது நாம அதை கண்டிக்க முடியாது .ஏன்னா டீனேஜ் அப்படி .
டீனேஜ் குழந்தையை வளர்ப்பது கைப்புள்ளைய வளர்ப்பதை விடவும் கஷ்டமுங்கோ.அங்கெ அன்பு அன்பு ஒன்றே செல்லுபடி ஆகுமுங்கோ ...கண்டித்தால் எதிர்த்து விடுவார்கள் .தடம் மாறி விடக்கூடாதே ,நல்லபடியாக வளர வேண்டுமே என்ற பயம் காரணமாக நாம் அவர்களை அன்போடு மிகுந்த மிகுந்த அன்போடு கவனிக்க வேண்டும் .
இப்போ கவனிங்க பதினைஞ்சு வயசு குழந்தையை அன்போடு வளர்க்கும் போது அஞ்சு வயசு குழந்தையை அடிப்பது பாவமில்லையா ?திருப்பி அடிக்க முடியாத பிஞ்சு குழந்தையை நீங்க அடிக்கரிங்கன்ன உங்களுக்கு வெவரம் பத்தலைன்னு தாங்க சொல்லணும்.
அதனால தான் நீங்க குழந்தையை அடிக்கும் போது தாத்தா பாட்டி தடுக்கரங்க குழந்தைக்கு சப்போட் பண்ணுறாங்க .
அன்போடு வளர்க்கப்படர குழந்தை நல்ல குடிமகனா நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை தேடி தருவான்.

மேலும் சில பதிவுகள்